கார்பரேட் போலிசாமி ஜக்கியை
பாதுகாக்கும் உச்சநீதிமன்றம்!
கடந்தாண்டு கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியரான காமராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில் தனது மகள்கள் கீதா மற்றும் லதா 2016-ஆம் ஆண்டு ஈஷா ஆசிரமத்திற்கு யோகா கற்கச் சென்றனர்.
மேலும், ஈஷா ஆசிரமத்தில் தனது மகள்களைத் தனி அறையில் அடைத்துத் துன்புறுத்துவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் நானும் எனது மனைவியும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளோம்.
நான் ஈஷா ஆசிரமத்தின் மீது வைத்த குற்றச்சாட்டுகளுக்காக ஈஷாவிடம் பொது மன்னிப்பு கேட்டால்தான் எனது மகள்களிடம் பேச முடியும் என்று கூறுகிறார்கள்.
அத்துடன் நான் ஈஷா யோகா ஆசிரமத்துக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று தன்னுடைய இரண்டாவது மகளையே கூறவைத்து மிரட்டுவதாகவும் கூறி தனது இரண்டு மகள்களை மீட்டுத்தருமாறு தன்னுடைய மனுவில் தெரிவித்திருந்தார்.
காமராஜருடைய ஆட்கொணர்வு மனுவை செப்டம்பர் 30 ஆம் தேதி விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் எம்.எஸ்.சுப்பிரமணியம், சிவஞானம் ஆகியோர் தலைமையிலான அமர்வு ஈஷா ஆசிரமத்தின் மைய நிறுவனர் சத்குரு என்று அழைக்கப்படும் ஜக்கி வாசுதேவ் தனது மகள்களுக்குத் திருமணம் செய்துவைத்து விட்டு மற்ற பெண்களுக்கு மொட்டை அடித்து சன்னியாசிகளாக மாற்றி ஈஷா ஆசிரமத்தில் வாழ ஜக்கி ஏன் ஊக்குவிக்கிறார் எனக் கேள்வி எழுப்பினர்.
மேலும், விசாரணைக்குப் பின்னர் ஈஷா ஆசிரமத்தின் மீது நிலுவையில் உள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளிட்டு அனைத்து கிரிமினல் வழக்குகளையும் விசாரித்து அக்டோபர் 4-ஆம் தேதி அறிக்கையாக சமர்ப்பிக்கும்படி போலீசாருக்கு
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி அக்டோபர் 1, 2 ஆகிய தேதிகளில் கோவை மாவட்ட சமூக நல அலுவலர் அம்பிகா தலைமையில் சமூக நலத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், குழந்தைகள் நல அதிகாரிகள் ஆறு குழுக்களாகப் பிரிந்து ஈஷா யோகா ஆசிரமத்தில் உள்ளவர்கள் எந்த நிலையில் உள்ளனர், ஆசிரமத்தில் வேறு என்ன மாதிரியான பிரச்சினைகள் உள்ளன போன்றவற்றை ஆய்வுசெய்து அறிக்கையாக நான்காம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க இருந்தனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டால் தங்களுடைய முறைகேடுகள், பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தல்கள் அம்பலப்பட்டு விடும் என்று அஞ்சிய ஈஷா ஆசிரமம், தன்னுடைய வழக்கறிஞர் ரோஹத்கி மூலம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தது.
அதில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு மிகையானது என்றும், ஈஷா யோகா அறக்கட்டளை போன்ற ஒரு நிறுவனத்தில் காவல்துறையோ ராணுவத்தையோ அனுமதிக்க முடியாது. எனவே, இம்மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது.
அதன்படி அக்டோபர் மூன்றாம் தேதியே ஈஷா ஆசிரமம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சந்திரசூட், பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வு அவசர வழக்காக விசாரித்தது.
நீதிபதி சந்திரசூட் காணொளி வாயிலாக காமராஜருடைய மகள்களான கீதா மற்றும் லதா ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தினார். இருவரும் தங்கள் சுய விருப்பத்திலேயே ஈஷா ஆசிரமத்தில் இருப்பதாகத் தெரிவித்தனர்.
எனவே, ஈஷா ஆசிரமத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றியும் போலீசால் சென்னை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டும் ஈஷா ஆசிரமத்தில் போலீஸ் விசாரணை நடத்த இடைக்காலத் தடை விதித்தும் என்று உத்தரவிட்டு அக்டோபர் 18-ஆம் தேதிக்கு வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்ற அமர்வு ஒத்திவைத்துள்ளது.
இவ்வாறு உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கைகளான ஈஷா ஆசிரமத்தின் கோரிக்கையை ஏற்று வழக்கை அவசர வழக்காக விசாரித்தது; குறிப்பாக, வழக்கை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றியது; போலீசின் அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவிடாமல் தடுத்தது ஆகிய நடவடிக்கைகள் உச்சநீதிமன்றமானது ஈஷா ஆசிரமத்தையும் கார்ப்பரேட் சாமியாரான ஜக்கியையும் காப்பாற்றும் வகையில் செயல்பட்டு வருவதையே நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
மேலும், இதற்கு முன்னர் ஈஷா ஆசிரமத்தின் மீது யானை வழித்தடங்களாக உள்ள வனநிலத்தை அழித்து ஈஷா ஆசிரமம் கட்டப்பட்டுள்ளது,
ஈஷா ஆசிரமத்திற்குப் பயிற்சிக்காகச் செல்லும் பெண்கள் மாயமாவது மற்றும் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவது, இந்த ஆசிரமத்தின் நடமாடும் மருத்துவக் குழுவைச் சேர்ந்த மருத்துவர் சரவணமூர்த்தி அரசுப் பள்ளி மாணவிகள் 12 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்திருப்பது ஆகிய குற்றச்சாட்டுகளும் உள்ளன.
இந்த நிலைமையிலும் உச்சநீதிமன்றம் ஜக்கியை பாதுகாக்கும் வகையில் செயல்பட்டு வருவது அப்பட்டமான மக்கள் விரோத நடவடிக்கையாகும்.
மேலும், கார்ப்பரேட் சாமியாரான ஜக்கி இந்துராஷ்டிரக் நச்சுக் கருத்துகளை மக்கள் மத்தியில் விதைப்பதற்காக ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பலின் கையாளாகச் செயல்பட்டு வரும் சாமியார் ஆவார்.
ஆகவே, உச்சநீதிமன்றமானது ஜக்கியை பாதுகாப்பதன் மூலம் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பலின் சார்பாகவே செயல்படுகிறது என்பது மீண்டும் தெளிவாகியுள்ளது.
--------------------------------------------------
நூறு கிராமில்
விலக்கப்பட்டவர்.
மக்களால் வெற்றி!
பாரீஸ் ஒலிம்பிக் தொடரின் மக ளிர் 50 கிலோ மல்யுத்தப் பிரிவில் இந்தியாவின் நட்சத் திர வீராங்கனை வினேஷ் போகத் இறு திச் சுற்றுக்கு முன்னேறினார். எனினும் இறுதிப்போட்டிக்கு முன்னர் அரசியல் சூழ்ச்சியால் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததாக கூறி தகுதி நீக்கம் செய்யப் பட்டார். இதனால் அதிருப்தி அடைந்த வினேஷ் போகத் மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெற்று, மல்யுத்த வீராங்கனை களின் போராட்டத்தை (பிரிஜ் பூஷண் பாலியல் வன்முறைக்கு எதிராக) போல மீண்டும் பாஜகவுக்கு எதிரான போராட் டத்தை தொடரப்போவதாகக் கூறி காங்கி ரஸ் கட்சியில் இணைந்தார். காங்கிரஸ் கட்சி ஹரியானா சட்டமன்ற தேர்தலில் வினேஷ் போகத்திற்கு ஜூலானா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கியது.
1967 முதல் 2019 வரை 13 சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டுள்ள ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் 3 முறை மட்டுமே வென்றுள்ளது. கடைசியாக ஜூலானா தொகுதியில் 2005இல் நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று இருந்தது. அதன்பிறகு 19 ஆண்டு களாக ஜூலானா தொகுதியை கைப்பற்ற முடியாமல் திணறியது.
இந்நிலையில், வினேஷ் போகத்தின் நட்சத்திர அடையாள வியூகத்தை வைத்து காங்கிரஸ் கட்சி ஜூலானா தொகுதியை தன் வசம் கொண்டுள்ளது. மல்யுத்த களத்தைப் போன்ற பெரும் சவால்மிக்க ஜூலானா களத்தில் வர லாறு காணாத உட்கட்சி பூசல்கள், பாஜக வின் சாதிய சமன்பாடுகள் என பல தடைகளையும் தாண்டியே வினேஷ் போகத் இப்போதும் வென்று ஹரியானா சட்டமன்றத்திற்கு செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“இந்தியாவின் நட்சத்திர வீராங்கனைக்கு எனது மன மார்ந்த வாழ்த்துக்கள். காங்கிரஸ் சார்பில் போட்டி யிட்ட வினேஷ் போகத் ஹரியானா வில் ஜூலானா சட்டமன்றத் தொகு தியில் இருந்து வெற்றி பெற்றுள் ளார். மக்களுக்கான பிரதிநிதியாக மக்கள் சேவையின் இந்த புதிய அத்தியாயத்தில் அவர் சிறப்பாக வெற்றிபெற வாழ்த்துகிறேன். பாசிச சக்திகளுக்கு எதிராக அவ ரது ஆற்றல் தொடரட்டும்” என தமிழ்நாடு துணை முதல்வர் உதய நிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
வினேஷ் போகத்தின் நண்பரும், காங்கிரஸ் விவ சாய சங்கத் தலைவருமான பஜ்ரங் புனியா, “இந்தியா வின் மகள் வினேஷ் போகத்தின் வெற்றிக்கு பல வாழ்த்துக் கள். இந்தப் போட்டி ஒரு ஜூலானா தொகுதிக்காக மட்டும் அல்ல, மற்ற 3-4 வேட்பாளர்களுடன் மட்டும் அல்ல, கட்சி களுக்கு இடையேயான சண்டை மட்டுமல்ல. இந்த போராட்டம் நாட்டின் பலமான அடக்குமுறை சக்திகளுக்கு எதிரானது” என வாழ்த்து தெரிவித்துள்ளார். இதே போல அரசியல் கட்சித் தலைவர்கள், நெட்டிசன்கள் என பல்வேறு தரப்பினரும் வினேஷ் போகத்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஜூலானா தொகுதி ஜாட் சமூகத்தினர் பெரும் பான்மை வசிக்கும் தொகுதியாகும். அங்கு மொத்தம் 1,85,565 வாக்காளர்கள் உள்ளன. மொத்த வாக்குகளில் கிட்டத்தட்ட 81,000 வாக்குகள் ஜாட் இனத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் ஆவர். இதர வாக்குகள் பிற்படுத் தப்பட்ட மற்றும் தலித், முஸ்லிம் மக்களைச் சார்ந்தவை. ஜாட் சமூ கத்தை சேர்ந்த வினேஷை காங்கிரஸ் களமிறக்கி யது.பாஜகவின் யோகேஷ் குமாரை தவிர, ஜேஜேபியின் அமர்ஜீத் தண்டா, ஆம் ஆத்மியின் கவிதா ராணி, இந்திய தேசிய லோக் தளத்தின் சுரேந்தர் உள்ளிட்ட அனைவரும் ஜாட் சமூகத்தை சேர்ந்தவர்கள் தான். யோகேஷ் குமார் ஜாட் அல்லாத பிற் படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்.
ஜேஜேபி, ஆம் ஆத்மி, இந்திய தேசிய லோக் தளம் ஜாட் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் வினேஷ் போகத்திற்கு செல்ல வேண்டிய வாக்குகள் பிரியும் என்றும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த வாக்குகள் பிரியாது என்பதை கணக்கில் கொண்டு, ஜாட் அல்லாத யோகேஷ் குமாருக்கு சீட் வழங்கியது பாஜக. ஜாட் வாக்குகள் பிரிந்தாலும் வினேஷ் போகத் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித், முஸ்லிம் மக்களின் வாக்குகளையும் தன் பக்கம் இழுத்து, பாஜகவின் சாதி வியூக அரசியலை தகர்த்துள்ளார்.
இவிஎம் பேட்டரி சார்ஜ் அதிகரித்தது எப்படி?
ஹரியானா சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி பல இருந்ததாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், காங்கி ரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் காங்கிரஸ் கட்சி வாக்கு எண்ணிக்கை யின் முடிவுகளை தாமதமாக வெளியிட்டதாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடி தம் மூலம் புகார் அளித்தார். ஆனால் இந்த புகார் எதிர்மறையானது என தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில், ஹிசார், மகேந்திரகர் மற்றும் பானி பட் மாவட்டங்களில் இருந்த இவிஎம் வாக்குப்பதிவு இயந்திரங்களின் பேட்டரி அளவு அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி யுள்ளன. வாக்கு எண்ணிக்கை முகவர் ஒருவர் (காங்கிரஸ்) அளித்த பேட்டியின் அடிப்படையில் காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா கூறுகையில்,”ஹிசார், மகேந்திரகர் மற்றும் பானிபட் மாவட்டங்களில் இருந்த இவிஎம் வாக்குப்பதிவு இயந்திரங்களின் பேட்டரி சார்ஜ் அளவு 99% ஆக அதிகரித்தது எப்படி? இந்த பகுதி களின் முடிவுகள் தான் காங்கிரஸை தோற்கடித்தன. 60-70% இயந்திரங்களில் வாக்குப் பதிவு சீர்குலைக்கப்படவில்லை. ஹரியானா தேர்தல் முடிவு பாரபட்சமானது” என அவர் கூறினார்.
வாக்கு எண்ணிக்கை முடிந்த பின் இவிஎம் இயந்திரங்களில் 60 முதல் 70% அளவு பேட்டரி சார்ஜ் இருக்கும். ஆனால் ஹரியானாவில் பாஜக அதிக தொகுதி களை வென்ற மாவட்டங்களில் 99% அளவு சார்ஜ் இருந்துள்ளது. இது பலத்த சந்தே கத்தை கிளப்பியுள்ளது.
----------------------
ரத்தன் டாடா.
இந்தியாவின் கண்ணியமான தொழிலதிபர்.
இந்தியாவின் தொழில்துறை முகங்களில் ஒன்றான பிரபல தொழிலதிபரும் டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான மறைந்த ரத்தன் டாடா தலைமைப் பொறுப்பு வகித்த Sir Ratan Tata Trust-ன் பின்னணியில் பல்வேறு சரித்திர நிகழ்வுகள் இடம் பெற்றிருக்கின்றன. ஒட்டுமொத்த தேசமும் புகழஞ்சலி செலுத்தும் ரத்தன் டாட்டாவின் தாத்தாவின் பெயர்தான் "Sir Ratan Tata".
47 ஆண்டுகள் வாழ்ந்த Sir Ratan Tata Trust இந்திய விடுதலைப் போரில் மிக முக்கிய பங்களிப்புகளை செய்து மறைந்தவர் என்கிறது சரித்திரத்தின் பக்கங்கள்.
இந்தியாவில் நூறாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து செயல்பட்டு வரக் கூடிய அறக்கட்டளைகளில் ஒன்று Sir Ratan Tata Trust. மறைந்த ரத்தன் டாடா குழுமத்தால் நிர்வகிக்கப்படும் இந்த அறக்கட்டளை இன்றளவும் பல்வேறு வகையான செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.
Sir Ratan Tata Trust-ன் நிறுவனரான Sir Ratan Tata, ஜாம்ஷேட்ஜியின் இளைய மகன். 1871-ம் ஆண்டு பிறந்த Sir Ratan Tata மும்பை டாடா ஹவுஸ் நிறுவனர். 1896-ம் ஆண்டு தமது 25-வது வயதில் டாடா சன்ஸ் குழுமத்தில் பங்குதாரராக இணைந்தார்.
அப்போது முதலே பல்வேறு தொழில் துறைகளில் Sir Ratan Tata ஈடுபட்டு கொடிகட்டிப் பறந்தார். சர் ரத்தன் டாடா மற்றும் அவரது அண்ணன் தாரோப்ஜி டாடா இருவரும் டாடா குழுமத்தின் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வந்தனர்.
அதே நேரத்தில் சர் ரத்தன் டாடா சமூக பிரச்சனைகளில் கவனம செலுத்தினார். குறிப்பாக தென்னாப்பிரிக்காவில் மகாத்மா காந்தி, நிறவெறிக்கு எதிராக நடத்தியப் போராட்டங்களுக்கு உறுதுணையாக இருந்தார்.
அத்துடன் மகாத்மா காந்தியின் நிறவெறி எதிர்ப்புப் போராட்டங்களுக்கு அந்த காலத்திலேயே ரூ1,25,000 நன்கொடை கொடுத்தவர்தான் சர் ரத்தன் டாடா என்கிறது சரித்திரம். சர் ரத்தன் டாடாவின் இத்தகைய மாபெரும் ஆதரவை மகாத்மா காந்தி நெகிழ்ந்து தமது சரித்திரட்க்ஹ்தின் பக்கங்களில் எழுதியிருக்கிறார்.
மாபெரும் விடுதலைப் போராட்ட வீரரான கோபால கிருஷ்ண கோகலேயின் ஆத்மார்த்த நண்பராக இருந்தவர்.
இந்திய விடுதலைப் போராட்ட வீரராக மட்டுமல்லாமல் மறுமலர்ச்சி இயக்கங்களின் முன்னோடியாகவும் கோபால கிருஷ்ண கோகலே திகழ்ந்தார். கோகலேவின் சமூக சீர்திருத்தப் பணிகளுக்கு ஆண்டுதோறும் ரூ10,000 நன்கொடை வழங்கியவர் சர் ரத்தன் டாடா.
வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் பல்வேறு துறைகள், அறக்கட்டளைகள் தொடங்குவதற்கும் நிதி உதவிகளை வாரி வழங்கிய வள்ளலாக இருந்தவர் சர் ரத்தன் டாடா.
இந்தியாவின் வரலாற்றை அகழாய்வுகள் மூலம் அறிந்து கொள்வதிலும் ஆர்வம் காட்டியவர் சர் ரத்தன் டாட்டா. பாடலிபுத்திரம் அகழாய்வு, மவுரியப் பேரரசு காலத்து நாணயங்கள் அகழாய்வு, பேரரசர் அசோகர் அரண்மையின் அகழாய்வு ஆகியவை சர் ரத்தன் டாடாவின் பங்களிப்பில் மேற்கொள்ளப்பட்டவை.
சர் ரத்தன் டாடா, 1892-ல் திருமணம் செய்து கொண்டார். 1915-ம் ஆண்டில் மும்பை டாடா ஹவுஸ் உருவாக்கினார். இங்கிலாந்துக்கு மருத்துவ சிகிச்சைக்காக சென்ற நிலையில் அங்கே காலமானார்.
அவரது உடல் லண்டன் ப்ரூக்உட் கல்லறையில் தந்தைக்கு அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.
சர் ரத்தன் டாடா தமது குடும்பத்தைச் சேர்ந்த நவல் ஹெச்.டாடாவை தத்தெடுத்திருந்தார்.
நவல் ஹெச்.டாடா, இருவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களில் ஒருவரது மகன்தான் தற்போது மறைந்த ரத்தன் டாடா.
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக தாத்தாவின் அதே தொழில் துறை முன்னேற்றம், சமூக அர்ப்பணிப்புக்காக தாத்தாவின் பெயரிலான "Sir Ratan Tata Trust" அறக்கட்டளையை தொடர்ந்து முன்னெடுத்து நடத்தியவர்தான் மறைந்த ரத்தன் டாடா.
தாத்தாவின் பேர் சொல்லும் பிள்ளையாக வாழ்ந்து மறைந்துள்ளார் இந்தியாவின் தொழில் முகம் ரத்தன் டாடா!.