மலட்டுக் கடுகு!



பாஜக அரசு உங்களுக்கு தருகிறது.!
மோடியின் அடுத்த சாதனை?
உணவு மற்றும் விதை தயாரிப்பு பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளின் நிர்ப்பந்தத்திற்கு அடிபணிந்து மத்திய பாஜக அரசு அவசர அவசரமாக மரபணு கடுகு பயிரிடுவதற்கு அனுமதி அளிக்க முயற்சிப்பதை அகில இந்திய விவசாயிகள் சங்கம் கடுமையாக எதிர்த்துள்ளது.
தற்கொலைக்கு காரணமான விதைகள்முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு மரபணு மாற்றுப் பயிர்களான பருத்திக்கும், அதனைத்தொடர்ந்து கத்தரிக்காய்க்கும் களப்பரிசோதனை செய்ய அனுமதி அளித்தது. கடுமையாக எதிர்ப்புக்குள்ளானதால் திரும்பப் பெறப்பட்டது. 
இதில் பி.டி. பருத்தி எனப்படும் மரபணு மாற்றப்பட்ட பருத்தி லாபகரமானது என்று மோசடியாக விளம்பரம் செய்து பயிரிட்டதால் கடுமையான நட்டம் ஏற்பட்டு பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.இதனால் நாடு முழுவதும் விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு எதிரான பிரச்சார அமைப்புகள் இணைந்து எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தியதால் சில மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டது. 
கடுமையான விதி முறைகளும் கொண்டு வரப்பட்டன.
எந்த ஒரு மரபணு மாற்றப்பட்ட பயிரையும் விளைநிலங்களில் பரிசோதித்துப் பார்ப்பதற்கு முன்னர் அந்தப் பயிர்ஏற்படுத்தும் பாதிப்புகள், பின்விளைவுகள் ஆகியவை குறித்து பொதுமக்களுக்கு தகவல் அளிக்க வேண்டும் என்று கடந்த 2007இல் மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 
இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றமும் 2008இல் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் தொடர்புடைய உயிரிப் பாதுகாப்பு தகவல்களை பொதுவெளியில் வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
வெளிநாடுகளில் தடை செய்யப்பட்டவை
மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் மண்ணுக்கும் நிலத்தடி நீருக்கும் மற்றும் சுற்றியுள்ள பயிர்கள், உயிரினங்கள் மற்றும் நுண்ணுயிரிகள் ஆகியவற்றுடன் சுற்றுச்சூழலுக்குச் சேதம் விளைவித்து அவற்றை நஞ்சாக்கி விடுமளவுக்கு அபாயகரமானவை. 
இத்தோடு, ஒரு முறை பயிரிடப்பட்ட பின்னர் அவற்றை கட்டுப்படுத்த முடியாமல் விரிந்த அளவில் பரவிவிடக்கூடியவை. இப்படிப்பட்ட விளைவுகள் காரணமாக உலகில் பல நாடுகளில் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் தடை செய்யப்பட்டுள்ளன. 
அங்கு அவற்றை களப்பரிசோதனை கூட மேற்கொள்ள முடியாது. இந்தியாவில், தொடர்ந்த எதிர்ப்பின் காரணமாக மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மரபணு மாற்றுப் பயிர் ஆய்வுகளை நெறிப்படுத்தும் உயர் அமைப்பான மரபணு பொறியியல் அங்கீகாரக் குழுவிற்கு பாஜக அரசு ஓர் உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
 அனைத்து மரபணு மாற்றப்பட்ட பயிர்களை களப்பரிசோதனைகள் மற்றும் புதிய மரபணு மாற்றப்பட்ட பயிர்களை அறிமுகப்படுத்துவது குறித்த தகவல்கள் அனைத்தையும் ரகசியமாக வைக்கும்படி சொல்கிறது அந்த உத்தரவு. வருகிறது மலட்டுக் கடுகுதற்போது தில்லி பல்கலைக்கழகம் மரபணு மாற்றப்பட்ட கடுகை உருவாக்கியுள்ளது. இந்த மரபணு மாற்றப்பட்ட கடுகுக்கு தாரா மஸ்டர்டு ஹைபிரிட் 11  என்று பெயரிடப்பட்டுள்ளது. 
இந்த மரபணு மாற்றப்பட்ட கடுகு பயிரை வணிக ரீதியாக சாகுபடி செய்ய மரபணு பொறியியல் அங்கீகாரக்குழுவிடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. 
புதிய மரபணு மாற்றுக் கடுகு பயிரின் அறிமுகம் குறித்த நடவடிக்கைகள் பாஜக அரசால் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.மரபணு மாற்றுக் கடுகுப் பயிரை அனுமதிக்கக்கூடாது என்றும் அது தொடர்பான தகவல்களை பொதுமக்கள் முன்பாக வைக்க வேண்டும் என்றும் அகில இந்திய விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.புதுதில்லியில் விவசாயிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:மரபணு மாற்றப்பட்ட கடுகுப் பயிரை வணிகரீதியாக சாகுபடி செய்வதற்கு மரபணு பொறியியல் அங்கீகாரக் குழுவிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளது குறித்த செய்திகள் குறித்து அகில இந்திய விவசாயிகள் சங்கம் மிகுந்த கவலை கொண்டுள்ளது. 
விவசாயிகள் சங்கம் இப்பிரச்சனையை வெளிப்படையான முறையில் மத்திய அரசு அணுக வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறது. உயிரிப் பாதுகாப்பு மற்றும் பல்லுயிர்ப் பெருக்கம் எந்த விதத்திலும் இப்பயிர்களினால் சேதமடையக் கூடாது. எனவே கடுமையான பரிசோதனைகள் மேற்கொள்வது அவசியமாகிறது. இதுபற்றி ஒரு சுயேச்சையான அமைப்பு மதிப்பிட வேண்டும். 
மரபணு மாற்றப்பட்ட கடுகுப் பயிர்களின் பாதுகாப்பு பரிசோதனைகள் பொது மக்கள் முன்பாக வைக்கப்படாமல் அனுமதி அளிக்கப்படக்கூடாது.
சோதனையே செய்யாமல் அனுமதிக்க முயற்சி
சர்ச்சைக்குரிய வர்த்தக ரீதியான மரபணு கத்திரிக்காயை அனுமதித்ததால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக உருவான பரந்த அளவிலான போராட்டங்களும் அதனைத் தொடர்ந்து கடந்த 2010இல் அதன் மீது காலவரையற்ற தடை விதிக்கப்பட்டதிலிருந்தும் எந்த பாடத்தையும் பாஜக அரசு கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. 
அப்போது ஒரு குறிப்பான பிரச்சனையாக அது முன்வைக்கப்பட்டது. மரபணு மாற்றப்பட்ட பயிர் என்பது ஒரு உணவுப் பயிராகும். எனவே அது அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னர் அப்பயிர் குறித்த அனைத்து அக்கறைகளும் எந்தவித கவனக்கோளாறுகளுமின்றி நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையானது நீக்கப்பட முடியாதது என்பதே கடுமையான பரிசோதனைகள் நடத்தப்பட முடியாது என்ற காரணத்தினால்தான்.
 ஏனெனில் அத்தகைய பரிசோதனைகள் முழுமையான பாதுகாப்புடன் நடத்தப்படுவதற்கான அமைப்புகள் இங்கு இல்லை. இந்நிலையில் தற்போது, தாரா மஸ்டர்டு ஹைபிரிட் 11 என்றழைக்கப்படும் மரபணு மாற்றப்பட்ட கடுகுவிற்கு எந்த விதமான கடுமையான பரிசோதனைகளும் நடத்தப்படுவதற்கான அமைப்பும் இல்லாமலேயே அது அனுமதிக்காக பரிசீலிக்கப்பட்டு வருகிறது. 
இந்தியாவிலுள்ள அனைத்து சமையலறைகளிலும் கடுகானது முக்கியமான பயன்பாட்டிலுள்ளது. எனவே சுற்றுச் சூழலுக்கும், விலங்குகளுக்கும் மற்றும் மனிதர்களுக்கும் எந்தவித மோசமான பாதிப்புகளும் இல்லை என்று அச்சங்கள் போக்கப்பட்டாலன்றி, அதை அறிமுகப்படுத்தக்கூடாது. மரபணு மாற்றப்பட்ட கடுகை வெளிப்படையற்ற முறையில் கொண்டு வருவதற்கான முயற்சிகள் பி.டி. பருத்தி அனுபவத்திலிருந்து பார்க்கப்பட வேண்டும். 
இது போன்ற மரபணு மாற்றப்பட்ட பயிர்களையும் தாக்கும் சக்தியை உருவாக்கிக் கொண்ட ஒரு வகை புழுக்களை எதிர்க்க அவ்வப்போது வேறுபட்ட ஒட்டுபயிர்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் வெள்ளைப் பூச்சிகளினால் பி.டி. பருத்திப் பயிர்கள் முழுமையாக அழிந்து போனதையும், பி.டி. பயிர்களினால் இந்த வகை பூச்சிகளை தாக்குப்பிடித்து நிற்க முடியாமல் தோல்வி அடைந்ததையும் இந்த நாடு பார்த்தது.பருத்தி விவசாயிகள் மத்தியில் அதிகமான தற்கொலைகள் நிகழ்ந்ததற்கும் இதுவே காரணமாகும்.
இது போன்ற மற்ற எந்தப் பயிரையும் அறிமுகப்படுத்துவதற்கு முன்னர் பி.டி. பருத்தியினால் ஏற்பட்ட அனுபவத்தை முழுமையாகப் பரிசீலிக்க வேண்டிய தேவை உள்ளது.ஏன் இந்த அவசரம்மரபணு மாற்றப்பட்ட கடுகுக்கு ஏன் இந்த அவசரம்? 
இந்தக் கேள்விக்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டியது அவசியமாகும்.இது போன்ற தொழில்நுட்பம் உடைய பயிர்களை தங்கள் வயல்களுக்கு மாற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனரா? 
மிகக்குறைந்த செலவில் விவசாயம் மற்றும் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு உள்ள அணுகுமுறைகள், உற்பத்தியை அதிகரிப்பதற்கான தொழில்நுட்பங்கள் உள்ளிட்டு சிறந்த விவசாய நடைமுறைகள் போன்ற வழிமுறைகள் பயன்படுத்தப்பட்டதா?யதார்த்தம் என்னவெனில் பல மரபணு இல்லாத ஒட்டுப் பயிர்களும் மற்றும் அதிக சாகுபடியாகும் கடுகு வகைகளும் சந்தையில் கிடைக்கின்றன.
விவசாயம் மற்றும் சூழல் சார்ந்த அணுகுமுறைகளை இணைத்து மேற்கொள்ளப்பட்ட விவசாய நடைமுறைகள் அதிகமான கடுகு உற்பத்தியை அளித்துள்ளன. இது கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் விளையும் மரபணு மாற்றப்பட்ட கடுகின் சாகுபடியை விட அதிகமாகும்.
நிலைமை இப்படியிருக்க மரபணு மாற்றப்பட்ட கடுகை அறிமுகப்படுத்த ஏன் இந்த அவசரம்? 
மரபணு மாற்றப்பட்ட கடுகில் மலட்டுத்தன்மை தூண்டி விடப்படுகிறது.
 அது மரபணு ரீதியாக கடுகில் செலுத்தப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துடன் இணைந்து கலக்கப்பட்டுள்ளது.

விதை தயாரிப்பவர்களின் லாப நலன்களுக்கேற்ப இதன் நோக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இது அதிகமான சாகுபடிக்கும் உகந்ததாக இல்லை. 
எனவே விவசாயிகளின் நலன்களுக்கேற்றது என்று பெருமை அடித்துக்கொள்ள முடியாது.ஒரு முறை அறிமுகப்படுத்தப்பட்டால் இது ஏகபோக விதை கம்பெனிகளின் லாபத்திற்கு வழி வகுக்கும். விவசாய - ரசாயன தொழிற்சாலைகளும் பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்று லாபம் ஈட்ட முடியும். 
இதனைத் தொடர்ந்து பொதுத் துறையின் சார்பாக தரப்படும் மரபணு கடுகு மற்றும் பூச்சிக்கொல்லி செலுத்தப்பட்ட பயிர்களும் சரியானது என்றால் தனியார் துறையின் உணவுப் பயிர்கள் மற்றும் பூச்சிக் கொல்லியுடன் வளர்க்கப்படும் பயிர்களும் தாராளமாக அனுமதிக்கப்படும் நிலை இயற்கையாக உருவாகும்.தகவல் வெளியிட மறுக்கும் அரசுமரபணு மாற்றப்பட்ட பயிர்களின் உயிரிப் பாதுகாப்புப் பரிசோதனைகள் குறித்த விபரங்களை மரபணு பொறியியல் அங்கீகாரக்குழுவிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்டும் அது தொடர்ந்து தகவல்களை தர மறுக்கிறது. 
இவை அனைத்தும் ரகசியமான முறையில் மேற்கொள்ளப்படுகின்றன. 
ஏற்கனவே உச்சநீதிமன்றம் கடந்த 2008இல் உயிரிப் பாதுகாப்புத் தகவல்களை பொது வெளியில் முன்வைக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. 2013இல் உச்சநீதிமன்றத்தின் தொழில்நுட்ப நிபுணர் குழு, மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் பாதுகாப்பு குறித்து மரபணு பொறியியல் அங்கீகாரக்குழுவின் முடிவுகள் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. 
மேலும் பல மாநில அரசுகள் மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் களப்பரிசோதனைகளுக்கு எதிரான நிலை எடுத்துள்ளன என்பதையும் புறக்கணிக்க முடியாது ஏனெனில் மரபணு மாற்றப்பட்ட பயிர்களினால் ஏற்படும் மாசு குறித்த அச்சம் இன்று வரை நீடிக்கிறது. 
உச்சநீதிமன்றம் மற்றும் மத்திய தகவல் ஆணையம் ஆகியவற்றின் அமலில் இருக்கும் உத்தரவுகளை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதும் பி.டி. கத்திரிக்காய்க்கு நடத்தப்பட்ட பொது விசாரணைகள் போன்று இதற்கு நடத்த மறுப்பதும் ஒன்றை உறுதிப்படுத்துகிறது. 
அது மத்திய மரபணு பொறியியல் அங்கீகாரக் குழு இது போன்ற பயிர்களை அறிமுகப்படுத்துவதில் ஒரு மோசமான கூட்டணி உள்ளதை காட்டுகிறது.
மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் இந்த முக்கிய விசயத்தில் தெளிவான நிலையை உருவாக்க வேண்டும்.
==========================================================================================

"வெரிகோஸ் வெயின்" (varicose veins) "

பிரச்னைக்கு தீர்வு...

நீண்ட நேரம் நின்று பணி புரியும் பெரும்பாலானவர்களுக்கு "வெரிகோஸ் வெயின்" என்கிற நோய் வர அதிக வாய்ப்புண்டு. 
*
அது போல பலருக்கு கால் தொடைக்கு கீழ்ப்பகுதியிலோ, முட்டிக்காலுக்கு பின்புறத்திலோ, நரம்புகள் முடிச்சிட்டுக் கொண்டதைப் போல இருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.
*
முட்டிக்கால்களுக்கு கீழேயும் இத்தகைய நரம்புமுடிச்சுகள் இருக்கும். இதற்கு தீர்வு உண்டு.

சைப்ரஸ் எண்ணெயை தினந்தோறும் தடவிக்கொண்டு வந்தால் பலன் கிடைக்கும். இந்த சைப்ரஸ் எண்ணெய் வண்டலூர் உயிரியியல் பூங்காவினுள் உள்ள தமிழ்நாடு வனத்துறையின் விற்பனை அங்காடியில் கிடைக்கும்.
*
நிரந்தர தீர்வு காண அத்திக்காயில் இருந்து வெளி வரும் பாலை எடுத்து கால் மூட்டு பகுதியில் நரம்பு முடிச்சு இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். தினமும் 2 மணி நேரம் மருந்து பூச்சு இருக்கட்டும். அதன் பின் வெண்ணீரால் கழுவலாம். காலை நேரம் உகந்தது என்றாலும் உங்கள் வேலை நேரத்திற்கு தக்கபடி தினமும் பூசுங்கள். முழுமையான குணம் கிடைக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். (அத்திக்காய் பால் தடவும் இடங்களில் புண் ஏற்பட்டால் கஸ்தூரி மஞ்சள் பூசலாம்)
*
முதல் 9 நாட்களுக்குள் வலி குறைந்து விடும்,
*
முக்கிய குறிப்பு:- பரோட்டா, மஸ்கத் அல்வா, ஊறுகாய், அப்பளம், ஐஸ்கீரிம் மற்றும் அசைவ உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
*
 குளிந்த நீர் அருந்த வேண்டாம்.
*
48 நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும்.


============================================================================================
ரத்தத்தில் கொலஸ்டிராலைக் குறைக்கும் நல்லெண்ணைய்.!

எள்ளில் இருந்து ஆட்டி எடுக்கப்படும் நல்லெண்ணைய்யை அதிகம் பயன்படுத்துபவர்கள் நாம். இது வெளிப்பூச்சுக்கும், உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது. தென்னிந்தியாவில் அதிகமாக சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணை இதுதான். இந்தியா, சீனா, துருக்கி போன்ற நாடுகளில் எள் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. எள்ளில் வெள்ளை எள், கறுப்பு எள், சிவப்பு எள் என்ற மூன்று வகை உண்டு. மேலும் காட்டெள், சிற்றெள், பேரெள் போன்ற வகைகளும் உண்டு.

* நல்லெண்ணைய், சற்றுக் கசப்பும், சிறிது இனிப்பும், காரத் தன்மையும் கொண்டது. எளிதாக சருமத்துக்குள் ஊடுருவக் கூடியது. அதனால் சருமம் மிருதுவாகவும், போஷாக்குடனும் திகழ உதவுகிறது.

* நல்லெண்ணைய், சருமத்தின் ஈரப்பதத்தைச் சமப்படுத்துகிறது. உடல் வெப்பத்தைத் தணிக்கிறது. ரத்தத்தில் கொலஸ்டிராலைக் குறைக்கிறது.


* நல்லெண்ணைய்யை, 'இயற்கை நமக்கு அளித்த கொடை' என்று தாராளமாகச் சொல்லலாம். அளவில்லாமல் தொடரும் இதன் நன்மைகளே அதற்குக் காரணம். 

நல்லெண்ணைய், புத்திக்குத் தெளிவு, விழிகளுக்குக் குளிர்ச்சி, உடல் பூரிப்பு, வலிமை ஆகியவற்றைத் தருகிறது. 

கண் நோய், தலைக் கொதிப்பு, சொரி, சிரங்கு, புண் முதலியவற்றைத் தணிக்கிறது.

* நல்லெண்ணைய்யை தினமும் இரண்டு அல்லது மூன்று தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால் உடல் பூரிக்கும். 


கோழிமுட்டை வெண்கருவுடன் நல்லெண்ணைய் கலந்து பருக்களின் மீது பூசி வந்தால் கட்டிகளின் வலி நீங்கும்.

* நல்லெண்ணைய் தேய்த்துக் குளித்து வந்தால், கண் சிவப்பு, கண் வலி, கண்ணில் நீர் வடிதல், மண்டைக் குத்தல் போன்றவை நீங்கும் என்று பாரம்பரிய மருத்துவர்கள் கூறுகின்றனர்.


========================================================================================
இன்று,
நவம்பர்-09.

  • கம்போடியா விடுதலை தினம்(1953)
  • உத்தராஞ்சல், இந்தியாவின் உத்திர பிரதேச மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டது(2000)
  • நேபாளத்தில் புதிய மக்களாட்சி அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது(1990)
  • அமெரிக்கா, ஹவாய் தீவின் பியர்ல் துறைமுக உரிமையைப் பெற்றது(1887)
  • டார்ம்ஸ்டாட்டியம் என்ற தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது(1994)


பீகாரில் 20 நாட்கள் ஊர்,ஊராக மோடி தேர்தல் பரப்புரை செய்தும் படு தோல்வி.
                 மாட்டுக்கறி அரசியலும்,மாட்டுத்தீவனமுறைகேடும்   மோதியதில் தீவனமே வென்றது.
========================================================================================



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?