இடுகைகள்

‘தமிழ்நாடு நாள்

படம்
  கடந்த வாரம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மாநிலத்தின் பெயரை ‘தமிழகம்’ என மாற்ற பரிந்துரைத்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இந் நிலையில், மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் உட்பட பல அரசியல் கட்சிகள் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்ததுடன் மெட்ராஸ் மாநிலத்தின் பெயரை தமிழ்நாடு என்று மாற்ற நடந்த போராட்டத்தை நினைவு கூர்ந்தன. ஜனவரி 14, 1969 அன்று, அப்போதைய முதல்வர் சிஎன் அண்ணாதுரையின் கீழ், சென்னை மாநிலம் அதிகாரப்பூர்வமாக தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டது. பெரியார்’ (1879-1973) என்று அன்புடன் அழைக்கப்படும் சமூக ஆர்வலர் ஈ.வி.ராமசாமி, தமிழர்களின் “அடையாளத்தையும் சுயமரியாதையையும் மீட்டெடுக்க” சுயமரியாதை இயக்கத்தை 1925 இல் தொடங்கினார். தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் பேசுபவர்கள் அடங்கிய திராவிட நாடு என்ற சுதந்திர திராவிட தாயகத்தை அவர் கற்பனை செய்து, திராவிடர் கழகம் (டிகே) என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார். சாதி மற்றும் மதத்திற்கு எதிரானவர் என்று கூறப்பட்ட பெரியார், சமூகத்தில் பெண்களுக்கு சமத்துவம், பெண்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான பிறப்புக் கட்டுப்பாட்...

(RSS)ஆளுநர்....

படம்
  த மிழக சட்டசபையில் நேற்று ஆளுநர் உரை தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவந்ததன் பின்னணியில் மூளையாக செயல்பட்ட மூத்த அமைச்சர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழக சட்டசபையில் நேற்று ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றியபோது, அரசு தயாரித்துக் கொடுத்த உரையில் இடம்பெற்றிருந்த பல வார்த்தைகளையும், சில பக்கங்களையும் தனது பேச்சில் தவிர்த்தார். இப்படி ஏதாவது நிகழலாம் என்பதை திமுக- மூத்த அமைச்சர்கள் முன்கூட்டியே உணர்ந்தார்களோ என்னவோ, தங்களிடமிருந்த ஆளுநர் உரையின் நகலை மிக கவனமுடன் வாசித்தபடியே வந்தபோது அதனைக் கண்டுபிடித்துவிட்டனர். குறிப்பாக திமுக-வின் பொதுச்செயலாளரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன் உடனடியாக முதல்வர் ஸ்டாலின் அருகே சென்று ஏதோ பேசினார்.  அவர் தலையசைத்ததும் அவையிலிருந்து வெளியேறி சில நிமிடங்களில் மீண்டும் திரும்பி வந்தார். இந்த நிலையில்தான், ஆளுநர் ரவி தனது உரையை 10.48 மணிக்கு முடித்தார்.  அடுத்து சபாநாயகர் அப்பாவு ஆளுநரின் உரையை 11.31 மணிக்கு தமிழில் வாசித்து முடித்தார்.  அந்த இடைப்பட்ட நேரத்துக்குள் துரைமுருகனால் தயாரிக்கப்பட்ட 2 பக்க தீர்ம...

கொக்கென நினைத்தாயோ?

படம்
 தமிழ்நாடு சட்ட மன்றம் இன்று கூடியது. இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையோடு துவக்கப் பட்டது. ஆர்.என்.ரவி தேவையற்ற இந்துத்துவா சங்கிப் பேச்சுக்களாலும்,மக்கள் நலத்திட்டங்களுக்கு கையெழுத்திடாமலும்  முடக்கி வைத்ததாலும் அவர் மீது பரவலாக அனைத்து தரப்பிலும் கடுப்பில் உள்ளனர். எனவே ரவி உரை எவ்வாறு அமையும்,எதிர்வினை எப்படி இருக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனாலும் ஆளுங்கட்சிதரப்பில் தயாரிக்கப்படும் உரையை அப்படியே வாசிப்பாரா அல்லது தனது சர்ச்சைக் குத்துகளுக்கு ஆதரவாக திருத்தங்கள் மேற் கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு ம் அதிகமாகியிருந்தது. சட்டமன்றம் கூடியதும் ரவி ஆளுநர் உரையைப்படிக்க ஆரம்பித்தார். ஆனால் ஆரம்பம் முதலே காங்கிரஸ் போன்ற எதிர்கட்சியினர்,திமுக கூட்டணி கட்சியினர் ஆளுநரை திரும்பப்பெறு.மக்கள் உயிர்களைப் பலிவாங்கும் ஆன்லைன் ரம்மி சட்டத்தை எதிர்க்கும் ரவியே பதவி விலகு என குரல் எழுப்ப ஆரம்பித்தனர். வெளிநடப்பும் செய்து வாயிலில் கூடி நின்று குரல் எழுப்பினர். இதனால் ரவி மிகவும் பதட்டத்தில் உரையை படிப்பதை ,தடுமாறுவதை உணர முடிந்தது.பாமக வினர் சட்டமன்றத்தின் உள்லேயே ஆளு...

கட்டை பாஸ்கர்.

படம்
  செம்மரக்கட்டை கடத்தல் விவகாரத்தில் சசிகலாவின் உறவினர் கட்டை பாஸ்கர் சென்னையில் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.  அவரிடம் இருந்து ரூ.48 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலிஸார் முடிவு செய்துள்ளனர். சசிகலாவின் அண்ணன் ஜெயராமன்-இளவரசியின் மகன் விவேக். இவர் ஜெயா டி.வியின் நிர்வாகியாக உள்ளார். சென்னையில் உள்ள சினிமா தியேட்டர்களையும் நிர்வாகம் செய்து வந்தார்.  இவருக்கும், அண்ணாநகரில் வசித்து வந்த செம்மரக்கட்டை கடத்தல் குற்றவாளி பாஸ்கர் என்பவரது மகள் டாக்டர் கீர்த்தனாவுக்கும் திருமணம் நடந்தது. போயஸ்கார்டனில் இளவரசி மற்றும் விவேக் வசித்து வந்தாலும், கட்டை பாஸ்கரின் மகளை காதலித்து திருமணம் செய்ததால், அந்த திருமணத்தில் ஜெயலலிதா கலந்து கொள்ளவில்லை. அப்போது ஜெயலலிதா முதல்வராகவும் இருந்தார்.  ஜெயலலிதா எதிர்ப்பையும் மீறித்தான் விவேக், கீர்த்தனாவை திருமணம் செய்து கொண்டார். இந்தநிலையில், கட்டை பாஸ்கரின் பர்னிச்சர் கடையில் செம்மரக்கட்டை பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொ...

ஆட்டம் முடியும் நேரம்.

படம்
  ஒன்றிய அரசின் ஏஜென்டாக நியமனம் செய்யப்பட்ட ஆளுநர்கள், பா.ஜ.க ஒன்றிய அரசின் ஆட்சிக்கு வந்த பின் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், அரசுகளின் கொள்கை முடிவில் தலையிடுவது, சிறப்பு திட்டங்களை நிறுத்துவது, அரசியல் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், அவர்கள் வகித்து வரும் ஆளுநர் பதவிக்கு உரிய வேலைகளை மட்டும் செய்வதில்லை. அவர்கள் நோக்கம் எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களைச் சீரழிப்பதும்,அக் கட்சிகளுக்கு மக்களிடையே கெட்டப் பெயரை உண்டாக்குவதுதான். தங்களின் பல்கலைக் கழக வேந்தர் பதவிக்கான வேலையையும் கூட ஆர்.என்.ரவி செய்வதில்லை. பட்டமளிப்பு விழா நடத்தி மாணவர்களுக்கு பட்டம் வழங்காமல் வெறும் அரசியல் செய்து வருகின்றனர்.  தமிழக இல்லை.தமிழ்நாடு  ஆளுநர்ரவி அவருக்கு கீழ் செயல்படும் பல்கலைக்கழகங்களில் பாஜ சார்ந்த கொள்கைகளை பரப்புவதில் மட்டுமே குறியாக உள்ளார்.  பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அரசியல் ,ஆன்மீகம் பேசும் ஆளுநர், தமிழகத்தில் உள்ள 20 பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடத்த அனுமதி கொடுக்காமல் சர்வாதிகாரியாக செயல்பட்டு வருகிறார்.புதியகல்வி கொள்கைக்கு ஆதரவா...

பிவினைவாதமும் மனுவும்.

படம்
  திராவிடக் கட்சிகள் பிரிவினையை வளர்த்தன’ என்று புதிதாகக் கண்டுபிடித்திருக்கிறார் தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.இரவி! ஜாதி என்ற கருத்தியலை பிறப்பின் அடிப்படையில் உருவாக்கி, உற்பத்தி சக்திகளான பெரும்பான்மை மக்களை இழிவுபடுத்தியது யார் என்பதை ஆளுநர்தான் விளக்கவேண்டும்.  ‘மனித இனத்தை ஒடுக்குவதற்கும், அடிமைப்படுத்துவதற்கும் வகுத்த பேய்த்தனமான புனைவுத் திட்டம்தான் பார்ப்பசொன்னார். இந்த புனைவுத் திட்டமானது மக்களை ஒருவருக்கொருவர் வெறுப்பை உருவாக்கிக் கொள்ள உட்சாதிகளை உருவாக்கியது. நான் வேறு - நீ வேறு என்ற வேற்றுமையை மட்டுமல்ல, நான் உயர்வு - நீ தாழ்வு என்ற வேற்றுமையை விதைத்தது. இதுதான் இந்திய சமூகத்தில் நடத்தப்பட்ட முதல் பிரிவினை.  பல நூறு ஆண்டுப் பிரிவினை ஆகும். இந்த நுட்பத்தை அண்ணல் அம்பேத்கர் தொடர்ச்சியாக விளக்கி வந்தார். சாதியமைப்பின் தனியியல்பை அவர் மிகச் சரியாக விளக்கினார். ‘‘சாதியமைப்பு என்பது தரப்படுத்தப்பட்ட சமமின்மையைக் கொண்டது.  இதில் சாதிகள் ஏறுவரிசையில் மரியாதை பெறுவதாகவும், இறங்கு வரிசையில் அவமரியாதைக்கு ஆளாவதாகவும் அமைக்கப்பட்டுள்ளன” என்று சொன்னார் அம்பேத்கர் அவர்...

தமிழ்நாடு' வரலாறு

படம்
  காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களைச் சிறப்பிக்கும் வகையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னார்வலர்களைப் பாராட்டிப் பேசினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. அப்போது, * " தமிழகத்தில் வித்தியாசமாக ஒரு அரசியல் சூழல் உள்ளது. எல்லாவற்றுக்கும் 'நாங்கள் திராவிடர்கள்' என்று சொல்கிறார்கள். * இந்தியா முழுவதும் ஒரு செயல்திட்டம் இருந்தால், தமிழ்நாடு அதை வேண்டாம் என்று சொல்கிறது. * 'தமிழ்நாடு' என்பதைவிட 'தமிழகம்' என்று சொல்வதே சரியாக இருக்கும். பொய் பரப்புரையை நாம் முறியடிக்க வேண்டும். எது உண்மை என்று மக்களுக்கு சொல்ல வேண்டும்" எனக் குறிப்பிட்டார். அவரது இந்த பேச்சுக்குத்தான் தமிழ் உணர்வாளர்களிடையே எதிர்ப்பு கிளம்பி உள்ளது. * "இனி 'தமிழ்நாடு' என்பதை உரக்கச் சொல்வோம், அப்படியே எழுதுவோம்" என தமிழார்வலர்கள் ட்விட்டரில்'  #தமிழ்நாடு'  என்ற ஹேஷ்டேக்கை இன்று ட்ரெண்ட் செய்தனர். கூடவே மதராஸ் மாநிலத்தை 'தமிழ்நாடு' எனப் பெயர் மாற்றம் செய்ய வலியுறுத்தி தியாகி சங்கரலிங்கனார் 1956 ...