கட்டை பாஸ்கர்.

 செம்மரக்கட்டை கடத்தல் விவகாரத்தில் சசிகலாவின் உறவினர் கட்டை பாஸ்கர் சென்னையில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். 

அவரிடம் இருந்து ரூ.48 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலிஸார் முடிவு செய்துள்ளனர்.

சசிகலாவின் அண்ணன் ஜெயராமன்-இளவரசியின் மகன் விவேக். இவர் ஜெயா டி.வியின் நிர்வாகியாக உள்ளார். சென்னையில் உள்ள சினிமா தியேட்டர்களையும் நிர்வாகம் செய்து வந்தார். 

இவருக்கும், அண்ணாநகரில் வசித்து வந்த செம்மரக்கட்டை கடத்தல் குற்றவாளி பாஸ்கர் என்பவரது மகள் டாக்டர் கீர்த்தனாவுக்கும் திருமணம் நடந்தது.

போயஸ்கார்டனில் இளவரசி மற்றும் விவேக் வசித்து வந்தாலும், கட்டை பாஸ்கரின் மகளை காதலித்து திருமணம் செய்ததால், அந்த திருமணத்தில் ஜெயலலிதா கலந்து கொள்ளவில்லை. அப்போது ஜெயலலிதா முதல்வராகவும் இருந்தார். 

ஜெயலலிதா எதிர்ப்பையும் மீறித்தான் விவேக், கீர்த்தனாவை திருமணம் செய்து கொண்டார்.

இந்தநிலையில், கட்டை பாஸ்கரின் பர்னிச்சர் கடையில் செம்மரக்கட்டை பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினர் நேற்று அதிரடியாக பர்னிச்சர் கடையில் சோதனை நடத்தினர்.

இந்தச் சோதனையில் ரூ.48 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அதைத் தொடர்ந்து கட்டை பாஸ்கரை, அதிகாரிகள் கைது செய்தனர். 

பின்னர் அவர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இந்த செம்மரக்கடத்தலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்று அவரிடம் விசாரிக்கவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதற்காக அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். 

கட்டை பாஸ்கர், சிறிய, சிறிய கடத்தலில் ஆரம்பத்தில் ஈடுபட்டு வந்தார். பின்னர் செம்மரக்கட்டை கடத்தலிலும், சந்தன மரக்கடத்தலிலும் ஈடுபட்டு வந்தார். இந்த கடத்தல் தொழிலுக்காகவே பர்னிச்சர் கடை நடத்தி வந்தார். 

இந்த கடையின் பெயரில் கடத்தலில் ஈடுபட்டார். இவர் மீது ஏற்கனவே செம்மரக்கட்டை கடத்தல் வழக்கு உள்ளது.

இந்த கடத்தலுக்கு அவரது தம்பி சிட்டி ராஜாவும் உடந்தையாகவும் இருந்தார். இதனால் போலிஸார் அவரையும் 2018ம் ஆண்டு கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். பின்னர் உடல்நலக்குறைவு காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதன்பின்னர் கட்டை பாஸ்கர் மட்டுமே கடத்தலில் ஈடுபட்டு வந்தார். செம்மரக்கட்டை கடத்தலில் ஈடுபட்டதால், அவரை கட்டை பாஸ்கர் என்று போலிஸார் அழைத்தனர்.  

கடந்த 10 ஆண்டுகளாக செம்மரக்கடத்தலில் ஈடுபட்டு வந்தாலும், சசிகலாவின் உறவினர் என்பதால் அவரை தமிழ்நாடு மற்றும் ஆந்திரா போலீசார் கைது செய்யாமல் இருந்து வந்தனர்.

தற்போது மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு போலிஸார் பாஸ்கரை கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து ரூ.48 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சசிகலாவின் உறவினர் செம்மரக்கட்டை கடத்தலில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

----------------------------------------------------------------------

முதலிடம்

வளர்ச்சியில் மட்டுமல்ல சாலை விபத்துகளிலும்....

இந்திய குற்றவியல் ஆவண காப்பக அறிக்கைபடி,

 "இந்தியாவில் ஒவ்வொரு 6 நிமிடமும் ஒரு இந்தியர் சாலை விபத்தில் அதுவும் அதிவேகமாக வாகனத்தை இயக்கி நடக்கும் விபத்தில் உயிரிழக்கிறார்.

 அதேபோல் ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கு இருவர் அதிவேகமாக வாகனத்தை இயக்குவதால் காயமடைகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும் அந்த புள்ளிவிவரத்தின் படி கடந்த ஆண்டு (2021) வேகமாக வாகனம் ஓட்டி நடந்த விபத்துகளில் 87,050 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பெண்கள் 11,190 பேர் உயிரிழந்தனர். 2,28.274 பேர் காயமடைந்தனர். 

நாட்டில் 60 சதவீதம் சாலை விபத்துகளுக்கு அதி வேகத்தில் வாகனத்தை இயக்குவதே காரணமாக உள்ளது. 

இந்தியாவில் கடந்த 2021 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 4,03,116 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதுவே 2020 ஆம் ஆண்டில் 3,54,796 ஆக இருந்தது. 

அதேபோல் 2021ல் சாலை விபத்தில் உயிரிழப்புகள் 1,55,622 ஆக அதிகரித்துள்ளது. 2020ல் சாலை விபத்தில் உயிரிழப்புகள் 1,33,201 ஆக இருந்தது.

2020-ஐ விட 2021-ல் மிக அதிகமாக சாலை விபத்துகள் பதிவான மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. 

தமிழகத்தில் கடந்த 2021ஆம் ஆண்டில் 57,090 சாலை விபத்துகளும், 

மத்தியப் பிரதேசத்தில் 49,493 விபத்துகளும், 

உத்தரப் பிரதேசத்தில் 36,509 விபத்துகளும், 

மகாராஷ்டிராவில் 30,086 விபத்துகளும், 

கேரளாவில் 33,501 விபத்துகளும் நடந்துள்ளன. 

இறப்பு விகிதத்தைப் பொருத்தவரை மொத்த விபத்துகளில் 3,73,884 பேர் காயமடைந்தனர், 1,73,860 பேர் உயிரிழந்தனர்.

 இவர்களில் உத்தரப்பிரதேசத்தில் 24,711 பேர் இறந்தனர். தமிழகத்தில் 16,685 பேர் இறந்தனர்.

 மகாராஷ்டிராவில் 16,446 பேர் இறந்தனர். இந்த மூன்று மாநிலங்கள் மட்டுமே முறையே 14.2%, 9.6% மற்றும் 9.5% சாலை விபத்து உயிரிழப்புகளைப் பதிவு செய்துள்ளன. 

மொத்தமாக இந்த மூன்று மாநிலங்களில் மட்டும் 33.3 சதவீத இறப்பு பதிவாகியுள்ளது.

இதற்கு விரைவுச்சாலைகள் அதிகமாக இருப்பது எடுத்தவுடனே வரையும் வாகனங்களின் அதிவேக(c.c)எந்திரங்களும்தான் காரணம் என்று கூறப்படுபின்றது.

100c.c.க்கு மேல் இருசக்கர வாகனங்கள் எந்திரம் அமையக்கூடாதென்ற  கட்டுப்பாடிந்தால் விபத்துகளைக் கட்டுப்படுத்தலாம்.

ஒன்றிய,மாநில அரசுகள் கையில்தால் இளைஞர்கள் உயிர்.


----------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலகின் முதல் தமிழ் பைபிள்

திரிணாமுல் ஊழல்

மாரடைப்பு