குதிரை களவு போனபின் லாயத்தைப் பூட்டியவர்கள்.
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம் ஒன்றில், கடந்த 2 மாதங்களில் 15 லட்சம் பயணிகள் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளதாகவும், இதன்மூலம் கோவிட் 19 கண்காணிப்பு பணியில் குறைபாடு இருப்பது தெரியவருகிறது எனவும் மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவ்பா குறிப்பிட்டுள்ளார். மேலும் அதில், இதனால் கரோனா தடுப்பு நடவடிக்கை பெரிய அளவில் பாதிக்கப்படும். இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் 90%வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள் மற்றவர்கள் அவர்களுடன் தொடர்புள்ளவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ------------------------------------------------------ சுகாதாரத் துறைக்கு ஒரு நுரையீரல் மருத்துவரின் மனம் திறந்த மடல். சுகாதாரத்துறை வல்லுநர்களே, வணக்கம். நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அரசின் இந்த முயற்சிக்கு ஒவ்வொரு குடிமகனும் 100% ஆதரவு வழங்க வேண்டும். உலக சுகாதார நிறுவனம் (WHO) வியாழன் மதியம் நிலவரப்படி உலகம் முழுவதும் 4,75,170 பேர் ...