கடைசியில் வேறு ஆள்.

 நிபா பரவல்.மற்றொரு கொரோனா??

கேரளாவில் மிக வேகமாக பரவி வரும் நிபா வைரஸை தடுக்க முகக்கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும் என மத்திய அரசின் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) அறிவுறுத்தியுள்ளது. 

மேலும், நிபா வைரஸ் தாக்கியவர்களுக்கு எப்படி சிகிச்சை அளிக்க வேண்டும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளையும் ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ளது.

கேரளாவில் நிபா வைரஸ் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை உருவாக்கி வருகிறது. இதுவரை அங்கு 2 பேர் நிபா வைரஸுக்கு உயிரிழந்துள்ளனர்.

 மேலும், 4 பேருக்கு நிபா வைரஸ் தொற்று இருப்பது உருவாகியுள்ளது. இந்த சூழலில், கேரளாவில் பல மாவட்டங்களில் மருத்துவமனைகளில் கடுமையான காய்ச்சலுடன் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

 அவர்களுக்கு நிபா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

 இது ஒருபுறம் இருக்க, நிபா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோருடன் 750 பேர் அடுத்தடுத்து தொடர்பில் இருந்தது தெரியவந்திருக்கிறது. 

இதையடுத்து, அவர்களை தனிமைப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

,நிபா வைரஸ் பரவலை தடுக்க ஐசிஎம்ஆர் பொதுவான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.  

"கொரோனாவை போல நிபா வைரஸும் காற்றில் பரவும் தன்மைக் கொண்டது. அதே போல, ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியது. 

எனவே வைரஸ் பரவலை தடுக்க முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். 

நிபாவால் தாக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் கட்டாயம் கையுறையும், கவச உடையும் அணிந்திருக்க வேண்டும். 

நிபா நோயாளிகளின் வியர்வை, ரத்தம், உமிழ் நீர் ஆகியவற்றை தொடக்கூடாது..

நிபா வைரஸ் பரவலை தடுக்க அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். வவ்வால்களில் இருந்துதான் நிபா பரவுகிறது. அதனால், வவ்வால்களுக்கு தொல்லை கொடுத்து அதனை பறக்க வைக்க வேண்டாம். 

வவ்வால்கள் ஓரிடம் விட்டு ஓரிடம் தொடர்நது நகர ஆரம்பித்தால் பல இடங்களில் நிபா வைரஸ் கிருமிகள் பரவும்" 

----------------------------------

இளம்வயதிலேயே மாரடைபு ஏன்?

---------------------------------
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தமிழ்நாடு முழுவதும் தொடங்கப்பட்டது - 1.06 கோடி மகளிருக்கு ரூ.1,000 தொகை அனுப்பப்பட்டது. 

மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட வன்முறையில் 176 பேர் உயிரிழந்துள்ளதாக மணிப்பூர் மாநில  காவல்துறை அறிவிப்பு.

கேரளாவில் நிஃபா வைரஸ் பரவி வரும் நிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்து மருந்து கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு முடிவு.கோவிட் போல ஒரடி. வாழ்வுதான் மோடிக்கு.

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மனு தாக்கல்
செப்டம்பர் 20ல் தீர்ப்பு.
"நீங்கள் ஏன் பாஜவில் சேரக்கூடாது" என்று கேட்ட அமலாக்கத்துறை: முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வக்கீல்  தகவல்.

  • தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் தர கர்நாடகா அரசு மறுப்பு - செப்டம்பர் 18 ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் அவசர கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு 
  • கொரோனாவை விட ‘நிபா’ வைரஸால் ஏற்படும் இறப்பு விகிதம் மிகவும் அதிகம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அதிர்ச்சி தகவல் 
  • அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் 75% அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்வேன் - போட்டியிடும் இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி .அமெரிக்க மோடி.?தோல்வி உறுதி.
  • 5வது மக்கள்தொகை உச்சி மாநாட்டில் ஹங்கேரி-பல்கேரியா இடையே இயற்கை எரிவாயு ஒப்பந்தம் கையெழுத்து
  • மசாக்ரே ஆறு பிரச்சினையால் ஹைதி உடனான எல்லைகளை டொமினிக் குடியரசு மூடியது 
  • வங்கதேசத்தில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 778 ஆக உயர்வு.
  • https://youtu.be/UOizmT4pVJg?si=dVKCClRnnpihetEf
  • -------------------------------------
  • கடைசியில் வேறு ஆள்.
  • ஆனாலும் மிஸ்ராவை விடவில்லை.!
இந்திய வருவாய் சேவை (IRS) அதிகாரி ராகுல் நவீன், அமலாக்கத்துறை இயக்குனரகத்தின் இடைக்கால இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். 

சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக்காலம் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்த நிலையில் ராகுல் நவீன் இடைக்கால இயக்குநராகப் பதவியேற்க உள்ளார்.
ராகுல் நவீன் 
அமலாக்கத்துறை இயக்குனரகத்தில் இயக்குநராக இருந்த ஸ்ரீ சஞ்சய் குமார் மிஸ்ரா 15.09.2023 அன்று பதவிக்காலத்தை நிறுவு செய்தார் எனவும் ஐஆர்எஸ் அதிகாரி ராகுல் நவீன் சிறப்பு இயக்குநராக நியமிக்கப்படுவதாகவும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

புதிய இயக்குநரை நியமிக்கும் வரை அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை, இவர் அமலாக்கத்துறை இயக்குனரகத்தின் பொறுப்பு இயக்குனராக இருப்பார் என்றும் அதிகாரப்பூர்வ உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

ராகுல் நவீன் சிறப்பு இயக்குநராகப் பணியாற்றுவதோடு, அமலாக்கத்துறை இயக்குநரகத்தின் தலைமை அலுவலகத்தில் தலைமை கண்காணிப்பு அதிகாரியாகவும் பணியாற்றுவார்.

இதற்கு முன் இயக்குநராக இருந்த எஸ்.கே.மிஸ்ரா செப்டம்பர் 15 வரை மட்டும்தான் பதவியில் தொடரலாம் என்றும் கடந்த ஜூலை 27 அன்று உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. 
முன்னதாக, மூன்றாவது முறையாக மிஸ்ராவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டதை உச்ச நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்தது.
இவரைவிட்டால் வேறு. நபரே இப்பதவிக்கு கிடையாதா?என்றும் கேள்வி எழுப்பியது.

நான்கு ஆண்டுகளுக்கு மேல் அமலாக்கத்துறை இயக்குநராக இருந்த மிஸ்ரா, உச்ச நீதிமன்றத்தின் கண்டிப்பு காரணமாக அந்தப் பதவியை இழந்துள்ளார். 
ஆனால், மோடி அரசு மிஸ்ராவை விடுவதாக இல்லை.

இவருக்கு பெரிய பதவியைக கொடுத்து தனது அரசியல் எதிரிகளைப் பழிவாங்க எண்ணுகிறது. 

எனவே சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட அனைத்து புலனாய்வு அமைப்புகளுக்கும் பொதுவான தலைவர் பதவி ஒன்றைப் புதிதாக உருவாக்கத் திட்டமிட்டு வருகிறது. அவ்வாறு புதிய பதவி உருவாக்கப்பட்டு அது எஸ்.கே.மிஸ்ராவுக்கே வழங்கப்படும் என்று பா.ஜ.க, வட்டாரத்தில்  பேச்சு நிலவுகிறது.

-------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

ரூ360 கோடிகள் வீணா?

கட்டுமானம் ஆரம்பம்?