இவர்களைப் பார்ப்பதே பாவமல்ல

 ஜி20 அமைப்பின் 18-வது உச்சி மாநாடு டெல்லியில் இன்று (செப்.9) கோலாகலமாக தொடங்கி இருக்கிறது. இதில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளில் இருந்தும் தலைவர்கள் டெல்லிக்கு வந்துள்ளனர்.

இதற்காக இந்த நகரமே மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

டெல்லி முழுக்க வண்ண விளக்குகள்,வரவேற்பு விளம்பரப் பதாகைகள்.காணுமிடமெல்லாம் ஜி20 விளம்பரங்கள்.அனைத்திலும் மோடி. படம்.

 ஆனால் சிலருக்கோ ஒட்டுமொத்த வாழ்க்கையும் அழியும் நிலையில் தலைகீழாக மாறிவிட்டது.

 ஜி 20 மாநாடு நடைபெறும் இடத்திற்கு அருகிலுள்ள குடிசைப் பகுதிகளில் வசிக்கும் குடிசைவாசிகள் அகற்றப் படுகிறார்கள்.

ஆனால் தற்போது இவர்கள் இங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்..

ஜி20 மாநாட்டுக்காக இந்த இடத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்பதால், இங்கிருந்து வெளியேறுமாரு அதிகாரிகள் கூறி குடிசை வாழ் ஏழைகளை வாகனங்களில் வலுக் கட்டாயமாக ஏற்றி ஊருக்கு வெளியே வெட்டவெளியில் தங்க வைத்துள்ளனர்.குழந்தைகளுடன்..

 சுத்தம் செய்வது என்றால் ஏழை, எளிய மக்களை அகற்றுவது ,ஏழைகள் உலகநாடுகள் கண்ணில் தெரியவே கூடாது என்று அர்த்தம் கிடையாது.

எங்களை போன்ற ஏழை எளிய மக்களை பார்க்க பிடிக்கவில்லை என்றால் அழகான திரைசீலைகளை அல்லது துணிகளைக் கொண்டு நாங்கள் தெரியாதவாறு மூடிவிடுங்கள் என்று கண்கலங்குகிறார்'கள் குடிசைவாசிகள்

இதுபோன்று குடிசைகளில் வாழும் மக்கள் வறுமைக் கோட்டுக்கு மிகவும் கீழே உள்ளவர்கள், எனவே உடனடியாக மாற்று இடத்தில் வசிக்க ஏற்பாடு செய்வது அவ்வளவு எளிதானது அல்ல…

பாதிக்கப் பட்டகுஷ்புதேவி என்பவரின் கணவர் தர்மேந்திர குமார் கூறும்போது, வேறு இடத்தில் வாடகை கொடுத்து வசிக்கும் அளவுக்கு நான் சம்பாதிக்கவில்லை.

 இங்கிருந்து நாங்கள் வெளியேறினால் எங்கள் குழந்தைகளின் கல்வியும் பாதிக்கப்படும்..

இங்கு பள்ளிக்கூடம் அருகில் இருப்பதால் அவர்களால் எளிதாக படிக்க முடிகிறது, என்றார்…

கடந்த மே மாதத்திலிருந்து புல்டெளசர் இங்குள்ள ஜனதா முகாமை அகற்றி வருகிறது. 

இங்கு வசிப்பவர்களை வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர்…

இந்த குடிசைகள் அரசு நிலத்தில் சட்ட விரோதமாக கட்டப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.. 

ஆனால் பல ஆண்டுகளாக இங்கு வசிக்கும் மக்களால், அதிகாரிகளின் திடீர் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை…

கடந்த 30 ஆண்டுகளாக நாங்கள் இங்குதான் வசித்து வருகிறோம். திடீரென எங்கள் வீடுகள் இடிக்கப்பட்டால் நாங்கள் எங்குதான் செல்வது? 

எங்களுக்கு எந்த வசதியோ, வேறு இடமோ கிடையாது. வீடு இல்லாதவர்களாக சாலையில் தஞ்சமடைந்து உள்ளோம்… ஏழைகளின் சாபத்தால் இந்த அதிகாரிகள் நோய்வாய்ப்பட்டு இறந்து போவார்கள், என்று ஆதங்கத்துடன் இந்த குடிசைகளில் வசிக்கும் ஒரு பெண்….

குடிசைகள் அகற்றப்படுவதை எதிர்த்து சிலர் உயர் நீதிமன்றத்தை அணுகினர். ஆனால் நிவாரணம் கிடைக்கவில்லை. 

குடிசைப் பகுதிகள் சட்ட விரோதமானவை என நீதிமன்றமும் அறிவித்து விட்டது.

இங்கு வசிக்கும் மக்கள் தற்போது எங்கு செல்வது என தெரியாமல் தெருக்களில் தஞ்சமடைந்து உள்ளனர்… 

இது போன்றவர்கள்தான் இந்தியாவில்90% விழுக்காடு.

இவர்களைப் பார்ப்பதே பாவமல்ல.இவர்கள் வாக்குகள்தான் உங்களை ஆட்சி நாற்காலியில் அமர்த்தியுள்ளது.

------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?