”ஜன”நாயகம்,,,,,,,,,,
” இந்திய மக்கள் தொகை 121 கோடியை தாண்டியிருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 18 கோடி பேர் அதிகரித்துள்ளனர். அதே நேரத்தில் மக்கள்தொகை பெருக்கம் 17.69 சதவீதமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 1872ம் ஆண்டு முதல் இதுவரை 14 கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டுள்ளன. இறுதியாக 2001ம் ஆண்டு நடத்தப்பட்ட சென்சஸ் கணக்கெடுப்பின்படி இந்திய மக்கள் தொகை 103 கோடியாக இருந்தது. இந்நிலையில், 15வது மக்கள் தொகை கணக்கெடுப்பு, இரண்டு கட்டமாக நடத்தப்பட்டது. முதல் கட்ட பணிகள் கடந்த ஆண்டு மே 1ம் தேதி தொடங்கின. அதைத் தொடர்ந்து 2&ம் கட்ட கணக்கெடுப்பு பணி, கடந்த பிப்ரவரி 9ம் தேதி தொடங்கி 28ம் தேதி முடிவடைந்தது. நாடு முழுவதும் 640 மாவட்டங்கள் மற்றும் 5,924 துணை மாவட்டங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதற்காக ரூ.2,200 கோடி செலவிடப்பட்டது. உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை மற்றும் இந்திய பதிவாளர் ஜெனரல் சந்திர மவுலி ஆகியோர் 2011 சென்சஸ் முதல் அறிக்கையை டெல்லி...