ஈஷாவில்
காணாமல் போனவர்கள்!
ஈஷா மையத்திற்கு சென்றவர்களில் பலர் காணாமல் போயுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தகவல்!
-ஈஷா வழக்கில் தமிழ்நாடு காவல்துறை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் தகவல்.
வேலை வாய்ப்பை முடக்குவது தவறு!
பணி ஓய்வு பெற்ற ரயில்வே துறை ஊழி யர்களை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் அமர்த்துவது என்ற முடிவு எந்த வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல.
ரயில்வே வாரியத்தின் இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டுமென்று டிஆர்இயு உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
இந்தியாவில் வேலையின்மை உச்சத்தில் உள்ளது.
2022ஆம் ஆண்டு இந்திய ரயில்வேயில் 2 லட்சத்து 50 ஆயிரம் காலிப் பணியிடங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டது. அது கடந்த இரண்டு ஆண்டுகளில் மேலும் அதிகரித்தி ருக்கவே செய்யும்.
ஆனால் இந்த காலிப்பணி யிடங்களை நிரப்பாதது மட்டுமின்றி அந்த எண்ணிக்கையை குறைத்துக் காட்டும் முயற்சி யிலும் ரயில்வே துறை ஈடுபட்டுள்ளது.
1999, 2000 ஆம் ஆண்டில் இந்திய ரயில்வே துறையில் 16 லட்சம் பணியாளர்கள் இருந்த னர். இந்த எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப் பட்டுக் கொண்டே வருகிறது.
இந்த நிலையில் குறைவான எண்ணிக்கையில் காட்டப்படும்
காலிப் பணியிடங்களில் கூட இளைஞர்களுக்கு வாய்ப்பு தராமல் ஓய்வு பெற்ற ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் மறு நியமனம் செய்வது என்பது வேலை வாய்ப்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான இந்திய இளைஞர்களுக்கு செய்யும் துரோகமாகும்.
வேலை வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்பது மட்டுமல்ல, ஏற்கெனவே பணியில் உள்ள ஊழி யர்களின் பதவி உயர்வு மறுக்கப்படுவதோடு, பாது காப்புக் குறைபாடுகளும் ஏற்பட வாய்ப்புண்டு.
ரயில் பயணிகளின் பாதுகாப்பில் அலட்சியம் காட்டும் ஒன்றிய அரசு விபத்துகள் நடக்கும் போது தனி மனிதத் தவறுகள் என்று எடுத்தவுடனேயே கைகாட்டி விடுவதை பழக்கமாகக் கொண்டுள் ளது. பணி ஓய்வு பெற்ற ஊழியர்களை மறு பணி நியமனம் செய்யும் போது விபத்துக்களுக்கு இதையே ஒரு காரணமாகக் காட்டவும் ஆட்சி யாளர்கள் தயங்க மாட்டார்கள்.
ஓய்வு பெற்ற ஊழியர்களை மறுபணி நியம னம் செய்ய வேண்டிய அவசியம் என்ன?
தகுதி யான, பொருத்தமான இளைஞர்கள் இல்லை என்று சொல்ல முடியுமா?
நூறு காலிப் பணியி டங்களுக்கு விண்ணப்பம் கோரினால் லட்சக் கணக்கில் விண்ணப்பங்கள் வரும் அளவுக்கு வேலையின்மையின் அடர்த்தி அதிகரித்துள் ளது. தங்களுடைய கல்விக்கு பொருத்தமில்லாத பணிகளில் கூட சேருவதற்கு இளைஞர்கள் தயங்குவது இல்லை.
ஒன்றிய அரசு மற்றும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்களை வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர் களை கொண்டு நிரப்ப வேண்டும்.
வேலை யின்மை என்பது தனிப்பட்ட பிரச்சனை அல்ல, அது தேசத்தின் பிரச்சனை.