திக்குத் தெரியா நிலை?

 பானிபூரி கடைகளுக்கு மருத்துவ சான்று கட்டாயம்.

நேபாளத்தில் வெள்ளத்தில் அடித்
துச் செல்லப்பட்ட 2 பேருந்துகள்: தேடும் பணி
எஸ்.ஐயை வெட்டிவிட்டு தப்பியபோது  பிரபலரவுடிதிருச்சிதுரைசுட்டுவீழ்த்தப்பட்டான்.
பள்ளி மாணவனை கடத்தி ரூ.2 கோடி கேட்டு மிரட்டிய 2 பேர் கைது.3 மணி நேரத்தில் போலீஸ் மீட்டது, 

சிறை ரவுடிகளுக்கு செல்போன் கொடுத்து உதவிய வேலூர் மத்திய சிறை மனநல ஆலோசகர் கைது.

மோடியின்குஜராத்மாடல்’18காலிபணியிடத்துக்குதிரண்டஆயிரக்கணக்கானஇளைஞர்கள்: தள்ளுமுள்ளுவால் ஓட்டலின்  பொருட்கள் சேதம்.


திக்குத் தெரியாநிலை?

ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்க வேண்டும் என்பதில் அதிமுகவின் டாப் தலைவர்கள் உறுதியாக இருக்கிறார்களாம். அதன்படி எடப்பாடி பழனிசாமியை ஏற்கனவே இவர்கள் சந்தித்து அதிமுகவை ஒருங்கிணைப்பது குறித்து பேசினார்கள். ஆனால்எடப்பாடிஅதைஏற்றுக்கொள்ளவில்லை.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி வந்த காலத்தில் இருந்து வரிசையாக அக்கட்சி தோல்விகளை தழுவி வருகிறது. வரிசையாக 10 தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்து உள்ளது.


அதன்படி 2017 ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், அதே ஆண்டு 22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல், 2020 ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், 2021 ஆம் ஆண்டு நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2022 ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2023 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், 2020ல் நடந்த கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தல் என மொத்தம் 9 தோல்விகளை எடப்பாடி தலைமையிலான அதிமுக சந்தித்தது.

இன்றோடு 10வது தேர்தலில் தோல்வி அடைந்து உள்ளது.


இந்த நிலையில்தான் அதிமுகவில் சிலர் எடப்பாடியின் செயலை, அவர் எடுக்கும் முடிவுகளை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

எடப்பாடிதான்.. தன்னை அதிமுகவின் முகமாக முன்னிறுத்துகிறார். 

தனக்கு போட்டியாக இருந்தவர்களை வெளியே அனுப்பியது அவர்தான்.

அப்படி இருக்க.. இப்போது தான் மட்டும் தனியாக பிரச்சாரம் செய்தேன்.. அதிமுக சார்பில் நான் மட்டுமே பிரசாரம் செய்தேன். தேமுதிக சார்பில் பிரேமலதா பிரசாரம் செய்தார் என்று சொல்வது ஏன்?

ஜெயலலிதா இப்படி தனியாகவே பிரச்சாரம் செய்வார். அவர் அதிமுகவை வெற்றிபெற வைக்கவில்லையா? 


ஓ பி எஸ் போன்று கட்சியின் அடுத்த கட்ட தலைவர்களை வெளியே அனுப்பிய பின் எப்படி வெற்றி கிடைக்கும் என்று கட்சிக்கு உள்ளேயே நிர்வாகிகள் பேச தொடங்கி உள்ளனராம்.


இப்படிப்பட்ட நிலையில்தான் எடப்பாடி பழனிசாமியின் நெடுஞ்சாலை வீட்டில் அவரை 6 சீனியர் அதிமுக தலைகள் சந்தித்து உள்ளனர். ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்க வேண்டும் என்பதில் அதிமுகவின் டாப் தலைவர்கள் உறுதியாக இருக்கிறார்களாம்.

அதன்படி எடப்பாடி பழனிசாமியை ஏற்கனவே இவர்கள் சந்தித்து அதிமுகவை ஒருங்கிணைப்பது குறித்து பேசினார்கள். ஆனால்எடப்பாடிஅதைஏற்றுக்கொள்ளவில்லை.


 எடப்பாடி உடனே இருக்கும் நிர்வாகிகளே அவரை எதிர்க்க தொடங்கி உள்ளனர். அவரின் லெப்ட் ஹேண்ட், ரைட் ஹேண்ட் கூட அவரை எதிர்க்க தொடங்கி உள்ளனர். ஒருங்கிணைந்த அதிமுக வேண்டும் என்று டாப் லீடர்களே அவரிடம் சொல்ல தொடங்கிவிட்டனர்.


அவருக்கு மாஸ் இமேஜ் இல்லை என்ற விமர்சனங்கள் கட்சிக்குள் வைக்கப்பட்டு வருகிறது. எடப்பாடி இத்தனை காலம் கட்சியை கட்டுப்படுத்த காரணமாக இருந்த டாப் தலைவர்களே அவருக்கு எதிராக திரும்பி உள்ளனர்.

அப்படி இருக்க அவர் இனி எப்படி கட்சியை கட்டுப்படுத்துவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தென் மண்லடத்தில் அதிமுக கடுமையான சரிவை சந்தித்து உள்ளது. கட்சி படுமோசமான பின்னடைவை சந்தித்து உள்ளது. அங்கே உட்கட்சி மோதலும் உச்சத்தில் உள்ளது.


என்ன நடந்தாலும் எடப்பாடி இதை ஏற்றுக்கொள்ள மாட்டார். ஓ பன்னீர்செல்வம், சசிகலா உள்ளே வருவதை ஏற்றுக்கொள்ள மாட்டார். அப்படி நடந்தால்.. எடப்பாடி என்ன ஆவார்.. கட்சியின் டாப் லீடர்கள் சொல்வது எடப்பாடி ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் எடப்பாடி என்ன ஆவார்.. 

அதிமுக நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

இப்படி இருக்க கூடுதல் தலைவர்கள் எடப்பாடியை சந்தித்து அவரின் மனதை மாற்ற உள்ளார்களாம்.

கிட்டத்தட்ட தென் மண்டலம், கொங்கு மண்டலம், வடமண்லடம் என்று 3 மண்டலங்களை சேர்ந்து 10 தலைவர்கள், 25+ எம்எல்ஏக்கள் எடப்பாடிக்கு இதில் பிரஷர் கொடுக்க தொடங்கி உள்ளனராம்.


அடுத்தடுத்தாக 12க்கும் மேற்பட்டத் தலைகள், தலைவர்கள் அவரை நேரில் சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?

கார்பரேட்டுகளால் கார்பரேட்டுகளுக்காக