தீபாவளி ஏன்?எதற்கு??

 வாணியம்பாடி அருகே அரசு விரைவுப் பேருந்தும், ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து.5 பேர் உயிரிழப்பு: 40 பேர் படுகாயம் .

'மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை நாட்டுக்கே முன்மாதிரியான திட்டம்'. புதிதாக 7.35 லட்சம் பெண்களுக்கு வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின்

'தமிழ்நாட்டில் ரவுடியிசம் ஒழிக்கப்பட்டு வருபிறது. ':-கூடுதல் டிஜிபி அருண் பேட்டி .

வேண்டிய வரம் கிடைக்காததால் ,முரளி என்பவர் கோயில் மீது பெட்ரோல் குண்டுவீச்சுபக்தர்கள் அலறியடித்து ஓட்டம்.ரகளை செய்த வியாபாரி கைது.

ஆடையில் மறைத்து பெண் பயணி கடத்திய ரூ.28 லட்சம் தங்க பேஸ்ட் பறிமுதல் .

கொல்கத்தாவிலிருந்து ஒடிசா சென்று கொண்டிருந்த பேருந்தில் பரவிய தீ. ஒருவர் பலி.30 பேர் காயம்! 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மசோதாக்களை ஆளுநர் ரவி கிடப்பில் போட்டது ஏன்? நெருப்புடன் விளையாடுகிறார் ஆளுநர்.ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்.

குற்றால அருவிகளில் தொடர் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை.

'இணையவழி சூதாட்ட தடைச் சட்டம் குறித்த நீதிமன்ற தீர்ப்பை பரிசீலித்து நடவடிக்கை எடுப்போம்.'அமைச்சர் எஸ்.ரகுபதி 

அரைவேக்காடு அண்ணாமலை.. இவரது பேச்சாலே 39 தொகுதிகளில் டெபாசிட்டை இழக்கப்போகும் பாஜக.. கே.எஸ்.அழகிரி விளாசல்.

தீபாவளி ஏன்?எதற்கு??

மாணவி:  சார், தமிழர்கள் தீபாவளியை எதற்குக் கொண்டாடுகிறார்கள்?

ஆசிரியர்: எதற்காக கேட்கிறாய்?

மாணவி: தமிழ்ச் சங்க காலத்தில் இங்கு தீபாவளி கொண்டாடப்பட்டதாகத் தெரியவில்லை. அதற்கான எந்தக் குறிப்பும் இலக்கியத்தில் இல்லை.

ஆசிரியர்: அதனால் என்ன?

மாணவி: இப்போது நாம் மட்டும் கொண்டாடுகிறோமே ஏன்?

ஆசிரியர்: கிருஸ்தவர்கள் கிறிஸ்மஸ் கொண்டாடுகிறார்கள்.இஸ்லாமியர்கள் மிலாடி நபி கொண்டாடுகிறார்கள். அதைப் போலத்தான் இதுவும்.

மாணவி: தமிழர்களின் பண்டிகைப் பற்றிப் பேசும்போது நீங்கள் மற்ற மதத்தின் பண்டிகைகள் பற்றி பேசுறீங்களே?!

அப்படினா தீபாவளி தமிழர்களின் பண்டிகை இல்லை என்பது தெளிவாகிறது. அது இந்துமத பண்டிகை என்று புரிகிறது.

ஆசிரியர்: 🥺

மாணவி: சரி, கிறிஸ்துமஸ் கிறிஸ்து பிறந்த நாள், மிலாடி நபிமு,கமதுநபி பிறந்தநாள். தீபாவளி யாருடைய பிறந்த நாள் சார்?

ஆசிரியர்: தீபாவளி - நரகாசுரன் கொல்லப்பட்ட நாள்.

மாணவி: மற்ற மதத்தவர்கள் தங்கள் மதத் தலைவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடும் போது இந்துமதம் மட்டும் நரகாசுரனின் இறந்த தினத்தை ஏன் இவ்வளவு ஆடம்பரமாகக் கொண்டாடுகிறது?

ஆசிரியர்: நரகாசுரன் என்கிற கருப்பான பயங்கரமான அசுரன், பார்ப்பனர்கள் யாகம் செய்யவிடாமல் தடுத்தான். அதனால் பார்ப்பனர்களும் தேவர்களும், பகவானிடம் சென்று முறையிடவே கிருஷ்ண அவதாரம் எடுத்து நரகாசுரனை கொன்றாராம்.

மாணவி: இந்தக்கதையில் பார்ப்பனர்கள் என்பது யாரென்று புரிகிறது சார். பார்ப்பனர்கள் இன்றும் கூட இருக்கிறார்கள். அப்படியானால் அந்த அசுரர்கள் யார்? எங்கு இருக்கிறார்கள்?

ஆசிரியர்: புராணங்களில் வரும் வருணனைகளை வைத்துப் பார்த்தால் பெரும்பாலான அசுரர்கள் என்பவர்கள் தமிழர்கள் தான். 

மாணவி: அப்படியானால் தீபாவளி பார்ப்பனர்களின் வெற்றி விழா. தமிழர்களை வீழ்த்திய நாள் 

ஆசிரியர்: 🥺??

மாணவி: பார்ப்பனர்களுக்கு ஆதரவாக தமிழர்களை அழித்தக் கடவுள் எப்படி தமிழர்களுக்கு கடவுளாவார்?பிராமணர்கள் தங்களைக் காத்த அந்தப் பிராமணக் கடவுளை நினைத்து பெருமையுடன் தீபாவளி கொண்டாடலாம்.ஆனால் தமிழர்களான நாம் நம் தன்மானத்தை இழந்து எப்படி தீபாவளியை கொண்டாட முடியும்? இது நமக்கு அவமானம் இல்லையா! 

ஆசிரியர்: 🥺????

மாணவி: நரகாசுரனின் பிறந்த நாளை அல்லவா தமிழர்கள் விமரிசையாகக் கொண்டாடவேண்டும்.

ஆசிரியர்: நரகாசுரனின் பிறந்த நாள் தான் தெரியாதே?!

மாணவி: நரகாசுரன் இறந்த நாளைக் கண்டுபிடித்த ஆரியப் வைதீக மதத்திற்கு அவரின் பிறந்த நாள் தெரியாதாஇதுஅயோக்கியத்தனமில்லையா? 

தமிழ் அறிஞர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் ஏன் இதுபற்றி ஒருபோதும் பேசியதில்லை? ஏன் சார் ?

ஆசிரியர்:  உனக்கு ஏம்மா இவ்ளோ கோவம்?

மாணவி: இனிவரும் தலைமுறைக்காவது சரியான விளக்கத்தைச் சொல்லி இனமானமிக்க தமிழர்களை உருவாக்க வேண்டும் சார்!

ஆசிரியர்: நீ சொல்வது சரி தான் மா.

தீபாவளிக்கு ஏன் திராவிட தலைவர்கள் வாழ்த்து சொல்லுவதில்லை என்பதற்கான விளக்கம் தான் இந்தபதிவு.

கேட்ட வரத்தை கொடுக்காத்தேன்.

சென்னை கொத்தவால்சாவடி கோவிந்தப்பன் நாயக்கன் தெரு சந்திப்பில் ஸ்ரீவீரபத்ர சுவாமி தேவஸ்தானம் கோயில் உள்ளது. நேற்று காலை வழக்கம்போல் பூசாரி வெங்கடசுப்பிரமணி கோயிலை திறந்துள்ளார். 


காலை 8.45 மணிக்கு கோயிலுக்கு வந்த மர்ம நபர், போதையில் சாமி கும்பிட வந்தார். அப்போது திடீரென பீர்பாட்டிலில் பெட்ரோல் நிரம்பி வைத்திருந்த பெட்ரோல் குண்டை வீசியுள்ளார்.


அது பயங்கர சத்தத்துடன் வெடித்தது அந்த சத்தம் கேட்டு கோயில் பூசாரி, சாமி கும்பிட வந்த பக்தர்கள் அலறியடித்து ஓடினர். சத்தம் கேட்டு அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் கோயிலுக்கு வந்தனர்.


 அங்கிருந்து தப்பியோட முயன்ற மர்ம நபரை மடக்கி, பிடித்து, கொத்தவால்சாவடி சட்டம்-ஒழுங்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


விசாரணையில், அவர் சென்னை சவுகார்பேட்டை ஆதியப்ப நாயக்கன் தெருவை சேர்ந்த முரளிகிருஷ்ணன் (39) என்பதும், வியாபாரியான இவருக்கு மனைவி, குழந்தை உள்ளதும், கொத்தவால்சாவடி காவல் நிலையத்தில் வழிப்பறி வழக்கு இருப்பதும் தெரிய வந்துள்ளது. 


மேலும், கடந்த 5 ஆண்டுகளாக ஸ்ரீவீரபத்ர சாமியை கும்பிட்டு வருவதாகவும், அவர் கேட்பது எதையும் செய்து தரவில்லை எனவும், எதுவும் செய்யாததால் கோபத்தில் பெட்ரோல் குண்டு வீசியதும் தெரிய வந்துள்ளது. 


இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

-------------------------------------------






இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?