புத்துணர்ச்சிக்கு

 க்ரையோதெரபி!

எல்.கே.ஜி. படிக்கும் 4 வயது குழந்தை முதல், பெரிய பொறுப்புகளில் இருக்கும் 40 வயதுக்காரர்கள் வரை அனைவரும்  சொல்லும் ஒரு வார்த்தை - ‘ஸ்ட்ரெஸ்’. 
எந்த ஒரு நோயானாலும் இந்த ஸ்ட்ரெஸ்தான் (மன இறுக்கம் / உளைச்சல்) மூல  காரணம். அதற்கான பல தெரபி சிகிச்சைகள் வந்தவண்ணம் இருக்கும் நிலையில் இப்போது புதிதாக பரவியுள்ளது  க்ரையோதெரபி மோகம்.

1978ல் ஜப்பானில் தோன்றியது ஹோல் பாடி க்ரையோதெரபி (Whole body cryotherapy) சிகிச்சை முறை. 30  ஆண்டுகளாகவே ஜப்பானியர் க்ரையோதெரபி எடுத்து வருகிறார்கள். 
பின்னர் ஐரோப்பிய நாடுகளில் பிரபலமடைந்த இந்த  சிகிச்சை இப்போது உலகின் பல நாடுகளிலும் பரவியுள்ளது. 

பேர்லயே க்ரை’ இருக்கறதுனால ரூம்ல வச்சு அழ விடுவாங்களோ? அப்படியெல்லாம் இல்லை... பயப்படாதீங்க! க்ரையோதெரபி’ சிகிச்சையின் போது, நோயாளியை ‘க்ரையோ சேம்பர்’ என்றழைக்கப்படும் ஓர் அறையில் வைத்திருப்பார்கள்.  
இந்த அறையின் உறைநிலை மைனஸ் 110 டிகிரி செல்சியஸ். குளிர் பிரதேசமான, அன்டார்டிகாவின் உறைநிலை, மைனஸ் 30  டிகிரி. அதையும்விட இந்த அறை 3 மடங்கு குளிர்ந்த உறைநிலையில் இருக்கும். 
இந்த அறைக்குள் நோயாளியை, அதிகபட்சம் 3  நிமிடங்கள் வைத்திருப்பார்கள். 3 நிமிடங்களே அளிக்கப்படும் இந்த சிகிச்சையின் பலன்கள் 6 மாதங்கள் வரைகூட  நீடிக்கக்கூடியது.

க்ரையோ சேம்பரில் நுழைவதற்கு முன் பாதுகாப்பு அளிக்கும் வகையில் முகத்துக்கு மாஸ்க், கை-கால்களுக்கு சாக்ஸ்  அணிந்துகொள்ள வேண்டும். 
அதே நேரம் உடலின் பெரும்பாலான பகுதிகள் குளிர் படும்படி நீச்சல் உடையில் செல்வதனால்  பெரும் அளவு நன்மை கிடைக்கும். சாதாரணமாக, 37 டிகிரி செல்சியசாக இருக்கும் உடலின் வெப்பநிலை, உடனே 32 டிகிரியாகக்  குறைந்து, பின்னர் பிளஸ் 5 டிகிரியாகி விடும். 
இந்த திடீர் குளிரால் தூண்டப்பட்ட உடலில் உள்ள குளிர் சென்சார்கள், வினாடிக்கு 140 முதல் 150 முறை மூளைக்குத் தகவல்  அனுப்பும். அறையின் உறைநிலையில் 3 நிமிடங்கள் இருந்துவிட்டு வெளியே வந்த பிறகும், அடுத்த அரை மணி நேரத்துக்கு  வலி இருக்கும் இடத்தில் உள்ள சென்சார்களோடு, உடலின் ஒட்டுமொத்த சென்சார்களும், தொடர்ந்து வலி உணர்வை சென்ட்ரல்  நெர்வஸ் சிஸ்டமாக செயல்படும் மூளைக்குச் சொல்லும். 
அப்போது, மூளையின் கார்டெக்ஸ் பகுதி, வலி உண்டாக்கும்  ரசாயனத்தை கட்டுப்படுத்தும் மூலக்கூறுகளைச் சுரக்கும். அதே நேரம் ரத்த ஓட்டம் தூண்டப்பட்டு நச்சுக்கள் மற்றும் வளர்சிதை  மாற்றக் கழிவுகளை வெளியேற்றுகிறது.

இதனால் வீக்கம், வலி போய்விடுகிறது. இந்த சிகிச்சை ஸ்பான்டிலிட்டிஸ் என்று சொல்லக்கூடிய கழுத்து எலும்பு தேய்மானம்,  மூட்டு தேய்மானம், மூட்டுவாத நோய்கள் போன்ற எல்லாவிதமான மூட்டு சம்பந்தமான நோய்களுக்கும் மூட்டுவலிகளுக்கும் மிக  நல்ல தீர்வாக உள்ளது. 
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் ஸ்ட்ரெஸ்  குறைகிறது. இம்சோம்னியா என்னும் தூக்கமின்மைப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல உறக்கம் வரச் செய்கிறது.  
வளர்சிதை மாற்றத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு உடல் ஆரோக்கியமடைகிறது. 

இந்த தெரபியை எடுத்துக் கொள்வதால், எந்தவொரு நோய்க்காக எடுத்துக் கொள்ளும் மருந்து மாத்திரைகளால் ஏற்படும் பக்க  விளைவுகளும் உண்டாவதில்லை. 
இவை எல்லாவற்றையும்விட உடலுக்கும் மனதுக்கும் ஒரு புத்துணர்ச்சி கிடைப்பதாக இந்த  க்ரையோ சேம்பரிலிருந்து வெளிவந்தவர்கள் சொல்கிறார்கள். இப்போது விளையாட்டு வீரர்களும் இந்த சிகிச்சையை எடுத்துக்  கொள்கிறார்கள். 
விளையாட்டில் ஈடுபடும்போது ஸ்டாமினாவை தக்க வைத்துக்கொள்ள க்ரையோதெரபி கை கொடுப்பதால்  வீரர்களின் செயல்திறன் அதிகரிக்கிறது. விளையாடும்போது ஏற்படும் காயங்களிலிருந்தும் விரைவில் மீள உதவுவதால்  க்ரையோதெரபி சிகிச்சை விளையாட்டுத் துறையினருக்கு மிகுந்த பயன் அளிக்கிறது. 

சோரியாசிஸ் உள்பட சரும நோய்களுக்கும், ஆஸ்துமா நோயாளிகளுக்கும் கூட இந்த சிகிச்சை பயனளிக்கவல்லது. வலியின் தன்மையைப் பொறுத்து, ஒருவருக்கு எத்தனை நாட்கள் சிகிச்சை என்பதை முடிவு செய்கிறார்கள். 
குறைந்தது, 10 நாட்கள்,  அதிகபட்சம், 20 நாட்கள் சிகிச்சை தேவைப்படும். எத்தனை நாட்கள் தேவையோ, தொடர்ந்து அத்தனை நாட்களும் சிகிச்சை  செய்து கொள்ள வேண்டும். விளையாட்டு வீரர்கள், சி.இ.ஓ. மற்றும் மிகப்பெரிய பொறுப்பிலுள்ளவர்கள், அரசியல்வாதிகள் என  அனைவருமே தங்கள் ஸ்ட்ரெஸை குறைத்துக் கொள்வதற்காக க்ரையோதெரபி சிகிச்சையை எடுத்துக் கொள்கிறார்கள்  என்பதுதான் இந்த சிகிச்சையின் விசேஷம்.

                                                                                                                                                 - உஷா.

                                                                                                                             நன்றி; குங்குமம் டாக்டர்
======================================================================================
இன்று,
நவம்பர்-14.

  • இந்திய முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த தினம்(1889)
  • இந்திய குழந்தைகள் தினம்
  • சர்வதேச நீரிழிவு நோய் தினம்
  • கின்னஸ் சாதனை புத்தக தினம்
ஜவஹர்லால் நேரு பிறந்த தினம்
======================================================================================




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?