அடுத்த பாரத ரத்னா?

இன்றைய இந்தியாவில் ஊழல் மட்டுமின்றி விருதுகளும் மலிவாகி விட்டன.மதிப்பின்றி அள்ளி வீசப்படுகின்றன.
வேண்டியவர்.ஆதாயம் தருபவர் என்ற விருப்பு -வெறுப்பு மட்டம்தான் இப்போது விருதுகள் பெரும் தகுதியாகி விட்டன.
மற்றபடி அவர்களின் சேவை,தியாகம்,மக்கள் தொண்டு போன்ற தகுதிகள் இரண்டாம் கட்டமாக கூட இல்லை.
இப்போது இந்தியாவின் உயரிய விருதாக இதுவரை கருதப்பட்ட பாரத ரத்னா கூட  கலைமாமணி விருது போல் தரமிழந்து விட்ட நிலை உருவாக்கி விட்டது.
சச்சின் டெண்டுல்கருக்கு  பார்த்த ரத்னா விருது வழங்கப்பட்ட கொடுமையைத்தான் சொல்லுகிறேன்.
இவரைப்போன்ற விளையாட்டு வீரர்களுக்கு உச்சம் தொட்டவர்களுக்கு என்றே அர்ஜுனா விருதுகள் உள்ளது.
அவற்றில் ஒன்றுக்குப் பதிலாக பத்தை அள்ளி கொடுங்கள் .
ஆனால் பாரத ரத்னா விருது கொடுக்கும் அளவு சச்சின் செய்த பணிகள் சாதனைகள் என்ன?
கிரிக்கெட் விளையாட்டில் அதிக சிக்சர்  அடித்து  உள்ளார் .அதற்குத்தான் பணத்தை அள்ளி கோடிக்கணக்கில் கொடுத்துள்ளோமே.வீடு ,கார்.என்று அரசு சார்பில் கொடுபட்டுள்ளதே.
இவர் சிக்சர் அடித்ததால் நாட்டுக்கு என்ன நன்மை?
பொருளாதார மலர்ச்சி ஏற்பட்டுள்ளதா?
வறுமைக்கோடு ஒழிந்ததா?
விவசாயிகள்  மகிழ்ச்சியுடன் விளவிக்கிரார்களா?
விலைவாசிகள் இறங்கி விட்டதா?
சச்சின் ஒரு சாதாரண கிரிக்கெட் ஆட்டக்காரர்.அவர் அவ்விளையாட்டில் செய்த சாதனைகளுக்கு அவ்வப்போது பணத்தையும்,விளம்பரத்தையும் அறுவடை செய்துள்ளார்.

தனது கிரிக்கெட் பிரபலத்தை வைத்து தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்து பணத்தை இன்னமும் குவித்தாரே ஒழிய அதை வைத்து நற்பணிகள் எதுவும் செய்யவில்லை.நாட்டுக்கும் மக்களுக்கும் அவரால் ஒரு காசுக்கு கூட பயன் இல்லை.பூஸ்ட் ,பெப்சி காரர்களுக்கு மட்டுமே அவரால் அவரது கிரிக்கெட் பிரபலத்தால் பயன்.அதற்கும் அவர்கள் கொடிகளை கொட்டிக்கொடுத்துள்ளனர்

ஒழங்காக வருமான வரி கட்டியதாக  தெரியவில்லை.மும்பையில் பல கோடிகள் செலவிட்டு கட்டிய வீட்டில் விதிமிறல் .அதற்காக தனது பிரபலத்தை பயன் படுத்தி அபராதம் கட்டுவதில் இருந்து தப்ப முயன்றார்.
இப்படி பட்டவருக்கு முன்பே பாரத ரத்னா கொடுக்க காங்கிரசு முயன்றது.
பலத்த எதிர்ப்பால் கொஞ்சம் அடக்கி வாசித்து.பின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை கொடுத்து அழகு பார்த்தது.
.
இப்போது  எதிர்ப்புகளை கணக்கிட்டு திடீரெனபாரத ரத்னாவை அள்ளி கொடுத்துள்ளது.
இந்திய அரசுக்கு,அதாவது காங்கிரசு அரசுக்கு இப்போது சொல்லிக்கொள்ள மோடியின் வார்த்தைகளைத்தான் கடன் வாங்க வேண்டியுள்ளது.
"இது ஒன்றும் உங்கள் வீட்டு அல்லது மாமன் வீட்டு பொருள் அல்ல.உங்கள்
விருப்பத்துக்கு அள்ளி கொடுக்க."
அடுத்து சோனியா-அமிதாப்ப- ,மாண்டேக் சிங் அலுவாலியாவ ஆகியோருக்கு  பாரத ரத்னாக்களை எதிர் பார்க்கலாம்.ஆனால் காங்கிரசு அதுவரை ஆட்சியில் இருக்க வேண்டும் .

Sachin Tendulkar, CNR Rao to be awarded Bharat Ratna
 சச்சினுக்கு கொடுத்ததால் உடன் இவ்விருது வழங்கப்பட்ட பேராசிரியர்
CMR ராவ் ,செவ்வாய் விண்கோள்  ஆய்வு அறிவாளர் ,1500 க்கும் மேற்பட்ட ஆய்வு அறிக்கைகள் செய்தவர்.35 க்கும் மேற்பட்ட அறிவியல் நூல்கள்
எழுதியவர் பெருமை அடிபட்டு பத்தோடு பதினொன்றாக ஆகி விட்டது.இவரும் கூட மன்மோகனின் அறிவியல் ஆலோசகர் என்ற தனிப்பட்ட முறையில் விருது வழங்கப்பட்டுள்ளது.அதி கூட ஒத்துக்கொள்ளலாம்.

ஆனால் சச்சினுக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருது அவருக்கு மதிப்பை  சேர்க்கிறதோ இல்லையோ.

விருதுக்கு நிச்சயம் மதிப்பிழப்புதான்..

-------------------------------------------------------------------------------------------------------------------------
 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?