உடனே குணம். உடலுக்குக் கேடு..?
டாக்டர்களின் கையெழுத்து மருந்துக் கடைக்காரருக்கு மட்டுமே புரிவது ஏன்?
“என் வசூல் முடிஞ்சிருச்சு. இப்ப உன் நேரம்'' என்று டாக்டர், மருந்துக் கடைக்காரருக்கு உணர்த்துகிறாராம்.
வாட்ஸப்பில் வந்தது,
நகைச்சுவையாக இருந்தாலும், இன்றைய நிஜமும் இதுதான்.
சேவையாக நினைத்துச் செய்யப்பட வேண்டிய மருத்துவம், இன்று பணம் கொழிக்கிற பிசினஸ். மக்களிடமிருந்து பணத்தைச் சுரண்ட, மருத்துவர்கள் கையாள்கிற டெக்னிக்குகள் சொல்லி மாளாதவை. மக்களுக்கு வேண்டியதெல்லாம் நோய் உடனடியாக குணமாக வேண்டும்.
அப்படிக் குணப்படுத்துகிற டாக்டர் அவர்களைப் பொறுத்த வரை கைராசிக்காரர். ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வரும் போதே நோய் குணமான உணர்வை உண்டாக்கும் மருத்துவர்கள் இன்று எக்கச்சக்கம். அதற்கு அவர்களது திறமையோ, அனுபவமோ காரணமில்லை. பின்னே..?அவர்கள் தரும் ஸ்டீராய்டு
கலந்த மருந்துகள்!
ஸ்டீராய்டு என்பதென்ன ?
ஸ்டீராய்டு என்பது நோயைக் குணமாக்கும் மருந்தல்ல. மறைக்கும் மருந்து. ஆஸ்துமா அதிகமாகி, திணறத் திணற ஆஸ்பத்திரிக்கு போகும் ஒரு நபர், ஸ்டீராய்டு கலந்த மருந்துகள் கொடுக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே சராசரி நிலைக்குத் திரும்புவார். அந்த நேரத்துக்கு அவரது ஆஸ்துமா தீவிரம் மறைக்கப்பட்டதே தவிர, குணமானதாக அர்த்தமில்லை. ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு எடுத்துக் கொண்டால் உண்டாகும் பயங்கரங்கள் ஏராளம்.
அனாபாலிக் ஸ்டீராய்டு, கார்டிகோ ஸ்டீராய்டு என ஸ்டீராய்டில் இரண்டு வகைகள் உள்ளன. முதல் வகை பெரும்பாலும் விளையாட்டு வீரர்களால் உபயோகப்படுத்தப்படுவது.
இது அவர்களுக்கு உடனடியாக ஒரு தெம்பை, உற்சாகத்தை, தசைகளுக்கு வலுவைத் தரக் கூடியது.விளையாட்டு வீரர் பென் ஜான்சன், போட்டியின் போது போதை மருந்து உட்கொண்டதாகக் கண்டுபிடிக்கப்பட்டு, சர்ச்சைக்குள்ளானது கூட இந்த வகை ஸ்டீராய்டு காரணமாகத்தான்.
இரண்டாவது வகை ஸ்டீராய்டு, மருத்துவத் துறையில் உபயோகிக்கப்படுவது. இதுவும் அளவுக்கு மீறினால் ஆபத்தே. இந்தி நடிகர் அம்ஜத் கானை ஞாபகம் வைத்திருப்பவர்களுக்கு அவரது மாமிச மலை போன்ற உடல் கட்டாயம் நினைவை முட்டும். உடல் நலக் கோளாறு ஒன்றுக்கு அவர் நீண்ட நாட்களாக உட்கொண்ட ஸ்டீராய்டு கலந்த மருந்துகள்தான் அதற்குக் காரணம் என்பது பிறகு கண்டறியப்பட்டது.
நம்மூரில் நடிகர் ஒருவர் முதுகுவலிக்காக உட்கொண்ட மருந்துகள் கூட ஸ்டீராய்டு கலந்தவையாம். அதனால்தான் இடையில் சில நாட்களுக்கு அவரது உடல் எக்குத்தப்பாக பெருத்துப் போனதாக சினிமா வட்டாரத்தில் ஒரு பேச்சு உண்டு.
இப்படி நிறைய உதாரணங்களைப் பட்டியலிடலாம் ஸ்டீராய்டு பாதிப்புகளுக்கு.
‘‘ஸ்டீராய்டு மருந்துகள் நல்லதா, கெட்டதா என்பதைத் தெரிந்துகொள்ளும் முன் ஸ்டீராய்டு என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்வோம்.
.‘‘தைராய்டு, இன்சுலின் போல நம் உடலில் சுரக்கும் ஒருவகை ஹார்மோன்தான் ஸ்டீராய்டு(Steroid). இந்த ஸ்டீராய்டு ஹார்மோனின் அளவு உடலில் குறையும்போது அல்லது அதிகமாகும்போது உடல்நலனில் பல சிக்கல்கள் ஏற்படுகிறது. உடல்நலக் குறைவான அந்த நேரங்களில் ஸ்டீராய்டு ஹார்மோனின் அமைப்பில் உருவான மாத்திரைகளையோ, ஊசிகளையோ எடுத்துக்கொண்டு உயிரைக் காப்பாற்றிக் கொள்கிறோம் இவைதான் ஸ்டீராய்டு மருந்துகள்.
இந்த ஸ்டீராய்டு ஹார்மோன் நம் உடலில் வயிற்றுப் பகுதியில் சிறுநீரகங்களுக்கு மேல் அமைந்துள்ள அட்ரீனல் சுரப்பியிலும், இனப்பெருக்க மண்டலத்தில் இருக்கும் விதைப்பை மற்றும் கருப்பைகளிலும் தயாராகிறது. அட்ரினல் சுரப்பியில் சுரக்கும் ஹார்மோனை கார்டிகோ ஸ்டீராய்டு(Cortico steroid) என்கிறோம்.
பொதுவாக நாம் ஸ்டீராய்டு என்று சொல்வது இந்த கார்டிகோஸ்டீராய்டு ஹார்மோனைதான்.
உடலில் சோடியம் அளவைப் பராமரிப்பதில் கார்டிகோ ஹார்மோன் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதில் உற்பத்தியாகும் இன்னொரு முக்கிய ஹார்மோனான கார்டிசோல் ஹார்மோன் மன அழுத்தத்தைத் தீர்மானிப்பதில் முக்கிய இடம் பெறுகிறது. பிட்யூட்டரியில் சுரக்கும் ஹார்மோனை Androgenic என்கிறோம். செக்ஸ் ஹார்மோன் என்று சொல்லப்படும் இந்த ஆண்ட்ரோஜெனிக் ஹார்மோன்தான் பாலியல் சார்ந்த செயல்பாடுகளைத் தீர்மானிக்கிறது.
‘உயிருக்கு ஆபத்தான நேரங்களில் நம்மைக் காப்பாற்றும் ’ஆபத்பாந்தவன்’ என்று ஸ்டீராய்டு மருந்துகளின் அவசியம் . ‘‘நாள்பட்ட ஆஸ்துமாவுக்கு ஸ்டீராய்டு மருந்தை இன்ஹேலராக, நெபுலைஸராக கொடுக்கும்போது பக்கவிளைவுகள் இல்லாமலே ஆஸ்துமா சரியாகும். சோரியாசிஸ், ருமட்டாய்ட் ஆர்த்ரைட்டிஸ் போன்ற ஆட்டோ இம்யூன் குறைபாடுகளுக்கும் ஸ்டீராய்டு மருந்து பெரிதும் பயன்படுகிறது. வலி, வேதனை, வீக்கம் குறைந்து இயல்பான வாழ்க்கை வாழ ஸ்டீராய்டு மருந்துகள் உதவுகிறது.
உறுப்பு மாற்று சிகிச்சைக்குப் பிறகு இது நம் உறுப்பு இல்லை என்பதை உணர்ந்துகொண்டு புதிய உறுப்புக்கு எதிராக நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி தீவிரமாக செயல்படும். அந்த நேரத்தில் நோய் எதிர்ப்பு சக்தியின் வேகத்தைத் தணித்து ஒவ்வாமையைப் போக்கவும் ஸ்டீராய்டு மருந்துகள் நிச்சயம் தேவை. எக்ஸீமா போன்ற சரும நோய்களுக்கும் ஸ்டீராய்டு நல்ல பலன் தருவதைப் பார்க்கிறோம். சருமம் தொடர்பான பிரச்னைகளுக்கும், வலி, வீக்கத்தைக் குறைக்கவும் ஸ்டீராய்டு ஆயின்ட்மென்ட்டாக பயன்படுகிறது.
சிலவகை ஸ்டீராய்டு மருந்துகளைக் கொடுத்தால் திடீரென அதிசயிக்கிற மாற்றங்கள், நோயாளிகளின் உடல் நலனில் ஏற்படும். புற்றுநோயில் வீக்கத்தைக் குறைக்க, பரவாமல் தடுக்க மற்றும் வலியை நீக்க மற்ற மருந்துகளுடன் ஸ்டீராய்டு தேவை.
ரத்தப்புற்று நோய்கள், ரத்த தட்டணு குறைபாடு நோய்கள், குழந்தைகளுக்கு வரும் புற்றுநோய்கள், சிறுநீரகப் பாதிப்புகள், குடல் அழற்சி நோய்கள், மூளையில் ஏற்படும் கட்டி ஆகியவற்றுக்கும் அறுவைசிகிச்சைக்கு முன் மூளையில் ஏற்படும் வீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் மூளையில் ஏற்படும் காசநோய் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கும் ஸ்டீராய்டு தேவைதான்,
ஸ்டீராய்டு மருந்துகள் எப்போது பிரச்னையாகிறது?. ‘
‘ஸ்டீராய்டு மருந்துகள் அவசியம் என்றால்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். அதுவும் முறைப்படி மருத்துவர் பரிந்துரைத்தால்தான் பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் ஆபத்தான பக்கவிளைவுகள் ஏற்படலாம். ஸ்டீராய்டை தொடர்ந்து பயன்படுத்துகிறவர்களுக்கு உடலில் சோடியம் அளவு அதிகமாகி உடலில் நீர் தங்கிவிடும்.
பொட்டாசியம் அளவு குறைந்தால் இதயத்தின் செயல்பாடுகள் பாதிக்கும்.
எடை கூடும், நோய்த்தொற்று எளிதில் வரும், முகம் வீங்கும், சர்க்கரை அளவு ரத்தத்தில் அதிகமாகும், கண்புரை வரும் வாய்ப்பு அதிகம், எலும்புகள் பலவீனமடைந்து முறியும். நல்ல பலன் தருகிறதே என்பதால் மருத்துவரின் பரிந்துரையில்லாமல் தொடர்ந்து பயன்படுத்துவது மேற்கண்ட ஆபத்துகளை உண்டாக்கிவிடும்.
அடிக்கடி ஸ்டீராய்டு மருந்துகளைப் பயன்படுத்துகிற மருத்துவர்களைக்கூட நோயாளிகள் அறிந்து தவிர்க்க வேண்டும்.
விளையாட்டுத்துறையில் ஸ்டீராய்டு மருந்தை உடல் கட்டமைப்புக்காகவும், ஊக்க மருந்தாகவும் சிலர் தவறாகப் பயன் படுத்தி விடுகிறார்கள்.
ஆனால், இது சட்ட விரோதமானது மட்டுமல்ல... உயிருக்கு ஆபத்தானதும் கூட. இதனால், உயர் ரத்த அழுத்தம், கெட்ட கொலஸ்ட்ரால், கல்லீரல் சேதம், இதயம் செயலிழப்பு, ஹார்மோன் குளறுபடிகள், மன அழுத்தம், மூர்க்கத்தனம் உண்டாவது என்று பல பிரச்னைகள் உண்டாகும்.
விந்தணுக்கள் உற்பத்தி குறைவு, மலட்டுத்தன்மை போன்ற குறைபாடுகளையும் நாமே விலை கொடுத்து வாங்கியதுபோல் ஆகிவிடும்’’ .‘
‘அதற்காக, ஸ்டீராய்டு என்றாலே பயப்படவும் வேண்டியதில்லை.
சரியான அளவில், சரியான முறையில் தகுதியுள்ள மருத்துவரால் கொடுக்கப்படும்போது ஸ்டீராய்டு நம்மைக் காப்பாற்றும். ஊசியாகவோ, இன்ஹேலராகவோ பயன்படுத்தும்போது அது மருத்துவரின் மேற்பார்வையில்தான் பயன்படுத்த முடியும்.
ஆனால், மாத்திரைகள் என்றால் நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டியது கட்டாயம்.
ஒரு மாத்திரையைப் பார்த்த உடனே இது ஸ்டீராய்டு என்றெல்லாம் தெரிந்துகொள்ள முடியாது.
தொடர்ச்சியாக மாத்திரைகள் எடுத்துக் கொள்கிறவர்கள் அது ஸ்டீராய்டா என்று தெரிந்துகொள்ள வேண்டும். தேவைப்பட்டால் இன்னொரு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதிலும் தவறில்லை. முக்கியமாக மருந்துச்சீட்டு இல்லாமல் மருந்துகள், மாத்திரைகள் வாங்கும் பழக்கம் நம்மிடம் நிறைய உண்டு. இதுபோல ஓவர் தி கவுன்டராக மாத்திரை வாங்கும்போதும் ஸ்டீராய்டு மருந்துகளை மருந்துக்கடைக்காரர்கள் கொடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
அதனால், மருந்துச்சீட்டு இல்லாமல் மாத்திரை வாங்குவதை முழுவதும் தவிர்க்க வேண்டும்.
மருத்துவர் ஸ்டீராய்டை ஒருமுறை பரிந்துரைத்தால், அடுத்த முறை மருத்துவரைப் பார்க்காமலே தொடர்ந்து வாங்கிப் பயன்படுத்திக் கொண்டிருப்பதும் சிக்கலை உண்டாக்கும். தொடர்ச்சியான ஃபாலோ அப் அவசியம், இன்னொரு முக்கியமான பிரச்னை மருத்துவத்தைப் பொறுத்த வரை வெளிநாடுகளுக்கும் இந்தியாவுக்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது.
வெளிநாடுகளில் நோயாளியையும் ஒரு பார்ட்னராக சேர்த்துக் கொண்டு மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பார்கள், கற்றுக் கொடுப்பார்கள், விவாதிப்பார்கள்.
நோயாளிக்கு இத்தனை விளக்கம் ஏன் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்காது.
இதனால் நோயாளிகளுக்கும் என்ன நோய், எந்த நிலையில் இருக்கிறது, என்ன மருந்துகள் சாப்பிடுகிறோம், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு இருக்கும்.
இந்தியாவில் இதுபோல் நோயாளிக்குக் கற்றுக் கொடுக்கிற மருத்துவர்கள் மிகவும் குறைவு என்பது வருத்தத்துக்குரிய ஒரு விஷயம்.
ஸ்டீராய்டு மருந்துகள் மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டிய மருந்து என்பதால் நோயாளிக்கும் கற்றுக் கொடுத்தல் மிகவும் அவசியம்.
அப்போதுதான் ஸ்டீராய்டை ஒரு தற்காலிக மருந்தாகத்தான் பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படும்.
இல்லாவிட்டால், ஸ்டீராய்டு உடனடியாக நல்ல பலனைக் கொடுக்கிறது என்று பழக்கமாகிக் கொண்டுவிடுவார்கள். ஸ்டீராய்டு மருந்துகளைப் பயன்படுத்தும் மருத்துவர்களிடமும் தெளிவான திட்டம் இருக்க வேண்டும். முடிந்தவரை ஸ்டீராய்டு மருந்துகளின் வீரியத்தைக் குறைத்துக் கொண்டே வர வேண்டும். மாற்று மருந்துகளைப் பயன்படுத்தி ஸ்டீராய்டு பயன்படுத்த வேண்டிய அவசியத்தைக் குறைக்க முயற்சிக்க வேண்டும். நோயாளிகளும் டாக்டரே மறந்துவிட்டால்கூட ‘பவரை குறைக்கிறேன்னு சொன்னீங்க டாக்டர்’ என்று மருத்துவருக்கு நினைவுபடுத்த வேண்டும்’’
குழந்தைகளுக்கு கூடாது!
ஆஸ்துமா, வீசிங், அலர்ஜி, சருமப் பிரச்னைகள் ரொம்பவும் தீவிரமாகும் போதுதான் இந்த மருந்துகள் தரப்பட வேண்டும்.
ஆனால், பல மருத்துவர்களும், இந்தப் பிரச்னைகளின் ஆரம்பக் கட்டத்திலேயே உடனடி நிவாரணம் தேவை என்பதற்காக ஸ்டீராய்டு கொடுத்து விடுகிறார்கள். சில நிமிடங்களிலேயே நோயாளிக்கு குணம் தெரியும். குழந்தைகளுக்கு மிகமிக அவசரம் என்றால் தவிர, ஸ்டீராய்டு தரவே கூடாது.
ஒரு முறை மருத்துவரிடம் போய் மருந்து, மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டுக் குணம் தெரிந்ததும், அடுத்தடுத்த முறைகள் அதே பிரச்னை வரும் போது தாமாகவே மருந்துக் கடைகளில் ஸ்டீராய்டு கலந்த மருந்துகளை வாங்கிச் சாப்பிடும் நபர்கள் நிறைய பேர்.
இப்படி நீண்ட நாட்களுக்கு ஸ்டீராய்டு எடுத்துக் கொள்கிற போது, அது ஹைப்பர் டென்ஷன், இதயக் கோளாறு, உடல் பெருத்துப் போதல், குறிப்பாக முகம் ஊதிப் போவது, கல்லீரல் பழுது, அதன் விளைவாக மஞ்சள் காமாலை, பெண்களுக்கு
உடலெங்கும் ரோம வளர்ச்சி, மார்பகங்கள் சிறுத்துப் போதல், கிளிட்டோரிஸ் எனப்படுகிற அந்தரங்க உறுப்பின் ஒரு பகுதி விரிவடைதல், குரலில் மாற்றம், மாதவிலக்குக் கோளாறு, அதிக கோபம், படபடப்பு, தற்கொலை எண்ணம், புற்றுநோய், நீரிழிவு நோய், சிறுநீரகக் கோளாறு, பக்கவாதம், ஆண்மைக் குறைபாடு, முகம், கழுத்துப் பகுதிகளில் பருக்கள், வழுக்கை, ஆண்களுக்கு மார்பகங்கள் பெருத்துப் போவது... இப்படிப் பல பயங்கர பின் விளைவுகளை உண்டாக்கும். இவற்றில் சில ஸ்டீராய்டை நிறுத்தியதும் குணமாகலாம்.
பல உபாதைகள் அதற்குப் பிறகும் நிற்காமல் தொடர்வதும் உண்டு.
நோயின் தீவிரம் அதிகமாக இருக்கும் போது, அதைக் குறைக்க முதலில் ஸ்டீராய்டு கலந்த மருந்துகள் தந்து விட்டு, தீவிரம் குறைந்ததும் பிற மருந்துகளுக்கு மாறுவதுதான் சரியான வழி.
மருத்துவர்களிடம் செல்லும் போதே ஸ்டீராய்டு கலந்த மருந்துகளைத் தவிர்க்குமாறு சொல்லலாம். எந்தப் பிரச்னைக்கும் சரியான மருத்துவரிடம் சிகிச்சை பெறுவது பாதுகாப்பானது.
சித்த மருத்துவத்திலும் ஸ்டீராய்டா?
அலோபதி மருந்துகளைப் பொடி செய்து சித்த மருந்து என்கிற பெயரில் கொடுக்கும் சித்த மருத்துவர்களும் இருக்கிறார்கள்.
அது போன்ற போலி மருத்துவர்கள் சிலர் இப்படி ஸ்டீராய்டு கலந்த அலோபதி மருந்துகளை சித்தா உடன் சேர்த்துக் கொடுப்பதுண்டு. நம்பிக்கையான சித்த மருத்துவர்கள் தவறு செய்வதில்லை.
சித்த முறையில் தயாரிக்கப்படுகிற சில மருந்துகள், உதாரணத்துக்கு தங்க பஸ்பம், வெள்ளி பஸ்பம் மாதிரியான உலோகத் தயாரிப்புகளில் மூலிகைகள் கலந்து செய்யப்படுகிற போது இயற்கையாவே சில ஸ்டீராய்டுகள் உருவாகும்.
அது தவிர்க்க முடியாதது.
ஆனால், இப்படிப்பட்ட மருந்துகளைப் பரிந்துரைக்கிற சித்த மருத்துவர், பக்க விளைவுகள் வராமல் இருக்க பத்தியம், உணவுக் கட்டுப்பாடு என சில விஷயங்களையும் சொல்லித் தருவார்.
பத்தியம்இல்லாத, பக்க விளைவில்லாத சித்த மருத்துவம் என வரக்கூடிய விளம்பரங்கள் போலியானவையாகவே இருக்கும்.
உணவுக் கட்டுப்பாடு, எண்ணெய் தேய்த்துக் குளிப்பது என்கிற மாதிரி சில விஷயங்களை சரியாக செய்தால், பக்க விளைவுகளைத் தவிர்க்கலாம்.
எல்லாத் துறைகளிலும் புல்லுருவிகள் இருக்கிற மாதிரி, சித்த மருத்துவம் என்ற பெயரில் போலித்தனம் செய்கிற ஆட்களும் இருக்கிறார்கள்.
மக்கள்தான் எச்சரிக்கையாகி, சரியான, நம்பிக்கையான டாக்டரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- ஞானதேசிகன்
நன்றி: குங்குமம் டாக்டர்.
===================================================================================================
நீங்கள் சோகமாக உணரும் நேரங்களில், படத்தில் காட்டியுள்ள வரிசைப்படி அந்தந்த புள்ளிகளில் உங்கள் விரல் நுனியால் லேசாக அழுத்திக் கொடுங்கள். இங்கே தொடங்குங்கள்... இந்த வரிசைப்படி அழுத்தத் தொடங்குங்கள்…
1. இரண்டு விரல்களுக்கு நடுவே...
2. உச்சந்தலையில்
3. புருவத்தில்
4. கண்களின் பக்கவாட்டில்
5. கண்களின் கீழ்புறத்தில்
6. மூக்கின் அடிப்பாகத்தில்
7. தாடையில்
8. கழுத்துப்பட்டை எலும்பில்
9. அக்குளில்
இதேபோல, 5 முதல் 7 முறைகளோ உங்களை மகிழ்ச்சி மீண்டும் தொற்றிக் கொள்ளும் வரையிலோ செய்யலாம்.
==========================================================================================

தொட்டால் போகும் சோகம்!

2ஜி பற்றி மாதாமாதம் பேசும் நடு நிலை நக்கி ஊடகங்கள் சசிகலா குழுவினரின் ஆயிரம்கோடி வியாபாரத்தை குறித்து பேச நடுநிலை(?) என தங்களுக்கு தாங்களே சான்றிதழ் வழங்கும் ஊடகங்கள் முன்வராதது ஏன்?
பாடகர் தோழர் கோவன் அவர்களை உலக தமிழருக்கு அறிமுகம் செய்து வைத்த கொடநாடு முதல்வருக்கு நன்றி.அவர் பாடலை தேடி கேட்க வைத்தமைக்கு மிடாஸ் நிறுவன முதலாளிகளுக்கு மிக்க நன்றி.
========================================================================================