ஏழைகளை ஒழிப்போம்!

 தமிழ்நாடு உள்ளிட்ட 7 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் .

திருவான்மியூரில் சாலை விபத்தில் உயிரிழந்த தூய்மைப் பணியாளர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் முதலமைச்சர்நிதியிலிருந்து  நிதியுதவி வழங்க முதல்வர் உத்தரவு.

மதுரை தபால்தந்தி நகரில் காவலர்களைத் தாக்கவிட்டு தப்ப முயன்ற வழிப்பறி கொள்ளையன் ஸ்டீபன் ராஜாவை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த காவல் துறை.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிச.4ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு.

தீபாவளி. அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருக்க பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்.

திருவையாறு அருகே சொகுசு காரில் கடத்திய ரூ.3 லட்சம் மதிப்புள்ள புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. ராஜஸ்தானை சேர்ந்த வஸ்னாராம், சிம்பாராம் ஆகியோரை கைது செய்து நடுக்காவேரி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் #நியாய விலைக் கடைகளுக்கு நவ.13, 25-ம் தேதிகளில் விடுமுறை அறிவிப்பு.

சிறையில் உள்ள 38 ராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் உத்தரவு .

தென்காசியில் தீபாவளி விற்பனைக்கு பாக்கெட் செய்து வைத்திருந்த50 கிலோ காலாவதியான பலகாரங்கள் பினாயில் ஊற்றி அழிப்பு.

 டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் .


மலையகத் தமிழர்

இதற்கெல்லாம் ஏன் தடை?

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் உலகின்  பல்வேறு பகுதிகளுக்கு இந்தியத் தொழிலாளர்களை குறிப்பாகத் தமிழர்களைக் கொத்தடிமைகளாக அழைத்துச் சென்றது காலனியாதிக்க அரசு.

  அவர்களது உழைப்பை  ஏகாதிபத்தியம் சுரண்டிக் கொழுத்தது. சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, மியான்மர் உள்ளிட்ட நாடு களுக்கு தமிழர்கள் கொத்தடிமைகளாக கூட்டிச் செல்லப்பட்டனர். 

பிஜி தீவில் இந்தியப் பெண்கள் பட்டபாட்டினை மகாகவி பாரதியார் ‘கரும்புத் தோட்டத்திலே- அவர் கால்களும், கைகளும் சோர்ந்து விழும்படி வருந்துகின்றனரே’ என்று அழுது எழுதியிருப்பார். 

இதேபோல இலங்கையில் தேயிலைத் தோட் டங்களை உருவாக்க பிரிட்டிஷ் ஆட்சியாளர்க ளால் அழைத்துச் செல்லப்பட்ட தமிழ் மக்கள் பட்டபாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல. இன்றைக்கு இலங்கையில் செழித்து வளர்ந்திருக்கும் தேயிலை மற்றும் காப்பிச் செடிகளின் வேர் களை விசாரித்தால் அதில் மலையகத் தமிழர்க ளின் ரத்தத் துளிகள் ஒட்டியிருக்கும்.  

இலங்கையில் மலையகத் தமிழர்கள் குடி யேற்றப்பட்டு 200 ஆண்டுகள் கடந்துவிட்டன. அந்த நாடு விடுதலை பெற்ற பிறகும் மலைய கத் தமிழர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம். 

அவர்கள் இன்னமும் கூட முழு குடியுரிமை பெற்றவர்களாக, சம அந்தஸ்து உள்ளவர்களாக நடத்தப்படுகிறார்களா என்கிற கேள்வி எழுந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்த நிலையில் இலங்கையில் குடியமர்த்தப் பட்ட மலையகத் தமிழர்களது 200ஆவது ஆண்டையொட்டி ‘நாம் - 200 ஒற்றுமை, பன்முகத் தன்மை மற்றும் பாரம்பரியத்தின் முழக்கம்’ என்ற பெயரில் விழா ஒன்று இலங்கை அரசின் சார்பில்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த விழாவில் பங்கேற்குமாறு தமிழ்நாடு முதலமைச்சருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள் ளது. அவர் பங்கேற்க இயலாத நிலையில் மாநில நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற் பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் அவர் பங்கேற்பதற்கு முறையான ஒப்புதலை ஒன்றிய அரசு வழங்கவில்லை. ஒன்றிய ஆட்சியாளர்க ளின் சின்னப் புத்தியால் தமிழக முதல்வரின் காணொலி உரையும் அங்கு ஒளிபரப்பப்பட வில்லை.ஒளிபரப்பவிடாமல் மோடி ஒன்றிய அரசு தடுத்துவிட்டது.

 மலையகத் தமிழர்களை மட்டுமல்ல,  ஒட்டுமொத்த தமிழர்களையும் அவமதித்துள் ளது மோடி அரசு. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

எனினும் மோடியரசின் வஞ்சக எண்ணத்தை உணர்ந்த தமிழ்நாடு முதலமைச்சர்  ஊடகங்கள்,இணையம்,சமூகத் தளங்கள் வழியே உலக மக்களை தனது உரை சென்றடைய வைத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  

ஏழைகளை ஒழிப்போம்!


மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி ஏழைகளுக்காக இரவு, பகலாக பாடுபட்டுக் கொண்டிருப்பதாக கூறி இருக்கிறார்.


 ஏழ்மையை ஒழிப்பதாகக் கூறி மோடி அரசு ஏழைகளைத்தான் ஒழித்துக் கொண்டி ருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

வரலாறு காணாத விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் ஆகிய காரணங்க ளால் ஏழை இந்தியர்கள் வாழ்வு மிகக் கடும் நெருக் கடியில் சிக்கி இருக்கிறது. 

குறிப்பாக பரம ஏழைக ளாக இருக்கும் கிராமப்புற உழைப்பாளி மக்களு க்கு குறைந்தபட்ச உணவு அளிக்கும், 100 நாள் வேலை திட்டத்தின் ஊதியத்தைக் கூட தமிழ கத்திற்கு சுமார் 4 மாதங்களாக இந்த அரசு விடு விக்கவில்லை.

நரேந்திர மோடி தொலைக்காட்சியில் தோன்றி ரூ.1000 ரூ. 500 பணத்தாள்கள் செல் லாது என்று அறிவித்து கடந்த 8ஆம் தேதியுடன் ஏழு ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டது. 

கருப்புப் பணத்தை வெளியே கொண்டு வரவும், கள்ள நோட்டுகளை ஒழிக்கவும், பயங்கரவாதிக ளுக்கான நிதியாதாரத்தை அழிக்கவும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக அப்போது அவர் கூறினார்.

அவரது கூற்று தவறானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்தது. அவர் சொன்ன கருப்புப் பணம் ஒழியவில்லை, கள்ளப்பணம் ஒழிக்கப்படும் என்று சொன்னவர்கள் புதிதாக வெளியிட்ட ரூபாய் 2000 பணத்தாள்களையும் நீக்கிவிட்டனர். ஆகவே கள்ளப் பணம் ஒழிய வில்லை என்பது தெரிகிறது.

மோடி அரசு மக்கள் மீது வலுக்கட்டாயமாக திணித்த பண மதிப்பு நீக்கத்தின் அடிப்படை யான நோக்கம் கார்ப்பரேட்டுகளின் விருப் பத்தை நிறைவேற்றுவது என்பதே.

 சாமானிய, ஏழை, எளிய மக்கள், பெண்களிடம் சிறுசேமிப் பாக இருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது மட்டும் இன்றி நடுத்தர, சிறு, குறு தொழில் துறையினர், வர்த்தகர்களின் பணப்புழக்கமும் அடித்து வீழ்த்தப்பட்டது. அப்போது தடுமாறி கீழே விழுந்தவர்கள், இப்போது வரை மீண்டு எழவே முடியவில்லை. 

தமிழ்நாட்டில் வந்தாரை  வாழவைக்கும் நகரம் என பெயர் பெற்ற திருப்பூ ரின் தற்போதைய நிலையே இதற்கு சாட்சி!

மிகப்பெரும் கார்ப்பரேட் தொழில் குழுமங்க ளிடம் மென்மேலும் செல்வம் குவிந்து வருகிறது. அதேசமயம் மிகப் பெரும்பான்மையான மக்கள் ஏழ்மை நிலைக்குள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கி றார்கள். 

இந்த இடைவெளியை அதிகரித்து, முரண்பாட்டை மென்மேலும் கூர்மைப்படுத்தி யதே மோடி அரசின் பிரதான சாதனை. ஒன்பது ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகும் ஏழைகளுக் காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம் என்று மோடி பிரச்சாரம் செய்வதை இந்திய மக்கள் இனியும் நம்ப மாட்டார்கள்.

 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?