ஒரே நாடு,ஒரே தேர்தல். ஒரேடியாகச் செலவு.

 கர்நாடக அணைகளில் இருந்து இனி தமிழகத்திற்கு திறப்பதற்கு தண்ணீர் இல்லை. இனி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது. தற்போது உள்ள தண்ணீர் குடிநீர் பயன்பாட்டிற்கே போதுமானதாக இருக்குமாஎன்றகேள்விஎழுந்துள்ளது. 

 -நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் .

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வனத்துறை செயலர் சுப்ரியா சாகு ஆஜர். திருச்சியை சேர்ந்த வனத்துறை காவலர் பணி உயர்வு கோரியது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு தொடரப்பட்டது

ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியால், முதல்வர் ஸ்டாலினின் கான்வாய் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய விவகாரத்தில் பணியில் இருந்த அதிகாரிகளிடம் காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை .

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் உள்ள ஆண் பணியாளர்களுக்கு கிரீம் வண்ண சட்டை,காக்கி வண்ண பேண்ட் என புதிய சீருடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் 18ஆம் தேதி சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் புதிய சீருடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சட்டை மற்றும் பேண்ட் இரண்டிலும் சிறிய அளவிலான பா.ஜ.க.சின்னம் தாமரை பூ வடிவம் இடம்பெற்றுள்ளது 

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கட்டுப்படுத்துவது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை (செப்டம்பர் 13) மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் செப்டம்பர் 18-ம் தேதி தொடங்கவுள்ள முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க வாய்ப்பு உள்ளது.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கனிம வளத்துறை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 4 பேர் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மணல் குவாரி முறைகேடு தொடர்பாக பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வரும் நிலையில், கனிம வளத்துறை அலுவலகத்திலும் சோதனை நடைபெறுகிறது.

ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சிறைக்கு     பதில் வீட்டுக் காவலில் வைக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை விஜயவாடா நிராகரித்தது. திறன்மேம்பாட்டு திட்டத்தில் ரூ. 371 கோடி முறைகேடு வழக்கில் கைதான சந்திரபாபு, ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை உள்பட 18 இடங்களில் சோதனை.. லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சிக்கும் அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி நிர்வாகங்களுக்கு பள்ளிக்கல்வித்துறை 24 வகையான அறிவுறுத்தல்களை பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.மாணவர்கள் ஏரி, குளங்களில் குளிப்பதற்கு பெற்றோர் அனுமதிக்க கூடாது என தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும், மாணவர்கள் மிதிவண்டியில் வரும்போது பாதுகாப்பாக வர அறிவுறுத்த வேண்டும். மாணவர்களின் உடைமைகள் மழையில் நனையாமல் இருக்க மழைக் கோட்டுகள் அல்லது குடைகளை பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 24 வகையான அறிவுறுத்தல்களை பள்ளி நிர்வாகங்களுக்கு பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

  • மணல் குவாரி அதிபர்களின் வீடுகள் உள்பட 40 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை: சென்னை, புதுக்கோட்டை, திண்டுக்கல், வேலூரில் தீவிர சோதனை
  • "நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நாளே அனிதாவுக்கு உண்மையான அஞ்சலி செலுத்தும் நாள்"-முதல்வர் மு.க.ஸ்டாலின் .
  • அண்ணாமலை ஊர்வலம், ஏ.ஆர்.ரஹ்மான் கச்சேரி குளறுபடி 2 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்: உள்துறை செயலாளர் அமுதா உத்தரவு.

---------------------------

ஒரே நாடு,ஒரே தேர்தல்.

ஒரேடியாகச் செலவு.

மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவதற்கு ரூ.10 லட்சம் கோடி வரை செலவாகும் என்பது சமீபத்திய ஆய்வு முடிவின் மூலம் தெரியவந்துள்ளது.


மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவதும் வகையில் ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ நடைமுறையை அறிமுகப்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு ஒன்றையும் மத்திய அரசு அமைத்துள்ளது.

 இவ்வாறு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவது செலவையும் நேரத்தையும் மிச்சப்படுத்தும் என்று மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டு வருகிறது. ஆனால், இதற்கு எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், ஒரே நாடு ஒரே தோ்தல் நடைமுறை குறித்து பல்வேறு தரவுகள், தோ்தல் செலவினங்கள் அடிப்படையில் ஊடக ஆய்வுகளுக்கான மையம் (சிஎம்எஸ்) ஆய்வு மேற்கொண்டு, ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. 

அதுகுறித்து அந்த மையத்தின் தலைவரும் ஆய்வாளருமான என்.பாஸ்கர ராவ் கூறியதாவது:
மக்களவை, மாநில சட்டப்பேரவைகள், ஊராட்சி, நகராட்சி உள்பட அனைத்து அமைப்புகளுக்கும் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவதற்கு ரூ.10 லட்சம் கோடி செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.


இந்த தொகை முழுவதும் மத்திய, மாநில அரசுகளால் செய்யப்படும் செலவினம் மட்டுமல்ல. கட்சிகள் தங்களின் வேட்பாளரின் பிரசாரத்துக்காக மேற்கொள்ளும் செலவையும் சோ்த்ததுதான்.


தற்போதைய நடைமுறைப்படி, தோ்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே கட்சிகள் பிரசாரத்தைத் தொடங்கிவிடுகின்றன. ஆனால், தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, கட்சிகள் மேற்கொள்ளும் பிரசாரத்துக்கான செலவினங்கள் மட்டுமே தோ்தல் ஆணையத்திடம் கணக்கு காட்டப்பட கட்டாயப்படுத்தப்படுகின்றன. 

மேலும், ஒரு வேட்பாளருக்கான பிரசாரத்துக்கு செய்யப்படும் செலவினத்துக்கு வரம்பு எதுவும் தற்போது நிா்ணயிக்கப்படவில்லை.
கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் கட்சிகள் தோ்தல் நன்கொடைகளாக ரூ.6,400 கோடி வசூலித்துள்ளன. ஆனால், அதில் ரூ.2,600 கோடி மட்டுமே செலவழித்துள்ளன.


2024 மக்களவைத் தோ்தலுக்கு ரூ.1.20 லட்சம் கோடி செலவழிக்கத் திட்டமிடப்படும் நிலையில், நாடு முழுவதும் உள்ள 4,500 சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவதற்கு ரூ.3 லட்சம் கோடி வரை செலவாக வாய்ப்புள்ளது. அதுபோல, நாடு முழுவதும் உள்ள 500 நகராட்சி அமைப்புகளுக்குத் தோ்தல் நடத்துவதற்கு ரூ.1 லட்சம் கோடி செலவாகும்.


நாடு முழுவதும் உள்ள மாவட்ட கவுன்சில்கள் (650 இடங்கள்), மண்டலங்கள் (7,000 இடங்கள்), கிராம ஊராட்சி உறுப்பினா் (2,50,000 இடங்கள்) இடங்களுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவதற்கு ரூ.4.30 லட்சம் கோடி செலவாகும். இதன்படி, ஒட்டுமொத்தமாக அனைத்து அமைப்புகளுக்கும் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்த ரூ.10 லட்சம் கோடி செலவாக வாய்ப்புள்ளது.


ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவதன் மூலம், பயணச் செலவு, அச்சடிக்கும் செலவு, ஊடகங்கள் வாயிலான பிரசாரம், வாக்குச் சாவடி அளவிலான சரக்குப் போக்குவரத்து ஆகியவற்றை மட்டுமே குறைக்க முடியும்.
அந்த வகையில், தோ்தல் செலவினத்தைக் குறைப்பதற்கு அனைத்து அமைப்புகளுக்கும் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவது மட்டும் போதாது; தோ்தல் நடத்தை விதிமுறைகளை தீவிரமாக நடைமுறைப்படுத்துவதும், வாக்குப் பதிவுக்கான நாள்களை ஒரு வார அளவில் குறைப்பதும் அவசியமாகும். அப்போதுதான் ரூ.10 லட்சம் கோடி வரை ஆகும். 

ஆனால் பாதுகாப்பு செலவுகள் அதிகரிக்கும் சரிவர பாதுகாப்பு அளிப்பது நடையுறையில் சரிவராது.தேர்தல் முறைகேடுகள் தடுக்க இயலாது.

-----------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

விடுதலைப்போர்.முதல் பலி தூத்துக்குடியில்.