நீதி பதிகள்
எல்லோரும் நீதியரசர்களா?
சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இருநீதிபதிகள் அமர்வில் நடைபெற்ற ஒரு சம்பவத்தின் வீடியோ,
‘‘சென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் வாய்க் கொழுப்புடன் பேசிய தி.மு.க.வக்கீலும், எம்.பி.யுமான வில்சனை நீதிபதி கண்டித்த காட்சி’’
– என்ற வார்த்தைகளின்
வடிவமைப்போடு சிலரால் வைரலாக பரப்பப்பட்டு வருகிறது.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை யில் இந்த வழக்கு இரு நீதிபதிகள் அமர்வில் விசாரிக்கப்படும்போது, ஒற்றை நீதிபதி அமர்வில் இந்த வழக்கு களை நடத்திய நீதிபதியும் அந்த அமர்வில் அமர்ந்திருந்ததை சுட்டிக் காட்டி மரபுபடி இது சரியானதாகத் தெரியவில்லையே என வழக்கறிஞர் வில்சன் தெரிவித்த கருத்து அந்த அமர்வில் இருந்த மற்றொரு நீதிபதிக்கு கோபத்தை உருவாக்கியுள்ளது.
ஆத்திரத்துக்கு உச்சத்திற்கே சென்று – தன்னால் இதுபோன்ற வாதங்களை ஏற்கமுடியாது.
‘ஒரு நீதிபதி வழக்கிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் – என்று ஒரு சீனியர் வழக்கறிஞர் கூறுவதை அனுமதிக்க முடியாது’ என்று கோப வசப்பட்டுக் கூறிட, வழக்கறிஞர், ‘தான் அந்த நீதிபதி விலகிக் கொள்ளவேண்டும் (recusal) என்ற வார்த்தையைக் கூறவில்லை’ என்று குறிப் பிட்டதை அவர் தனது செவியில் போட்டுக்கொள்ளாமலேயே தொடர்ந்து ‘Oh So Fantastic, fantastic
Mr. Wilson’…..’Do All These Gimmicks In The Parliament, Not Before Us’
(ஓ… அபாரம் அற்புதம்… திரு.
வில்சன் வித்தைகளையெல்லாம்
நாடாளுமன்றத்தில் வைத்துக் கொள்ளுங்கள். எங்கள் முன்னால்
வேண்டாம்.)
என்றெல்லாம் கொந்தளிப்புடன் பேசுகிறார் நீதிபதி.
(இவர்தான் முன்னாள் நீதியரசர் சந்துருமாணவர்கள் சாதி,மதம் தெரிய வண்ணக்கயிறுகளைக் கையில்கட்டி பள்ளி வரக்கூடாது.இதனால் உண்டாகும் மோதலகளைத் தடுக் உதவும் என அறிக்கை அரசுக்கு கொடுத்ததை கிண்டலடித்து தான் சந்துரு அப்படி சொன்ன பின்னர்தான் விபூதி,பொட்டு வைப்பதாகக் கூறினார்.)
கடந்த செப்டம்பர் 25ந் தேதி தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதி சஞ்சய் கண்ணா, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூர்யகாந்த் மற்றும் ரிஷிகேஷ்ராய் கொண்ட 5 நீதிபதிகள் அமர்வு, ‘‘நீதிமன்ற நடவடிக்கைகள் நேரடி ஒலி, ஒளிபரப்புகளாக வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெறுவதால், நீதிமன்ற நடவடிக்கைகள் கோர்ட்டுக்கு வெளியே உள்ள இலட்சக்கணக்கானோர் பார்வைக்குச் சென்று விடுகிறது.
நேரடி பதிவுகள் (Live streaming) நீதிமன்ற நடவடிக்கை களில் பங்கேற்போருக்கு கூடுதல் பொறுப்பை உருவாக்கியுள்ளது.
நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்குபெறுவோர் வெளிப்படையான நோக்கில் தெரிவிக்கும் கருத்துக்கள் குறித்த பரவலான தாக்கம் உருவாக்கிடும் நிலை உருவாவதால் கூடுதலான பொறுப்புணர்வுகள் தேவை.’’
‘‘Appealing to stake holders,
Particularly judges, to refrain from making casual remarks while
participating in court Proceedings the bench said, casual observations may reflect a degree of individual bias…’’
“நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்கும் போது சகஜமான கருத்துக்களை வெளியிடுவதை (நீதிமன்ற நடவடிக்கைகளில்) பங்கேற்றிடுவோர், குறிப்பாக நீதிபதிகள் தவிர்த்திட வேண்டும் என அந்த அமர்வு குறிப்பிட்டது.
இதுபோன்ற சகஜமான, அவதானிப்புகள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை பிரதிபலிக்கக்கூடும்…’’ என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியும் அடங்கிய 5 நீதிபதிகள் அமர்வில் தெரிவித்த கருத்து ஊடகங்களில் பெரிதாக வெளிவந்துள்ளது.
இந்தச் சூழலில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின்
இரு நீதிபதிகள் அமர்வில், கோர்ட் நடவடிக்கையின்போது மூத்த நீதிபதி கூறிய கருத்துக்கள் பலநெருடல்கள் நிறைந்தவையாகவே காணப்படுகின்றன.
ஒரு மூத்த வழக்கறிஞர் ஒரு வழக்குக்காக வாதாடுகையில் அவர் என்ன கூற வருகிறார் என்பதை உள் வாங்கிக்கொள்ளாமல் அந்த மூத்த வழக்கறிஞரை எச்சரித்திடும் வகையில் மட்டுமின்றி மிரட்டிடும் தோரணையில் பதப்பிரயோகங்களை நீதிபதி பயன்படுத்தியது நீதித்துறையின் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை அசைப்ப தாகவே இருக்கிறது!
வழக்கில் வாதாடும் வழக்கறிஞர் குறிப்பிட்டது தவறு என்றால் அதனை விரிவாக எடுத்துக்காட்டி, அந்தத் தவறைத் தொடராதீர்கள் என்று கூறியிருக்க வேண்டிய நீதிபதி, அந்த வழக்கறிஞர் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழுத்தது தேவையற்ற செயல் மட்டுமல்ல; யாராலும் ஏற்க முடியாத ஒன்றாகும்!
தங்களுக்குப் பாதுகாப்பு வளையம் இருப்பதால் வழக்குக்கு அப்பால் சென்று தனிப்பட்ட விமர்சனம் செய்வது எந்த வகையில் நியாயம் என்பது நமக்கு விளங்கவில்லை.
இதுபோன்று கருத்து தெரிவிப்பதில் எச்சரிக்கை தேவை என்பதை உச்சநீதிமன்றமே அறிவுறுத்தியுள்ளதை மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி கவனத்தில் கொள்ள வேண்டும்.
சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞர், நீதிமன்றத்தில் ‘யா…யா’ (ya ya) என்ற வார்த்தையை பயன்படுத்தியபோது, ‘What is this ya ya’ this not coffee Shop. அதாவது என்ன இது “யா…யா” இது காபி ஷாப் அல்ல என உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி குறிப்பிட்டது ஏடுகளில் வெளிவந்துள்ளது.
‘ya ya’ (யா…யா) என்பது Yes Yes (எஸ்…எஸ்) என்பதற்கு மாற்றாக வழக்குச் சொல்லாக மாறி அப்படி உச்சரிப்பதை பலர் கடைப்பிடிக் கின்றனர். அந்தச் சொல் வழக்குச் சொல்லாக மாறியிருந்தாலும், நீதிமன்றத்தின் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, இதுபோன்ற சொற்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கருத்து தெரிவித்திருந்தது எல்லா ஏடுகளிலும் வெளிவந்துள்ளது.
இந்த ya… ya என்ற சொல்லை போலவே சில ஆங்கிலச் சொற்களில் நேரடிப் பொருளைப் பார்த்தால் அவை தவறுதலாக தென்படா விட்டாலும், வழக்கத்தில் அந்தச் சொற்கள் பொருளை இழந்து விடுகின்றன. கண்ணியம் மிகு சபை களில் அவைகளின் பயன்பாடு தவிர்க்கப்படுகின்றன.
அத்தகைய சொற்களில் ஒன்றாகவே ‘Guys’ (கைஸ்) என்ற பதமும் கருதப்படு கிறது. பொதுவாக நீதிமன்றங்களில் வாதிடும் வழக்கறிஞர்களை நீதிபதி கள் மற்றும் எதிர் வழக்கறிஞர்கள் குறிப்பிடுகையில் Learned Lawyer’ ‘Learned friend ‘ படித்தறிந்த வழக்கறிஞர்; படித்தறிந்த நண்பர் என்ற சொற்பதங்களைப் பயன்படுத்துவதுதான் நடைமுறையில் பல ஆண்டுகாலமாக இருந்து வந்துள்ளது.
ஆனால் மதுரை அமர்வில் இருந்த அந்த நீதிபதி வழக்கறிஞரை நோக்கி, ‘You Guys’ (யூ கைஸ்) என்ற வார்த்தைகளை பிரயோகித்துள்ளது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது!
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, நீதிமன்றத்தில் “யா… யா….” என்று கூறியபோது இது காபிஷாப் அல்ல என்று வழக்கறிஞரை எச்சரித்தாரோ, அதேபோன்று Guys என்பதும் ஒரு ‘காபி ஷாப்’ வார்த்தைதான் என்பதை எல்லாரும் ஏற்றிடுவர்!
அந்த வார்த்தையை ஒரு சீனியர் வழக்கறிஞரை நோக்கி நீதிபதி பிரயோகித்திருப்பது அதிர்ச்சியளிக்கக் கூடிய ஒன்றுதான்!
சமநிலை தவறாது செயல்படக் கூடிய நீதிபதி அன்றைய தினம் உபயோகித்த பதப்பிரயோகங்களும், வழக்கறிஞர் திரும்பத்திரும்ப பணிவுடன் தனது வாதத்தை எடுத்து வைக்க வாய்ப்பு கேட்டிடும் போதும் அதனை கவனத்தில் கொள்ளாது வழக்கை நடத்திய விதமும் ஒரு தவறான முன்னுதாரணமாக ஆகி விடக்கூடாது என்பதே அந்த வீடியோ வைக் காணும் போது ஏற்படும் ஆதங்கம்!
அனுபவ முதிர்ச்சியுள்ள அந்த நீதிபதியும் இதனை கருத்தில் கொள்வார் என எண்ணுகிறோம்.
-சிலந்தி
நன்றி: முரசொலி.
.