முறைகேடுகளின் முதலிடம்

 

நெல்லையப்பர் தேரோட்டம் – வடம் அறுந்ததால் பரபரப்பு.

தமிழ்நாட்டில் நாளை மறுநாள் முதல் மழைக்கு 3 நாட்களுக்கு சிகப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்)

லஞ்ச ஒழிப்பு சோதனை சார்பதிவாளர் வீட்டில் மண்ணில் புதைத்த ரூ.12 லட்சம் சிக்கியது.80 சவரன் நகையும் பறிமுதல்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிணை வழங்கப் பட்டது.


முறைகேடுகளின் முதலிடம்

பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் தான் ஆள்மாறாட்டம், தேர்வு நடத்தைகளில் முறைகேடுகள் அதிகளவில் கண்டறியப்படுகிறது என்றால்,

தேசிய அளவில் முன்னெடுக்கப்படும் தேர்வுகளிலும் முறைகேடுகளுக்கு பஞ்சமில்லாத சூழல் உருவாகியுள்ளது.

ஆண்டிற்கு ஒரு முறை நடத்தப்படும் தேர்வுகளிலேயே, தற்போது முறைகேடுகள் அதிகரிப்பது கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

அவ்வாறு நடப்பாண்டில், ஒன்றிய பா.ஜ.க அரசின் தலைமையின் கீழ் முன்னெடுக்கப்பட்ட, நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு (NEET), ஒன்றிய பல்கலைக்கழங்களில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு (CUET), உதவிப் பேராசிரியர்/ ஆராய்ச்சி மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வு (NET) என மூன்று தேர்வுகளிலும் முறைகேடுகள் அரங்கேறியது, ஒன்றிய பா.ஜ.க.வின் அலட்சியத்தை வேறுபிரித்து காட்டியுள்ளது.

அதிலும் குறிப்பாக, நீட் தேர்வில், ஏற்கனவே பல்வேறு சிக்கல்கள் இருக்கும் சூழலில், பல மாணவர்கள் தங்களது உயிர்களை மாய்த்துக்கொண்ட ஒரு நுழைவுத்தேர்வில், வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் உள்ளிட்டவை அரங்கேறியதும், அதற்கு பல இலட்சம் பண பரிமாற்றம் செய்யப்பட்டதும் அம்பலமாகி, நாட்டையே உலுக்கியுள்ளது.

மூன்று முக்கிய தேர்வுகளிலும் முறைகேடு : அலட்சியத்தின் உச்சம் தொட்ட ஒன்றிய பா.ஜ.க அரசு!
-

இந்நிலையில், நீட் முறைகேடுகளுக்கே தீர்வுகாணப்படாத போது, பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) தேசிய தகுதித் தேர்விலும் (NET) முறைகேடு நடந்தது அம்பலமாகி, தேர்வை ரத்து செய்துள்ளது ஒன்றிய கல்வித்துறை.

இதே நிலை தான், ஒன்றிய பல்கலைக்கழங்களுக்கான நுழைவுத்தேர்விற்கும் (CUET).

இது குறித்து, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “ஒவ்வொரு ஆண்டும், மோடி தலைமையில் தேர்வுகள் நடத்தப்படுவது குறித்து விவாதிக்கப்படாலும், முறைகேடுகள் இல்லாத தேர்வுகளை நடத்த முடியவில்லையே ஏன்?” என்றும்,

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, “பாஜக அரசின் மெத்தனமும், ஊழலும் இளைஞர்களுக்குப் பேரிடியாக உள்ளது. நீட் தேர்வை தொடர்ந்து, ஜூன் 18ல் நடந்த நெட் தேர்வில் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்ற அச்சத்தால் அத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தவறுகளுக்கு யார் காரணம் என்பது கண்டறியப்படுமா? கல்வி அமைச்சர் இதற்கு பொறுப்பேற்பாரா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ், “யூஜிசி- நெட் (UGC-NET) தேர்வில் முறைகேடு நடந்துள்ளதால், தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. மோடி ஆட்சியில் வினாத்தாள் கசிவு இயல்பாகி, அனைத்து தேர்வுகளிலும் ஒன்றன் பின் ஒன்றாக அம்பலப்பட்டு வருவது திட்டமிட்ட சதிகளை வெளிச்சமிட்டு காட்டுகிறது” என கண்டனம் தெரிவித்துள்ளார்.

எனினும், இதனை ஒரு பொருட்டாக எண்ணாது, தங்களது ஆகச்சிறந்த பணியான “புறக்கணிப்பு பணியை” சரியாக செய்து வருகிறது ஒன்றிய பா.ஜ.க அரசின் தலைமை.

ஏன் நஞ்சை குடிக்க வேண்டும்?

            *விஷ சாராய பலிக்கு காரணமாக மெத்தனால் குடித்தால் ஒவ்வொரு உடல் உறுப்பாக பாதிக்கப்படும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்

இதுகுறித்து அவர்கள் கூறுகையில்:-


 ‘மெத்தனால் என்பது கார்பன்மோனாக்சைடு வாயு மற்றும் ஹைட்ரஜன் கலந்த ஒரு ரசயான திரவமாகும். நமது உடல் மற்றும் காய்கறி, பழங்கள், உணவு பொருட்களில் கூட மெத்தனால் உள்ளது. 

ஆனால் மிக மிக குறைந்த அளவே உள்ளது. அதிக அளவில் மெத்தனால் சேர்ந்துவிட்டால் நச்சுதன்மையாக மாறிவிடும். 2 மில்லி அளவு உட்கொண்டாலே சிறுவர்களின் உயிரை பறித்து விடும். பிளாஸ்டி தயாரிப்பு, ஜவுளி தொழில்,விவசாயத்துக்குபயன்படுத்தப்படும் மருத்து உள்ளிட்டவைக்கு மெத்தானல் பயன்படுத்தப்படுகிறது.



போதைக்காக குடிக்கும் சாராயத்தில் எத்தனால் இருக்கும். விஷச்சாராயத்தில் மெத்தனால் கலக்கப்படுகிறது. 

இது உடலுக்கு சென்று வளர்சிதை மாற்ற செயல்பாடு அடையும்போது பார்மிக் அமிலமாக (Formic acid) மாறுகிறது. அப்படி உடலில் பார்மிக் அமிலம் உருவாகும்போது உடலுக்கு அது மிகவும் ஆபத்தை விளைவிக்கிறது. 


மெத்தனால் கலந்த சாராயத்தை குடிக்கும் போது ஆரம்பத்தில் லேசான மயக்கம், வாந்தி, குமட்டல், தலைவலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். மேலும், உடலில் உள்ள குடல் பகுதி வெந்து போகும்.


 அதனைத்தொடர்ந்து சுயநினைவு இழத்தல், மூளை பாதிப்பு, வயிறு புண் ஆகுதல், கண் நரம்பு பாதித்து பார்வை மங்குதல், பார்வை இழப்பு உள்ளிட்ட தீவிர பாதிப்புகளையும் உண்டாக்கும்.


இந்த பாதிப்பிற்கு சரியான நேரத்தில் சிகிச்சை பெறாத போது சிறுநீரகம், இதயம், நுரையீரல் உள்ளிட்ட ஒவ்வொரு உடல் உறுப்பாக பாதிக்கப்படும் நிலை உள்ளது. இந்த மெத்தனால் கலந்த சாராயத்தை குடிக்கும் போது உடலில் அமிலத்தன்மையை உண்டாக்குகிறது. விஷச்சாராயம் குடித்த பிறகு பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும். 

அங்கே முதல் உதவி செய்யப்பட்டு, ஃபோமெபிசோல் (Fomepizole) என்ற மெத்தனாலின் நச்சுத்தன்மையை குறைக்கும் தடுப்பு மருந்து கொடுக்கப்படும்.

சில மருத்துவமனையில் இந்த மருத்தின் இருப்பு பற்றாக்குறையாக இருக்கும் பட்சத்தில் டயாலிசிஸ் செய்யப்படும். அவ்வாறு செய்யப்படும் போது உடலில் கலக்கப்பட்ட மெத்தனால் முழுவதும் வெளியில் வரும். 

பிறகு தொடர்ந்து சிகிச்சை அளித்த பிறகு அவர்கள் படிப்படியாக குணமடைவார்கள். பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் உயிர் போகும் அபாயமாகும். 


லேசான அறிகுறிகள் தெரிந்தவுடன் சிகிச்சை அளிக்கும் போது உடல் உறுப்பு பாதிக்கப்படுவதை தடுக்க முடியும்’ 


* விடிய விடிய பிரேத பரிசோதனை
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் உடல்களை கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் ஆகிய அரசு மருத்துவமனைகளில் மருத்துவ குழுவினர்கள் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய பிரேத பரிசோதனை மேற்கொண்டு நள்ளிரவு மற்றும் நேற்று காலையில் உறவினர்களிடம் 25 உடல்களை ஒப்படைத்தனர்.


* 56 பேர் குழு தீவிர சிகிச்சை

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிப்பதற்காக சேலம், விழுப்புரம், திருச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டத்தில் இருந்து சிறப்பு அரசு மருத்துவ குழுவினர்கள் 56 பேர் தமிழக அரசு உத்தரவுபடி நேற்று வந்தனர். 

அவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

* உயிரிழந்த 43 பேர் பட்டியல்
விஷசாராயம் குடித்து பல்வேறு மருத்துவமனைகளில் பலியான 43 பேர் விவரம் வருமாறு:
கள்ளக்குறிச்சி
1) ஜெகதீஷ் (60)
2) சுரேஷ் (40)
3) வடிவுக்கரசி (32)
4) கந்தன் (47)
5) அய்யாவு (65)
6) நூர்பாஷ்கர் (45)
7) முருகன் (40)
8) செல்வம் (30)
9) ஆறுமுகம் (65)
10) தனக்கோடி (60)
11) கோபால் (52)
12) கணேசன் (70)
13) ஜெகதீஸ்வரன் (58)
14) பூவரசன் (28)
15) குப்புசாமி(75)
16) ராமகிருஷ்ணன்(65)
17) லட்சுமி(50)
18) அன்வர்பாஷா (70)
19) சின்னபிள்ளை (55)
20) ஜெகதீசன் (42)
21) மணி (39)
22) கண்ணன் (39) மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

* சேலம்
1) மனோஜ்குமார் (33)
2) ரவி (60),
3) நாராயணசாமி (65)
4) சுப்ரமணி (60)
5) ராமு (50)
6) விஜயன் (58)
7) ஆனந்தன் (50)
8) ஆனந்த் (47)
9) எஸ். ராஜேந்திரன் (50)
10 ஆர்.ராஜேந்திரன் (65)
11 பி.ராஜேந்திரன் (55)

* விழுப்புரம்
1) மணிகண்டன்(35)
2) சேகர்(57)
3) சுரேஷ் (45)
4) பிரவீன்குமார் (29)

* புதுச்சேரி
1) இந்திரா(48)
2) கிருஷ்ணமூர்த்தி (61)
3) சுப்ரமணி (58)


அரசு டாஸ்மாக் கடைகள் மூலம் மதுவிற்பனை செய்யும்போது ஏன் கள்ளத்தனமாக விசத்தை குடிக்க வேண்டும் உயிரை விட வேண்டும்.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?

கார்பரேட்டுகளால் கார்பரேட்டுகளுக்காக