மரண சமுத்திரங்கள்?



ஆக்சிஜன் இல்லாமல் உயிரோடு இருக்க முடியுமா?
ஆக்சிஜன் குறைவதால் சமுத்திரங்களே மரணமடைந்து வருகின்றன என்ற அதிர்ச்சியான செய்திகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
தற்போதைய ஆய்வுகளின்படி 400 சமுத்திரங்கள் மிகவும் குறைவான ஆக்சிஜனுடன் உள்ளன. சமுத்திரங்களை வகைப்படுத்தும் போது அவை இறந்த மண்டலங்கள் என்று அழைக்கப்படுகிறது. ஆக்சிஜன் குறையும் சமுத்திரங்கள் மீன் இனங்களுக்கு தீங்கு அளிப்பவையாக உள்ளன, பல்லுயிர் பெருக்கத்தை அழிப்பவையாக உள்ளன. 
இதன் தொடர்ச்சியாக உலகின் சூழல் அமைப்புகளை சேதப்படுத்துவதாகவும் உள்ளன.சமுத்திரங்களில் ஆக்சிஜன் மட்டத்தின் அளவுகள் கரைந்தும் குறைந்தும் வருவது கடந்த 40 ஆண்டுகளாக தீவிரமடைந்துள்ளது. 
இந்தியாவின் மேற்கு கடலிருந்து சற்று தள்ளி உள்ள அரபிக் கடல் இந்த ஆபத்தில் சிக்கியுள்ளது. அங்குள்ள கடல் நீரின் நிறம் ஒவ்வொரு குளிர் காலத்திலும் பளிச்சென்ற பச்சை நிறமாக மாறி வருவதைக் காணலாம். சாட்டிலைட்டின் மூலம் நடத்தப்பட்ட ஆய்வுகளில், மரணமடைந்து வரும் கடல்களிலும் சமுத்திரங்களிலும் இவ்வாறு தீவிரமான பச்சை நிறமாக மாறி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.பிஎன்ஏஎஸ் என்ற ஆய்வு இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில்,
சமுத்திரத்திலுள்ள ஆக்சிஜன் அளவு கடற்கரையில் வாழும் உயிரினங்களின் நிலையை மாற்றி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 
கடற்கரையில் உள்ள பல்லுயிர் பெருக்கமானது மிகவும் குறைந்து கடினமான தோற்றம் மற்றும் உள்ளடக்கம் கொண்ட உயிரினங்களாக மாறி வருவதை அது குறிப்பிட்டுள்ளது. இந்த மாற்றம் கடந்த 150 ஆண்டு குறுகிய காலத்தில் நடைபெற்றுள்ளது. 
ஆனால் மறுபடியும் பழைய நிலைக்கு மீள 1000 ஆண்டுகளுக்கு மேல் ஆகலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.யார் காரணம்?
விவசாய நிலங்களில் பயன்படுத்தும் அதிக அளவிலான உரங்கள்தான் சமுத்திரங்கள் மரணமடையக் காரணமாக அமைகிறது. நிலங்களிலிருந்து உரங்கள் மூலம் கிடைக்கும் சத்துக்கள் கடல்களுக்கு ஆறுகள் மற்றும் கால்வாய்கள் மூலம் வழிந்தோடி கடல்களில் சேரும்போது அவற்றிலுள்ள சத்துக்கள் கடல் நீரில் கலந்து, சூரிய ஒளியில் நடைபெறும் போட்டோசிந்தஸிஸ் எனப்படும் உணவு தயாரிப்பு அதிக அளவில் நடைபெறுவதால், இறந்து போன அனைத்து உயிரினங்களின் உடல்களை அழுகச்செய்து மக்கிப்போக வைக்கும் பணியை மேற்கொள்ளும் பாக்டீரியாக்கள் அதிகரித்து விடுகின்றன. இதனால், கடலில் கரைந்துள்ள ஆக்சிஜனை அதிக அளவில் நுகர்கின்றன. 
ஆக்சிஜனை எடுத்துக் கொள்வது எந்த அளவில் என்றால் இனியும் எந்த உயிரினங்களும் வாழ முடியாது என்ற நிலை வரை அவை எடுத்து கொள்கின்றன. 
இதன் தொடர்ச்சியாக பெரிய விலங்கினங்கள் உடனடியாக ஆக்சிஜன் குறையும் இடத்தை விட்டுச் சென்று விடுகின்றன. மிக மெதுவாக நகரும் உயிரினங்கள் மூச்சுத் திணறி இறந்து விடுகின்றன.ஆக்சிஜன் குறைந்துள்ள மண்டலங்கள் அரபிக்கடல் பகுதியில் உள்ளன. இவை காலந்தோறும் அளவில் அதிகரித்து வருகின்றன. அப்பகுதியில் அடர்த்தியான இத்தகைய மண்டலங்கள் 20 லட்சம் சதுர மீட்டர் அளவில் உள்ளன. 
மக்கள் தொகை அதிகமாக உள்ள மும்பை மற்றும் கராச்சி போன்ற பகுதிகளிலிருந்து அதிகமான கழிவு நீர் சாக்கடைகளும் கடல்களில் கலப்பதால் ஆக்சிஜன் குறைவதற்கு காரணமாக உள்ளது என நேச்சர் என்ற இதழில் 2014ல் வெளியிடப்பட்ட ஆய்வில் கூறப்பட்டுள்ளது.அரபிக் கடலில் கடந்த 1933-34ல்தான் இப்படிப்பட்ட நிலைமை கண்டறியப்பட்டது. 
இதனைத்தொடர்ந்து தேசிய கடலியல் நிறுவனம் 1990களின் மத்தியில் ,இப்பகுதியை ஆய்வு செய்யத் தொடங்கியது. 
அப்போது என்ஐஓவிற்கு கடல் பகுதியில் உள்ள பயோகெமிஸ்ட்ரி குறிப்பாக நைட்ரஜன் வாயுவின் சுழற்சி மற்றும் பசுமை இல்ல வாயுக்கள் ஆகியவை குறித்தே கவனம் செலுத்தப்பட்டதாக அந்நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் வாஜ் நக்வி என்பவர் தெரிவிக்கிறார். 
அரபிக் கடலின் திறந்த பகுதி ஒப்பீட்டளவில் நிலைத்த தன்மை கொண்டுள்ளது; ஆனால் கடற்கரை பகுதிகளில்தான் ஆக்சிஜன் அளவு குறைந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார். இதற்கு காரணமாக இருப்பது நாம் ஏற்கனவே கூறியது போல, ரசாயன உரங்கள்தான். 
எனவே உரங்களை பயன்படுத்துவதில் முழுமையான அறிவியல் மேலாண்மை தேவைப்படுகிறது என்கிறார் அவர். இன்னொரு மரணமடைந்துள்ள சமுத்திரப் பகுதி மெக்சிகோ வளைகுடா ஆகும். ஒவ்வொரு கோடைக்காலத்திலும் அமெரிக்காவின் தெற்குப் பகுதி மீனவர்கள் மெக்சிகோ வளைகுடாப் பகுதியில் மீன்கள் செத்து மிதப்பதைக் கண்டுள்ளனர். அந்தப் பகுதியில் இறால்கள் மற்ற மீன்கள் கிடைப்பதும் அரிதாகவே உள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். 
அமெரிக்காவின் தேசிய சமுத்திர மற்றும் வாயுமண்டல நிர்வாக அமைப்பு இக்கடலின் மரணமடைந்த மேற்பரப்பு 14,200 சதுர கிலோ மீட்டராக அதாவது புது தில்லியை போன்று 10 மடங்கு பெரிதாக உள்ளதாக மதிப்பிட்டுள்ளது. 
இப்பகுதியை குறைப்பதற்கு ஒரு செயல் திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் சமுத்திரங்களில் ஆக்சிஜன் குறைந்து அவை மரணமடைந்து வருவதைத் தடுக்க தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக அமெரிக்காவில் கடலின் ஆழத்திலுள்ள நீரைக் கொண்டு அதில் கரைந்துள்ள ஆக்சிஜனின் அளவு மாற்றத்தை கணக்கிட்டு வருகின்றனர். 
கடலில் மூழ்கி அடி ஆழம் வரை செல்லும் கிளைடர்கள் எனப்படும் நீச்சல் வீரர்கள் எங்கு சமுத்திரங்கள் மரணமடையும் போக்கு தொடங்குகிறது என்பதை கண்டறிய பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள். சமுத்திரங்கள் மரணமடைவதையும் அதற்கு காரணமாக உள்ள ஆக்சிஜன் குறைவதையும் தடுக்க பல வழி முறைகள் முன்வைக்கப்படுகின்றன. 
அவற்றில் முக்கியமானது கடலில் உரங்கள் கலப்பதை தடுக்க ஆறு மற்றும் நதிப்படுகைகளிலும் கடற்கரைகளிலும் சிறிய அளவிலான விவசாய மற்றும் காய்கறிப் பண்ணைகளை உருவாக்குவது. அப்போது உரங்கள் கடலுக்குள் செல்வது தடுக்கப்படும். 
விவசாய நிலங்களிலிருந்து உரங்கள் வெளியேறாமல் தடுப்பதும் இப்பிரச்சனையை ஒரளவு குறைக்க உதவும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
======================================================================================
இன்று,
நவம்பர்-06.


  • தஜிகிஸ்தான் அரசியலமைப்பு தினம்(1994)
  • டொமினிக்கன் குடியரசின் முதலாவது அரசியலமைப்பு கொண்டு வரப்பட்டது(1844)
  • எட்வின் ஆம்ஸ்ட்ராங், எஃப்.எம்., ஒளிபரப்பு பற்றிய ஆய்வை வெளியிட்டார்(1935)
  • புளூட்டோனியம் முதல் முறையாக உருவாக்கப்பட்டது(1944)
  • போலந்தில் 2வது போலந்து குடியரசு அமைக்கப்பட்டது(1918)

1944 - நவம்பர் 6
ஜப்பானில் உள்ள, ஹிரோஷிமா மீது அணுகுண்டு போடப்பட்ட உடனே, இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்துவிட்டது; 
ஆனாலும், தான் புதிதாய் கண்டுபிடித்த, புளூட்டோனியம் குண்டை பரிசோதிப்பதற்காகவே, நாகசாகியை சுடுகாடாக்கியது அமெரிக்கா!
நாகசாகி மீது விழுந்தது, 'குண்டு மனிதன்' எனப் பெயரிடப்பட்ட, புளூட்டோனியம் கருப்பிளவு அணுகுண்டு!புளூட்டோனியத்தை, நியூட்ரான் கணைகளால் தாக்கினால், அணு பிளவு நிகழும்; இதன் தொடர் நிகழ்வு, மிக அதிக வெப்பத்தையும், தீய கதிர்வீச்சையும் வெளிப்படுத்தும்.
அமெரிக்காவில் உள்ள, வாஷிங்டன் மாகாணம், ஹான்போர்ட் அணு உலையில், அணு ஆயுதத்திற்கு பயன்படுத்தப்படும் புளூட்டோனியம், முதன்முறையாக உற்பத்தி செய்யப்பட்டது; 
அந்த நாள் இன்று!

======================================================================================









இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?