அவதூறும் அலைக்கழிப்பும் !
முன்பு திமுக அமைச்சர்கள் செயல் பாடுகளை விமர்சித்து ஆனந்த விகடன் ஒவ்வொரு வாரமும் மந்திரி,தந்திரி கட்டுரை தொடரை ஆரம்பித்தது.
அதிமுக ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவை பொறுப்பேற்று நான்காண்டுகள் கடந்த பின்னர்
அந்த கட்டுரை தொடர் மீண்டும் ஆனந்த விகடனில் அதிமுக அமைச்சர்கள் செயல்பாடுகளை விமர்சித்து தொடர்ந்து வெளிவந்து கடைசியில் முதல்வர் ஜெயலலிதா செயல்பாடுகள்,சாதனைகள்[?]உடன் முடிவடைந்துள்ளது.
முன்பு திமுக அமைச்சர்கள்,ஸ்டாலின்,கருணாநிதி ஆகியோரை ஆனந்த விகட ன் விமர்சித்த போது அவர்கள் தங்கள் தரப்பு செயல்பாடுகள் பற்றி பதில்,விளக்கங்கள் தான் தந்தனர்.ஆனால் அதே தொடரை அதிமுகவில் ஆரம்பித்த போது மிரட்டல்கள்தான் வந்தது.அதை முதல்வருக்கும் விகடன் தொடர்ந்த போது
இங்குதான் பிரச்னையே.வந்தது விளக்கங்கள் அல்ல.அவதூறு வழக்குகள்.
110,அல்லது காணொளி மூலம் சொன்ன,அறிவித்த திட்டங்கள் 99% தலைமறைவாகிவிட்டதை செய்வீர்களா?செய்வீர்களா? என்ற தொனியில் கட்டுரை முடிந்தது.ஜெயலலிதாவை சென்றடைய ,வழக்கமான அவதூறு வழக்கை அரசு தொடர்ந்துள்ளது.
ஆனந்த விகடன் மட்டுமில்லாமல்,அதை மீள் பிரசுரம் செய்த முரசொலி ஆசிரியர்கள் என் கலைஞர்,செல்வம் ஆகியோர் மீதும் பாய்ந்துள்ளது.
நல்ல வேளை கோபன் மீது பாய்ந்த தேசிய பாதுகாப்பு சட்டம் ஜெயலலிதா நினைவுக்கு வரவில்லை.
ஆனால் அவதூறு வழக்கு இந்த கட்டுரை பற்றி அறியாத அடிமட்ட மக்களுக்கும் அக்கட்டுரை சென்றடைய வாய்ப்பளித்துள்ளதுதான் உண்மை.அதற்கு முன்னரே சமூக இணைய தளங்கள் மூலம் பலரையும் சென்று சேர்ந்துள்ளது கட்டுரை.
அந்த ஆனந்த விகடன் வெளியிட்ட கட்டுரை வந்த இதழ் பொது மக்களை சென்றடைய வெண்டும் என்று திமுகவினர் ஆங்காங்கே இலவசமாக ஆனந்த விகடனை மக்களுக்கு கொடுத்து படிக்க கூறினர்.
அதற்கு பலத்த வரவேற்பு இருந்ததால் அக்கட்டுரையை தனியாக அச்சடித்து தினத்தந்தி,தினமலர் [தினகரன் ஏற்கனவே திமுக சார்பு பத்திரிக்கை என்பதால் அதற்கில்லை]நாளிதழ்களுடன் வீடுகளுக்கு கொடுக்க திமுகவினர் கொடுத்துள்ளனர்.
இதனால் அரசு எரிச்சலடை ந்துள்ளது.
அதிகாலை தினசரி பத்திரிகைகள் ஏற்றி வந்த வாகனங்களை மறித்து சோதனையிட்ட போலீசார், தமிழக அரசுக்கு எதிராக தி.மு.க., சார்பில் வழங்கப்படும் நோட்டீஸ்களை பத்திரிகைகளுக்குள் வைக்கக்கூடாது எனக் கூறி, வாகனங்களை சோதனையிட்டனர்.
பத்திரிகைகள் பிரித்து அனுப்பப்படும் பகுதிகளுக்கு வந்த அ.தி.மு.க.,வினர், தி.மு.க., சார்பில் வழங்கப்படும் நோட்டீஸ்கள் உள்ளனவா என சோதனையிட்டு தங்கள் பங்குக்கு அவர்களும் எச்சரிகை விடுத்துச் சென்றனர்.
===========================
நீண்ட அலைக்கழிப்பு,கோபமான பேட்டிக்கு பின்னர் தி.மு.க., சார்பில், மழை நிவாரண நிதிக்கான, ஒரு கோடி ரூபாய் காசோலையை, அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலின், , தலைமை செயலகத்தில், நிதித்துறை செயலர் சண்முகத்திடம் நேற்று வழங்கினார்.
இயக்குனர் விக்ரமன் தலைமையில் இயக்குனர்கள் தங்கள் உடல் தான விளம்பர தாளை ஜெயலலிதாவிடம் கொடுத்து ஆசி பெற்றனர்.
அதற்கு காலம் ஒதுக்கிய முதல்வர் மக்கள் நிவாரண நிதியை பெற காலம் ஒதுக்காதது ஏனோ?
அது கூட பரவாயில்லை தமிழக தலைமைச் செயலாருக்கு கூட அந்த திமுக காசோலையை வாங்க நேரம் இல்லை.
ஆனால் சட்ட விரோதமாக தலைமை செயலகத்தில் நடந்த அதிமுக மக்களவை உறுப்பினர்கள் கூட்டத்தில் சம்பந்தமே இல்லாமல் தலைமைச்செயலர் கலந்து கொண்டிருக்கிறார்.
காசோலை வாங்க முக்கியவர்கள் யாரும் இல்லாமல் கடைசியாக நிதித்துறை செயலரிடம் கொடுத்து வெளியெ வந்த ஸ்டாலின் "ஜெயலலிதா ஆட்சி யில் மரபுகள் மீறப்படுகின்றன. தலைமைச் செயலகத்தில், கட்சி, எம்.பி.,க்கள் கூட்டத்தை நடத்தி உள்ளார்; கடைசியாக நடந்த கூட்டத்தில் தலைமை செயலரும்
பங்கேற்றுள்ளார்.அது எந்த வகையில் சரியான நடைமுறையாகும்.இக்கூட்டத்தை அவர்கள் அதிமுக தலைமைக்கழகத்தில் அல்லவா நடத்த வெண்டும்?"
என்று கேள்வி எழுப்பினார்.
============================================================================================
2011 ஆகஸ்டு மாதம் தமிழக ஆளுநராக பதவியேற்ற ரோசய்யா, இந்த நான்காண்டுகளில் எவ்வளவு செலவு செய்திருக்கிறார் என்ற விபரத்தை கோவை வழக்கறிஞர் திரு.லோகநாதன் தகவல் பெரும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்றிருக்கிறார்.
அதன்படி:
💥156.14 ஏக்கர் பரப்பளவு கொண்ட கிண்டி ராஜ்பவன் வளாகம் ஆளுநர் அலுவலகம், வீடு, ஊழியர் அலுவலகங்கள், குடியிருப்புகள் உள்ளடக்கியது.இவற்றை பராமரிக்க, 1.27 கோடி.
💥2011 ஆகஸ்டு முதல் 2015 மே மாதம் முடிய மின் கட்டணம் 36.24 லட்சம்.
💥கடுமையான மின்வெட்டு காலத்திலும் மின் பயன்பாடு உச்சத்தில் இருந்திருக்கிறது.
💥சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் மெர்சிடஸ் பென்ஸ், ஸ்கோடா உட்பட நான்கு கார்கள் புதிதாக வாங்கப் பட்டுள்ளன.
💥இவற்றின் பராமரிப்பு செலவு மட்டும் 11லட்சம் ரூபாய்.
💥எரிபொருள் செலவு 52 லட்ச ரூபாய்.
💥ஏற்கனவே இருந்த 3 கார்கள், ஆட்டோ பராமரிப்பு செலவு 25 லட்ச ரூபாய்.
💥நான்காண்டு தொலைபேசிக்கட்டணம் சுமார் 36 லட்ச ரூபாய்.
💥கிண்டி ராஜ்பவனில் பணியாற்றும் 83 பேருக்கு மாதச்சம்பளமாக ரூபாய் 22.67 லட்சம்.
💥உதகையில் 86.72 ஏக்கர் பரப்பளவு உள்ள இடத்தில் மாளிகையில் பணியாற்றும் 24 பேருக்கு மாதச் சம்பளமாக ரூபாய் 6.47 லட்சம்.
💥ஆளுநரின் பயணச்செலவுக்கு ரூ.1.22 கோடி..
💥470 முறை விமானப் பயணம்.
💥1400க்கும் மேற்பட்ட விழாக்களில் அரசு விழாக்கள் 15% மட்டுமே.
💥ஆளுநர் பங்கேற்ற தனியார் நிகழ்ச்சிகள் 85%..இதற்கு செல்லவும் அரசு வாகனங்களே பயன் படுத்தப்பட்டிருக்கின்றன.
💥தனியார் நிகழ்ச்சிகளில் பெறப்பட்ட பரிசுகள் பற்றிய விபரங்கள் கொடுக்கப் படவில்லை..
ஆதாரம்: "ஜூனியர் விகடன் 11/11/2015 இதழ்.
மக்களின் வரிபணத்தை ஆடம்பரமாக செலவு செய்து வாழும் ஆளுநரும் நமக்கு தேவையில்லை. இந்த ஆளுநர் பதவியும் தேவையில்லை. இப்பதவியை நீக்க சட்ட திருத்தத்தை நாம் அனைவரும் கோர வேண்டும்.
[முன்பே அறிஞர் அண்ணா ஆட்டுக்கு தாடியும்நாட்டுக்கு கவர்னரும், வீண் என்றுள்ளார்]
===================================================================================
இன்று,நவம்பர்-25.
- சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்
- ஆல்பிரட் நோபல், டைனமைட்டுக்கான காப்புரிமம் பெற்றார்(1867)
- சுரிநாம் விடுதலை தினம்(1975)
- பொஸ்னியா ஹெர்செகோவினா தேசிய தினம்(1943)
சேலம் கலெக்டர் சம்பத், சமீபத்தில் பத்திரிகை யாளர்களுக்கு, பேட்டி அளித்தபோது, 'முதல்வர் அம்மா உத்தரவின் படி, சேலம் மாவட்டத்தில் மழை அதிக அளவு பெய்துள்ளது' என்றார்;
இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது; சமூக வலைதளங்களில், அந்த காட்சிகள் பகிரப்பட்டு, பலரும் கிண்டலடித்தனர்.
இந்நிலையில், காஞ்சிபுரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் கோ.ரா.ரவி என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், சேலம் கலெக்டருக்கு, மனு அனுப்பி உள்ளார்.
அதில், 'உங்கள் பேட்டியை, 'டிவி'யில் பார்த்தேன். முதல்வர் உத்தரவின் படி மழை பெய்ததாக தெரிவித்துள்ளீர்கள்.
அதற்கான முதல்வரின் உத்தரவு நகலை தாருங்கள்' என,கேட்டுள்ளார். அந்த கேள்விக்கு, கலெக்டர் சம்பத் என்ன பதில் அளிக்கப்போகிறார் எனத் தெரியவில்லை.
=====================================================================================
பார்லி கேள்வி ஏஜன்ட்களை நாடும் அ.தி.மு.க., எம்.பி.,க்கள்: வெற்று படிவங்களில் கையெழுத்து
பார்லிமென்டில் கேள்விகள் எழுப்ப, ஏஜன்ட்களை தேடிச் செல்கின்றனர் அ.தி.மு.க., - எம்.பி.,க்கள். ஏதாவது கேள்விகளை நிரப்பிக் கொள்ளும் வகையில், கட்டுக்கட்டாக வெற்றுக் காகிதங்களில் கையெழுத்துப் போட்டும் கொடுத்து வருகின்றனர்.
பார்லிமென்டில், எம்.பி.,க்கள் கேள்விகள் கேட்க வேண்டுமெனில், அந்த கேள்விகளை, 15 நாட்களுக்கு முன், பார்லி., செயலகத்துக்கு அனுப்ப வேண்டும். பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடர் நாளை துவங்க உள்ளதால், நவ., 16 முதல், எம்.பி.,க்கள் பலர் கேள்விகளை அனுப்பி வருகின்றனர்.நட்சத்திர குறியிட்ட கேள்வி கள் ஐந்து, நட்சத்திர குறியிடாத கேள்விகள் ஐந்து என, நாள் ஒன்றுக்கு, 10 கேள்விகளை ஒவ்வொரு எம்.பி.,யும் அளிக்க உரிமையுண்டு.
இந்தக் கேள்விகள் எல்லாம், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு நாளும், பார்லிமென்ட் கேள்வி நேரத்தின் போது, கேட்கப்படுவது வழக்கம்.

தேர்வு செய்யப்படும் கேள்விகளுக்கான பதில்கள், சம்பந்தப்பட்ட எம்.பி.,க்களுக்கு அமைச்சகம் சார்பில், முன்னதாகவே வழங்கப்படும். அதனடிப்படையில், துணை கேள்விகளையும் எம்.பி.,க்கள் எழுப்பலாம். பெரும்பாலும், தங்களது சொந்த மாநிலம் தொடர்பான திட்டங்கள் குறித்தே, எம்.பி.,க்கள் கேள்விகள் எழுப்புவது வழக்கம். ஆனால், தமிழக எம்.பி.,க்களின் கேள்விகள் மட்டும், கடந்த மூன்று கூட்டத் தொடர்களாக, பெரும்பாலும் பிற மாநிலங்கள் பற்றியதாகவே உள்ளன.
தமிழக திட்டங்கள் பற்றி எவ்வளவோ கேள்விகள் எழுப்ப வாய்ப்பு இருந்தும், ஜார்க்கண்ட் சுரங்க திட்டம், பீஹார் ரயில் விபத்து, வடகிழக்கு மாநிலங்களின் நீர்மின் திட்டங்கள், என்.ஜி.ஓ.,க்களுக்கான மத்திய அரசு நிதி ஒதுக்கீடு என, தமிழகத்துக்கு சம்பந்தமே இல்லாத கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளன. இதற்கான காரணம் என்னவென ஆராய்ந்த போது, பார்லிமென்டில் தாங்கள் எழுப்ப வேண்டிய கேள்விகளை எழுதித் தருவதற்கு, ஏஜன்ட்கள் சிலரை, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் நாடியிருக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து, தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:கேள்விகளை தயாரிப்பது உட்பட, பார்லிமென்ட் அலுவல்களுக்கு உதவிட, ஒவ்வொரு எம்.பி.,க்கும், ஒரு உதவியாளர் வைத்துக் கொள்ள அனுமதி உண்டு. இதற்கு, 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. அப்படி உதவியாளர்களை நியமித்து, சம்பளம் தர மனமில்லாத எம்.பி.,க்கள், தங்களின் பணிகளை சுருக்கமாக செய்து கொள்ள, குறுக்கு வழிகளை நாடுகின்றனர். இதுபோன்ற எம்.பி.,க்களை குறிவைத்தே, டில்லியில், பல ஏஜன்டுகள் உள்ளனர்; அவர்களில் பலர் மத்திய அரசு ஊழியர்கள். தங்களின் அரசு பணியோடு, பார்லிமென்ட் நெளிவு சுளிவுகளுக்கு ஏற்ப, பிற வேலைகளையும் செய்து தந்து, எம்.பி.,க்களிடம் கணிசமான தொகையை வாங்கிக் கொள்கின்றனர்.எண்ணெய் உற்பத்தி, ரியல் எஸ்டேட், தொலை தொடர்பு, மின் உற்பத்தி போன்ற துறைகளில் ஈடுபட்டுள்ள பெரிய தனியார் நிறுவனங்கள், அரசிடமிருந்து தகவல்களை பெற, எம்.பி.,க்களை நாடுகின்றன.
அந்த நிறுவனங்கள் கேட்கும் விவரங்களை, பார்லிமென்டில் கேள்வி எழுப்பி, பதில் பெற்றுத் தரும் எம்.பி.,க்களுக்கு, கணிசமான பணத்தை லஞ்சமாகவும் தருகின்றன. எம்.பி.,க்களை நேரடியாக அணுக முடியாத சில நிறுவனங்கள், இதற்கென, ஏஜன்ட்களையும் வைத்துள்ளன.
அ.தி.மு.க., - எம்.பி.,க்களில் ஒரு சிலர் மட்டுமே, சுயமாகவோ அல்லது உதவியாளர் மூலமாகவோ கேள்விகளை தயார் செய்து பார்லிமென்ட் செயலகத்திற்கு அனுப்புகின்றனர். மற்றவர்கள் எல்லாம், இப்படிப்பட்ட ஏஜன்ட்களிடம் சரண்டராகி விடுகின்றனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பார்லி., முத்திரையுடன்...:
பார்லிமென்டில் எழுப்ப வேண்டிய கேள்விகளை எழுதித் தருவதற்கு என, எம்.பி.,க்களுக்கு, பார்லி., முத்திரையுடன் கூடிய படிவங்கள் தரப்படும். அதில், பெயர், தொகுதி, டிவிஷன் எண், தேதி போன்ற விவரங்களுக்கு பின், கேள்வி கேட்பதற்கு என, பெரிய வெற்றிடம் விடப்பட்டிருக்கும். அதில் தான், எம்.பி.,க்கள் தங்களின் கேள்விகளை எழுதி கையெழுத்திட்டு, பார்லிமென்ட் செயலகத்தில் உள்ள பெட்டியில் போட வேண்டும் அல்லது செயலகத்திற்கு அனுப்ப வேண்டும். இந்த நடைமுறையை பின்பற்றாமல், தமிழக எம்.பி.,க்கள் பலர், கேள்விக்கான வெற்று படிவங்களில் கையெழுத்திட்டு, அப்படியே ஏஜன்ட்களிடம் கொடுத்து விடுகின்றனர். இப்படி கையெழுத்திடப்பட்ட நுாற்றுக்கணக்கான படிவங்கள், பல ஏஜன்ட்களிடம் உள்ளன.
குவிந்து கிடக்கின்றன:
செஞ்சிலுவை சங்கத்தில் பணியாற்றும் ஒருவரிடம், தமிழக டெல்டா பகுதி, தென் கடலோர பகுதி, மேற்கு தொடர்ச்சி மலை பகுதி, முட்டை, பனியன் மற்றும் சினிமா ஷூட்டிங்கிற்கு பெயர் பெற்ற நகரங்கள் மற்றும் மாவட்டங்களில் உள்ள லோக்சபா தொகுதிகளைச் சேர்ந்த எம்.பி.,க்கள் கையெழுத்திட்ட படிவங்கள் ஏராளமாக குவிந்து கிடக்கின்றன. செஞ்சிலுவை சங்கத்தைச் சேர்ந்த அந்த நபருக்கு, ஒவ்வொரு கூட்டத்தொடரின் போதும், கேள்விகள் எழுதிப்போட, ஒவ்வொரு எம்.பி.,யும், 10 ஆயிரம் ரூபாய் தருகின்றனர். பட்ஜெட் கூட்டத் தொடரின் போது மட்டும், 20 ஆயிரம் ரூபாய் கொடுக்கின்றனர். இவரைப் போல, இன்னும் பல ஏஜன்ட்களும் உள்ளனர். திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு இல்லாதது மட்டுமின்றி, கூட்டத்தொடர் முடிந்ததும், இவ்வளவு கேள்விகளை பார்லிமென்டில் கேட்டவர் என்ற பெருமையை பெறவும், எம்.பி.,க்கள் பலர் இப்படி செய்கின்றனர்.
பார்லிமென்டில் கேள்விகள் கேட்க, எம்.பி.,க்கள் லஞ்சம் வாங்கிய விவகாரம், சில ஆண்டுகளுக்கு முன், பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது. அதுமட்டுமின்றி,
முந்தைய ஆட்சியின் போது, வடகிழக்கு மாநில எண்ணெய் நிறுவனம் ஒன்றுக்காக, சிபாரிசு கடிதம் வழங்கிய குற்றச்சாட்டில், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள், இருவர் சிக்கினர். எனவே, வெற்றுத் தாள்களில் கையெழுத்துப் போட்டுக் கொடுக்கும் எம்.பி.,க்களால் பிரச்னை வரும் முன், அ.தி.மு.க., தலைமை சுதாரித்துக் கொள்வது நல்லது.என்கின்றன டில்லி வட்டாரங்கள்.

நன்றி:தினமலர்.