கருப்பு பணக் கட்சி
உ.பி.யில் 6 வருடமாக அரசு பள்ளிக்கு வராத ஆசிரியை: தவறாமல் ஊதியம் பெற்றவருக்கு உதவிய முதல்வரும் பணியிடை நீக்கம்.
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 17 ஆயிரம் கனஅடியாக உயர்வு: அருவிகளில் குளிக்க தடை.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு.
பஞ்சாப் ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சீவ் அரோரா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்துகின்றனர்.
டன் கணக்கில் மீன்கள் கிடைத்ததில் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் மீன்களை கரைக்கு கொண்டு வருவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட சிறிய பைபர் படகுகள் கடலுக்கு வரவழைக்கப்பட்டு மீன்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. ஒரு மீன் 8 கிலோ முதல் 80 கிலோ வரை எடையில் இருக்கும். அதிக அளவில் கிடைத்துள்ளதால் பெரும்பாறை மீன்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது. சாதாரண நாட்களில் கிலோ ரூ.400 வரை விற்கப்படும் பெரும்பாறை மீன்கள் இன்று 100 ரூபாயாக குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வந்து பெரும்பாறை மீன்களை வாங்கிச் செல்கின்றனர். வலைகளில் 10-15 டன் மீன்கள் கிடைப்பதே அரிதான நிலையில் நூற்றுக்கணக்கான டன் கிடைப்பதால் செய்வதறியாமல் மீனவர்கள் தவித்து வருகின்றனர்.
வணிகவரி உதவி ஆணையர் சொப்னா, டிஎஸ்பி சதீஷ்குமார், வருவாய் கோட்டாட்சியர் கலைவாணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. உடந்தையாக இருந்த தொலைதூர கல்வி நிலைய அதிகாரிகள் சத்தியமூர்த்தி, புருஷோத்தாமன் உள்பட 9 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் நன்கொடை பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்து உச்சநீதிமன்றம் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பது வரவேற்கத்தக்கது.
தமிழ்நாட்டில் அருந்ததிய மக்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த இரண்டு வழக்குகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தன்னை இணைத்துக் கொண்டு வாதாடிய நிலையில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்புகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப் பாட்டை ஆதரிப்பதாக அமைந்துள்ளன.
தேர்தல் நன்கொடை பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் கடந்த பிப்ரவரி 15ந்தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
தேர்தல் பத்திரங்கள் ரத்து செய்யப்படுவதாக உச்சநீதிமன்றம் கூறியது. மக்களவைத் தேர்தலுக்கு முன்பு வெளியான இந்தத் தீர்ப்பு தேர்தல் பத்திரம் மூலம் பெரும் தொகையை வசூலித்த பாஜகவுக்கு பின்னடை வாக அமைந்தது. தேர்தல் களத்திலும் இந்தத் தீர்ப்பு ஒரு பேசு பொருளாக மாறியது.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் தேர்தல் பத்திர திட்டத்தை கொண்டுவருவோம் என பாஜக வினர் கொக்கரித்தனர். ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவே கூட அவ்வாறு கூறினார்.
ஆனால் தேர்தல் பத்திர திட்டம் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்ற தீர்ப்பை உச்சநீதி மன்றம் மீண்டும் உறுதி செய்துள்ளது.
தேர்தல் பத்திரத்தின் மூலம் ஒவ்வொரு கட்சியும் எவ்வளவு தொகையை பெற்றுள்ளன, யார் யாரிடமிருந்து இந்தத் தொகை பெறப்பட்டது என்ற விபரத்தை தருவதற்குக் கூட பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகம் மறுத்தது.
தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவல்க ளின்படி பாஜக மட்டும் ரூ.6986.5 கோடி அளவுக்கு பல்வேறு நிறுவனங்களிடம் வசூலித்துள்ளது தெரியவந்தது. இதில் பெரும்பாலான நிறுவனங் கள் அமலாக்கத்துறை உள்ளிட்ட ஒன்றிய அர சின் புலனாய்வுத்துறைகளின் விசாரணை வலை யத்தில் சிக்கியிருந்தவை என்பது அப்பட்டமான உண்மையாகும். சொல்லப்போனால் மிரட்டி, உருட்டி, அடித்துப் பறித்த தொகைதான் இது.
எதிர்க்கட்சிகளுக்கு நிதி கிடைப்பதையும் இந்தத் திட்டத்தின் மூலம் பாஜக தடுத்து வந்தது. எனவேதான் தேர்தல் பத்திர திட்டத்தை பாஜக நியாயப்படுத்தியது.
தற்போது உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திரம் தொடர்பான மறு சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்துள்ளதன் மூலம் பாஜகவின் முகத்தில் கரி பூசியுள்ளது.
நேர்மையான, வெளிப்படையான பண ஆதிக்கமற்ற தேர்தலை உறுதிசெய்ய இது மட்டும் போதாது.
எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் ஏராளம் உள்ளன.