போலி SBI கிளை.

 சத்தீஸ்கரில் போலியான எஸ்பிஐ வங்கி கிளையைத் தொடங்கி, இளைஞர்களிடம் மோசடி செய்யப்பட்டது அம்பலமானது.

சத்தீஸ்கரில் உள்ள சபோரா கிராமத்தில் திடீரென செப். 18 ஆம் தேதியில் ஒரே இரவில் எஸ்பிஐ வங்கியின் போலியான புதிய கிளை தொடங்கப்பட்டது.

இந்த நிலையில், சபோரா பகுதிக்கு அருகிலிருந்த தாப்ராவில் இருக்கும் எஸ்பிஐ வங்கியின் கிளை மேலாளர், போலியான கிளை மீது சந்தேகமடைந்து, காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து, செப். 27 ஆம் தேதியில் எஸ்பிஐ வங்கியின் போலியான சபோரா கிளையில் காவல்துறையினர் சோதனை நடத்தினர்.


சோதனையில், சபோரா கிளையானது போலியாக இயங்கப்பட்டு வருவது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, இந்த மோசடி சம்பவத்தில் அந்த போலி வங்கியின் மேலாளர் உள்பட 4 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.


மேலும், அசல் வங்கியைப் போன்று உருவாக்குவதற்காக, பெரும் பொருள் செலவில் போலியான வங்கி கட்டமைக்கப்பட்டுள்ளது.


இந்த வங்கியின் பணியாளர் நியமன அறிக்கையை வெளியிட்டு, சிலரிடம் மோசடியும் செய்துள்ளனர்.


வங்கிக்கு மேலாளர்கள், மார்க்கெட்டிங் அதிகாரிகள், காசாளர்கள், கணினி ஆபரேட்டர்கள் உள்ளிட்ட வேலைவாய்ப்புகள் இருப்பதாக விளம்பரம் செய்துள்ளனர். அதனை நம்பிய அப்பகுதி இளைஞர்கள் சிலர், 2 லட்சம் முதல் 6 லட்சம் வரையில் பணத்தை லஞ்சமாகக் கொடுத்து பணியில் சேர்ந்துள்ளனர்.


அவர்களை நம்பவைக்கும் முயற்சிகளாக சலுகைக் கடிதங்கள், ஆவண சரிபார்ப்பு, நேர்காணல், கைரேகை அளித்தல் முதலானவற்றையும் கோரியுள்ளனர். அவர்களுக்கு பதவிகளுக்கேற்ப குறைந்தது ரூ. 30000 முதல் ரூ. 35000 வரையில் சம்பளம் அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.

அதனை நம்பியே சிலர், நகைகளை அடகு வைத்தும், கடன் வாங்கியும் பணத்தை செலுத்தியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து,ஏமாற்றமடைந்தவர்களும் தற்போது சட்ட சிக்கலில் சிக்கியுள்ளனர்.

அதுமட்டுமின்றி, போலி வங்கியென்று அறியாமல், யாரும் புதிய கணக்கினைத் தொடங்கியிருந்தால் அவர்களுக்கும் சிக்கல் ஏற்பட்டிருக்கும்.


நல்வாய்ப்பாக மக்கள் அதிகப் பணத்தை வரவு,செலவு செய்ய ஆரம்பிக்கும் முன் மாட்டிக்கொண்டனர்.


வழக்கமான ஸ்டேட் வங்கி போலில்லாமல் வாடிக்கையாளர்களை மரியாதையாக நடத்தியல்தான் ஐயம் வந்திருக்கும்.?


ஹமாஸ் பதிலடி



காசா போருக்கு வழிவகுத்த அக்.7, 2023 தாக்குதல் நடந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில், இஸ்ரேலும் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா இயக்கத்தினரும் மாறி மாறி வான்வழித் தாக்குதல் நடத்தினர்.


லெபனான் மீது இன்று புதிதாக வான்வழித் தாக்குதல் நடத்திய இஸ்ரேல், ஹிஸ்புல்லா இயக்கத்தினரின் இலக்குகளைத் தாக்கியதாகவும், காசாவில் ஹமாஸ்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்தது. இதனிடையே, தெற்கு காசாவில் இருந்து ஹமாஸ் இயக்கத்தினர் இன்று இஸ்ரேஸ் மீது ராக்கெட்கள் வீசித் தாக்குதல் தொடுத்தனர்.

நான்கு ராக்கெட்கள் வீசப்பட்ட நிலையில், அவற்றில் மூன்றை இடைமறித்து தகர்த்துவிட்டதாக இஸ்ரேல் கூறியது. தெற்கு காசாவில் இருந்து டெல் அவிவ் மீது நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் 2 பேர் காயம்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேவேளையில், லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா இயக்கத்தினர் நடத்திய ராக்கெட் வீச்சு தாக்குதலில் 60 அடுக்குமாடி குடியிருப்புகள் சேதமடைந்ததாக வடக்கு இஸ்ரேலின் உள்ளூர் மேயர் ஒருவர் சர்வதேச ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.


 இதனிடையே, வடக்கு காசாவில் வசிக்கும் மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் அவிச்சாய் அத்ராய் கூறுகையில், “காசாவின் பெய்ட் ஹனேவுன், ஜபாலியா மற்றும் பெய்ட் லாஹியாவில் இஸ்ரேல் ராணுவம் பெரும் பலத்துடன் தாக்க உள்ளது. அதனால், அந்தப் பகுதியில் வசித்து வரும் மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறி மத்திய தரைக்கடலின் குறுகிய பகுதியான அல் மவாசியில் உருவாக்கப்பட்டுள்ள முகாமுக்கு சென்றுவிட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

.

இதனிடையே, வடக்கு இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியதாக ஹிஸ்புல்லா இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர். அங்குள்ள ஹைஃபா நோக்கி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என்று தெரிவித்தனர்.


தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பல தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


கடந்த ஆண்டு இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கத்தினர் நடத்திய தாக்குதலில் 1,200 பேர் உயிரிழந்தது, 251 பேர் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டதன் ஓராண்டு நினைவு தினம் இஸ்ரேல் முழுவதும் இன்று கடைபிடிக்கப்பட்டது.


இந்த நிலையில் இன்று பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் ஆதாரவாளர்கள் ஜெருசலேமில் உள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


அப்போது தங்களின் அன்புக்குரியவர்களை கைவிடும் போக்கை அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். ஓர் ஒப்பந்தம் ஏற்படுத்தி அவர்களை உடனடியாக திரும்ப மீட்டுக் கொண்டுவர வேண்டும் .

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?