வ(லதுகளி)ன் முறை

 தஞ்சை – திருச்சி  தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் கோயிலுக்கு நடந்து சென்ற பக்தர்கள் மீது  சரக்கு வாகனம் மோதி விபத்து: 5 பேர் உயிரிழப்பு.

பள்ளிக்கல்வித்துறை செயலாளர் 3 இயக்குநர்கள் மாற்றம்: தொடக்க கல்விதுறைக்கும் புதிய இயக்குநர் நியமனம்.

பாதிக்கப்பட்ட வேட்பாளர்கள் இவிஎம்மை சரிபார்க்கும் நடைமுறைகள் வெளியீடு: தேர்தல் ஆணையம்.

கிருஷ்ணகிரியில் 206 போலீசார் இடமாற்றம்.

"காவிரி  ". மூன்று தீர்மானம்.

காவிரி நதிநீர் விவகாரம் : அனைத்துக் கட்சி கூட்டத்தில் முன்மொழியப்பட்ட 3 தீர்மானங்கள் என்னென்ன?

காவிரி நதிநீர் விவகாரம் : அனைத்துக் கட்சி கூட்டத்தில் முன்மொழியப்பட்ட 3 தீர்மானங்கள் என்னென்ன?



காவிரி நதிநீர்ப் பிரச்சினை விவகாரத்தில் கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க மறுத்த நிலையில், இந்த நிகழ்வுக்கு தமிழ்நாடு அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த விவகாரம் குறித்து கலந்தாலோசிக்க இன்று (ஜூலை 16) அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜூலை 15) அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று காலை சென்னை தலைமை செயலகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்துகொண்ட நிலையில், பாமக தலைவர் அன்புமணி மட்டும் கலந்துகொள்ளவில்லை. தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை மீண்டும் பதிவு செய்தார்.

இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியபோது;-

காவிரி நதி நீர்ப் பிரச்சினையில் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடும் வகையில் நடைபெறும் இந்த அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள நீர்வளத்துறை அமைச்சர் அவர்களே, சட்டமன்ற அனைத்துக் கட்சி தலைவர்களே, தலைமைச் செயலாளர் அவர்களே, அரசுச் செயலாளர் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்களே, உங்கள் அனைவருக்கும் எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையினையும், மாண்பமை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினையும் பின்பற்ற மறுத்து, காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் ஆணையின்படி நமக்குக் கிடைக்க வேண்டிய குறைந்த அளவு தண்ணீரைக் கூட கர்நாடக அரசு வழங்க மறுத்து வருகிறது.

இதனை முறியடித்து, தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டி, காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்கச் செய்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைப் பற்றி பல ஆக்கபூர்வமான கருத்துகளை இங்கு நீங்கள் தெரிவித்து இருக்கின்றீர்கள். அதற்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தமிழ்நாட்டுக்கு சட்டபூர்வமாக உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, கிடைக்க வேண்டிய நீரினைச் சென்ற ஆண்டில் கர்நாடக அரசு விடுவிக்காததால், வேளாண் பெருமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தை நாடித் தான் நீரைப் பெற்றோம்.

இந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை சாதகமாக இருக்கக்கூடிய சூழ்நிலையிலும், கர்நாடகா அரசு இவ்வாறு நடந்து கொள்வதை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளின் அடிப்படையில், ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவுகளை நான் தீர்மானங்களாக இப்பொழுது படிக்கின்றேன்:

தீர்மானங்கள் :

1. காவிரி நடுவர் மன்றம் 05-02-2007 அன்று அளித்த இறுதித் தீர்ப்பையும், மாண்பமை உச்சநீதிமன்றம் 16-02-2018 அன்று அளித்த தீர்ப்பையும் அவமதிக்கும் வகையில், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு தற்போது ஆணையிட்டுள்ளவாறு தமிழ்நாட்டிற்கு காவிரி நீரைத் தர முடியாது என்று மறுத்துள்ள கர்நாடக அரசிற்கு இந்த அனைத்து சட்டமன்றக் கட்சிக் கூட்டம் தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

2. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் மாண்பமை உச்சநீதிமன்ற ஆணையின்படி, தமிழ்நாட்டிற்குக் காவிரி நீரை உடனடியாக விடுவித்திட கர்நாடக அரசுக்கு ஆணையிடுமாறு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தினை இந்த அனைத்து சட்டமன்றக் கட்சிக் கூட்டம் வலியுறுத்துகிறது.

3. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் மாண்பமை உச்சநீதிமன்ற ஆணையின்படி, தமிழ்நாடு பெறவேண்டிய நீரை உடனடியாகப் பெறுவதற்கு, தேவைப்படின், மாண்பமை உச்சநீதிமன்றத்தை நாடி, அனைத்து சட்டபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள இக்கூட்டம் ஒருமனதாக தீர்மானிக்கிறது.

இந்தத் தீர்மானங்களின் அடிப்படையில் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் முழுமூச்சோடு மேற்கொண்டு, காவிரி டெல்டா விவசாயிகளின் உரிமைகளை இந்த அரசு நிலைநாட்டும் என உறுதியளித்து, எனது உரையை நிறைவு செய்கின்றேன்.

வ(லதுகளி)ன் முறை.

வரலாறு நெடுகிலும் வலதுசாரிகள் வன்முறை யாளர்களாகவே இருந்துள்ளதைக் காட்டுவ தற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளன. 

இனம், மொழி, மதம், சாதி போன்றவற்றின் பெயரால் யுத்தங்களையும், கொடிய வன்முறைகளையும் நிகழ்த்தியுள்ளனர். 

மன்னராட்சிக் காலமாயினும் ஜனநாயக ஆட்சியாயினும் இதில் மாற்றங்கள் இல்லை. அதனால்தான் இடதுசாரிகளால் அமைதியும் நல்லிணக்கமும் நல வாழ்வும் முன்வைக்கப்பட் டன. 

அதனால் அவர்கள் மீது அவதூறுகளும் வசைமாரியும் பொழியப்பட்டன. வன்முறைத் தாக்குதல்களும் நிகழ்த்தப்பட்டன. ஹிட்லர், முசோலினி என தனித்தனியே பெயர்களை கொண்டிருந்தாலும் நாஜிசம், பாசிசம் என்றி ருந்தாலும் அவர்கள் கம்யூனிஸ்ட்டுகள், இடது சாரிகள் மீது கொலைபாதகங்கள் நடத்தினர். 

இந்தியாவில் இன, மத, மொழியுடன் சாதி வெறியும் கொண்டு ஜனநாயகத்தை நசுக்கவும் நாடாளுமன்ற தேர்தல் முறையை ஜனாதிபதி ஆட்சி முறைக்கு மாற்றவும் திட்டமிட்ட பாஜக  ஆட்சியாளர்களுக்கு மக்களவைத் தேர்தலின் மூலம் மக்கள் பாடம் புகட்டினர்; கடிவாளமிட்டனர். 

ஆயினும் தோற்றாலும் நாங்களே வென்றோம் என்று முட்டுக்கால்கள் மூலம் நின்று கொண்டு மார்தட்டுகின்றனர்.

உலகில் சில நாடுகளில் வலதுசாரிகள் தேர்தல்களில் வெற்றி பெற்ற நிலையில் பிரான்சில் இடதுசாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு முதலிடத்துக்கு வந்தனர். ஆனாலும் அவர்களி டம் ஆட்சியை ஒப்படைக்க அந்நாட்டு ஜனாதிப திக்கு மனமில்லை. 

இங்குள்ள இந்துத்துவா ஆட்சி யாளர்களும் பாஜகவினரும் இடதுசாரிகளின் அரசி யல் செல்வாக்கு கண்டு எரிச்சலடைகின்றனர்.  சமீப காலமாக மிகத் தீவிரமாக வன்மம் கக்கிடும் நடிகை கங்கனா ரணாவத், அமெரிக்காவில் டிரம்ப் மீது நடந்த தாக்குதலுக்கு இடதுசாரிகள் தான் காரணம் எனப் பிதற்றியுள்ளார். 

டிரம்ப் தனது நண்பர் என்கிறார் நரேந்திர மோடி.  உண்மைதான். கடந்த முறை தோல்வியுற்ற டிரம்ப் அதை ஏற்றுக் கொள்ளாமல் அமெரிக்க நாடாளுமன்றம் மீது கூட தமது ஆதரவாளர்களை ஏவி  தாக்குதல்  நடத்தினார். 

இப்படி, இயல்பான கூட்டாளிகளான தால் தான் அதீதமாகப் பேசுகிறார் கங்கனா.

அவர் மட்டுமல்ல, பாஜகவின் செய்தித் தொ டர்பாளர் அமித் மாளவியா சமூக வலைதளத் தில், இந்தியாவில் ஜனநாயகத்தை அழிக்க சர்வ தேச இடதுசாரிகள் தீவிர முயற்சி செய்தனர் என்று  குதர்க்கம் பேசியுள்ளார்.

 மற்றொரு செய்தித் தொ டர்பாளர் ஷெசாத் பூனாவாலா, டிரம்ப்பை கொலை செய்ய முயற்சித்தது போல மோடியை கொல்ல 3 சதித் திட்டங்கள் அரங்கேறியதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் உண்மையில் இடதுசாரிகளையும் முற்போக்காளர்களையும் அப்பாவி மக்களை யும் கூட பட்டப்பகலில் வெட்டிக் கொல்லும் பயங்க ரத்தில் பாஜக பரிவாரங்கள் ஈடுபட்டு வருவது நாட்டு நடப்பு. அதன் தற்போதைய உதாரணம் திரிபுரா. 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?

கார்பரேட்டுகளால் கார்பரேட்டுகளுக்காக