ஊத்தி மூடு,,,,,
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக, பிரதமர் அலுவலகத்திற்கு நிதி அமைச்சகம் எழுதிய கடிதத்தால் எழுந்த பிரச்னைக்கு, காங்கிரஸ் மேலிடம் நேற்று தீர்வு கண்டது. "நிதி அமைச்சக கடிதத்தில் இடம் பெற்றுள்ள விஷயங்கள், தன்னுடைய கருத்தை பிரதிபலிக்கவில்லை' என, நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்ததால், பிரச்னை முடிவுக்கு வந்து விட்டதாக, உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறினார். "ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேட்டை, அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரம் நினைத்திருந்தால், தடுத்து நிறுத்தியிருக்கலாம்' என்ற குறிப்பை, கடந்த மார்ச் மாதம் பிரதமர் அலுவலகத்திற்கு நிதி அமைச்சகம் அனுப்பியதாக தகவல் வெளியானது. இது, உள்துறை அமைச்சர் சிதம்பரத்திற்கும், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியதோடு, மத்திய அமைச்சர்களுக்குள் மோதல் உள்ளது போன்றும் செய்திகள் வெளியாகின. அமெரிக்கப் பயணம் மேற்கொண்டிருந்த நிதி அமைச்சர் பிரணா...