நிதானம் தேவை!
கூடிக் கொண்டேயிருக்கும் ஜிஎஸ்டி, நிலையற்ற நூல் விலையால் ரூ.1000 கோடி ஜவுளி தேக்கம்: உற்பத்தியாளர்கள் வேதனை.
திருவல்லிக்கேணிபார்த்தசாரதிகோயிலுக்கு சொந்தமான ரூ.6 கோடி மதிப்பு கட்டிடம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பு.
ஈரான்-இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் எதிரொலி கச்சா எண்ணெய் விலை உயருகிறது: ஒரேநாளில் பீப்பாய் 2 டாலர் அதிகரிப்பு.
"சாவர்க்கர் மாட்டிறைச்சி சாப்பிட்டவர்":- கர்நாடக அமைச்சர் தினேஷ்குண்டுராவ்.
மராத்தி, பாலி, பிராகிருதம், அசாமிஸ், பெங்காலி என 5 மொழிகளுக்கு 'செம்மொழி அந்தஸ்த்து’ வழங்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்.
ரூ50 கோடி கேட்டுகர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி மிரட்டினார்: தொழிலதிபர் போலீசில் புகார் .
ஈரானுக்கு பதிலடி கொடுப்போம் என்று இஸ்ரேல் கொக்கரிக்கிறது.
பதிலடி கொடுத்தால் அதன் விளைவு இன்னும் கடுமையாக இருக்கும் என்று இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்தி ருக்கிறது. இந்த புதிய கடும் மோதலின் காரணமாக ஒட்டுமொத்த மத்திய கிழக்குப் பிரதேசமும் உலக மும் பதற்றத்தில் ஆழ்ந்துள்ளன.
போரை நிறுத்துங்கள் என்று ஐநா சபையும் அமைதியை நிலை நாட்டுங்கள் என்று உலக நாடுகளும் அழைப்பு விடுத்துள்ள நிலையில், அதற்கு நேர் எதிராக அமெரிக்க ஜனாதிபதி பைடன், ஈரானை திருப்பித் தாக்குங்கள் என்று இஸ்ரேலுக்கு பச்சைக்கொடி காட்டியிருக்கிறார்.
இதன் மூலம், இந்தப் போர் இத்துடன் நிற்கக் கூடாது; ஒட்டுமொத்த மத்திய கிழக்கு ஆசியா முழுவதும் நீண்டகாலத்திற்கு பற்றி எரிகிற ஒரு போராக மாற வேண்டும் என்ற அமெரிக்க ஏகாதி பத்தியத்தின் சூழ்ச்சி நிறைவேற வேண்டும் என்ற அமெரிக்க நிர்வாகத்தின் விருப்பமே வெளிப் பட்டுள்ளது.
மத்திய கிழக்கு ஆசியாவில் இஸ்ரேலும் அதன் இராணுவ நடவடிக்கைகளும் வேட்டையாடும் ஒரு ஏவல் நாயின் செயலைப் போன்றது தான்.
ஏனென்றால் இஸ்ரேலின் தாக்குதல் என்பது முழுக்க முழுக்க அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தாக்குதலே ஆகும்.
ஒட்டுமொத்த மத்திய கிழக்கு பிராந்தியமும் உலகிலேயே மிக அதிக எண்ணெய் வளம் கொண்ட பூமி. நிரந்தரமாக அந்த பூமி பற்றி எரிந்து கொண்டி ருப்பதும் பதற்றத்தில் ஆழ்ந்து இருப்பதுமே ஒட்டு மொத்த எண்ணெய் வளத்தையும் சூறையாடுவ தற்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு பெரும் உதவியாக இருக்கும்.
அத்தகைய பதற்றத்தைத் நீடித்து நிலைக்க செய்வதே இஸ்ரேலுக்கு கொடுக் கப்பட்டுள்ள பணி. அந்த பணியை இஸ்ரேல் மிகத் தீவிரமாக மேற்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், தொடர்ந்து மிகக் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் பாலஸ் தீனம் மற்றும் லெபனான் மக்களை பாதுகாப்பத ற்கு நாங்கள் இருக்கிறோம் என்ற ஒரு எச்சரிக்கை சமிக்ஞை தருவதுதான் ஈரானின் பதிலடி தாக்குத லாகும்.
இந்தத் தாக்குதல் இஸ்ரேலில் எந்த உயிர் சேதத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் இஸ் ரேல் பாலஸ்தீனத்தில் ஆயிரக்கணக்கான மக் களை -குழந்தைகள், பெண்கள் என்று கூட பாராமல் கொடூரமாக கொன்று குவித்தது.
லெப னானில் மிகப்பெரும் அட்டூழியத்தை அரங்கேற்றி உள்ளது. ஈரானுக்கு உள்ளேயே புகுந்து படுகொலை களை அரங்கேற்றியது. அத்தகைய சம்பவங்க ளுக்கு அந்த தருணத்திலேயே ஈரான் பழிவாங்கலில் ஈடுபடவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.இதை உணர்ந்து இஸ்ரேல் தனது மக்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்றால், தற்போது நிதானமாக நின்று பேச வேண்டும். உலகின் குரலுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
ஆனால் இஸ்ரேலை ஆளும் யூத இனவெறி - அமெரிக்க ஏகாதிபத்திய அடிமை அரசு அதைச் செய்யுமா என்பது கேள்விக்குறியே. இதுவரையில் இஸ்ரேல் தான் மக்களைக் கொன்று குவித்தது.இன்றும் மக்கள் வசிப்பிடங்கள்,பள்ளிகள் மீது குண்டு வீசி கொலகிறது.
இஸ்ரேலின் நகர்வைப் பொறுத்தே மத்திய கிழக்கின் அமைதியும் உலகம் அமைதியும் இருக்கிறது.
கோமாதா எங்கள் ராஜமாதா!
மாடுகளுக்குராஜமாதா அந்தஸ்து என மகராஷ்டிரா பாஜக அரசு அறிவித்திருப்பதால் நாங்கள் இனி வாழ்க்கை முழுவதும் பசுவின் வாலைப் பிடித்துக் கொண்டு அதன் பின்னால் நடக்க வேண்டுமா? விவசாயிகளுக்கு மீதமிருக்கும் வேலை இது மட்டும் தானா?”
''பால் சுரக்காத பசுமாடுகளை விற்பனை செய்ய அரசு அனுமதிக்கவில்லை என்றால், அந்த மாடுகளை முதல்வர் வீட்டுக்கு வெளியே கட்டிப்போடுவோம், எங்களுக்கு வேறு வழியில்லை” என்கிறார் பால் வியாபாரி விலாஸ் போடே.
அரசின் மீதான அவரின் கோபத்தை பிரதிபலிக்கும் வார்த்தைகள் இவை.
மகாராஷ்டிராவின் நாக்பூரில் அம்பேத்கர் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள சிவன்காவ்னை சேர்ந்த இவரது குடும்பம் 80 ஆண்டுகளாக பால் வியாபாரம் செய்து வருகிறது.
நாட்டு பசுமாடுகளுக்கு 'ராஜமாதா' அந்தஸ்து வழங்கும் அரசின் முடிவை அடுத்து விலாஸ் போடே அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.
திங்கள்கிழமை நடைபெற்ற மாநில அமைச்சர்கள் கூட்டத்தில் இனிமேல் நாட்டு பசுமாடுகள் ‘ராஜமாதா-கோமாதா’ என்று அழைக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.
புராண காலத்தில் இந்தி கலாசாரத்தில் நாட்டு பசுமாடுகளுக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கப்படுவதை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இது விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
"பால்கறக்கும் ஒரு கால்நடையை அதன்மூத்திரத்தைக்குடிப்பவர்கள் குடிக்கட்டும்,பாலைக் குடிப்பவர்கள் அதை குடிக்கட்டும்.
இறைச்சியைதின்பதுமட்டுமல்ல.அதை வைத்திருந்தாலே கொலைசெய்வதுஅதிமுட்டாள்தனம்.அதற்கு மத சாயம் பூசுவது தவறு என்கிறார் பால்பண்ணை வைத்திருக்கும் ராம்விஸ்வாஸ்.
இளமை இதோ,இதோ.....!
உத்தரப்பிரதேசம் கான்பூரைச் சேர்ந்தவர்கள், ராஜீவ் குமார் துபே மற்றும் அவரது மனைவி ரஷ்மி துபே. இவர்கள் இருவரும் இணைந்து, சிகிச்சை மையம் ஒன்றைத் திறந்துள்ளனர். அதன்மூலம், இஸ்ரேலில் இருந்து கொண்டு வந்ததாகக் கூறி, ஒரு கருவியை அவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
அதை காலங்களை கடந்து செல்ல உதவும் மெஷின் (’Time Machine’) எனக் குறிப்பிட்டுள்ளனர். அந்த கருவி மூலம் ஆக்சிஜன் தெரபி என்ற பெயரில் முதியவர்களை 25 வயது இளைஞர்களாக்குவதாக விளம்பரம் செய்துள்ளனர். இதன்மூலம் விரைவிலேயே மீண்டும் இளமையைப் பெறலாம் என அவர்கள் வாக்குறுதியும் அளித்துள்ளனர்.
Revival World என்ற பெயரில் அவர்கள் அமைத்த சிகிச்சை மையத்தில் ஒரு அமர்வு சிகிச்சைக்கு ரூ.6 ஆயிரம் என்றும் மூன்று வருடத்திற்கு ரூ.90 ஆயிரம் சிறப்பு பேக்கேஜ் என்றும் விளம்பரத்தை வழங்கியுள்ளனர். இதை நம்பிய 60 வயதுக்கு மேற்பட்ட பல முதியவர்கள், அவர்களிடம் சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். பின்னரே இதெல்லாம் மோசடி வேலை என அவர்களுக்கு தெரியவந்துள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான ரேணு சிங், தன்னிடம் அத்தம்பதி ரூ.10.75 லட்சம் வரை ஏமாற்றிவிட்டதாக காவல்துறையிடம் புகார் செய்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தியதில் 100க்கும் மேற்பட்டவர்களை இந்த தம்பதி .
பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து அத்தம்பதி ரூ.35 கோடிக்கு மேல் மோசடி செய்திருப்பதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தலைமறைவான இந்த ஜோடியை போலீசார் தேடி வருகின்றனர்.