அவலங்களுக்கு யார் காரணம்?
வடகிழக்கு பருவ மழை தமிழகத்திற்கு 48 சதவீத மழையை அளிக்கிறது.
எனவே இந்த மழை விவசாயத்திற்கும் குடிநீர் தேவைக்கும் மிக முக்கியமானது. கடந்த 3 ஆண்டுகளாக வழக்கத்தைவிட குறைவாகவே மழை பெய்துள்ளது. 2012, 2013, 2014 ம் ஆண்டுகளில் முறையே 16 சதவீதம், 33 சதவீதம் மற்றும் 2 சதவீதம் குறைவாகவே வடகிழக்கு மழை பெய்தது.
எனினும் இந்த ஆண்டு சராசரிக்கும் அதிகமாகவே மழை பெய்யும் என்பதுதான் வானிலைத்துறையின் மதிப்பீடாக இருந்தது.இந்த மழை தமிழகத்திற்கு ஒரு வரப்பிரசாதம் என்றுதான் கூறவேண்டும்.
ஆனால் ஆட்சியாளர்களின் அலட்சியத்தாலும் திட்டமின்மையாலும் இந்த மழை காரணமாக மக்களுக்கு கடும் துன்பங்கள் ஏற்பட்டுள்ளன.
குறிப்பாக கடலூர் மற்றும் சென்னை நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. “இந்த மழை எதிர்பாராதது! எனவே பாதிப்புகள் தவிர்க்க இயலாதது” இதுவே ஆளுங்கட்சியினர் கூறும் வாதம் ஆகும். “மூன்று மாதங்களில் பெய்ய வேண்டிய மழை மூன்றே நாட்களில் பெய்துவிட்டது” என்று தமிழக முதல்வர் அங்கலாய்த்துள்ளார்.
வானிலை முன் எச்சரிக்கைகள்உண்மையில் மழையின் அளவு எதிர்பாராத ஒன்றா? முன்னெச்சரிக்கை அரசாங்கத்திற்கு கிடைக்கவில்லையா?
சில தகவல்களை ஆய்வு செய்தால் முதல்வர் உட்பட ஆளுங்கட்சியினர் கூறுவது பொய் என்பது தெளிவாகும்.
இந்த ஆண்டு பருவமழை குறித்து வானிலைத்துறை கீழ்கண்டவாறு பத்திரிக்கை செய்தி வெளியிட்டது:“தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சராசரியைவிட அதிகமாக (112 சதவீதம்) இருக்கும்“ தமிழகத்திற்கு சராசரி என்பது 43.82 செ.மீ. இதனைவிட கூடுதலாக 12 சதவீதம் இருக்கும் என வானிலைத்துறை அக்டோபர் 16ம் தேதியே தெரிவித்துள்ளது. அதாவது பருவமழை தொடங்குவதற்கு 15 நாட்களுக்கு முன்பே மழை கூடுதலாக இருக்கும் என மிகத்தெளிவாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
அப்படியிருந்தும் தமிழக அரசாங்கம் இந்த தகவலை அதற்குரிய முன்னெச்சரிக்கையுடன் ஆய்வு செய்யவில்லை.அக்டோபர் மாதம் 22ம் தேதி வானிலைத்துறை கீழ்கண்ட அறிக்கையை வெளியிட்டது:
“கிழக்கத்திய மேகஅலைகள் தமக்குள் புயலை உருவாக்கும் தன்மை கொண்டவை.
அத்தகைய ஒரு புயல் தென்மேற்கு வங்காள விரிகுடாவில் தமிழகம் மற்றும் இலங்கை பகுதிகளில் உருவாக வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாடு கரையை நெருங்கும் பொழுது இது ஒரு ஆழமான காற்றழுத்தமாகவோ அல்லது புயலாகவோ மாற வாய்ப்பு உள்ளது.”
அக்டோபர் 26ம் தேதியிட்ட வானிலை அறிக்கை அரபிக்கடல் மற்றும் வங்காளவிரிகுடா ஆகிய இரு பகுதிகளிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியிருப்பதாகவும் இதன் காரணமாக வடகிழக்கு பருவ மேகங்கள் தீவிர மழையை உருவாக்கும் எனவும் கூறுகிறது.
அந்த அறிக்கை கீழ்கண்டவாறு எச்சரித்தது:“தமிழக மற்றும் ஆந்திர கடற்கரையோரங்களிலும் அந்தமான் தீவுகளிலும் மிக கனமழை அல்லது இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது”
அமெரிக்க வானிலை மையத்தின் அறிக்கை ஒன்று இந்த இரட்டை தாழ்வு மண்டலங்களால் குறிப்பாக சென்னையில் மிக அதிக கனமழை பெய்யும் என்றும் அது பின்னர் ஆந்திரா கடற்கரைக்கும் ஒடிசா கடற்கரையையும் அடையும் என்றும் பதிவு செய்தது.
நவம்பர் 5ம் தேதிய வானிலை அறிக்கை தெளிவாக குறிப்பிட்டது:“இலங்கை கடற்கரை அருகே ஒரு புயல் உருவாகியுள்ளது. அடுத்த சில நாட்களில் இது தமிழகத்தின் தென் கிழக்கு கடற்கரையான நாகை- புதுச்சேரி அருகே கரையை கடக்கும். இதன் காரணமாக தமிழக கடற்கரையோரங்களில் கனமழை அல்லது மிக அதிககனமழை பெய்யும்.”
நவம்பர் 6ம் தேதிய வானிலை அறிக்கை கீழ்கண்டவாறு குறிப்பிட்டது:“சப்பாலா மற்றும் மேக் எனும் இரண்டு புயல்கள் உருவாகியுள்ளன. அவை ஏமன் மற்றும் ஓமன் கடற்கரைகள் நோக்கி செல்கின்றன. இவற்றால் தென்னிந்தியாவிற்கு எவ்வித பாதிப்பும் இல்லை.
ஆனால் இப்புயல்கள் வெளிப்படுத்தும் முக்கியமான செய்தி என்னவெனில் வங்காளவிரிகுடா தனது சொந்த புயல் ஒன்றை உருவாக்க காத்திருக்கிறது என்பதுதான்!”
இந்த அறிக்கை மேலும் குறிப்பிட்டது:“வானிலை முன்மாதிரிகள் சிலவற்றை ஆய்வு செய்யும் பொழுது தமிழகம் ஒரு முழுமையான புயலை சந்திக்கும் சூழல் உருவாகும் என தெரிகிறது. இதனை ஐரோப்பிய வானிலை மையமும் அமெரிக்க வானிலை மையமும் உறுதிப்படுத்தியுள்ளன.”
இப்படி ஏராளமான வானிலை அறிக்கைகள் தமிழகம் கனமழையை எதிர்கொள்ளும் என்பதை எச்சரித்தன.
அதுவும் குறிப்பாக சென்னையும் கடலூரும் கடுமையாக பாதிக்கும் என்பதையும் வானிலை அறிக்கைகள் எச்சரித்தன. ஆனால் ஆட்சியாளர்கள் உணர்வில் இது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
ஏனெனில் தமிழக முதல்வர் கொடநாடு சென்றுவிட்டார்.
அமைச்சர்கள் தமது சொந்த பணிகளை கவனிக்கச் சென்றுவிட்டனர்.
அதிகாரிகள் கும்பகர்ண தூக்கத்தில் முதல்வர ஜெர்யலலிதா போல ஓய்வில் இருந்தனர்.இருந்தனர்.
வானிலை அறிக்கைகளை ஆய்வு செய்து தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவோ அல்லது மக்களை எச்சரிக்கவோ எந்த ஏற்பாடும் இல்லை. மொத்தத்தில் தமிழக அரசாங்க நிர்வாகம் செயல் இழந்து நின்றது.
கடுமையான பாதிப்புகள் காரணமாக மக்களின் கோபம் பொங்கியெழுந்த காரணத்தால் இயற்கை மீது பழிபோட்டு தப்பிக்க முயல்கின்றனர்.
ஜெயலலிதாவின் அ.தி.மு.க. அரசாங்கத்தின் அலட்சியத்தால் பெரும் இழப்புகள் ஏற்பட்டுள்ளன.
பலர் உயிரையும் உடமைகளையும் இழந்துள்ளனர்.
தொலைக்காட்சியில் அதிமுக பேச்சாளர்[?]நடிகை சி.ஆர்.சரஸ்வதி' வழக்கமாக ரமணன் மழை பெய்யும் என்பார் ஆனால் பெய்யாது.அதே போல்தான் என்று இருந்தோம்.ஆனால் மாறாக அவர் சொன்னது போல்
மழை பெய்து விட்டது."தொலைக்காட்சியில் அதிமுக பேச்சாளர்[?]நடிகை சி.ஆர்.சரஸ்வதி' வழக்கமாக ரமணன் மழை பெய்யும் என்பார் ஆனால் பெய்யாது.அதே போல்தான் என்று இருந்தோம்.ஆனால் மாறாக அவர் சொன்னது போல்
என்று நிவாரணப்பணிகளை ஏன் ஜெ அரசு செய்யவில்லை என்ற விவாதத்தில் பதிலாக சொல்லுகிறார்.
அந்த அளவு புத்திசாளித்தனம் உள்ள அரசிடம் இதற்கு மேல் எதிர்பார்ப்பது நம் தவறுதான்.
ஜெ கடந்த ஆட்சிகளில் பல்முறை ஆலோங்கலப்பட்ட மக்கள் மீண்டும் அதை வாக்களித்தது அவர்கள் குற்றம்தான் .அதற்கான பலனை அவர்கள் அனுபவித்துதானே ஆக வேண்டும் ?
இன்றைய அவலங்களுக்கு யார் காரணம்?
பலமுறை ஜெயலலிதா ஆட்சியில் அனுபவித்தும்,கசப்பு மருந்துகளை உண்டும் சீரழிந்த மக்கள் அவர்கள் கொடுத்த பணத்தை வாங்கிக்கொண்டு வாக்களித்தவர்கள் தான் இன்றைய தமிழக அலங்க்கோலங்க்களுக்கு முக்கிய காரணம்.அமைச்சர்களோ,அதிகாரிகளோ காரணம் இல்லை.காரணம் அனுபவித்தும் நல்ல நிர்வாகம் யார் தருவார்கள் என்று பாராமல் பணத்தை மட்டுமே பார்த்து வாக்களித்தது குற்றம்தானே?
இன்று,
நவம்பர்-20.
- யுனிசெஃப் குழந்தைகள் தினம்
- வியட்நாம் ஆசிரியர் தினம்
- மைக்ரோசாஃப்ட்டின் விண்டோஸ் 1.0 வெளியிடப்பட்டது(1985)
- உக்ரேன் குடியரசாக அறிவிக்கப்பட்டது(1917)
- ஜெர்மனியின் நாணயம் பேப்பியர்மார்க், ரெண்டென்மார்க் ஆல மாற்றப்பட்டது(1923)
இதை கேட்கவும்.
https://soundcloud.com/vi…/mandhiri-thandhiri-ananda-vikatan