பட்டினியில் முன்னேற்றம்!

 ஏழைத்தாய் மகன் ஆட்சியில்!

சென்னை மக்களுக்கு நற்செய்தி.அதி கனமழைக்கான வாய்ப்பு குறைவு, மிதமான மழையே பெய்யும்: தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணிப்பு.

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து செல்கிறது.
தூத்துக்குடியிலகாரில் முன்னாள் சென்ற மத போதகர் மீது வழிவிடாமல் சென்றதாக்கூறி  தாக்குதல் நடத்திய அதிமுக முன்னாள்அமைச்சர்கள் வேலுமணி,கடம்பூர் ராஜூ  மீது வழக்கு.
2026-ல் அதிமுக ஆட்சி அமைவதை யாராலும் தடுக்க முடியாது: எடப்பாடிபழனிசாமி .
ஜம்மு காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா பதவியேற்பு.தமிழ்நாடு  முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு.கனிமொழி எம்பி பங்கேற்பார் என அறிவிப்பு.
ரெயில் உணவு மோசம் என நடிகர் பார்த்திபன் புகார் . வந்தேபாரத் ரயில் ஒப்பந்ததாரருக்கு அபராதம்.

பட்டினி முன்னேற்றம்!
127 நாடு­க­ளைக் கொண்ட உல­க­ளா­விய பட்­டினி குறி­யீடு பட்­டி­ய­லில் பா.ஜ.க.வின் பாரத தேசம், 105 ஆவது இடத்­தைப் பெற்­றுள்­ளது. 

உலக பட்­டினி குறி­யீட்­டில் பாகிஸ்­தான், ஆப்­கானிஸ்­தான், இலங்­கையை விட

மிக­வும் மோச­மான இடத்­துக்கு இந்­தியா சென்­றுள்­ளது.

இதன் மூல­மாக பட்­டினி விவ­கா­ரத்­தில் தீவிர பகுப்­பாய்­வுக்கு உட்­ப­டுத்­தும் பிரி­வில்இந்­தியா இடம் பெற்­றுள்­ளது.

சிறந்த மதிப்­பெண்­ணைப் பெற்ற நாடு­கள் சீனா, ரஷ்யா, குவைத்,

ஐக்­கிய அரபு அமீ­ர­கம் உள்­ளிட்ட 21 நாடு­கள் ஆகும்.

சோமா­லி­யாவை அனை­வர்க்­கும் தெரி­யும். பசி, பஞ்­சம், பட்­டி­னி­யின் அடை­யா­ள­மாக அந்த நாட்­டைச் சொல்­வோம். 127 நாடு­கள் கொண்ட அந்­தப் பட்­டி­ய­லில் 127 ஆவது இடத்­தில் சோமா­லியா இருக்­கி­றது. 

44.1 குறி­யீட்­டுப் புள்­ளி­களை அந்த நாடு பெற்­றுள்­ளது. இத்­த­கைய பட்­டி­ய­லில் 27.3 குறி­யீட்­டுப் புள்­ளி­க­ளைப் பெற்று இந்­தியா 105 ஆவது இடத்­தில் இருப்­பது அவ­மா­னம் இல்­லையா? 

இதற்கு என்ன சொல்­கி­றார் இந்­தி­யப் பிர­த­மர்? 

மன்­னிக்­க­வும்! ‘பார­தப்’ பிர­த­மர்?

பசி­யின் அளவை அறி­வ­தற்­கான கரு­வி­யாக ஊட்­டச்­சத்து குறை­பாடு, குழந்­தை­க­ளின் பிறப்பு –- இறப்பு ஆகி­ய­வற்றை அடிப்­ப­டை­யா­கக் கொண்ட சர்­வ­தேச பட்­டினி குறி­யீடு உரு­வாக்­கப்­ப­டு­கி­றது.

 சர்­வ­தேச குறி­யீட்­டின் 19 ஆவது பதிப்பை அயர்­லாந்­தைச் சேர்ந்த மனி­த­நேய அமைப்­பான ‘கன்­சர்ன் ஓல்டு வைட்’, ஜெர்­மன் நாட்­டைச் சேர்ந்த நிறு­வ­ன­மான ‘வெல்ட் ஹங்­கர் லைப்’ ஆகிய அமைப்­பு­கள் வெளி­யிட்­டுள்­ளன. 

இந்த பட்­டி­ய­லில் இந்­தி­யா­வின் நிலைமை மிக மோச­மா­ன­தாக அமைந்­துள்­ளது.

127 நாடு­க­ளைக் கொண்ட பட்­டி­யல் இது. இதில் இந்­தியா 105 ஆவது இடத்­தில் இருக்­கி­றது. இந்­திய நாட்­டின் மக்­கள் தொகை­யில் 13.7 விழுக்­காடு மக்­கள் ஊட்­டச்­சத்து குறை­பாட்­டு­டன் இருக்­கி­றார்­கள். 

ஐந்து வய­துக்கு உட்­பட்ட குழந்­தை­க­ளில் 35.5 விழுக்­காடு பேர் வளர்ச்சி குன்­றி­ய­ வர்­க­ளாக இருக்­கி­றார்­கள். இதில் 18.7 விழுக்­காடு குழந்­தை­கள் எடை குறைந்­த­வர்­க­ளாக இருக்­கி­றார்­கள். 

இதில் 2.9 விழுக்­காடு குழந்­தை­கள் ஐந்து வய­துக்கு முன்பே இறந்­து­வி­டு­கி­றார்­கள் என்­கி­றது இந்த அறிக்கை.

இந்த செய்தி அறிக்கை அக்­டோ­பர் 12 அன்று நாளி­தழ்­க­ளில் வெளி­யாகி இருக்­கி­றது. அதே நாளி­தழ்­க­ளின் இன்­னொரு பக்­கத்­தில் வெளி­யான செய்­தி­யைப் பார்க்­கும் போது அழு­வதா சிரிப்­பதா என்று தெரி­ய­வில்லை. 

“கடந்த சில ஆண்­டு­க­ளில் இந்­தியா வலிமை மிக்க தேச­மா­க­வும், மதிப்­பிற்­கு­ரி­ய­தா­க­வும் உரு­வெ­டுத்­துள்­ளது” என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்­பின் தலை­வர் மோகன் பக­வத் பேசி இருக்­கி­றார்.

நாக்­பூ­ரில் நடை­பெற்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்­பின் பேர­ணி­யில் கலந்து கொண்டு உரை­யாற்­றிய மோகன் பக­வத், “கடந்த சில ஆண்­டு­ க­ளில் நம்­ப­கத்­தன்­மை­யால் இந்­தியா உலக அள­வில் வலி­மை­மிக்க தேச­மா­க­வும், மதிப்­புக்­கு­ரி­ய­தா­க­வும் உரு­வெ­டுத்­துள்­ளதை அனை ­வ­ரும் உணர்ந்­துள்­ள­னர். 

குடி­மக்­க­ளின் தேசிய சிந்­த­னை­யால் நாடு உயர்வை அடைந்­துள்­ளது” என்று குறிப்­பிட்­டார். ஒரு­வி­த­மான கற்­ப­னா­வாத நாட்டை நம் கண்­முன் நிறுத்­தப் பார்க்­கி­றார் மோகன் பக­வத். ‘எல்­லோ­ரும் நல்­ல­வரே’ என்­ப­தைப் போன்ற மாயத்­தோற்­றத்தை உரு­வாக்­கப் பார்க்­கி­றார். 

‘தேசிய சிந்­த­னை­யால் நாடு உயர்வை அடைந்­துள்­ளது’ என்று எதை வைத்­துச் சொல்­கி­றார். மூன்­றா­வது முறை­யும் பா.ஜ.க.வுக்கு வாக்­க­ளித்­ததை வைத்­துச் சொல்­கி­றாரா?

எதிரி நாடு­கள் குறித்­துப் பேசிய மோகன் பக­வத், ஏழ்­மை­யைப் பற்­றியோ பட்­டி­னி­யைப் பற்­றியோ பேச­வில்லை. இந்­தி­யா­வின் அனைத்து வகைப்­பட்ட வளர்ச்­சி­யைப் பற்றி பேச­வில்லை.

 வளர்ச்­சிக் குறி­யீ­டு­கள் பற்றி பேச­வில்லை. வேலை­வாய்ப்­பு­கள் பற்­றியோ, இளை­ஞர் நலன் குறித்தோ, பெண்­கள் மேம்­பாடு குறித்தோ பேச­வில்லை. அதைப் பற்றி எல்­லாம் அவ­ருக்கு கவ­லை­யும் இல்லை. அவர் அமைப்­புக்­கும் அக்­கறை இல்லை.

இத்­த­கைய கற்­பனை மாயை­யில்­தான் பிர­த­மர் மோடி­யும் இருக்­கி­றார் என்றே தெரி­கி­றது. மோகன் பக­வத் பேச்­சைக் குறிப்­பிட்டு சமூக வலை ­ த­ளத்­தில் கருத்து வெளி­யிட்­டுள்ள பிர­த­மர் மோடி, “வளர்ச்சி அடைந்த பார­தம் என்ற இலக்கை எட்­டு­வ­தற்கு புதிய சக்­தியை பாய்ச்­சு­கி­றது” என்று குறிப்­பிட்­டி­ருக்­கி­றார். 

வளர்ச்சி அடைந்த பார­தமா, கடந்த பத்­தாண்டு காலம் என்­பதை அவர் பட்­டி­யல் போட்டு விளக்­கத் தயா­ராக இருக்­கி­றாரா? பா.ஜ.க. ஆட்­சி­யில் எந்­தெந்த வகைப்­பட்ட வளர்ச்­சி­கள் நடை­பெற்­றுள்­ளது என்­பதை விளக்­கும் துணிச்­சல் பா.ஜ.க.வுக்கு உண்டா?

ஒன்­றிய அர­சின் நிதி ஆயோக் வெளி­யிட்ட 2022–-23 ஆம் ஆண்­டுக்­கான அறிக்­கைப்­ப­டியே பா.ஜ.க.வின் பார­தம் மகிழ்ச்­சிக்­கு­ரிய குறி­யீட்­டில் இல்­லையே!

* வறு­மை­யின்­மை­யில் இந்­திய விழுக்­காடு 72.

* பட்­டினி ஒழிப்­பில் இந்­திய விழுக்­காடு 52.

* தர­மான கல்­வியை வழங்­கு­வ­தில் இந்­திய விழுக்­காடு 61.

* பாலின சமத்­து­வத்­தில் இந்­திய விழுக்­காடு 49.

* குறைந்த விலை, சுத்­த­மான ஆற்­றல் குறி­யீட்­டில் இந்­தியா 68. -

– என்று சொன்­னது பா.ஜ.க.வின் நிதி ஆயோக்­தான். இந்த அறிக்­கை­ க­ளின் மீது எடுக்­கப்­பட்ட அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கை­கள் என்ன? அதை­ யா­வது பா.ஜ.க. அரசு சொல்­லுமா?

சர்­வ­தேச அறிக்­கை­கள் வெளி­யி­டு­வ­தன் நோக்­கம், இது போன்ற

பிரச்­சி­னை­க­ளில் கவ­னம் செலுத்த வேண்­டும் என்­ப­தற்­கா­கத்­தான். ஆனால் இவற்­றைப் பற்றி எல்­லாம் பா.ஜ.க.வுக்கு கவலை இல்லை. இது தொடர்­பான முந்­தைய அறிக்­கை­கள் குறித்து மக்­க­ள­வை­யில் கடந்த ஆகஸ்ட் மாதம் கேள்வி எழுப்­பிய போது, “இது போன்ற அறிக்­கை­களை பொருட்­ப­டுத்­தத் தேவை­யில்லை” என்று அமைச்­சர் அன்­ன­பூர்ணா தேவி குறிப்­பிட்­டார். எதை பொருட்­ப­டுத்த வேண்­டும், எதைப் பொருட்­படுத்­தத் தேவை­யில்லை என்று அவர் சொன்­னால் நல்­லது.

ஏழைத்­தா­யின் மகன்’ ஆட்சியில் பட்டினியில்இந்தியாமுன்னேறியிருப்பது முறைதானே?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?