நாங்கள் காரணம் இல்லை

 கனமழை பொழிவதால் டெல்லிக்கு வந்த 16 விமானங்கள் திருப்பி விடப்பட்டன.

உத்தரப்பிரதேச  மௌதாஹா கோட்வாலி நகரைச் சேர்ந்தவர் முஹம்மது ஷாஹித். எல்லைப் பாதுகாப்பு படை(பிஎஸ்எஃப்) வீரரான இவர் வீட்டில் முன் பட்டாசு வெடித்தவர்களை கண்டித்ததால் அவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய 22 பேர் மீது வழக்குப் பதிவு. அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார்.

சீனாவில் பரவும் சுவாச நோய்கள் இன்னொரு கொரோனா பாதிப்பாக உருவாக வாய்ப்பில்லை.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம்.மேலும் 2 நாட்களுக்கு நீட்டிப்பு

அரசியலில் ஏமாற்றுப்பேர்வழிகளின் தந்தை இபிஎஸ்.அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்.
உத்தரகாசி சுரங்க விபத்திற்கு நாங்கள் காரணம் இல்லை.அதானி குழுமம் விளக்கம்

திருவள்ளூர் மாவட்டத்தில் 70 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது.

ஐஐடி பேராசிரியர் ஆசீஷ் குமார் சென் துன்புறுத்தலால்தான்  ஆராய்ச்சி மாணவர் சச்சின் குமார் தற்கொலை என விசாரணை குழு அறிக்கை பணியிடை நீக்கம் செய்தது நிர்வாகம்.

உத்தரகாசி சுரங்கம் சரிந்து 41தொழிலாளர் சிக்கிக்கொண்ட விபத்து. 17வது நாளாக தொடர்கிறது மீட்புப்பணி.
சமூக நீதிக்கான சிலை.

உத்­தர பிர­தேச மாநி­லம், அல­கா­பாத் மாவட்­டத்­தில், மிகப்­பெ­ரிய ஜமீன்­தா­ர­ரான ராஜா தயா பக­வதி பிர­தாப் சிங் அவர்­க­ளுக்கு மக­னா­கப் பிறந்­த­வர் விஸ்­வ­நாத் பிர­தாப் சிங் என்ற வி.பி. சிங் அவர்­கள்.

 கல்­லூ­ரி­யில் படிக்­கும் காலத்­தி­லேயே காந்­திய இயக்­கத்­தில் ஈடு­பட்­டார்; சர்­வோ­தய சமா­ஜில் இணைந்­தார், பூமி­தான இயக்­கத்­தில் பங்­கெ­டுத்­தார், தனது நிலங்­க­ளையே தான­மாக வழங்­கி­னார்.

1969-ஆம் ஆண்டு உத்­தர பிர­தேச சட்­ட­மன்­றத் தேர்­த­லில் நின்று வெற்றி பெற்­றார். பின்­னர் உத்­தர பிர­தேச மாநி­லத்­தின் முத­ல­மைச்­ச­ரா­க­வும், ஒன்­றிய வர்த்­தக அமைச்­ச­ரா­க­வும், வெளி­யு­ற­வுத் துறை அமைச்­ச­ரா­க­வும், நிதி அமைச்­ச­ரா­க­வும், பாது­காப்­புத் துறை அமைச்­ச­ரா­க­வும் பதவி வகித்­தார். 

தேசிய முன்­ன­ணியை உரு­வாக்கி 1989-ஆம் ஆண்டு இந்­தி­யா­வின் பிர­த­ம­ராக பதவி வகித்­தார்.

இந்­திய அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டம் உரு­வாக்­கப்­பட்­ட­போது பட்­டி­ய­லின, பழங்­கு­டி­யி­ன­ருக்கு ஒன்­றிய அர­சுப் பணி­யி­டங்­க­ளில் தனி இட­ஒ­துக்­கீடு தரப்­பட்­டது. 

ஆனால், பிற்­ப­டுத்­தப்­பட்ட மக்­க­ளுக்கு, அவர்­க­ளது மக்­கள் தொகைக்கு ஏற்ப இட­ஒ­துக்­கீடு தரப்­ப­ட­வில்லை. 

இதனை வழங்­கு­வ­தற்­காக அமைக்­கப்­பட்ட இரண்­டா­வது பிற்­ப­டுத்­தப்­ பட்­டோர் ஆணை­யம்­தான் B.P. மண்­டல் தலை­மை ­யி­லான ஆணை­யம். சமூ­க­ரீ­தி­யா­க­வும், கல்­வி­யி­லும் பின்­தங்­ கிய பிற்­ப­டுத்­தப்­பட்ட வகுப்­பி­னர் என்று அழைக்­கப்­ப­டும் சமூ­கத்­துக்கு, B.P. மண்­டல் பரிந்­து­ரை­யின் ஒன்­றிய அர­சுப் பணி­யி­டங்­க­ளில் 27 விழுக்­காடு இட­ஒ­துக்கீட்டை வழங்­க­லாம் என்ற உத்­த­ரவை அமல்­ப­டுத்­தி­ய­வர் வி.பி. சிங் அவர்­கள்.

வி.பி.சிங் அவர்­கள் பத­வி­யி­லி­ருந்த 11 மாத காலத்­தில், பிற்­ப­டுத்­தப்­பட்ட

மக்­க­ளுக்கு 27 விழுக்­காடு இட­ஒ­துக்­கீடு, தக­வல் அறி­யும் உரி­மைச் சட்­டம் மற்­றும் தேசிய ஊரக வேலை­வாய்ப்­புத் திட்­டத்­திற்­கான தொடக்­கப் புள்ளி, வேலை உரி­மையை அர­சி­யல் சாசன உரிமை ஆக்­கி­யது, தேர்­தல் சீர்­தி­ருத்­தங்­கள், மாநி­லங்­க­ளுக்­கி­டை­யி­லான கவுன்­சில், தேசி­யப் பாது­காப்­புக் குழு, உழ­வர்­கள் பிரச்­சி­னை­யைத் தீர்க்க மூன்று குழுக்­கள், டெல்லி குடி­சைப் பகுதி மக்­க­ளுக்கு வாழ்­வி­டங்­கள், அதி­க­பட்ச சில்­லறை விற்­பனை விலை (MRP) அச்­சி­டு­தல் போன்­ற­வற்றை செயல்­ப­டுத்­திய மாபெ­ரும் சாத­னை­யா­ளர் ஆவார்.

தமிழ்­நாட்டு மக்­க­ளின் உயிர்ப் பிரச்­சி­னை­யான காவிரி நீருக்­காக நடு­வர் மன்ற ஆணை­யத்தை அமைத்­துத் தந்த­தோடு, சென்­னை­யில் அமைந்­துள்ள உள்­நாட்டு விமான நிலை­யத்­ திற்கு பெருந்­த­லை­வர் காம­ரா­சர் பெய­ரை­யும், பன்­னாட்டு விமான நிலை­யத் ­திற்கு பேர­றி­ஞர் அண்­ணா­வின் பெய­ரை­யும் சூட்­டிய பெரு­மைக்­கு­ரி­ய­வர் வி.பி.சிங் அவர்­கள். 

உயர்­வர்க்­கத்­தில் பிறந்­தா­லும், ஒடுக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கா­கச் சிந்­தித்­த­வர், எத்­தனை உயர் பதவி வகித்­தா­லும் கொள்­கையை விட்­டுத் தரா­த­வர் வி.பி. சிங் அவர்­கள்.

இத்­த­கைய ஒப்­பற்ற தலை­வ­ரான வி.பி.சிங் அவர்­க­ளின் நினை­வைப் போற்­றும் வகை­யி­லும், அவ­ருக்­குத் தமிழ்ச் சமு­தா­யத்­தின் நன்­றி­யைத் தெரி­விக்­கும் வகை­யி­லும் முத­ல­மைச்­சர் அவர்­கள் 20.4.2023 அன்று சட்­டப்­பே­ரவை விதி 110-ன் கீழ் வெளி­யிட்ட அறி­விப்­பில், சமூ­க­நீ­திக் காவ­லர், மேனாள் இந்­தி­யப் பிர­த­மர் வி.பி.சிங் அவர்­க­ளின் நினை­வைப் போற்­றும் வகை­யில், சென்­னை­யில் அவ­ரது முழு உருவ கம்­பீ­ரச் சிலை அமைக்­கப்­ப­டும் என்று அறி­வித்­தார்

அந்த அறி­விப்­பிற்­கி­ணங்க, சென்னை, மாநி­லக் கல்­லூரி வளா­கத்­தில் 52 இலட்­சத்து 20 ஆயி­ரம் ரூபாய் செல­வில் நிறு­வப்­பட்­டுள்ள மேனாள் இந்­தி­யப் பிர­த­மர், சமூக நீதிக் காவ­லர் வி.பி.சிங் அவர்­க­ளின் முழு திரு­வு­ரு­வச் சிலையை சிறப்பு விருந்­தி­ன­ரான உத்­தர பிர­தேச மாநில முன்­னாள் முத­ல­மைச்­சர் அகி­லேஷ் யாதவ், வி.பி.சிங் அவர்­க­ளின் துணை­வி­யார் திரு­மதி சீதா குமாரி, மகன் அஜயா சிங் மற்­றும் அவ­ரது குடும்­பத்­தி­னர் முன்­னி­லை­யில் முத­ல­மைச்­சர் அவர்­கள் திறந்து வைத்­தார்.

இந்­நி­கழ்ச்­சி­யில், நீர்­வ­ளத்­துறை அமைச்­சர் துரை­மு­ரு­கன், உயர் ­கல்­வித்­துறை அமைச்­சர் முனை­வர் க.பொன்­முடி, பொதுப்­ப­ணித் துறை அமைச்­சர் வேலு, இளை­ஞர் நலன் மற்­றும் விளை­யாட்டு மேம்­பாட்­டுத் துறை அமைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின், தமிழ் வளர்ச்சி மற்­றும் செய்­தித்­துறை அமைச்­சர் மு.பெ.சாமி­நா­தன், அமைச்­சர் பெரு­மக்­கள், நாடா­ளு­மன்ற, சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள், தலை­மைச் செய­லா­ளர் சிவ் தாஸ் மீனா, பொதுப்­ப­ணித் துறை முதன்­மைச் செய­லா­ளர் டாக்­டர் பி.சந்­தரமோகன், தமிழ் வளர்ச்சி மற்­றும் செய்­தித்­துறை செய­லா­ளர் மருத்­து­வர் இரா.செல்­வ­ராஜ், செய்தி மக்­கள் தொடர்­புத் துறை இயக்­கு­நர் த.மோகன் மற்­றும் அரசு உயர் அலு­வ­லர்­கள் கலந்­து­ கொண்­ட­னர்.

--------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?