வழக்கமான புளுகுகள்தான்.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்.
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் நிராகரிப்பு விண்ணப்பதாரர்கள் இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம்: இ-சேவை மையங்களில் ஏற்பாடு; 30 நாட்களுக்குள் தீர்வு காண நடவடிக்கை -
'தற்போது அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை.-' அதிமுக ஜெயகுமார்.
வட கிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் கட்சிப் பாடல்களின் மெட்டுக்களைத் திருடி பாடல்கள் அமைத்து தோ்தல் பிரசாரத்துக்குப் பயன்படுத்துவதாக பாஜக, காங்கிரஸ் இருகட்சிகளும் மற்றவர் மீது குற்றச்சாட்டு.
இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா (16) மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மேட்டூர் அருகே தொட்டில்பட்டியில் காவிரி ஆற்றில் விநாயகர் சிலையை கரைக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி
தமிழ்நாட்டுக்கு மேலும் 15 நாட்களுக்கு காவிரியில் விநாடிக்கு 5000 கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும்: கர்நாடகாவுக்கு காவிரி ஆணையம் உத்தரவு.
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேடு வழக்கு ஒரு வாரத்தில் விரிவான விசாரணை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு.
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1987ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'நாயகன்' படம் வரும் நவம்பர் 3ம் தேதி மறுவெளியீடு(ரீ ரிலிஸ்) செய்யப்படுவதாக அறிவிப்பு.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்திப் பேச தடை விதிக்க கோரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மனு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வருகிறது.
----------------------------------------
X சொன்னா நம்பணும்!
ஒரு சுட்டி(டுவீட்டர்)சங்கிச்செய்தி.'விழிப்புடன் செயல்படுவது அவசியம்’ .
சதவிகித நிதி மோசடிகள்
நாட்டில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் நடைபெற்ற இணையவழி (சைபா்) குற்றங்களில் நிதி மோசடிகள் 77.41 சதவீதம் பங்கு வகிப்பதாக கான்பூா் ஐஐடி நடத்திய ஆய்வு முடிவில் தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டில் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கடந்த ஜூன் மாதம் வரை மூன்றரை ஆண்டுகளில் நடைபெற்ற இணையவழி குற்றங்கள் தொடா்பாக கான்பூா் ஐஐடி நிா்வகிக்கும் லாப நோக்கமில்லாத ஸ்டாா்ட்-அப் நிறுவனமான ‘ஃபியூச்சா் கிரைம் ரிசா்ச் ஃபவுண்டேஷன் (எஃப்சிஆா்எஃப்)’ ஆய்வு மேற்கொண்டது. அதன் முடிவுகளை ‘இந்தியாவைப் பாதிக்கும் இணையவழி குற்றங்கள்’ என்னும் தலைப்பில் ஐஐடி கான்பூா் அண்மையில் வெளியிட்டது.
ஆய்வு மேற்கொண்ட காலக்கட்டத்தில் இந்தியாவில் நடைபெற்ற இணையவழி குற்றங்களில் நிதி மோசடிகள் 77.41 சதவீதம் பங்கு வகிக்கின்றன.
இதில் யுபிஐ, இணையவழி வங்கிச் சேவை உள்ளிட்டவை தொடா்பாக மட்டும் 47.25 சதவீத குற்றங்கள் நடந்துள்ளன.
சமூக ஊடகங்கள் தொடா்பான குற்றங்கள் 12.02 சதவீதமும், இணையவழி சூதாட்டம், இணையவழி பயங்கரவாதம், இணையவழி பணம் உள்ளிட்ட மற்ற குறிப்பிடத்தக்க வகை குற்றங்கள் 9 சதவீதமும், ஊடுருவல் (ஹேக்கிங்) தொடா்பான குற்றங்கள் 1.57 சதவீதமும் பங்கு வகிக்கின்றன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உருமாறிவரும் இணையவழி குற்றங்களின் தன்மை குறித்து புலனாய்வு அமைப்புகள், தனிநபா்கள், வணிகங்கள் மற்றும் அரசு வட்டாரங்கள் புரிந்து கொள்வது மிகவும் முக்கியமானது.
நாட்டில் இணையவழி குற்றங்களின் பரவலை எடுத்துக்காட்டுவது மட்டுமல்லாமல் இந்த அச்சுறுத்தல்களை எதிா்த்துப் போராடுவதற்கான கூட்டு முயற்சிகளின் அவசியத்தையும் இந்த ஆய்வு முடிவுகள் அடிகோடிட்டுக் காட்டுகிறது.
தொழில்நுட்பம் தொடா்ந்து முன்னேறி வருவதால், இணையவழி குற்றவாளிகளின் உத்திகளும் அதிகரித்து வருகின்றன.
அனைத்து தரப்பு மக்களும் இணைய வழி செயல்பாடுகளில் தொடர்பாக உரிய தகவலறிந்து விழிப்புடன் செயல்படுவது அவசியம்’ .
-----------------------------------------
வழக்கமான புளுகுகள்தான்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சர்ச்சையாக பேசியதாக வெளியான தகவலை தொடர்ந்து அதிமுக பாஜக இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ள நிலையில், அண்ணாமலை பேசியதும் நடந்த உண்மை என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
கடந்த செப்டம்பர் 11-ந் தேதி சென்னையில் பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்று பேசிய மாநில தலைவர் அண்ணாமலை, கடந்த 1956-ம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற ஒரு விழாவில், பசும்பொன் முத்துராமலிங் தேவர் பகுத்தறிவு கருத்துக்களை பேசிய அறிஞர் அண்ணாவை, மிக கடுமையாக சாடியிருந்தார்.
முத்துராமலிங்க தேவரின் இந்த எச்சரிக்கைக்கு பயந்து, அண்ணாவும் பி.டி ராஜனும் ஓடிவந்து மன்னிப்பு கேட்டனர் என்று அண்ணாமலை பேசியுள்ளார்.
அண்ணாமலையின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், பா.ஜ.க அ.தி.மு.க இடையே கூட்டணி பிளவுக்கு வழிவகுத்துள்ளது.
இந்த சர்ச்சை குறித்து பேசியுள்ள முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான ஜெயக்குமார் கூட்டணியை பொறுத்தவரை அதிமுகவுடன் பாஜக இல்லை என்று கூறியுள்ளார்.
1956-ம் ஆண்டு நடைபெற்ற மதுரை தமிழ் சங்கத்தின் பொன்விழா நிகழ்ச்சி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்றது. அப்போது மதராஸ் மாகானத்தின் முன்னாள் முதல்வர் பி.டி.ராஜன் மேடையில் அமர்ந்திருந்தபோது, மணிமேகலை என்ற சிறுமி பேசியுள்ளார்.
அவருக்கு அடுத்து பேசிய அறிஞர் அண்ணா, அந்த சிறுமியின் பேச்சை பகுத்தறிவோடு ஒப்பிட்டு பேசியுள்ளார். அன்றைய தினம் முடிந்து மறுநாளும் நிகழ்ச்சி தொடர்ந்துள்ளது.
அப்போது வருத்தத்துடன் மேடைக்கு வந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர், ஆலயத்தில் தெய்வ நிபந்தனை பேச்சு நடந்தது நல்லதல்ல, அதற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இனி அவ்வாறு நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் அல்லது இந்த விழாவை தமுக்கம் மைதானத்திற்கு மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.
தேவரின் கருத்துக்களை ஏற்காத பி.டி,ஆர், விழாவில் அவரவர் கருத்துக்களை சொல்ல உரிமை உண்டு என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து பேசிய தேவர் எக்காரணத்தை கொண்டும் ஆலயத்தில் தெய்வ நிபந்தனை பேச்சு கூடாது. முதல் நாள் அண்ணாதுரை பேசியது பக்தர்களை புண்படுத்திவிட்டது.
எனவே பொன்விழா நிகழ்ச்சிகளை இனி தமுக்கம் மைதானத்திற்கு மாற்றிவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
மறுநாள் முதல் நிகழ்ச்சிகள் தமுக்கம் மைதானத்தில் மாற்றப்பட்டன பழைய பத்திரிக்கை செய்தி ஒன்று தெரிவிக்கிறது.
இதில் அண்ணாமலை சொன்னது போன்று, பாலபிஷேகத்திற்கு பதில் ரத்தபிஷேகம், மன்னிப்பு கேட்டுவிட்டு ஓடிவந்த கும்பல் என அனைத்தும் உண்மையில்லை.
இதில் அண்ணா மற்றும் தேவர் இடையே கருத்து முரண் ஏற்பட்டது என்பது மட்டுமே உண்மை என்று தெரிகிறது.
ஆனால் அதன்பின் அண்ணாவின் திமு கவுடன்தான முத்துராமலிங்க தேவரின் பார்வர்டு பிளாக் கட்சி கூட்டணியில் தான் இருந்தார்.தேர்தல்களைச் சந்தித்தார்.என்பதும் உண்மை.
மற்றவை அண்ணாமலையின் வழக்கமான புளுகுகள்தான்.
------------------------------------------