ஷவர்மா;உயிர் பலி உணவா?
புதுச்சேரி சலசலப்பு முதல்வர் மீது ஆளுநரிடம் பாஜக எம்எல்ஏக்கள் புகார்: சபாநாயகரை கண்டித்து திமுக, காங். வெளிநடப்பு.25 நிமிடத்தில் முடிந்த்து சட்டசபை கூட்டத்தொடர்.
தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தமிழ்நாடு மக்களவை உறுப்பினர் குறைக்கும் அரசியல் சூழ்ச்சி முறியடிக்கப்பட வேண்டும்: -முதல்வர் மு.க.ஸ்டாலின்
அனல்மின் நிலையங்களுக்கு பொருள் இறக்குமதி செய்ததில் வரி ஏய்ப்பு தமிழ்நாட்டில் 40 இடங்களில் வ.வரி சோதனை மின்வாரிய முன்னாள் அதிகாரிகள் வீடு, மின்வாரிய நிறுவனங்களில் நடந்தது -
இந்தியாவுடன் மோதல் எதிரொலி: ஜம்மு - காஷ்மீர் செல்ல வேண்டாம்! நாட்டு மக்களுக்கு கனடா அறிவுறுத்தல்.
'0'மதிப்பெண் எடுத்தாலும் மருத்துவ மேற்படிப்பில் சேரலாம்.நீட் தேறினால் போதும் என ஒன்றிய அரசு அறிவிப்பு.
"நீட் தேர்வை ரத்து செய்ய திமுக இளைஞரணி சார்பில் 1 கோடி கையெழுத்து இயக்கம் நடத்தப்படும்"-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் .
சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்ந்தெடுக்க, தமிழ்நாடு ஆளுநர் ரவி அமைத்த குழுவை மாற்றி அமைத்து தமிழ்நாடு அரசு புதிய குழு அமைத்து அரசிதழ் வெளியிட்டது.
--------------------------------------
ஆடு தான் மேய்ப்பதாக சொல்லி ஊரை ஏமாத்தும் ஆட்டுக்குட்டி அண்ணாமலையின் வீடு இது தான்!
இந்த வீட்டோட மதிப்பு 25 கோடியாம்!
இந்த 25 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டினை பினாமி பெயரில் வாங்கிட்டு அதே பினாமிக்கு அக்கவுண்ட் மூலமாக 3 லட்சமும், ரொக்கமாக 3 லட்சமும் வாடகையாக குடுக்குறாராம் ஆட்டுக்குட்டி அண்ணாமலை.. என்ன ஒரு பித்தலாட்டம் பாருங்க..மாத சம்பளம் வாங்கிய ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கு 25 கோடியில் வீடும், அதற்கு 6 லட்சம் ரூபாய் வாடகையும் குடுக்க முடிந்தது எப்படி?
இப்போது வேலை,வெட்டியும் இல்லை.!
*ஷவர்மா சாப்பிட்டால் ஆபத்தா?*
தமிழ்நாட்டில் நாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்ட 14 வயது மாணவி ஒருவர் பலியானதையடுத்து, ஷவர்மா விவகாரம் மீண்டும் பூதாகரமாக வெடித்துள்ளது.
ஷவர்மாவால் உயிரிழப்பு என்பது புதிதல்ல, கடந்த ஆண்டு கேரளத்தில் இதேபோன்று ஒரு மாணவி உயிரிழந்த விவகாரம் தமிழ்நாட்டிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜோர்தானில் ஷவர்மா சாப்பிட்ட 800 பேர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஷவர்மா, லெவாண்டின் எனச் சொல்லப்படுகிற மத்திய தரைக்கடல் பகுதியை ஒட்டியிருக்கும் நாடுகளின் உணவு முறையில் அங்கம் வகிக்கிற ஒன்று. துருக்கி, பாலஸ்தீனம், லெபனான், சிரியா உள்ளிட்ட நாடுகளில் பிரபலமான உணவு ஆரம்பத்தில் வேறுமாதிரி தயாரிக்கப்பட்டது.
ஷவர்மா என்பது மத்திய கிழக்கு நாடுகளின் உணவு. 19 ஆம் நூற்றாண்டு காலத்தில் துருக்கியில் அறிமுகமானது. சிக்கன் ஷவர்மா, பீஃப் (மாட்டுக்கறி) ஷவர்மா, போர்க் (பன்றி) ஷவர்மா, வெஜிடபிள் ஷவர்மா என வகைகள் உள்ளன.
அதிலும் மெக்சிகன் ஷவர்மா, ஸ்வீட் சில்லி ஷவர்மா, லாங் ஷவர்மா என சுவைக்கு ஏற்ப வகைகளும் உள்ளன.
இந்தியாவில் 1997 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் அறிமுகமானது. சௌதி அரேபியாவில் 25 ஆண்டுகளாக பணிபுரிந்த ஒருவர் இந்தியாவில் தான் தொடங்கிய உணவகத்தில் இதனை அறிமுகப்படுத்தினார்.
தற்போது உலகம் முழுவதும் ஒரு பொதுவான அசைவ உணவாக இருந்து வருகிறது.
கோழிக்கறி அல்லது ஏதேனும் ஒரு வேகவைத்த இறைச்சியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, நன்றாக சுடப்பட்ட ரொட்டியில் வைத்து சுருளாக்கித் தயாரிக்கப்படுகிறது. இத்துடன் மயோனைஸ், சாஸ், முட்டைகோஸ் என கூடுதல் பொருள்களும் சுவைக்காகச் சேர்க்கப்படுகின்றன.
கேரளத்தில் 2022ல் ஷவர்மாவால் உயிரிழப்பு ஏற்பட்டபோது, காரணமான ஷவர்மா மாதிரிகளில் ஷிகெல்லா(Shigella), சால்மோனெல்லா(salmonella) பாக்டீரியாக்கள் இருந்துள்ளதை கேரள சுகாதாரத் துறை உறுதிப்படுத்தியுள்ளது. இதுவே இறப்புக்குக் காரணம் என்றும் தெரிவித்தது.
ஷவர்மா தயாரிக்கப் பயன்படுத்தும் ஏதேனும் ஒரு பொருளில் உள்ள பாக்டீரியா காரணமாக இருக்கலாம்.
நன்றாக வேக வைக்கப்படாத அல்லது முந்தைய நாள் இறைச்சி, விரைவில் கெட்டுப்போகக் கூடிய மயோனைஸ், அழுகிய காய்கறிகள், காலங்கடந்த சாஸ்கள் ஆகியவற்றின் மூலமாகவும்
இறைச்சியை சரியாக வேக வைக்காததாலும் நீண்ட நேரம் மீண்டும் மீண்டும் சூடுபடுத்துவதாலும்
ஷவர்மா தயாரிக்கும் இடங்களில் உள்ள சுகாதாரக் குறைவு
சுத்தமற்ற நபர்கள், ஷிகெல்லா தொற்றியவர்கள் காரணமாக இருக்கலாம்.
வயிற்றுப் போக்கிற்கு ஷிகெல்லா பாக்டீரியாவே முக்கிய காரணமாக இருக்கிறது.
இது வயிற்றுக்குள் செல்லும்போது சிறுகுடலில் தொற்றை ஏற்படுத்தி பின்னர் பல்கிப் பெருகுகிறது. இது பெருங்குடலுக்கும் பரவுகிறது.
இதனால் வயிற்றுப் போக்குடன் குடல் பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்படுகிறது. இதனால் காய்ச்சல், வாந்தி, குமட்டல், வயிற்று வலி, வியர்வை அதிகமாக வெளியேறுதல், தலைவலி, செரிமானப் பிரச்னைகள் ஏற்படும்.
அதிகபட்சமாக நரம்புகளில் பிரச்னை, சிறுநீரக செயலிழப்புகூட ஏற்படலாம்.
கர்ப்பிணிகள், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இது மிகவும் ஆபத்தானது.
மனிதக் கழிவு, தண்ணீர் போன்றவற்றில் ஷிகெல்லா பாக்டீரியாக்கள் இருக்கின்றன, பரவுகின்றன.
ஷிகெல்லா பாக்டீரியா உலகம் முழுவதுமே அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இதனால் ஆண்டுக்கு 18.8 கோடி பேர் பாதிக்கப்படுகின்றனர், 10 லட்சம் பேர் இறக்கின்றனர் எனக் கூறுகின்றன தரவுகள்.
அசுத்தமான உணவு அல்லது தண்ணீர் மற்றும் கழிப்பிடங்கள் மூலமாக இந்த பாக்டீரியா பரவுகிறது.
பாக்டீரியா உள்ள பொருள்களைத் தொடும்போது, பாக்டீரியா உள்ள உணவுகளைச் சாப்பிடும்போதும், ஷிகெல்லாவால் பாதிக்கப்பட்டுள்ள ஒருவரின் மூலமாகவும் பரவலாம்.
உணவுகளை அதிக வெப்பநிலையில் முழுவதுமாக வேகவைத்து சாப்பிட வேண்டும். உதாரணமாக சிக்கன் குறைந்தது 75 டிகிரி செல்ஸியஸ் வெப்ப நிலையில் வேக வைக்க வேண்டும்.
உணவு, தண்ணீர், சமையல் பொருள்கள் தரமானதாக சுத்தமானதாக இருக்க வேண்டும்.
வயிற்றுப் போக்கு உள்ளவர்களுடன் தொடர்பில் இருத்தல் கூடாது. அவர்கள் சமைக்கக் கூடாது.
ஷவர்மா அதிக கலோரிகள் கொண்ட உணவு. 400 முதல் 500 கலோரிகள் வரை ஒரு சாதாரண ஷவர்மாவில் கிடைக்கும். இதனை செலவிட 4 முதல் 5 மணிநேரம் நடக்க வேண்டியிருக்கும் என மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
அது போக இதில் மினர்ல, விட்டமின் போன்ற சத்துக்களைக் காட்டிலும் அதிகளவில் இருப்பது கார்போஹைட்ரேட் தான். இது உடல்நலனுக்கு ஏற்றதல்ல எனினும் எப்போதாவது ஒரு முறை எடுத்துக் கொள்ளலாம் என அறிவரை வழங்குகிறார்கள் மருத்துவர்கள்.
இதன் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்ற இறைச்சி சரியான தட்பவெட்பத்தில் பராமரிக்கப்படாமல் இருந்தாலோ அல்லது நாள்பட்ட இறைச்சியாக இருந்தாலோ ஆபத்து என்கிறார்கள்.
அதனால் உணவு நச்சாகி உடலில் போதுமான எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. குழந்தைகளுக்கும் உடல் பலவீனமானவர்களுக்கும் இந்த உணவு ஏற்றதல்ல.
வெயில் காலத்தில் இறைச்சிகள் கெட்டுப் போவதற்கான வாய்ப்பு அதிகம். உணவகங்களில் இறைச்சிகளைக் கையாள்வதில் உள்ள குறைபாடுகளால்தான் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்' என்கின்றனர் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள்.
ஷவர்மாவை பொறுத்தவரையில் ஒருமுறை கம்பியில் குத்திவிட்டால் அது சூடான பிறகு வெட்டிக் கொடுக்கிறார்கள். அதனை சூடாக்கும்போது வெளியில் உள்ள பகுதி மட்டுமே வேகிறது. அதன் உள்ளே உள்ள இறைச்சி போதிய அளவில் வேகாமல் உள்ளன.
அதே ஷவர்மாவை காலியாகும் வரையில் மறுநாள் வரையில் பயன்படுத்துகின்றனர். அதனைப் பதப்படுத்தி சரியான முறையில் வேக வைக்க வேண்டும். அவ்வாறு செய்யாததுதான் பிரச்னையே.
வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டியில் அசைவத்தை வைக்கின்றனர்.
அதனை முறையாக சமைக்காவிட்டாலும் பாதிப்பு ஏற்படும். பொதுவாக, இந்தத் துயரம் எல்லாம் வெயில் காலத்தில் அதிகம்.
ஆடு, கோழி ஆகிய இறைச்சிகளை காலையிலேயே வெட்டி எடுத்து வைத்துவிடுகின்றனர். இந்த இறைச்சியை வைத்து மாலை நேரத்தில் ஷவர்மா உள்பட பல்வேறு துரித உணவுகளைத் தயார் செய்து விற்கின்றனர்.
கோழிக் கறியை குளிர்பதனப் பெட்டியில் வைக்காமல் வெளியிலேயே வைத்திருப்பதால் அவை கெட்டுப் போய்விடுகின்றன.
உணவு நஞ்சாவதற்கு மிக முக்கியமான காரணம், கைகளை சுத்தமில்லாமல் கையாள்வது, இறைச்சியை பதப்படுத்தாமல் வைத்திருப்பது போன்றவை.
நம் பகுதி உணவு இல்லாத,நமது சுற்றுச் சூழலுக்கு ஒத்துவராத இது போன்ற உணவுவகைகளை இவ்வளவு இடர்களை மீறி உண்ண வேண்டுமா??
ஷவர்மா துருக்கிப் பகுதி,பீசா,பர்கர் இத்தாலிப் பகுதி உணவுகள்.நம் பகுதி,சூழலுக்கு மாறுபட்டவை அவர்கள் உணவு நமக்கு கேடு விளைவிக்கலாம் .விளம்பரக் கவர்ச்சியில் நாம் பலியாக வேண்டாம்.
கேப்பை,குதிரைவாலி கொள்ளு போன்ற நம் மண்தாணியங்களை உபயோகித்து பாருங்கள்.விதவிதமாக சமைத்து உண்ணுங்கள்.பயமின்றி வாழுங்கள்.
------------------------------------