4 வது அலை இல்லை.
கொரோனா பரவலின் இரண்டாவது அலை முடிந்து மூன்றாவது அலை ஏற்பட்டும் பெரிதளவில் எந்த பாதிப்பும் ஏற்படாததால் தேவைப்பட்டால் கூட்டம் ஏதும் இல்லாத இடங்களில் முகக்கவசம் அணிவதை தவிர்த்துக்கொள்ளலாம் என ஒன்றிய சுகாதாரத்துறை அறிவுறுத்தியிருந்தது. அதன்படி அண்மை நாட்களாக இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்தளவிலேயே பதிவாகி வந்தது. இந்த நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் 2,451 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியிருக்கிறது. இப்படி இருக்கையில் பல மாநிலங்களில் மாஸ்க் அணிவது மீண்டும் கட்டாயமாக்கியுள்ளது அம்மாநில அரசு. அதேபோல, டெல்லிக்கு செல்வோரும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் கூறப்படுகிறது. ஏனெனில், முன்பு வந்த மூன்று அலைகளும் டெல்லியில் இருந்துதான் பெரும்பாலும் தொடங்கியது என்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. கொரோனா மூன்றாவது அலைக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை அனைத்தையும் அரசு மேற்கொண்டு வருகிறது. மாநில அரசுகள் தேவையான நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். கொரோனா தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரித்தால், அதனை சமாளிக்க தேவையான முன்னெ...