நமக்கான இடம் எது?






ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த சீரான வளர்ச்சியில் தான் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கை தரமும் உள்ளது. 
மாநில அரசின் அக்கறையின்மை, அலட்சியம், திடமான நடவடிக்கை இல்லாதது போன்ற காரணங்களால் வளர்ச்சி பாதிக்கப்படும் போது, அது தான் மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், வாழ்க்கை என்று ஒவ்வொரு முனையிலும் பாதிப்பை புற்றீசல் போல பரவ காரணம் ஆகிறது. சாலை வசதி, மின்சார உற்பத்தி, குடிநீர் வசதி, தொழிற்சாலைகள் அமைத்தல், உற்பத்தி அதிகரிப்பு என்று எல்லா வகையிலும் ஒரு மாநிலம் உயர்ந்திருப்பது முக்கியம். 
விவசாயம், நல்ல நிர்வாகம், ஏழைகள் அளவில் கூட பரவும் பொருளாதார மேன்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், தூய்மை என்று பத்து அம்சங்களில் எடுத்த சர்வேயில், குஜராத்  முதலிடத்தை பிடித்துள்ளது.  தென் மாநிலங்களில் கேரளாவை பற்றி கேட்கவே வேண்டாம். தமிழ்நாட்டுக்கும் அந்த மாநிலத்துக்கும் தான் கல்வியில் போட்டாபோட்டியே. ஆனால், இன்றைய நிலை  என்ன? 
கல்வியில் கூட நாம் பின்தங்கி விட்டோம்.  
கல்வியில் மட்டுமல்ல,  எல்லா துறைகளிலும் ஒட்டுமொத்த வரிசையில் மூன்றாவது இடத்தில் கேரளா. 

பெரிய மாநிலங்களில் பாராட்டத்தக்க மாநிலம் என்றால் அசாம் தான். 

19வது இடத்தில் இருந்தது ஏழாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. 
அதுபோல, ஒடிசா; 16வது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்துக்கு வேகமாய் ஏறியுள்ளது. 
இரு மாநிலங்களுக்குமே விவசாயம், கட்டமைப்பு வசதிகள், ஏழைகளின் பொருளாதாரம் உயர்ந்திருப்பது போன்றவை தான் கைகொடுத்துள்ளன  என்றால் மிகையல்ல.  பெரிய மாநிலங்களில் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ள மாநிலம் எது என்று சொல்லவும் வேண்டுமா? 
தமிழ்நாடு தான். 
முதலிடத்தில் இருந்தது எல்லாம் போய், 20வது இடத்துக்கு, அதாவது கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கைவிட்டது விவசாயமும், சாலை மேம்பாடு, நிதி நிர்வாகம் உட்பட கட்டமைப்பு வசதிகள் தான். ஒரு மாநிலத்தின் வளர்ச்சி, மக்களின் வாழ்க்ைக தரம் உயர வேண்டுமானால், அதன் தலைமை திறமையாக முழுப்பங்காற்ற வேண்டும்;
 மற்ற மாநிலங்களுடன் போட்டி போடும் மனப்பான்மை வேண்டும்; எல்லா துறைகளிலும் வளர்ச்சி காண, இரவு, பகலாக திட்டங்கள் போட்டு, சிறிய தவறுகள் கூட நடக்காமல், எந்த முறைகேடும் இல்லாமல் 100 சதவீத பலன்களை மக்களுக்கு தரும் வகையில் செயல்பட வேண்டும். 
  குஜராத் போன்ற பெரிய மாநிலங்களை பொறுத்தவரை கட்டமைப்பு வசதிகள், விவசாயம் போன்றவற்றில் திடமான, தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் தான் முன்னணி இடத்தை தக்க வைத்து கொள்ள முடிந்தது.
 
 மாநிலங்களில் இருந்து அரசு மற்றும் அரசு சார்ந்த அமைப்புகளிடம் இருந்து தொகுத்து பெறப்பட்ட புள்ளிவிவரங்கள், தகவல்கள், கட்டமைப்பு வசதிகள், கல்வி, விவசாயம், சுற்றுச்சூழல் உட்பட 10 அம்சங்கள்  அடிப்படையில் இந்த சர்வே ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

 இந்த ஆய்வு முடிவுகளை தொகுத்து ஒரு ஆங்கில இதழ் வெளியிட்டுள்ளது. விவசாயத்தில் உற்பத்தி  அளவு, விவசாய நிலங்கள் பரப்பு, கல்வியில் கல்வியறிவு பெற்ற மக்கள், மாணவர் - ஆசிரியர் விகிதாசாரம், பெண் குழந்தைகள் பள்ளியில் சேர்க்கை எண்ணிக்கை, அரசு நிர்வாகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலை, உள்ளாட்சிகளுக்கு உள்ள அதிகாரங்கள்,  மக்களின் சேவையில் அரசின் மின்னணு பயன்பாடு, இ - சேவைகள்,  சுகாதாரத்தில், குழந்தைகள் பிறப்பு விகிதம், பாலின விகிதாசாரம், தனி நபருக்கு அரசு செய்யும் சுகாதார செலவு ஆகியவை கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

இதுபோல பத்து துறைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் தான் தமிழ்நாடு, இருபது மாநிலங்களில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ள கொடுமை தெரியவந்துள்ளது. சர்வயேில் கிடைத்த தகவல்கள் படி தமிழ்நாடு எந்தெந்த துறையில் எந்த இடத்தில் உள்ளது? 
பார்ப்போம்: 
விவசாயத்தில் 21வது இடம்: விவசாயத்தில் பெரிய மாநிலங்களில் முதலிடத்தை பிடித்துள்ளது மத்திய பிரதேசம்; சிறிய மாநிலங்களில் புதுச்ேசரிக்கு அந்த கவுரவம் கிடைத்துள்ளது. விவசாய நிலங்களை ரியல் எஸ்டேட்  ஆக்கிரமிக்கும் இந்த  காலகட்டத்தில் விவசாய பாசன பகுதிகளை 45 சதவீதம்  அதிகரித்துள்ள பெருமை ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகானை சேரும். 

இதுபோல, புதுச்சேரியில், 2013 - 14ல் 85 சதவீத விவசாய நிலங்களில் பயிர் செய்தது, 2014-15ல் 87 சதவீதாக அதிகரித்துள்ளது பெரும் சாதனை. 

மற்ற சிறிய  மாநிலங்களில் உணவு உற்பத்தி 7 சதவீதம் தான்; புதுச்சேரி 9 சதவீதத்தை எட்டியுள்ளது.  
 ஒட்டுமோத்த வளர்ச்சியில் 21வது இடத்தில் உள்ள உத்தரகண்ட் மாநிலம் கூட விவசாயத்தில் 12 வது இடத்தில் உள்ளது.  ஆனால், ஒட்டுமொத்த வளர்ச்சியில் 20வது இடத்தில் தத்தளிக்கும் தமிழ்நாடு விவசாயத்தில்  21வது இடத்தில் உள்ளது. 

வெட்கப்பட வைக்கிறது சிறிய மாநிலம் சிக்கிம்
சிறிய மாநிலங்களில் முதலிடத்தை பிடித்திருப்பது சிக்கிம். வடகிழக்கில் உள்ள இந்த மலை சூழ்ந்த இயற்கை எழிலுக்கு பஞ்சமில்லாத மாநிலத்தில் ஏழைகள் வெறும் நூற்றுக்கு 8 பேர் தான்  என்றால் பார்த்து கொள்ளுங்கள். தேசிய ஏழைகள் சராசரி சதவீதம் கூட 22.   சிக்கிமில் தனி நபர் ஆண்டு உற்பத்தி திறன் 2  லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ளது. 

அதாவது, தனிநபர்களால் தான் மாநில வளர்ச்சி சாத்தியமாகி உள்ளது. ‘ஒட்டுமொத்த வளர்ச்சியை தந்து, மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்பது மட்டும் தான் என் குறிக்கோள்’ என்கிறார் மாநில முதல்வர் பவன் சாம்லிங். 
இவர் அறிவிப்போடு விட்டுவிடவில்லை; முழு அக்கறை காட்டி முழுமூச்சுடன் செயல்படவும் செய்கிறார்;  அது தான் இவரது மாநிலம் மற்ற பெரிய மாநிலங்களை கூட வெட்கப்பட வைத்துள்ளது. 

முதலீட்டில் 9வது இடம்

கடந்தாண்டு முதலீடு 61 சதவீதம் அதிகரித்துள்ளது; 

முதலீட்டை உருப்படியாக பயன்படுத்தி முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் ஒரே இந்திய மாநிலம் என்று உலக வங்கியால் பாராட்டப்பட்ட மாநிலம் குஜராத் என்பது  குறிப்பிடத்தக்கது.  
ஒழுங்காக திட்டங்களுக்கு செயல்படுத்தாமல் இருந்துள்ள மாநிலங்கள் வரிசையில் தமிழ்நாடும் இருப்பது வருத்தமான விஷயம். அதனால் தான், முதலீடுகள் குவிவதாக அறிவித்தாலும், அதன் விளைவாக எந்த திட்ட செயல்பாடுகளும் வெளிப்படையாக தெரியவில்லை என்று தொழில்துறை ஆய்வாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. 

தமிழக நிலை இது அறிவிப்பு  மட்டும் தான் வருது உருப்படியான வளர்ச்சி இல்லை.

குஜராத் மாநிலம் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைக்க காரணம், திடமான, நீடித்த செயல்பாடுகள் தான். 
கல்வியில் கடந்த 2012-13 மற்றும் 2013-14 ஆண்டுகளில் மட்டும் 40 சதவீத நிதி ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளது.  அதுபோல, அன்னிய நேரடி  முதலீடு, இந்த ஆண்டுகளில் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. 
அப்படியானால் வளர்ச்சி தானே மாநில அரசின் கதவை தட்டத்தானே செய்யும்.   ஒட்டுமொத்த வளர்ச்சி பட்டியலில், முதலில் குஜராத் இருந்தாலும், அடுத்த இரண்டு இடத்தை பிடித்திருப்பது  தென் மாநிலங்கள் தான். இரண்டாவது இடத்தில் கேரளா, மூன்றாம் இடத்தில் கர்நாடகா. 
நாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை என்று முந்திக் கொண்டு வருகிறது தெலங்கானா; 
இது முதல் ஆண்டிலேயே பத்தாவது இடத்துக்கு வந்து விட்டது. 

 இமாச்சல் பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் போன்ற வருமானம் இல்லாத மாநிலங்கள் கூட முன்னணி வரிசையில் உள்ளன. 

ஆனால் எல்லா வளங்களும் உள்ள தமிழ்நாடு 20வது இடத்தில் உள்ளது.  அதாவது கடைசி இடம்.  ‘பரபரப்பாக அறிவிப்புகள் வரும் போதெல்லாம் தமிழ்நாடு உண்மையில் வளர்ச்சி கண்டு விட்டது  என்று தோன்றும். இப்போது தான்  உண்மை புரிகிறது, அதில் உண்மையில்லை  என்று;  
எல்லாம் அறிவிப்பு மட்டும்  தான்;
 உருப்படியான வளர்ச்சிக்கான செயல்பாடு ஜீரோ’ - இப்படி தான் பலரும் கருதுகின்றனர். 

சுற்றுச்சூழலில் 8 வது இடம்
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முதலிடத்தில் உள்ளது அரியானா. கர்நாடகா கூட நமக்கு முன்னால் உள்ளது. தமிழ்நாடு 8வது இடத்தில் தங்கி விட்டது. கழிவுநீர் சுத்திகரிப்பு, மரங்கள் வளர்ப்பது, சுகாதார கேடான தொழிலக வாயுக்களை கட்டுப்படுத்துவது, தொழிற்சாலை கழிவுகளை சுத்திகரிப்பது போன்ற விஷயங்களில் பின்தங்கியுள்ளது தமிழ்நாடு. 

சிறிய மாநிலங்களில் முதலிடம் வகிப்பது புதுச்சேரி; புதிதாக துவங்கப்படும் தொழிற்சாைலையாகட்டும், மருத்துவமனையாகட்டும், சுத்திகரிப்பு முறை கடைபிடித்தே ஆக வேண்டும்.
 இல்லாவிட்டால் உரிமம் ரத்து. 
இது தான் புதுச்சேரி, சுற்றுச்சூழலில் சாதிக்க காரணமாகி உள்ளது.
கட்டமைப்பில் 17 வது இடம்.
சாலை மேம்பாடு, பாலங்கள் கட்டுவது, மின்சார உற்பத்தி, தொழிற்சாலைகள் அமைப்பது, வேலைவாய்ப்பை உருவாக்குவது என்று பல வகையிலும் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த தவறியதால் தமிழ்நாடு 17 வது இடத்தில் உள்ளது. 
 ஒரு பக்கம் மழை வெள்ளம் என்று இயற்கை சீற்றங்கள், இன்னொரு பக்கம் பிரிவினைவாதிகளால் பிரச்னை இருந்தாலும், சாலைகளை மேம்படுத்துவது உட்பட கட்டமைப்பு வசதிகளில் சாதித்திருப்பது அசாம். 
கடந்த 2011 ல் 37 சதவீதம் மக்களுக்கு  கிடைத்த மின்சார வசதி, இப்போது 70வது சதவீதத்தை எட்டியுள்ளது.

நிர்வாகத்தில் 9வது இடம்
சட்டம் ஒழுங்கு, நிதி ஒதுக்கீடு, பெண்கள் முன்னேற்றம் என்று பல துறைகளில் சாதிப்பது தான் நல்ல நிர்வாகத்துக்கு எடுத்துக்காட்டு; இதில் சாதித்திருப்பது கேரளாதான். ‘

கிராம பஞ்சாயத்து வரை நிதி ஒதுக்கலில் சீரான போக்கு கடைபிடிப்பது தான் நல்ல நிர்வாகத்துக்கு காரணம். மக்களை சென்றடையாத எந்த திட்டமும் வீண்’ என்கிறார் முதல்வர் உம்மன் சாண்டி. மாநகராட்சி முதல் பதிவுத்துறை வரை மின்னணு வசதி இருந்தாலும், முழுமையாக பயன்படுத்த  முடியாத நிலை தான் தமிழ்நாட்டில் உள்ளது. 
அரசு வெப்சைட்கள் பலவும் முழு தகவல்களை தருவதில்லை என்ற குறை பலரிடம் உள்ளது.

கல்வியில் 13 வது இடம்

கல்வியில் கேரளாவுடன் போட்டி போட்ட காலம் போய் விட்டது. நாம் விட்டுக் கொடுத்து விட்டோம். அது முதலிடத்தில் இப்போது; 
நாம் 13வது இடத்தில். 
கேரளாவில்  கடந்தாண்டு மட்டும் பெண் குழந்தைகள் பள்ளியில் சேரும் எண்ணிக்கை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. 
இதுபோல ஓராண்டில் புதிதாக 8 ஆயிரம் பள்ளிகள் கட்டப்பட்டுள்ளன. கர்நாடகா கூட எட்டாவது இடத்தில் இருக்கும் போது, நாம் 13வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
*  கேரளா, கர்நாடகா முந்திக்கொண்டுஇருக்கிறது,
*  வளர்ச்சியில் அசத்துகிறது அசாம், ஒடிசா,
*  பக்கத்து புதுச்சேரியும் வியக்க வைக்கிறது,
*   ‘தள்ளாடும்’ தமிழகமோ தத்தளிக்கிறது.

நன்றி:தினகரன்,
=====================================================================================================================================
இன்று,
நவம்பர்-22.
  • லெபனான் விடுதலை தினம்(1943)
  • சிலியின் ஜூவான் பெர்னாண்டஸ் தீவுகள் கண்டுபிடிக்கப்பட்டன(1574)
  • அல்பேனிய எழுத்துக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது(1908)
  • அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜான் எஃப்.கென்னடி, லீ ஹார்வி ஒஸ்வால்ட் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்(1963)

=========================================================================================
பாபா ராம்தேவ்-அடுத்த மோசடி.

பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய இந்துத்துவா நண்பரான போலிச்சாமியார் ராம்தேவ் நடத்தும் பதஞ்சலி என்ற கார்ப்பரேட் கம்பெனியின் ஆண்டு வருமானம் 5000 கோடி ரூபாயை தாண்டுகிறது என்று அதிர்ச்சிகரமான செய்திகள் வந்துள்ளன.
பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆதரவாளருமான ராம்தேவ் 1965ம் ஆண்டில் ஒரு ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். விவசாயம் நொடித்துப் போனதால் ராம்தேவ் 1990களில் தனது நண்பரான ஆச்சாரியா பால கிருஷ்ணாவுடன் இணைந்து யோகா வகுப்புகள் எடுக்கத் தொடங்கினார். 
பின் னர் அதிலும் போதிய வருமானம் இல்லாததால் சைக்கிளில் நெடுந்தொலைவிலுள்ள சில வீடுகளுக்கு சென்று மத சடங்குகள் மற்றும் பூசைகள் செய்து அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு பிழைப்பு நடத்தி வந்துள்ளார். அவர் தற்போது உலக கார்ப்பரேட்டுகளுக்கு போட்டியாக ஆண்டு வருமானம் ரூ. 5000 கோடி ஈட்டும் அளவுக்கு ‘உயர்ந்துள்ளது’ இந்திய மற்றும் பன்னாட்டு கார்ப்பரேட்டுகளின் அதிபர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 
இது தொடர்பாக இந்திய வர்த்தக இதழில் வெளிவந்துள்ள செய்திகளில் கூறியுள்ளதாவது:இந்தியாவில் ராம்தேவ் முதலில் ‘யோகி’ யாகத்தான் அதாவது முற்றும் துறந்த சாமியாராகத்தான் தனது அடையாளத்தை காட்டினார். ஆனால் தற்போது பெரியஅளவிலான பன்னாட்டு நுகர்பொருள்கள் தயாரிப் புக் கம்பெனிகளுக்கு போட்டியாக மூலிகை தேயிலை முதல் பழச்சாறுகள் மற்றும் கழிப்பறை கட்டுமானங்கள் தயாரிப்பது வரை ராம்தேவ் நடத் தும் ‘பதஞ்சலி’ கம்பெனி தயாரித்து வருகிறது. 2006ல் தனது நண்பர் பால கிருஷ்ணாவுடன் இணைந்து பதஞ்சலி ஆயுர்வேத பொருட்கள் தயாரிக்கும் கம்பெனியை தொடங்கினார்.
 அக்கம்பெனியானது 10ஆண்டுகளில் உலக கம்பெனிகளுடன் போட்டி போட்டுக்கொண்டு‘முன்னேறியுள்ளது’. 
இவ்வளவு குறுகிய காலத்தில் இப்படிப்பட்ட அபரிமிதமான வளர்ச்சிக்கு காரணம் ஆளும் பாஜகவின் ஆதரவுதான் என்பதை இங்கு கூற வேண்டியதில்லை.மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தவுடன் மோடி,‘இந்தியாவில் தயாரி’ என்ற பிரச்சாரத்தை தொடங்கினார். 
அதிலிருந்து பதஞ்சலியின் உற்பத்தி பொருட்கள்யாவும் ‘பாரதத்தில் தயாரித்தது’ என்ற முத்திரையுடன் வெளிவரத் தொடங்கின.நெஸ்லே என்ற பன்னாட்டு கம்பெனியின் தயாரிப்பான மேகி நூடுல்ஸ் குறுகிய காலம் தடை செய்யப்பட்டு பின்னர் வெளிவரத் தொடங்கியுள்ளது. 
இப்போது மேகிக்கு போட்டியாக பதஞ்சலி கம்பெனியும் நூடுல்ஸ் உணவைஅறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் ஒரே ஒரு வேறுபாடுதான். 
மேகிக்கு இருந்த அரசின் கெடுபிடி எதுவும் இதற்குஇல்லை. 
அவ்வளவு ஏன், இந்திய உணவு தரக் கட்டுப் பாட்டு அமைப்பு எந்த தடையும் இன்றி சந்தையில் அனும தித்துள்ளது. 
எல்லாம் மோடியின் ஆசிகளால்தான். 
இப்போது ஏன் மேகி நூடுல்ஸ் தடை செய்யப்பட்டது என்பதற்கான காரணமும் உங்களுக்கு புரிந்திருக்கும்.ராம்தேவின் பதஞ்சலி கம்பெனி, விளையாட்டு உடைகள் மற்றும் கேன்வாஸ் மற்றும் பூட்ஸ்கள் ஆகியவற்றை தயாரிக்கும் நைக் மற்றும் அடிடாஸ் கம்பெனிகளுக்கு போட்டியாக தானும் இப்பொருட்களை உற்பத்தி செய்ய களத்தில் இறங்கியுள்ளது.
 கடந்த ஜனவரியில் பதஞ்சலி கம்பெனியின் உற்பத்தி பொருட்களை விநியோகிக்கும் பிட்டி என்ற கம்பெனியின் தலைவரான ஆதித்யா பிட்டி என்பவர், 2015ல் மட்டும் கம்பெனியின் லாப வளர்ச்சி ரூ.2000 கோடியை தாண்டிவிடும் என்று குறிப்பிடுகிறார்.
இக்கம்பெனியின் தயாரிப்பு பொருட்கள் நாடு முழுவதும் உள்ள 1,77,000 சில்லரை விற்பனை கடைகளில் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. எனவே கம்பெனியின் வருமானம் இந்த நிதி ஆண்டில் ரூ.5000 கோடியை எட்டிப்பிடிக்கும் என்றும் அதன் அதிகாரிகள் கூறுகின்றனர். 
இந்திய கம்பெனிகள் பதிவாளரிடமிருந்து இதுகுறித்து எந்த தகவலும் பெற இயலவில்லை. ஏனெனில்ராம்தேவ் மோடிக்கு நெருக்கமானவர் என்பதால் அதிகாரபீடங்கள் ரகசியம் காக்கின்றன. இத்தனைக்கும் கடந்த 2006ல் ஹரித்வாரில் வெறும் ரூ.41 கோடி முதலீட்டுடன் தொடங்கப்பட்டதுதான் பதஞ்சலி நிறுவனம். 
இந்த அளவு முதலீடு எப்படி ஒரு யோகா சாமியாரிடம் வந்தது என்ற கேள்வி ஒரு புறமிருக்க இவ்வளவு குறுகிய காலத்தில் ரூ. 5000 கோடிக்கு எப்படி வளர்ந்தது என்பது அந்த மோடிக்கே வெளிச்சம்.
கடந்த அக்டோபரில் பியூச்சர் குழு என்ற கம்பெனி யிடம் பதஞ்சலி கம்பெனி அதன் தயாரிப்புகளை விநியோகிக்கவும் விளம்பரப்படுத்தவும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது. 
மோடி அரசின் ஆதரவுடன் இந்துத்துவா பிரச்சாரத்துடன் யோகா மூலம் தனது நுகர்வோர் சந்தையை பிடித்துள்ளார் ராம்தேவ் என்று பொருளாதார அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ராம்தேவுக்கு சொந்தமான, ஆயுர்வேத மருந்து தயாரிக்கும் பதஞ்சலி நிறுவனம் சார்பில், சமீபத்தில், நுாடுல்ஸ் தயாரிக்கப்பட்டு, விற்பனைக்கு வந்துள்ளது. 'இந்த நுாடுல்சில் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும், எந்த பொருளும் கலக்கப்படவில்லை' என, பதஞ்சலி நிறுவனம் 
தெரிவித்துள்ளது. இதற்கிடையே, 'முறையான அனுமதி பெறாமலும், உரிமம் பெறாமலும், உங்கள் நிறுவனம், நுாடுல்ஸ் தயாரித்து, விற்பனை செய்து வருகிறது. இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும்' 
என, பதஞ்சலி நிறுவனத்துக்கு, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இதுகுறித்து, ராம்தேவின் செய்தித் தொடர்பாளர் திஜர்வாலா கூறுகையில், ''நாங்கள் எந்த விதிமீறலிலும் ஈடுபடவில்லை. இதுவரை எங்களுக்கு நோட்டீஸ் எதுவும் வரவில்லை. 
நோட்டீஸ் வந்தால், அதை, சட்டப்படி எதிர்கொள்வோம்,'' என்றார். 
அதாவது மோடி இருக்கும்வரை தங்கள் மோசடி வித்தைகளை மக்கள் எதிர் கொள்ள வேண்டும் என்கிறார்?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?