ஆண் அழகு
குறிப்புகள்!
1. வேலை நிமித்தமாக வெளியில் சுற்றும் ஆண்களின் முகம் எளிதில் கருத்துவிடும்.அவர்கள் ஐஸ் கட்டியை துணியில் கட்டி முகத்திற்கு ஒத்தடம் தர முகம் பொலிவடையும்.
2. வெளியில் அலைவதனால் தலைமுடி உதிர்வதை தடுக்க நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து தலைக்கு தேய்த்து வர முடி உதிர்வது தடுக்கப்படும்.
3. சிகரெட் குடித்து உதடு கருமையாக இருப்பவர்கள் மாதுளைச் சாறு, புதினா இலையை உதட்டில் தடவி வர உதடு செந்நிறமாகும்.
4. சுத்தமான சந்தனத்தை பாதாம் எண்ணெய்யில் குழைத்து முகத்தில் பூசி, இந்த கலவை காய்ந்ததும் முகத்தை கழுவலாம்.
5. தக்காளியை நன்றாக பிசைந்து அதனோடு 4 - 5 துளிகள் எலுமிச்சை சாறு கலந்து முகம், கழுத்து பகுதி, கைகளில் பூசிக்கொள்ளலாம்.
6. முகத்தை கழுவியபிறகு சிறிதளவு பாலை உள்ளங்கையில் எடுத்து முகத்தில் பூசவும்.
இவ்வாறு தொடர்ந்து 2 - 3 வாரங்கள் வரை செய்துவந்தால் உங்கள் சருமம் பொலிவடைந்திருப்பது கண்கூடாக தெரியும்.
7. சிறிதளவு இளநீரை முகம், கழுத்து பகுதி, கைகளில் பூசிவந்தால் சரும நிறம் மாறும்.
8. சீரகம் மற்றும் முள்ளங்கியை ஆகியவற்றை தனித்தனியே தண்ணீரில் கொதிக்கவைத்து, அந்த தண்ணீரில் முகத்தை கழுவினால் மாசுகள் அகற்றப்பட்டு முகம் பிரகாசமாக தோன்றும்.
9. புதினா மற்றும் எலுமிச்சை சாறுகளை கலந்து முகத்தில் தடவலாம்.
10. முட்டையின் வெள்ளை கருவை வாரம் இருமுறை முகத்தில் பூசிவந்தால் சரும நிறம் சிகப்பாக மாறுவதோடு மிருதுவாகவும் மாறும்.
11. அன்னாசி பழத்தின் சாறு, தர்பூசிணி மற்றும் பப்பாளி பழ சாறுகளும் சரும நிறத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஒரு சூறாவளியின் பயணம்
விழித்துக்கொள்ளுமா தமிழக அரசு?
விழித்துக்கொள்ளுமா தமிழக அரசு?
வானிலைத்துறை தொடர்ந்து அளித்த எச்சரிக்கைகளை அதற்குரிய முக்கியத்துவத்துடன் தமிழக அரசாங்கம் ஆய்வு செய்ய தவறியது.
பேரிடர் நடவடிக்கை குழுக்களும் செயல்படுத்தப்படவில்லை.
இதன் காரணமாக சென்னை, கடலூர் உட்பட பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன.இயற்கை மீதுபழிபோட்டு தப்பிக்க எண்ணிய அதிமுக அரசாங்கத்தை மக்களின் கோபம் தனிமைப்படுத்தியது.
இதோ! மீண்டும் ஒரு முறை சென்னைஉட்பட தமிழகத்தின் வடக்கு கடற்கரையோரப் பகுதிகள் கனமழையை சந்திக்கவாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கை எச்சரித்துள்ளது.
இந்த கனமழை டிசம்பர் 1ம் தேதி தமிழகத்தில் துவங்கும் எனவும்வானிலை அறிக்கை கணித்துள்ளது. “வெள்ளத்தை உருவாக்கக்கூடிய மழை” பெய்யும் என இந்திய வானிலைத்துறை மட்டுமல்ல;
அமெரிக்க வானிலைத் துறையும் ஐரோப்பிய வானிலைத்துறையும் ஒரே மாதிரியாக மதிப்பீடு செய்துள்ளன.
தமிழகத்தின் வடக்கு கடற்கரை அதாவது சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளும் இலங்கையின் கிழக்குபகுதியும் மிகக் கூடுதலான மழையை பெறும் எனவும் இந்த மழை டிசம்பர் 5ம்தேதிவரை நீடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் அமெரிக்க வானிலை அறிக்கை கூறுகிறது.
ஐரோப்பிய வானிலை அறிக்கை, இந்தகனமழை எப்படி உருவாகும் எனவும் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. பசிபிக்கடலின் வடமேற்கு பகுதியில் இன்-ஃபாஎனும் சூறாவளி உருவாகியுள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.
இந்தசூறாவளி வடக்கு - வடமேற்கு திசையில் பயணித்துக் கொண்டுள்ளது. பிலிப்பைன்சின் கிழக்கு பகுதியை அடைந்தவுடன் இந்த சூறாவளி வடக்கு - வடகிழக்கு திசையில் ஜப்பானை நோக்கி பயணிக்கும்.
இந்த சூறாவளி சுழற்சியின் ஒருசிறுபகுதி தென்சீன கடலுக்குள் நுழையும். இது தாய்லாந்து வளைகுடா வழியாக அந்தமான் கடல்பகுதிக்கு வியாழன் அல்லது வெள்ளி(நவம்பர் 27 அல்லது 28) அன்று வந்துசேரும்.இது அந்தமான் கடல்பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் வாய்ப்பு உள்ளது. இது தமிழக கடற்கரையோரம் குறிப்பாக சென்னை பகுதியில் சுழலும்.
இது பின்னர் ஆந்திர நிலப்பகுதியை கடக்கும்.
இதன் காரணமாக தமிழக கடற்கரையோர மாவட்டங்களில் குறிப்பாக சென்னையில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
ஐரோப்பிய வானிலை அறிக்கையை ஒட்டி இந்திய வானிலை அறிக்கையும் கனமழை வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த கனமழை நவம்பர் இறுதி முதல்டிசம்பர் முதல் வாரம் வரை தொடர்ச்சியாகவோ அல்லது இடைவெளி விட்டோ பெய்யும்.
இந்த தாழ்வு மண்டலம் வெள்ளம் உருவாக்கும் மழையை (கடடிடினiபே சயiளே) விளைவிக்கும் எனவும் வானிலை அறிக்கை கூறுகிறது.ஒரு வாரத்திற்கு முன்னதாகவே மழை எச்சரிக்கையை வானிலைத்துறை வெளியிட்டுள்ளது.
கடந்த முறை உதாசீனப்படுத்தியது போல அல்லாமல் இந்தமுறையாவது தமிழக அரசாங்கம் விழித்துக்கொள்ள வேண்டும். மக்கள் தமது உடமைகளையும் உயிரையும் இழக்காமல் இருப்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும்.
இதனை அதிமுக அரசாங்கம் செய்யுமா என்பதே மிகப்பெரிய கேள்வி!-
அ.அன்வர் உசேன்
இன்று ,நவம்பர்-26.
- இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது(1949)
- நோட்ரெ டேம் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது(1842)
- சகாரா பாலைவனத்தில் பிரான்ஸ் தனது முதலாவது செய்மதியான ஆஸ்டெரிக்ஸ்-1 ஐ விண்ணுக்கு அனுப்பியது(1965)
தீவிரவாதிகள் இல்லை.
1980 கைலாச-மானசரோவர் பயணத்தில் நரேந்திர மோடி, தாடி,முக்காடு, துப்பாக்கியுடன்.
[அப்போவே போஸ் கொடுக்க தயாராகிட்டார்?]
==================================================================================================
இன்வர்ட்டர்
ஒரு எச்சரிக்கை!
இப்போதெல்லாம் தமிழகம் முழுவதும் இன்வர்ட்டர்கள் உபயோகிக்காதவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு. அடிக்கடி கரண்ட் கட் ஆகும் சமயங்களில் உடனடியாக தானாகவே பேட்டரியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கரண்ட்டிலிருந்து மின்விசிறி, ஒரு சில லைட்டுகள் உள்பட வேலை செய்யக் கூட இன்வர்ட்டர் உபயோகிக்கிறோம்.
அதுவும் கோடைக்காலம் நெருங்க நெருங்க இன்வர்ட்டரின் தேவை மிக அத்தியாசவசியமாகிறது. எல்லா மின் சாதனங்களைப் போலவும் இன்வர்ட்டரிலும் ஒரு சில ஆபத்துகள் உள்ளன.
எல்லா மின் சாதனங்களை விடவும் இதில் மறைமுகமான ஆபத்து ஒன்றும் இருக்கிறது.
நித்து என்பவர் இது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சம்பவம் அனைவருக்கும் எச்சரிக்கையாக இருக்கும். அண்மையில் ஒருநாள்.. வீட்டில் கணவர், இரண்டு வயது மகள், எல்லோரும் அமர்ந்திருக்கையில், பள்ளி முடிந்து வந்தான் மகன். வரும் போதே வீட்டினுள் துர்நாற்றம் அடிப்பதாகப் புகார். “தெருவிலே குப்பைத்தட்டி பக்கத்துலே போகும் போது நாறுகிற மாதிரி இருக்கிறது” என்பது மகனின் கம்ப்ளைண்ட். எங்களுக்கு ஜலதோஷம் இருந்ததால் அப்படி எதுவும் வித்தியாசம் தெரியவில்லை.
இரவு தூங்கி எழுந்து காலையிலும் அதே ஆர்ப்பாட்டம் செய்தான். அன்று மாலையும் மீண்டும் அதே ஆர்ப்பாட்டம். அப்போது தான் எனக்கும் அந்த துர்நாற்றம் லேசாக நுகர முடிந்தது.
கணவரிடம் இன்வர்ட்டர் பாட்டரியின் கீழே பல்லி எதுவும் இறந்து கிடக்க வாய்ப்புண்டு. நகர்த்திப் பாருங்கள் என்று கூறினேன். சிறிது நேரத்தில் பாட்டரி அருகில் ஃபேன் ஒன்றை வைத்திருந்தார் கணவர். “பேட்டரி ஓவர் ஹீட் ஆகிவிட்டது போல. அதான் அந்த துர்நாற்றம்” என்றார் அவர். சிறிது நேரம் கழித்து மீண்டும் அந்த அறைக்குள் நுழைந்து பார்த்தால்… பேச்சு மூச்சு இல்லாமல் கணவர் மயங்கிக் கிடந்தார்.
முகத்தில் தண்ணீர் தெளித்தும் பயன் இல்லை. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்தோம். என்ன காரணத்தினால் மயங்கி விழுந்தார் என்று மருத்துவர்கள் கேட்டதற்கு சரியான பதில் சொல்ல முடியவில்லை.
திடீரென்று பாடத்தில் படித்தது நினைவுக்கு வந்தது. பேட்டரி ஒவர் ஹீட் ஆனால் ‘ஹைடரஜன் சல்ஃபேட்’ வாயு உற்பத்தி ஆகும். அழுகிய முட்டையின் துர்நாற்றத்தை ஒத்திருக்கும் அந்த வாயுவை சுவாசித்தால் கண்ணிலும், மூக்கிலும் எரிச்சலை ஏற்படுத்தும். அடுத்து நுரையீரலிலும் பரவும். இருமல் ஆரம்பிக்கும். மயக்கம் ஏற்படும்.. அடுத்த ஓரிரு மணி நேரங்களில் மரணம் என்பதெல்லாம் நான் கூகுளில் தேடிக் கண்டுபிடித்து அதிர்ந்த தகவல்கள். நுரையீரலின் அளவு பெரியவர்களுக்கு அதிகம் என்பதால், குழந்தைகளை விட இது பெரியவர்களை தான் அதிகம் பாதிக்குமாம். மருத்துவரிடம் இதுகுறித்து கூறினேன்.
மருத்துவரின் தீவிர சிகிச்சையினால் சிறிது நேரத்திலேயே கணவர் நல்லபடியாக கண் விழித்தார். “பேட்டரியை நகர்த்தும் போது ஓவர் ஹீட் இருக்கிறது தெரிந்தது. அதிலேர்ந்து தான் அந்த கெட்ட நாத்தமும் வருதுன்னும் புரிஞ்சிச்சு. எல்லோரும் வெளியிலே போயிடலாமுன்னு யோசிக்கிறதுக்குள்ளே மயக்கம் வந்திடுச்சு” என்றார் கணவர்.
சில மணி நேரங்களுக்குப் பிறகு வீடு திரும்பினோம். வீட்டுக்கு வந்து சேர்ந்தவுடன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சுமார் மூன்று நிமிடங்களுக்கு இருமத் தொடங்கினார்.
இப்படிப்பட்ட பாதிப்புகளுக்கு குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்காவது இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் இருக்கும் என்று கூகுளில் தேடியதில் தகவல் கிடைத்தது. ஆனாலும் மூன்று நாட்களுக்குப் பிறகும் இருமல் தொடர்ந்து கொண்டே இருந்தது.
இப்போது அதற்கான மருந்துகளை கணவர் எடுத்துக் கொண்டிருக்கிறார்.
இந்த அதிர்ச்சித் தகவல் குறித்த செய்தியை பகிர்ந்த போது இன்வர்ட்டர் விற்பனையாளர் ஒருவர் கூறிய சில அட்வைஸ்கள் :
"எந்தவொரு மின் பொருள் என்றாலும் அதனை முறையாகப் பராமரிக்க வேண்டும்.
இன்வர்ட்டர் வாங்கும் போது அது ஒழுங்கான நிறுவனத்துடையதா என்பதையெல்லாம் பார்க்க வேண்டும்.
தரமற்ற சீனத் தயாரிப்புகள் எல்லாம் மார்க்கெட்டில் சல்லிசான விலையில் கிடைக்கின்றன.
அவற்றையெல்லாம் வாங்கினால் சமயங்களில் ஓவர் ஹீட்டில் பேட்டரி வெடித்துச் சிதறும் வாய்ப்பெல்லாம் கூட உண்டு. காற்றோட்டமான இடத்தில் இன்வர்ட்டர், பேட்டரிகளை வைக்க வேண்டும்.
பேட்டரிகளை முழுக்க மூடி வைக்கக் கூடாது.
மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது இன்வர்ட்டரில் தண்ணீர் இருக்கிறதா, ஒழுங்காக வேலை செய்கிறதா என்பதை முறையாக பயிற்ச்சி பெற்ற நபரை வைத்து பார்த்துக் கொள்ள வேண்டும்.