இடுகைகள்

மீண்டும் ஊரடங்கு?

படம்
  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்,  இன்று ராஜினாமா ? அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதாரம் கடும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளது.  கடுமையான கடன் சுமையால் சிக்கல் ஒருபுறம், பொருளாதார வீழ்ச்சி மறுபுறம் என இரட்டை சிக்கலை சந்தித்து வருகிறது.  பொருளாதார சுணக்கத்திற்கு பிரதமர் இம்ரான் கானின் தவறான கொள்கைகளே காரணம் என குற்றம் சாட்டி வரும் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளன.  இந்த தீர்மானத்தின் மீது வரும் 28 ஆம் தேதி வாக்கெடுப்பு நடக்கிறது. மொத்தமுள்ள 342 எம்பிக்களில், 172 பேரின் ஆதரவு தேவை. இம்ரான் கானின் ஆளும் தெஹ்ரிக் கட்சிக்கு 155 எம்பிக்கள் உள்ளனர். ஆளும் கூட்டணிக்கு பிற கட்சிகளைச் சேர்ந்த 23 எம்பிக்களின் ஆதரவு உள்ளது.  இவர்கள் தற்போது அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற திட்டமிட்டுள்ளனர். மேலும் இம்ரான் கான் கட்சியை சேர்ந்த 24 எம்பிக்களும் அரசின் மீது அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.  இவர்கள் அரசுக்கு எதிராக வாக்களிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே ஆளும் கட்சியைச் சேர்ந்த 50 அமைச்ச...

காப்பீட்டு

படம்
தமிழ்நாடு அரசின் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் பயன்பாடு .   காப்பீட்டுஅட்டை  பெறும் வழிமுறைகள் . இந்திய அளவில் முக்கிய சுகாதார குறியீடுகளில் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலப் பராமரிப்பில் முன்மாதிரி மாநிலமாக விரைந்து முன்னேறி வருகிறது.  தமிழகத்தில் 99.8 சதவிதம் பிரசவங்கள் மருத்துவ நிலையங்களில் தகுதியும், பயிற்சியும் பெற்றவர்களால் நடத்தப்படுகிறது. இளம்பிள்ளை வாதம், தொழுநோய் மற்றும் காசநோய் போன்ற தொற்று நோய்களை ஒழிப்பதில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றுள்ளது.  எச்.ஐ.வி / எய்ட்ஸ் நோய் ஒழிப்பிலும் சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளது என்று தமிழ்நாடு மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. இத்துறையின் கீழ் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும், பலரும் அறிந்து வைத்திருக்க வேண்டிய முக்கிய திட்டமாக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் உள்ளது.  இத்திட்டத்திற்கு 2022-23ம் ஆண்டிற்கு ரூ. 1, 547 கோடி தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களு...

கோட்டையிலிருந்து எச்சரிக்கை:

படம்
  முடிவை மாற்றினார் எடப்பாடி? தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து முடிந்து முதல்வர் ஸ்டாலின் துபாய் சென்று விட்டார்.  பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்ற நாள்களில் அதிமுக தரப்பு போட்ட ஒரு திட்டம் குறித்து முக்கிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்று பத்து மாதங்கள் நிறைவடைந்து விட்டன. அரசின் மீது பெரியளவில் விமர்சனம் எழவில்லை.  ஆனால் அதிமுக தரப்பிலோ ஏகப்பட்ட பஞ்சாயத்துகள் சென்ற வண்ணம் உள்ளன.  தொடர் தோல்வி, முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் ரெய்டு, இரட்டை தலைமைக்கிடையேயான பனிப்போர், சசிகலா சுற்றுப் பயணம் என அதிமுகவில் பிரச்சினைகள் தொடர்ந்து வட்டமடித்து வருகின்றன. மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில் தோல்விகளிலிருந்து மீண்டெழுந்து கட்சியை பலப்படுத்த வேண்டும், திமுக அரசின் மீது மக்கள் மத்தியில் விமர்சனங்களை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி. அரசுப் பள்ளிகளில் படித்து விட்டு கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ ஆகிய படிப்புகளுக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற தமிழக அரசி...

காஷ்மீர் ஆவணம்

படம்
இந்த பட்டியல் போதுமா?   தமிழ்நாடு சட்டப்பேரவையில், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்ல்வம் பேச்சுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துப் பேசினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,  “அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு, தாலிக்குத் தங்கம் வழங்கக்கூடிய திட்டத்தை நிறுத்தியதாக ஒரு கருத்தை நம்முடைய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இங்கே பதிவு செய்திருக்கின்றார்.  அ.தி.மு.க தொடங்கிய திட்டங்களை, ஏதோ திராவிட முன்னேற்றக் கழக அரசு அமைந்ததும் நிறுத்தி விடுவதைப்போல ஒரு போலித் தோற்றத்தை இங்கே எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அவர்கள் தனது உரையிலே உருவாக்கியிருக்கிறார்கள். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, முந்தைய உங்களுடைய அரசு திட்டங்களை முடக்குவதற்குப் பெயர் போன அரசு; அது உங்களுடைய அரசு.  இது கடந்த காலங்களில், பல நேரங்களில் நிரூபணமாகியிருக்கக்கூடிய உண்மை. ஊடகத்தினர், பொதுமக்கள் என அனைவரும் இதை நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள்.  ஆகவே, தலைவர் கலைஞர் அவர்களால், தி.மு.க ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் மாபெரும் சட்டமன்ற-தலைமைச் செயலக வளாகம...

இலங்கை நிலவரம் ,கலவரம்.

படம்
  ரூபாய் நோட்டில் கோடு கள் இந்திய கரன்சி நோட்டுகளில் உள்ள சாய்வான கோடுகளை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா?  ஒருவேளை இந்த கோடுகளை நீங்கள் கவனித்திருந்தால், வெவ்வேறு நோட்டுகளில் அதன் மதிப்புக்கு ஏற்ப அவற்றின் எண்ணிக்கை மாறுபடுவதையும் நீங்கள் பார்த்திருக்கலாம். உண்மையில் ரூபாய் நோட்டுகளில் ஏன் இந்த கோடுகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பது தெரியுமா?  இந்த கோடுகள் நோட்டுகள் பற்றிய மிக முக்கியமான தகவல்களைத் தருகின்றன.  100, 200, 500 மற்றும் 2000 நோட்டுகளில் உருவாக்கப்பட்ட இந்த கோடுகளின் அர்த்தம் என்ன என்பதை இப்போது தெரிந்து கொள்வோம். நோட்டுகளில் உள்ள இந்த கோடுகள் 'பிளீட் மார்க்ஸ்' என்று அழைக்கப்படுகின்றன.  இந்த கோடுகள் பார்வையற்றோருக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டவை ஆகும். நோட்டில் உள்ள இந்த வரிகளை தொட்டு பார்த்தாலே அது எவ்வளவு ரூபாய் நோட்டு என்று சொல்லி விடலாம்.  அதனால்தான் 100, 200, 500 மற்றும் 2000 நோட்டுகளில் வெவ்வேறு எண்ணிக்கையிலான கோடுகள் இருக்கின்றன. 100 ரூபாய் நோட்டில் இருபுறமும் நான்கு கோடுகள் இருக்கும். அதைத் தொட்டால் அது 100 ரூபாய் நோட்டு என்பது பார்க்காமலேயே ...