இடுகைகள்

ஷவர்மா;உயிர் பலி உணவா?

படம்
  புதுச்சேரி சலசலப்பு முதல்வர் மீது ஆளுநரிடம் பாஜக எம்எல்ஏக்கள் புகார்: சபாநாயகரை கண்டித்து திமுக, காங். வெளிநடப்பு.25 நிமிடத்தில் முடிந்த்து சட்டசபை கூட்டத்தொடர். தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தமிழ்நாடு மக்களவை உறுப்பினர் குறைக்கும் அரசியல் சூழ்ச்சி முறியடிக்கப்பட வேண்டும்:  -முதல்வர் மு.க.ஸ்டாலின் அனல்மின் நிலையங்களுக்கு பொருள் இறக்குமதி செய்ததில் வரி ஏய்ப்பு தமிழ்நாட்டில் 40 இடங்களில் வ.வரி சோதனை மின்வாரிய முன்னாள் அதிகாரிகள் வீடு, மின்வாரிய நிறுவனங்களில் நடந்தது - இந்தியாவுடன் மோதல் எதிரொலி: ஜம்மு - காஷ்மீர் செல்ல வேண்டாம்! நாட்டு மக்களுக்கு கனடா அறிவுறுத்தல். '0'மதிப்பெண் எடுத்தாலும் மருத்துவ மேற்படிப்பில் சேரலாம்.நீட் தேறினால் போதும் என ஒன்றிய அரசு அறிவிப்பு. " நீட் தேர்வை ரத்து செய்ய திமுக இளைஞரணி சார்பில் 1 கோடி கையெழுத்து இயக்கம் நடத்தப்படும்"-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் . சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்ந்தெடுக்க, தமிழ்நாடு ஆளுநர் ரவி அமைத்த குழுவை மாற்றி அமைத்து தமிழ்நாடு அரசு புதிய குழு அமைத்து அரசிதழ் வெளியிட்டது. உயிரிழக்கவா உணவு? ----------------------...

கடத்தல் அதிகாரிகள்

படம்
  ஆதித்யா விண்கலத்தின் புவி சுற்றுபாதை நிறைவு எல்1 புள்ளியை நோக்கி விண்கலம் பயணிக்க தொடங்கியது: இஸ்ரோ தகவல். தமிழ்நாட்டில் உள்ள மோசமான சாலைகளை மழைக்காலத்திற்குள் சீரமைக்க வேண்டும்.-முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்திரவு. சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மகன் ரவிந்திரநாத்குமார் விவாகரத்து கோரி மனு. தமிழ்நாட்டில் 12 வாரங்களில் ஆட்டோ கட்டணம் மாற்றி அமைக்கப்படும் -தமிழ்நாடு அரசு . தமிழ்நாட்டில் நடந்த போராட்டத்தால்தான் இந்திய அரசியலமைப்பு சட்டம் முதன்முறையாக திருத்தப்பட்டது -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.  சேலம் மாநகரில் 33 ஹோட்டல்களில் தரமற்ற முறையில் 182 கிலோ சிக்கன் பறிமுதல். ‘அதிமுகவில் ஒரு ஏக்நாத் ஷிண்டேவை பாஜக தயார் செய்துள்ளது’ – கே.சி. பழனிசாமி . புதிய நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல்: மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிந்த பின்தான் என்ற விதியால் ஆறு ஆண்டுகளுக்கு பின்னரே ஒருவேளை அமலாக வாய்ப்பு . காவிரி பங்கீடு விவகாரம்: தமிழ்நாட்டிற்கு உரிய நீரை திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் - ஒன்றிய அமைச்சரிடம் அனைத்து கட்சி எம்பிக்கள் குழு வலியுறுத்தல் இந்திய எல்லையில் இலங்...

வழக்கமான புளுகுகள்தான்.

படம்
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம். கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் நிராகரிப்பு விண்ணப்பதாரர்கள் இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம்: இ-சேவை மையங்களில் ஏற்பாடு; 30 நாட்களுக்குள் தீர்வு காண நடவடிக்கை - 'தற்போது அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை.-' அதிமுக ஜெயகுமார். வட கிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை. பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் கட்சிப் பாடல்களின் மெட்டுக்களைத் திருடி பாடல்கள் அமைத்து தோ்தல் பிரசாரத்துக்குப் பயன்படுத்துவதாக பாஜக, காங்கிரஸ் இருகட்சிகளும் மற்றவர் மீது குற்றச்சாட்டு. இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா (16) மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.  மேட்டூர் அருகே தொட்டில்பட்டியில் காவிரி ஆற்றில் விநாயகர் சிலையை கரைக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி தமிழ்நாட்டுக்கு மேலும் 15 நாட்களுக்கு காவிரியில் விநாடிக்கு 5000 கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும்: கர்நாடகாவுக்கு காவிரி...

15 லட்சம் வேண்டாம்.

படம்
  15ஆயிரம் மட்டும் போடுங்கள்! லிபியாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் 3,958 பேர் உயிரிழந்ததாக அறிவிப்பு. கலைஞர் மகளிர் உரிமை திட்ட #பயனாளிகளிடமிருந்து வங்கிகள் பணத்தை பிடித்தம் செய்யக்கூடாது.ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.ஒப்பந்தத்தை மீறினால் நடவடிக்கை தமிழ்நாடு அரசு எச்சரிக்கை . "தமிழ்நாடு மாநில உரிமைகளை மறுப்பதன் மூலம் தமிழ்நாட்டின் வளர்ச்சியை அழிக்கிறது பாஜக" -திமுக முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் . சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு ரயில்களில் ரேஷன் அரிசி கடத்த முயற்சி செய்த 6 பேர் கைது. காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டின் அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை ஒன்றிய ஜல் சக்தி அமைச்சரை சந்திக்க திட்டம். மணிப்பூரில் தொடரும் கொடூரம்: விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த ராணுவ வீரர் கடத்தி கொலை. "கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் 100 லட்சம் கோடி ரூபாயை பாஜக அரசு கடன் வாங்கி உள்ளது. இவர்கள் ஆட்சிக்கு வரும்போது 55 லட்சம் கோடி ரூபாயாக இந்தியாவின் கடன் இருந்தது. இது தற்போது 155 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது"          - முதல்வர் மு.க.ஸ்டாலின. ------------...

என்றுமே சகாப்தம்

படம்
  வேலூரில் நடைபெறும் முப்பெரும் விழாவில் ‘மக்களுடன் ஸ்டாலின்’ என்ற செயலியை வெளியிடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பிரேசிலின் பார்செலோஸ் நகரில் நடந்த விமான விபத்தில் 14 பேர் உயிரிழப்பு. 5 கொலை உள்பட 24 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி குள்ள விஷ்வா என்பவன் என்கவுன்டரில் சுட்டு கொலை: தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கை; அரிவாளால் வெட்டியதில் 2 போலீஸ்காரர்கள் படுகாயம். கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழ்நாட்டில் 30 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை. துபாயில் சூதாட்ட கும்பலின் நிர்வாகியின் திருமண விழாவில் பங்கேற்ற பாலிவுட் பிரபலங்களுக்கு ₹200 கோடி ‘ஹவாலா’ முறையில் பணம் வழங்கப் பட்டது. ரூ.417 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை . ------------------------------------------------------ "பெரியார் " என்றுமே சகாப்தம் 90-வது வயதில்  _  180 கூட்டம். 91-வது வயதில்  _  150 கூட்டம். 93-வது வயதில்  _  249 கூட்டம். 94-வது வயதில்  _  229 கூட்டம். வாழ்க்கையின் கடைசி 98 நாட்களில் (95-வது வயதில்)  42 கூட்டம். இத்தனையும், கடும் நோயின் வலிகள...

சென்னை செல்வந்தர் கொலை வழக்கு!

படம்
  லட்சுமி காந்தன் கொலைக்கு அடிப்படையா ? தமிழ்நாட்டின் பழைய கொலை வழக்குகளைப் பற்றிப் பேசும்போதெல்லாம் போட் மெயில் கொலை வழக்கு கட்டாயம் பேசப்படும். ஆனால், போட் மெயில் கொலை வழக்கு என்ற பெயரில் இரண்டு வழக்குகள் இருந்தன. ஒன்று ஆளவந்தார் கொலை வழக்கு.  இனொன்று, செல்வந்தர் ஒருவர் ரயிலில் கொல்லப்பட்ட வழக்கு. சரியாகப் பார்த்தால், இந்தக் கொலை போட் மெயிலில் நடந்த கொலையல்ல. திருவனந்தபுரத்திலிருந்து சென்னை செல்லும் ரயிலில் நடந்த கொலை இது. இருந்தபோதும் இந்த வழக்கிற்கு ஏனோ போட் மெயில் கொலை வழக்கு எனப் பெயர் வந்துவிட்டது. 1940களின் மத்தியப் பகுதி. மதுரை ரயில் நிலையம். திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்ட திருவனந்தபுரம் - சென்னை மெயில் அப்போதுதான் அங்கு வந்து நின்றிருந்தது. தேவகோட்டையைச் சேர்ந்த பிரபலமான வங்கியாளர் முதல் வகுப்புப் பெட்டியில் ஏறி அமர்ந்தார். இந்த ரயில் அதிகாலை ஐந்து மணியளவில் செங்கல்பட்டை வந்தடைந்தபோது அந்த பணக்காரர் ரத்தவெள்ளத்தில் கழுத்து அறுக்கப்பட்டுக் கிடந்தார்.  இவருடன் யாரும் பயணம் செய்யவில்லை என்பதால், யார், எதற்காகக் கொலை செய்தார்கள் என்பதெல்லாம் உடனடியாகப் புரியவில்...

கடைசியில் வேறு ஆள்.

படம்
  நிபா பரவல்.மற்றொரு கொரோனா?? கேரளாவில் மிக வேகமாக பரவி வரும் நிபா வைரஸை தடுக்க முகக்கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும் என மத்திய அரசின் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) அறிவுறுத்தியுள்ளது.  மேலும், நிபா வைரஸ் தாக்கியவர்களுக்கு எப்படி சிகிச்சை அளிக்க வேண்டும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளையும் ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ளது. கேரளாவில் நிபா வைரஸ் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை உருவாக்கி வருகிறது. இதுவரை அங்கு 2 பேர் நிபா வைரஸுக்கு உயிரிழந்துள்ளனர்.  மேலும், 4 பேருக்கு நிபா வைரஸ் தொற்று இருப்பது உருவாகியுள்ளது. இந்த சூழலில், கேரளாவில் பல மாவட்டங்களில் மருத்துவமனைகளில் கடுமையான காய்ச்சலுடன் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அவர்களுக்கு நிபா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.  இது ஒருபுறம் இருக்க, நிபா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோருடன் 750 பேர் அடுத்தடுத்து தொடர்பில் இருந்தது தெரியவந்திருக்கிறது.  இதையடுத்து, அவர்களை தனிமைப்படுத்தும் பணி...