இனியாவது திருந்துவாரா?

 விளையாட்டு வீரர்களுக்கு என சிறப்பு பிரிவு உலக தரத்தில் சிகிச்சை வழங்கும் அரசு மருத்துவமனை: வருடத்துக்கு 250 ஆபரேஷன், பிற மாநிலத்தவர் சிகிச்சைக்காக சென்னை வருகை, அரசு மருத்துவர்கள் தகவல்.

அமைச்சர் எ.வ.வேலு வீடு, அலுவலகங்களில் வருமான வரி சோதனை.. சென்னை, திருவண்ணாமலையில் 100 இடங்களில் சோதனை.

அதிமுக தொடக்கநாள் பொதுக்கூட்டம் 16ம் தேதிக்கு ஒத்திவைப்பு.

'இந்தியா முழுவதும் ஒன்றிய பாஜ அரசுக்கு எதிரான அலை வீசுகிறது வேஷம் போடும் பாஜ-அதிமுக கள்ளக்கூட்டணியை வீடு வீடாக சென்று அம்பலப்படுத்துங்கள்':-முதல்வர் மு.க.ஸ்டாலின் .

தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதி வெட்டிக்கொலை.. திருமணமான 3வது நாளில் நிகழ்ந்த கொடூர சம்பவம்.

ஓபிஎஸ், இபிஎஸ் வழிமொழிந்து பொதுச்செயலாளரான என்னை நீக்கம் செய்தது செல்லாது.உயர்நீதிமன்றத்தில் சசிகலா.

மதுரை காமராசர் பலகலைக் கழகப் பட்டமளிப்பு.கடும் எதிர்ப்பு காரணமாக உரையாற்றாமல் வெளியேறினார் ஆர்.யன்.ரவி.

ஆர்.யன்.ரவியின் ஆளுநர் பணி?

ஆன்லைன் ரம்மி மசோதாவையும் நிறுத்தி வைத்தார். ஆன்லைன் ரம்மி நடத்துபவர்களை ராஜ்பவனுக்கு அழைத்து பேசினார்.

 இதை விட வெட்கக்கேடு இருக்க முடியுமா?

 ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்துக்கு முன்னதாக பொதுமக்கள் கருத்தை தமிழ்நாடு அரசு கேட்டது. ‘இதற்கெல்லாமா பொதுமக்கள் கருத்தை கேட்பார்கள்?’ என்று கிண்டல் செய்தது பா.ஜ.க. 

ஆனால், ஆன்லைன் ரம்மி நடத்துபவர்களையே சந்தித்து பேசினார் ரவி. அப்போது பா.ஜ.க.வால் வாயைத் திறக்க முடியவில்லை.

ஆண்டின் முதல் கூட்டத்தொடரின் முதல் நாளன்று ஆளுநர் உரையாற்ற வேண்டும் என்பது ஒரு வழக்கம். அரசு தயாரித்து தரும் உரையை வாசித்து விட்டுச் செல்ல வேண்டும். 

அதையே மாற்றியும் திருத்தியும் நீக்கியும் சேர்த்தும் தன் இஷ்டத்துக்கு தான்தோன்றித்தனமாக நடந்து கொண்டவர் ஆளுநர் என்பதை அகில இந்திய ஊடகங்கள் அனைத்துமே கண்டித்தன. 

நேற்று மதுரை பட்டமளிப்பு விழாவிலும் அவமானப்பட்டிருக்கிறார்.

அதன்பிறகும் அவர் திருந்துவதாகத் தெரியவில்லை.

உச்சநீதிமன்ற வழக்குக்குப்  பிறகாவது திருந்துவாரா என்பதைப் பார்ப்போம்.

-----------------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?