ஆதாரங்களுடன் மோதுங்கள்!

"மழைநீர் தடுப்பு பணிகள் தான் வெள்ளை அறிக்கை!" துணை முதலமைச்சர் உதயநிதி எதிர்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு பதிலடி

“இந்தியா இறையாண்மையை மீறிவிட்டது” - கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோகுற்றச்சாட்டு.







கழிவுகளை அகற்றாத நச்சு ஆலை ஸ்டெர்லைட்.

தூத்துக்குடியைச் சேர்த்த வழக்குரைஞர் ராஜசேகர் சுப்பையா உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், "தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் நிறுவனம், காப்பர் மற்றும் அதுகுறித்த பொருட்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது. தூத்துக்குடி - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் புதுக்கோட்டை பாலத்தின் அருகே 50 மீட்டர் உயரத்தில் மூன்று லட்சத்து 50,000 டன் எடையுள்ள காப்பர் கழிவுகள் உப்பாறு ஓடை பகுதியில் கொட்டப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து, காப்பர் கழிவுகள் கோரம்பள்ளம் கால்வாயிலும் காணப்படுகின்றன என்ற அவர், “2015ம் ஆண்டு தூத்துக்குடியில் கன மழை பெய்த போது ஓடையில் கொட்டப்பட்டு இருந்த காப்பர் கழிவுகளால் வெள்ளநீர் செல்ல முடியாமல், குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்தது. இதனால் கோரம்பள்ளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.


இதுகுறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியரும், சுற்றுச்சூழல் இணை தலைமை பொறியாளரும் ஆய்வு செய்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு விரிவான அறிக்கையை அளித்தனர். அதன்படி உப்பார் ஓடையில் காப்பர் கழிவுகள் கொட்டப்பட்டு இருந்தது உறுதி செய்யப்பட்டது” என்று தெரிவித்தார்.


தொடர்ந்து, கழிவுகளை 4 மாதத்தில் அகற்றுமாறு ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியும் அகற்றப்படவில்லை. இதனால் 2023ம் ஆண்டு பெய்த கனமழையின் போதும் வெள்ள நீர் செல்ல முடியாமல் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்துவிட்டது. இதனால் பெரும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தன, 30 பேர் வரை உயிரிழந்தனர்.


உப்பாறு ஓடையில் காப்பர் கழிவுகளை கொட்ட ஸ்டெர்லைட் நிர்வாகம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் எந்த அனுமதியும் பெறவில்லை என்பதும் உறுதியாகி உள்ளது. ஆகவே, உப்பாறு ஓடை மற்றும் கோரம்பள்ளம் கால்வாயில் கொட்டப்பட்டுள்ள காப்பர் கழிவுகளை அகற்ற உத்தரவிட வேண்டும்” என வலியுறுத்தி இருந்தார்.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு,

ஏற்கனவே இதே போன்றதொரு வழக்கு தொடரப்பட்டதே அதன் நிலை என்ன என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு தரப்பில், அந்த வழக்கு நிலுவையில் இருப்பதாகவும், கூடுதல் விபரங்களை பெற்று தர கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.


இதையடுத்து இதுதொடர்பான வழக்கின் விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை அக்டோபர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


ஆதாரங்களுடன் மோதுங்கள்!

சென்னையில் 40 சென்டிமீட்டர் மழை பெய்தால் நிச்சயம் தண்ணீர் தேங்க தான் செய்யும்.. சாலைகளுக்கு தான் வடிகால்களே தவிர மழைக்கு அல்ல என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார்.


அது சமூக வலைதளங்களில் பாஜக,அதிமுக ஐடி பிரிவுகளால் விமர்சனத்தை பெற்ற நிலையில், சமூக வலைதளங்களில் விமர்சிப்பதை விட்டுவிட்டு முடிந்தால் டேட்டாக்களோடு சவால் விடுங்கள், அதனை ஏற்க தயாராக இருக்கிறேன் எனக் கூறியுள்ளார் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்.

தமிழகத்தில் கடந்த 14ஆம் தேதி முதல் தலைநகரான சென்னையில் பலத்த மழை பெய்து வருகிறது. இன்று மழை ஓரளவுக்கு குறைந்திருக்கும் நிலையில் நேற்றும், நேற்று முன்தினமும் நல்ல மழை பெய்தது.


இதன் காரணமாக சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், எழும்பூர் ,சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்ததன் காரணமாக தண்ணீர் தேங்கிய நிலையில், அது உடனடியாக அகற்றப்பட்டது.


அதே நேரத்தில் வேளச்சேரி, பல்லாவரம், பள்ளிக்கரணை, புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.

வழக்கமாக சென்னையில் நவம்பர் டிசம்பர் மாதங்களில் தான் பலத்த மழை பெய்யும். ஆனால் தற்போது அக்டோபர் மாதமே மழை பெய்து வெள்ள பாதிப்பு ஏற்பட்டது சென்னை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

சென்னையில் 40 சென்டிமீட்டர் மழை பெய்தால் நிச்சயம் தண்ணீர் தேங்க தான் செய்யும்..

சாலைகளுக்கு தான் வடிகால்களே தவிர மழைக்கு அல்ல என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார்.


இது தொடர்பாக பேசிய தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்,"சென்னையில் பெய்யும் மொத்த மழையும் நான்கு வழிகளில் மட்டுமே வெளியேறுகிறது. அந்த வகையில் எண்ணூர், நேப்பியார், அடையாறு, ஒக்கியம் வழியாக கோவளம் ஆகிய பகுதிகளில் மட்டுமே தண்ணீர் வெளியேறுகிறது.


சென்னையைப் பொறுத்தவரை ஒரு நாளைக்கு 15 சென்டிமீட்டர் மழை பெய்தால் தாங்க முடியும். 20 சென்டிமீட்டர் மழை பெய்தால் ஒரு நாள் மட்டுமே நீர் தேங்கும். 30 சென்டிமீட்டர் மழை பெய்தால் பள்ளிக்கரணை, புளியந்தோப்பு, முடிச்சூர் போன்ற நீர் நிலைகளுக்கு அருகே உள்ள பகுதிகளில் கண்டிப்பாக மழைநீர் தேங்கும்.


40 சென்டிமீட்டர் மழை பெய்தால் நான்கு நாட்கள் நீர் தேங்கும் சூழலில் தான் சென்னை இருக்கிறது. அதே நேரத்தில் மழை நீர் வடிகால் என்பது சாலைகளுக்காக மட்டுமே அமைக்கப்படுகிறது. 40 சென்டிமீட்டர் அளவுக்கு பெய்யும் மழைக்காக வடிகால் அமைக்க முடியாது.

எனவே அந்தந்த பகுதி மக்கள் சூழலை புரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்" என கூறினார்.


இந்த நிலையில் ஆளுங்கட்சிக்கு சாதகமாக பிரதீப் ஜான் பேசுவதாக கூறி அதிமுக,பாஜக வினர் சமூக வலைதளங்களில் விமர்சித்தனர்.


. தன்னை பிராண்டிங் செய்ய வேண்டாம் என பிரதீப் ஜான் வெளிப்படையாக பேசி இருந்தார்.

இருந்தும் சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் மூலம் விமர்சனங்கள் அதிகமானது. இதனையடுத்து விமர்சனங்களுக்கு வெளிப்படையாக விளக்கம் அளித்துள்ளதோடு

தன்னை விமர்சித்தவர்களுக்கு சவால் விடுத்துள்ளார் பிரதீப் ஜான்.

இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: இயல்பான மழை பெய்ய வாய்ப்புள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்களுக்கு அதீத கனமழைக்கு வாய்ப்பில்லை. வானிலை மையங்களின் அறிவுறுத்தல்களில் இருந்து முரண்பட நான் விரும்பவில்லை. கடலில் இன்னமும் காற்றழுத்தம் இருக்கிறது. அது எந்த நேரத்திலும் வெப்பச்சலன மழையாக மாறலாம்.


ஆனால் உண்மையாக சொல்ல போனால், அடுத்த 24 மணி நேரத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்களில் அதீத கனமழைக்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக தெரியவில்லை. அதீத மழை பெய்ததெல்லாம் நேற்றுடன் முடிந்துவிட்டது. இன்னொரு முறை ஒரே நாளில் 200 மில்லிமீட்டருக்கும் மேற்பட்ட மழை பெய்ய சாத்தியக் கூறுகளே இல்லை.


அதே வேளையில் நாளை மழை இருக்காது என நான் சொல்லவில்லை. மழை இருக்கும் ஆனால் இயல்பான மழையாக இருக்கும். 50 முதல் 70 மி.மீ. வரை மட்டுமே மழை பெய்யும். மேற்கண்ட 4 மாவட்டங்களில் எங்காவது ஓரிரு இடங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது.


நேற்று பெய்த மழை இயல்பானது என்றும் இயல்பில்லை என்றும் நினைப்போருக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். கடந்த 24 மணி நேரத்தில் 75 இடங்களில் 200 மி,மீட்டருக்கு மேல் மழை பதிவாகியுள்ளது.


மழை பெய்யும் போது காலை 8.30 மணி நிலவர மழை கணக்கிடுவதால் மழை பதிவின் அளவு இரு நாட்களுக்கானதாக வந்துவிட்டது.


ஆனால் மழையின் நிகழ்வை பார்த்தோமேயானால் அது 24 மணி நேரத்திற்குள்ளாகவே பெய்துள்ளது.

இரவு நேரத்தில் எதிர்பார்த்ததை போல் மழை தொடர்ந்தது.

எங்கு எப்போது எவ்வளவு மி.மீ. மழை பெய்துள்ளது என நான் கொடுத்த அட்டவணையை உங்களுக்கு தெரிந்த வானிலை ஆய்வாளர்களிடம் கொடுங்கள். அவர்களிடம் இந்த மழை தீவிரமா இல்லை இயல்பா என கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.


இயற்கைதான், இயற்கையை யாராலும் கணிக்க முடியாதுதான். இந்த டயலாக் எல்லாம் சரிதான். அப்போ என்ன பண்ணலாம், இயற்கை வரட்டும், அதை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என கூறிக் கொண்டு எந்த எச்சரிக்கையையும் விடுக்காமல் இருக்க வேண்டுமா?

இது வானிலை ஆய்வாளர்களுக்கு வெற்றியா தோல்வியா என சர்ட்பிகேட் கொடுப்பதற்காக நடத்தப்பட்ட தேர்வு அல்ல

.

மனிதனாகிய என்னால் எந்த அளவுக்கு கணிக்க முடியுமோ அந்த அளவுக்கு நான் கணித்துள்ளேன். இது போன்று வானிலையை கணிக்க கணினிகள் முக்கிய பங்காற்றுகின்றன என்பது உண்மைதான். நிறைய பேர் விண்டி எனும் செயலி மூலம் வானிலை நிலவரத்தை கணித்துவிடலாம் என பலர்நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அது போல் கணிக்கலாம் என்றால் தயவு செய்து என்னை விமர்சிப்பவர்கள் எல்லாம், சமூகவலைதளத்தில் ஒரு வானிலை முன்னறிவிப்பு பக்கத்தை (blog) தொடங்கி மக்களுக்கு முன்னறிவிப்புகளை கூறி சேவை செய்யுங்களேன்.


நான் யாருக்கும் ஆதரவாக செயல்படுபவன் அல்ல. நான் யாரையும் திருப்திப்படுத்த முயற்சி செய்யும் நபரும் இல்லை. நான் அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டிருந்தால் வானிலை குறித்து புள்ளி விவரங்களுடன் எந்த பதிவையும் போட்டிருக்க மாட்டேன்.

நான் மீண்டும் சொல்கிறேன், சென்னை போன்ற நகரில் ஒரே நாளில் 20 செமீ மழை பெய்யும், தாழ்வான இடங்களில் சில மணி நேரத்திற்கு தண்ணீர் தேங்கும் நான் கணித்ததில் எந்த தவறும் இல்லை.


நேற்று பெய்தது ஒரே நாளில் 40 செ.மீ. மழை, மிகப் பெரிய மழை. இப்படிப்பட்ட பலத்த மழை நீரை மழைநீர் சேகரிப்பு வடிகால்கள் மூலம் தண்ணீர் வடிய வாய்ப்பில்லை. நான் தனியார் சேனலுக்கு அளித்த பேட்டி மழை பெய்ய 2 அல்லது 3 வாரங்களுக்கு முன்பு சொன்னவை. மக்கள் எந்த சூழலையும் எதிர்கொள்ளும் அளவுக்கு தயார் நிலையில் இருக்க வேண்டும் என நான் விரும்பினேன்.


அப்போதுதான் நமக்கென உதவிக்கு யாரும் இல்லை என்றாலும் இது போன்ற இக்கட்டான சூழல்களில் நமக்கு நாமே பாதுகாப்பாக இருந்து கொள்ளலாம்.

எனவே தேவையில்லாமல் என்னை அந்த கட்சிக்கு சார்பானவன், இந்த ஆட்சிக்கு சார்பானவன் என முத்திரை குத்தி, உங்களுடைய சோசியல் மீடியா பேஜில் என்னை விமர்சித்து மீம்ஸ்களை உருவாக்குவதற்கு பதில்,

மழை குறித்த முழு டேட்டாக்கள் மற்றும் சரியான ஆதாரங்களுடன் வாருங்கள், உங்களுடன் விவாதிக்க எந்த இடத்திலும் நான் தயாராக இருக்கிறேன்” என தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?