எதற்கு? இந்த விருது?

 செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு வினாடிக்கு 6000 கன அடியாக அதிகரிப்பு.3500 கனட அடி நீர்வரத்து.

சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் மழையால் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.

'வீட்டிற்குள் முடங்கும் காலம் மலையேறிவிட்டது தமிழக மாணவிகள் உலகெங்கும் சாதிக்க வேண்டும்':-கல்லூரி திறப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் .

மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத விவகாரம்; அரசியல் தீர்வு எட்டவில்லை என்றால் அரசியல் சாசனப்படிமுடிவெடுப்போம்.காலக்வரையறை விதிப்போம்.:-  உச்ச நீதிமன்றம் .

விலங்குகள் உருவ‘அனிமல் ஹெல்மெட்’ அணிந்த வாலிபருக்கு ₹10 ஆயிரம் அபராதம் பைக்கும் பறிமுதல்.

ரூ.4800 கோடி டெண்டர் முறைகேடு எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கின் அமர்வை தலைமை நீதிபதி முடிவு செய்வார்: -உச்ச நீதிமன்றம் .

மருத்துவ மேற்படிப்பு நீட் தேர்வு கட்-ஆஃப் மதிப்பெண் குறைப்பால்தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு லாபம். ஆய்வில் அம்பலம்.

பொதுமக்களின் அதித வரவேற்பை பெற்ற ஆவின் டிலைட்.. இனி 200 மி.லி. பாக்கெட்டிலும் கிடைக்கும்.

உள்நாட்டு நிலக்கரி மின் உற்பத்தி 8.8 சதவிகிதம் உயர்வு.

.பி.: பிறந்த குழந்தை இறந்துவிட்டதாகக் கூறி கவுன்சிலருக்கு விற்ற மருத்துவர்கள் கைது..
.

“சிறுபான்மை மக்களின் பாதுகாவலர்” 
ஏன்?எதற்கு??
இந்த விருது?

மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாட்டில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ‘புரட்சித் தமிழர்’ என்ற பட்டம் அவரது கட்சியினரால் வழங்கப்பட்டது.  


அடுத்து என்ன பட்டம் கொடுக்கலாம் என்று அவர்கள் ஆலோசித்து, கோவையில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த கிறிஸ்தவ கூட்டமைப்பு என்ற பெயரில், அவர்களாகவே ஒரு மாநாடு கூட்டி, எடப்பாடியாருக்கு “சிறுபான்மை மக்களின் பாதுகாவலர்” என்ற விருதினை வழங்கியுள்ளனர். 

இது அவர்களுக்கே சற்று ஓவராக தெரியவில்லையா? 


அது மட்டுமல்ல, இந்த மாநாட்டுக்கு வந்த அவருக்கு கிரேன் மூலம் 10 அடி உயர மாலை அணிவிக்கப்பட்டதோடு, தங்க வாளும் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் பேசிய எடப்பாடியார், இன்  றைக்கும்கூட நாடு முழுவதும் சிறுபான்மை மக்  களை நரவேட்டையாடி வரும் பாஜக குறித்து  ஒருவார்த்தை கூறவில்லை.


 பின் எதற்காக அவ ருக்கு ‘சிறுபான்மை மக்களின் பாதுகாவலர்’ விருது? சிறுபான்மை இஸ்லாமிய மக்கள் பெரும்  பான்மையாக இருந்த ஒரே மாநிலமான, ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தை யூனியன் பிரதேசங்களாக உடைத்து, அரசியல் சட்டத்தின் 370-ஆவது பிரிவை ரத்து செய்து நாடாளுமன்றத்தில் பாஜக கொண்டு வந்த தீர்மானத்தை அவரது கட்சி ஆதரித்ததற்காகவா? 

இப்போதுகூட, மணிப்பூரில் சிறுபான்மை கிறிஸ்துவ மக்களான குக்கி இனத்தவர்கள் படு கொலை செய்யப்பட்டதை கண்டித்து, நாடாளு மன்றத்தில் பெரும் புயலே வீசிய போதும், அதி முகவினர் பாஜகவுக்கு விசுவாசமாக அமைதி காத்தார்களே... அதற்காகவா? முத்தலாக் தடைச் சட்டத்தை மோடி அரசு கொண்டு வந்த போது, எவ்வித விமர்சனமும் இல்லாமல் மக்களவையில் அந்த மசோதாவை அதிமுக ஆதரித்ததே... அதற்காகவா? 

மாநி லங்களவையில் அந்த மசோதாவை எதிர்த்த தற்காக அன்வர் ராஜாவை கட்டம் கட்டி னார்களே, அதற்காகவா? குடியுரிமை திருத்தச் சட்டம் என்ற பெயரில்  குடி கெடுக்கும் மசோதாவை நரேந்திர மோடி  அரசு கொண்டு வந்தபோது, எவ்வித நிபந்தனை யுமின்றி அதை அதிமுக ஆதரித்தது. 

முதல்வராக  இருந்த இதே எடப்பாடி பழனிச்சாமி, இந்த  சட்டத்தால் இப்போதைக்கு யார் பாதிக்கப்பட் டார்கள் என்று கூற முடியுமா? என குதர்க்கம் பேசினார். 

அதைப் பாராட்டியா இப்போது இந்த  விருது?  இன்னும் சொல்லப் போனால், மாநிலங்கள வையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாத  நிலையில் 11 உறுப்பினர்களை கொண்டிருந்த அதிமுக குடியுரிமை சட்டத் திருத்த மசோதா வை எதிர்த்து வாக்களித்து இருந்தால், அந்த மசோதா தோற்கடிக்கப்பட்டிருக்கும். 


ஆனால், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதி முக மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தது.  ஒருவகையில், அந்த மசோதா நிறைவேற்றப்பட்  டதற்கே காரணம் அதிமுக அளித்த வாக்குகள் தான் என்பதை அவ்வளவு எளிதாக கடந்து சென்றுவிட முடியுமா? 

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து  அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு முழு வதும் இஸ்லாமிய மக்கள் மட்டுமின்றி, அனைத்துப் பகுதி மக்களும் இணைந்து போரா டினார்கள். அவர்கள் மீது அடுக்கடுக்காக பொய்  வழக்குகள் தொடுக்கப்பட்டதை மறந்துவிட முடி யுமா?


 நாடு முழுவதும் மாட்டிறைச்சியின் பெய ரால், சிறுபான்மை மக்கள் தொடர்ந்து தாக்கப்  படும் போது கொட்டாவி விடக்கூட வாயை திறக்காதவர்தானே எடப்பாடி பழனிச்சாமி. 


அவருக்கு எதற்கு இந்த விருது?


 இப்போதுகூட சிறுபான்மை மக்களுக்கு முற்றிலும் எதிரான பாஜகவை பகைத்துக் கொள்ள அதிமுக தயாராக இல்லை. 


பிரதமர் மோடியையோ, உள்துறை அமைச்சர் அமித்ஷா வையோ விமர்சிப்பதில்லை. அடாவடி ஆளுநர்  ஆர்.என்.ரவிக்கு முட்டுக் கொடுக்கவும் தயங்கு வதில்லை. 


இத்தனை அட்டூழியங்களுக்கும் ஏன் துணை  போனீர்கள் என்று கேட்டால், கூட்டணி தர்மத்  தால் ஆதரித்தோம் என்ற ஒற்றை வார்த்தையை தவிர, எடப்பாடி பழனிச்சாமியிடம் வேறு விளக்கம் இல்லை. இப்போது, சிறுபான்மை மக்களின் மீது  இவர்களுக்கு பாசம் பொங்குவது நாடாளு மன்றத் தேர்தலுக்காக மட்டுமே. இந்த பகல் வேஷக்காரர்களை சிறுபான்மை மக்கள் ஒரு போதும் நம்பமாட்டார்கள்.

-------------------------------------------------

பிளைட் மோட்

விமானத்தில் பயணம் செய்யும்போது, ​​போனை ஏரோபிளேன் மோடில் வைக்க வேண்டும். விமானம் பறக்கும்போது செல்போனை சிக்கலுடன் பயன்படுத்தினால், விமானத்தின் சிக்னல் அமைப்பில் பாதிப்பு ஏற்படலாம். இதனால் விமானிகள் ரேடார் மற்றும் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொள்வதில் சிரமம் ஏற்படும். எனவே தான் ஏரோபிளேன் மோடு கட்டாயமாக பரிந்துரைக்கப்படுகிறது.

விமான பயணத்தின்போது மட்டுமல்லாது மேலும் சில விதங்களிலும் இந்த ஏரோபிளேன் மோடு பயன்படுகிறது. 

அவசர காலங்களில் ஃபோனின் பேட்டரியைச் சேமிக்க விரும்பினால், இந்த ஏரோபிளேன் மோடு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் ஏரோபிளேன் மோடில் உங்களுக்கு அனைத்து சிக்னல்களும் துண்டிக்கப்படுவதால் பேட்டரி வழக்கம் போல குறையாது.

சில முறை உங்களுக்கு மொபைல் சிக்னல் கிடைப்பதில் சிக்கல்கள் வரலாம். அப்போது, உடனடியாக ஏரோபிளேன் மோடில் போனை சிறிது நேரம் வைத்து பின்னர் அதை இயக்கவும். இதைச் செய்வதன் மூலம் நெட்வொர்க் மீண்டும் ஒழுங்காக கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம். சிறிய இணைப்பு சிக்கல்கள் உடனடியாக தீர்க்கப்படும்.

உங்கள் மொபைல் போன் பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்ய வேண்டும் என்றால் ஏர்பிளேன் மோடில் வைத்து சார்ஜ் போடுங்கள். இதன் மூலம் உங்கள் ஃபோன் பேக்ரவுண்ட் செயல்முறைக்கு பேட்டரியை தீர்த்துவிடும். எனவே போன் வேகமாக சார்ஜ் செய்சிக்னல்

நீங்கள் மருத்துவமனை அல்லது ஆய்வகம் போன்ற பகுதிகளில் இருக்கின்றீர்கள் என்றால் உங்கள் மொபைல் வாயிலாக மின்காந்த கதிர் வீச்சு பாதிப்புக்கு ஆளாக நேரிடும். அப்போது ஏர்பிளேன் மோடை பயன்படுத்துவதன் மூலம் அதிலிருந்து தப்பலாம்.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?