கப்பலோட்டிய தமிழன்

 வ.உ. சிதம்பரனார்

 
வாணிபம் செய்வதற்காக இங்கி லாந்தில் இருந்து இந்தியாவிற்கு வந்த ஆங்கிலேயர் இங்கு வலிமை மிக்க ஆட்சி இல்லாத நிலையைப் பயன் படுத்திக் கொண்டு  மெல்ல மெல்ல அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டனர்.

ஆங்கில வல்லாட்சியின் இரும்புப் பிடியில் இருந்து இந்திய நாட்டை விடுவிக்க ஆயிரம் ஆயிரம் தியாகிகள் தங்கள் வியர்வை, கண்ணீர், இரத்தத்தைச் சிந்தி அறப்போரில் ஈடுபட்டனர். அத்தகைய புகழ்மிக்க தியாகிகளில் உன்னதமான இடத்தைப் பெற்றவர் கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் கேரளாவில் உள்ள வைக்கத்தில் ஜாதி ஆணவத்தையும், தீண்டாமையையும் எதிர்த்து அறப்போர் நடத்திய தந்தை பெரியார் பிறப்பதற்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்னால் 1872 செப்டம்பர் 5ஆம் நாள் உலகநாதப் பிள்ளைக்கும் பரமாயி அம்மையாருக் கும் ஓட்டப்பிடாரத்தில் பிறந்தார்.

ஆங்கில வல்லாட்சியை எதிர்த்து முதல் முழக்கமிட்ட வீரபாண்டிய கட்ட பொம்மன் பிறந்த ஊர் ஓட்டப்பிடாரம். தான்பிறந்த மண்ணில் தொடக்கக் கல்வியை முடித்த வ.உ.சி. தூத்துக் குடியில் கால்டுவெல் பள்ளியில் தனது மெட்ரிகுலேஷன் கல்வியைப் பயின்று முடித்தார்.

1894இல் திருநெல்வேலியில் நடை பெற்ற வழக்குரைஞர் தேர்வில் வெற்றி பெற்று 1895 முதல் கோவில்பட்டி வழக்குரைஞராகப் பணியாற்றத் தொடங்கினார். ஏழை எளியோர்மீது காவல் துறையினர் பொய் வழக்கு களைத் தொடுத்துள்ளார்கள் என்று தெரிந்தால் அம்மக்களிடம் பணம் பெறாமல் வழக்குகளை நடத்தி வெற்றி பெற்று ஏழைகளுக்கு உதவி செய்வார்.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில், சேதுபதி சமஸ்தானத்தைச் சேர்ந்த பாண்டித்துரைத் தேவரைத் தலைவராகக் கொண்டு மதுரைத் தமிழ்ச்சங்கம் இயங்கி வந்தது. 1905 மே மாதம் வ.உ.சி. சங்கத்தில் ஓர் உறுப் பினராகச் சேர்ந்தார். பாண்டித்துரைத் தேவரின் நட்பு வ.உ.சி.க்கு சுதேசிக் கப்பல் நிறுவனம் அமைக்கப் பேருதவி யாக இருந்தது. அக்காலத்தில் தூத்துக் குடி நகருக்கும் இலங்கைக்கும் இடையே ஆங்கிலேயருக்குச் சொந்தமான பிரிட் டிஷ் இந்தியா ஸ்டீம் நேவிகேஷன் என்ற நிறுவனத்தின் கப்பல்களே வணிகப் போக்குவரத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தன.

ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை ஒழிக்க எண்ணிய வ.உ.சி. 1906 அக்டோபர் 16ஆம் நாள் சுதேசிக் கப்பல் நிறுவ னத்தைப் பதிவு செய்தார். நிறுவனத்தின் தலைவராகப் பாண்டித்துரைத் தேவரும், வ.உ.சி. செயலராகவும் பதவி ஏற்றுக் கொண்டனர்.

வ.உ.சி. ஷா லைன் ஸ்டீமர்ஸ் என்ற நிறுவனத்திடமிருந்து கப்பலை குத்தகைக்கு வாங்கி தூத்துக் குடிக்கும், சிங்களத் தீவிற்கும் இடையே கப்பல் போக்குவரத்தைத் தொடங்கி னார். இதைக் கண்டு ஆங்கிலேய நிறு வனத்தாருக்குப் பொறாமை ஏற்பட்டது. ஷா லைன் ஸ்டீமர்ஸ் நிறுவனத்தாரை மிரட்டிக் கப்பல் குத்தகையை ரத்து செய்ய வைத்து, குத்தகைக்குக் கொடுத் திருந்த கப்பலைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வைத்தது.

சுதேசிக் கப்பல் நிறுவனத்திற்கு என்று வ.உ.சி.யின் விடாமுயற்சியால் காலிபா லாவோ என்ற இரு கப்பல்கள் சொந்தமாக வாங்கப்பட்டன. இதற்கு தூத்துக்குடி வணிகப் பெருமக்கள் தங்களால் ஆன நிதி உதவி அளித்தனர். மும்பை, கொல்கத்தா போன்ற வட இந்திய நகரங்களில் உள்ள வணிகர் களும் சுதேசிக் கப்பல் நிறுவனத்திற்கு நிதி வழங்கினார்கள். 1907 சூன் மாதம் முதல் தூத்துக்குடிக்கும், கொழும்பிற்கும் இடையே பயணக் கப்பல்கள் ஓடத் தொடங்கின. வ.உ.சி.யின் சாதனையைத் தேசியப் பத்திரிகைகள் எல்லாம் புகழ்ந்தன.
தமிழர்கள் அனைவரும் இன உணர்வுடன் சுதேசிக் கப்பலிலேயே சிங்களத் தீவிற்குப் பயணம் செய்தனர். தங்களின் வாணிபப் பொருள்களையும் சுதேசிக் கப்பலிலேயே அனுப்பி வைத்தார்கள்.

ஆங்கிலேயக் கப்பல் நிறுவனத்தார் சுதேசிக் கப்பல் நிறுவனத்தை அழிக்கப் பல்வேறு வழிகளில் முயற்சித்தனர்.

இந்தியா ஆங்கிலேயரின் ஆதிக்கத் தில் கட்டுப்பாட்டு அடிமை நாடாக இருக்கும் வரை சமூக, கல்வி, பொருளா தாரத் துறைகளில் முன்னேற முடியாது என்பதை வ.உ.சி. அறிந்து கொண்டார். நாட்டு மக்களிடையே விடுதலை வேட்கையை ஏற்படுத்தி வெள்ளையர் ஆட்சியை இந்திய மண்ணிலிருந்து அகற்ற அரும்பாடுபட்டார். தனது நண்பர் சுப்பிரமணிய சிவாவுடன் இணைந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடு பட்டார்.

காவல் துறை அனுமதி யின்றிப் பொதுக் கூட்டம் நடத்தியது அரசுக்கு எதிராகப் பொது மக்களைத் தூண்டி  விட்டது ஆகிய குற்றங்களுக் காக மாவட்ட நீதிமன்றத்தில் வ.உ.சி. மீது வழக்கு தொடரப்பட்டது. 1908 ஜூலை 7ஆம் நாள் வெள்ளைக்கார நீதிபதி வ.உ.சி.க்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்!

இந்தியா முழுதும் தண்டனையைக் கேட்டு சீற்றத்தால் குமுறி எழுந்தது. நாட்டின் புகழ் மிக்க பத்திரிகைகளான இந்து, இந்தியன் பேட்ரியட், திராவிட தீபம், சுவராஜ், நவயுகா ஆகியவை தண் டனையை வன்மையாகக் கண்டித்தன. தனக்கு விதிக்கப்பட்ட 40 ஆண்டுகள் ஆயுள் தண்டனையை ரத்து செய்யக் கோரி வ.உ.சி. சென்னை உயர்நீதிமன் றத்தில் மேல் முறையீடு செய்தார். தீர்ப்பில் ஆயுள் தண்டனை  6 ஆண்டுக் கடுங்காவல் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

சிறையில் வெள்ளைக்கார சிறை அலுவலர்கள் செக்கின் நுகத்தடியைச் சங்கிலியால் பிணைத்து சங்கிலியை இடுப்பிலே இறுகக் கட்டி அதைக் கைகளிலே பூட்டி வ.உ.சி.யை மாடு போல் செக்கை இழுக்க வைத்தார்கள்.

கோயம்புத்தூர் மற்றும் கண்ணனூர் சிறைகளில் தாங்கொணாத் துன்பங் களை அனுபவித்து விட்டு 1912 டிசம்பர் மாதம் கண்ணனூர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.

தனது 60ஆம் ஆண்டு நிறைவுக்கு ஆயிரம் ரூபாய் நிதி வழங்கிய டாக்டர் பி. வரதராஜுலு நாயுடுவுக்கு வ.உ.சி. தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

1916 நவம்பர் 20இல் தமிழகத்தில் பார்ப்பனரல்லாதார் சங்கத்தின் முன் னோடியான கூட்டம் சென்னையில் நடந்தது. 1916 டிசம்பர் 20-இல் பார்ப் பனர் அல்லாதார் பிரகடனம் வெளிப் பட்டது. 1917 செப்டம்பர் 20_இல் பார்ப்பனர் அல்லாத காங்கிரசாரின் முதல் கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் வ.உ.சி. முக்கியப் பங்கு எடுத்துக் கொண்டார்.

1920 சூன் 21இல் திருநெல்வேலியில் காங்கிரசின் மாநில மாநாடு நடை பெற்றது. அம்மாநாட்டில் வ.உ.சி. வர லாற்று முக்கியத்துவம் வாய்ந்த வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். பார்ப்பனர் அல்லா தாருக்கு அரசு ஊழியத்தில் போதுமான அளவு பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

1927 சூலையில் கோயம்புத்தூரில் பார்ப்பனர் அல்லாதார் அமைப்பின் மாநாடு நடைபெற்றது. தமிழ்நாட்டில் காங்கிரசைத் தோற்றுவித்தவர்கள் பார்ப்பனர் அல்லாதார் என்றும் ஆனால் தற்போது காங்கிரசின் அதி காரம் பார்ப்பனர் கையில் இருக்கிறது என்றும் அதைப் பெரும்பாலோராக உள்ள பார்ப்பனர் அல்லாதார் திரும்பப் பெற வேண்டும் என்றும் பார்ப்பனர் அல்லாதார் அமைப்பினர் வலியுறுத் தினர்.

1927 நவம்பர் மாதம் சேலம் மாவட்ட காங்கிரஸ் மாநாடு வ.உ.சி. தலைமையில் நடைபெற்றது. வெள்ளை யர் ஆட்சியில் தமிழர்களைக் குறிக்க அரசு ஆவணங்களில் சூத்திரன் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. அந்தச் சொல் அரசு ஆவணங்களிலிருந்து அகற் றப்பட வேண்டும் என்று அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது.

வ.உ.சி. விடுதலைப் போரில் தீவிரப் பங்கு எடுத்ததைப் போல் தமிழுக்கும் புகழ்மிக்க தொண்டு செய்துள்ளார். திருவள்ளுவரின் திருக்குறளுக்கு எளிய உரை எழுதி வெளியிட்டார்.

1936ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் நாள் சிதம்பரனார் இயற்கை எய்தினார். தமிழகத்தின் தலைநகர் சென்னைத் துறைமுகத்தின் வாயிலில் உள்ள சிதம்பரனார் சிலையும், புதுச்சேரி சட்டமன்றத்திற்கு எதிரில் உள்ள அவர் சிலையும் அவரின் தியாக வாழ்வை என்றென்றும் தமிழர்களுக்கு நினை வூட்டுவனவாகும்.
- இர. செங்கல்வராயன்
=======================================================================================
இன்று,
நவம்பர்-18.
  • கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை இறந்த தினம்(1936)
    ஓமன் தேசிய தினம்
அழுத்தும் பட்டன்களை கொண்ட முதல் தொலைப்பேசி விற்பனைக்கு வந்தது(1963)
  • தென்னாப்பிரிக்காவில் புதிய அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது(1993)



========================================================================================



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?