இணையம்.சில எச்சரிக்கைகள்!
இந்தியாவில் 11.3 கோடி மக்கள் சராசரியாக 16,000 ரூபாயை இணையத் திருடர்களிடம் இழக்கிறார்கள் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இது சர்வதேச அளவில் சராசரியாக ரூ. 23,878 ஆக உள்ளது.
அப்பாடா நம்மைவிட மற்றவர்கள் கூடுதலாக இழக்கிறார்கள் என்று ஆறுதல்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.
பொதுவாக சைபர் கிரைம் தொடர்பான குற்றங்களில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் இணையத்தில் பணபரிமாற்றங்கள் நடக்கும்பொழுது, கடவுச்சொல் (பாஸ்வேர்டு) உள்பட கணக்கு விவரங்களைத் திருடுவது , பெண்களுக்கு எதிராக பாலியல் தொல்லைகள் கொடுப்பது, ஆபாச படங்களை வெளியிடுவது போன்றவைதான் தற்போது பெருகி வருகின்றன. 54 சதவீதம் பேர் தங்களுக்கு தெரியாமலேயே கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு தகவல்கள் ஆன்லைனில் திருடப்படுகிறது என்று குற்றம் சாட்டுகின்றனர். 40 சதவீதத்தினர் மட்டுமே சைபர் கிரைம் குற்றம் நடந்தால் என்ன செய்வது என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள். 60 சதவீதத்தினர் ஆன்லைன் குற்றங்கள் குறித்த அச்சத்தில் உள்ளனர்.
பொதுவாக சைபர் கிரைம் தொடர்பான குற்றங்களில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் இணையத்தில் பணபரிமாற்றங்கள் நடக்கும்பொழுது, கடவுச்சொல் (பாஸ்வேர்டு) உள்பட கணக்கு விவரங்களைத் திருடுவது , பெண்களுக்கு எதிராக பாலியல் தொல்லைகள் கொடுப்பது, ஆபாச படங்களை வெளியிடுவது போன்றவைதான் தற்போது பெருகி வருகின்றன. 54 சதவீதம் பேர் தங்களுக்கு தெரியாமலேயே கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு தகவல்கள் ஆன்லைனில் திருடப்படுகிறது என்று குற்றம் சாட்டுகின்றனர். 40 சதவீதத்தினர் மட்டுமே சைபர் கிரைம் குற்றம் நடந்தால் என்ன செய்வது என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள். 60 சதவீதத்தினர் ஆன்லைன் குற்றங்கள் குறித்த அச்சத்தில் உள்ளனர்.
17 நாடுகளில் 17,125 நபர்களிடம் இந்த ஆய்வு செய்யப்பட்டது. இந்தியாவில் 1,000 பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
உலகிலேயே இணையத்தை பயன்படுத்துவதில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து செல்ல வேண்டிய இணையம் தற்போது அழிவுப் பாதைக்குச் அழைத்துச் செல்கிறது என்பதைத்தான் தற்போது வெளியாகியுள்ள அறிக்கை காட்டுகிறது. 1980களுக்குப் பிறகு பிறந்தவர்களில் 31 சதவீதம் நபர்கள் தங்களது கடவுச்சொல்லை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.
வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து செல்ல வேண்டிய இணையம் தற்போது அழிவுப் பாதைக்குச் அழைத்துச் செல்கிறது என்பதைத்தான் தற்போது வெளியாகியுள்ள அறிக்கை காட்டுகிறது. 1980களுக்குப் பிறகு பிறந்தவர்களில் 31 சதவீதம் நபர்கள் தங்களது கடவுச்சொல்லை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.
பாஸ்வேர்டுகளை பயன்படுத்தும் போது 8 எழுத்துகள், நம்பர், அடையாளங்களை 41 சதவீதம் பேர் மட்டுமே சரியாக பாதுகாப்பாக பயன்படுத்துகிறார்கள். இப்படி அடிப்படை பாதுகாப்புகளையே சரியாக செய்யாததன் விளைவுதான் இந்த இணையக் குற்றங்கள் அதிகமானதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. என்ன நடக்கிறது என்று கூடத் தெரியாமல் குற்றங்களில் ஈடுபடுவதால் பெரும்பாலானோர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
இணைய பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. எதற்காக சுய விவரங்களை கேட்கிறார்கள் என்பது கூடத் தெரியாமல் விறுவிறுவென நம்மை பற்றிய அனைத்து தகவல்களையும் கொடுத்து விடுகிறோம். இந்த தகவல்கள் யாரோ ஒருவரால் திருடப்படுகிறது என்பது நம்மில் பல பேருக்கு தெரிவதில்லை. இதனுடன் பணத்தையும் இழப்பதுதான் பிரச்சினையாக உருவெடுத்து உள்ளது.
இணைய பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. எதற்காக சுய விவரங்களை கேட்கிறார்கள் என்பது கூடத் தெரியாமல் விறுவிறுவென நம்மை பற்றிய அனைத்து தகவல்களையும் கொடுத்து விடுகிறோம். இந்த தகவல்கள் யாரோ ஒருவரால் திருடப்படுகிறது என்பது நம்மில் பல பேருக்கு தெரிவதில்லை. இதனுடன் பணத்தையும் இழப்பதுதான் பிரச்சினையாக உருவெடுத்து உள்ளது.
இணையத் திருடர்களை பற்றி புகார் அளிக்கவும் சிலர் தயங்குகிறார்கள். போதுமான விழிப்புணர்வு இணையப் பயன்பாட்டளர்களிடம் இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது. நமது தகவல்களை குறைந்தபட்சம் யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் இருந்தாலே இந்த பிரச்சினையிலிருந்து எளிதாக விடுபடலாம்.
இ-காமர்ஸ் துறை. இந்த நிறுவனங்களில் அனுதினமும் புதிய முதலீடுகள் வந்துகொண்டு இருந்தாலும், இந்த குமிழ் எப்போது வேண்டுமானாலும் உடையலாம் என்பது போல செய்திகள் அடிக்கடி வெளியாகின்றன.
கடந்த சில வாரங்களில் முக்கியமான இ-காமர்ஸ் நிறுவனங்களில் ஆட் குறைப்பு செய்யப்பட்டு வருகிறது. டினிஔல் (tinyowl), ஹவுசிங் டாட் காம், ஸோமாடோ, லோகல்பன்யா, ஹெல்ப்சாட் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆட்குறைப்பு என்ற பெயரில் ஆயிரத் துக்கும் மேற்பட்ட பணியாளர்களை நீக்கி இருக்கிறது. இது போன்ற வளர்ந்து வரும் நிறுவனங்கள் பணியாளர்களை நீக்கி இருந்தாலும், இது சந்தையில் பெரும் சர்ச்சையை இது ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தியாவில் இப்போதுதான் இ-காமர்ஸ் நிறுவனங்கள் வளர்ந்து வருகின்றன. சந்தை வளர்ந்து வரும் சூழ்நிலை இருந்தாலும் இந்த நிறுவனங்கள் இதுவரை லாபம் ஈட்டவில்லை. லாபம் ஈட்டாமல் இந்த நிறுவனங்கள் எப்படி இயங்குகின்றன என்ற சந்தேகம் வரலாம். இந்த நிறுவனங்கள் எதிர்காலத்தில் லாபம் ஈட்டும் என்ற எதிர்பார்ப்பு காரணமாக வென்ச்சர் கேபிடல் நிறுவனங்கள் இந்த நிறுவனங்களில் முதலீடு செய்துவருகிறார்கள். அதனால் இந்த நிறுவனங்களின் பரிவர்த்தனை நஷ்டத்திலே இயங்குகிறது.
அனைத்து முதலீடுகளும் கணிப்பின் அடிப்படையிலேயே நடக்கிறது. இந்தியாவின் சந்தை பெரியது, தவிர நாளுக்கு நாள் ஆன்லைனில் பொருட்கள் வாங்குவது உள்ளிட்ட விஷயங்கள் தொடர்ந்து அதிகமாகி வருகின்றன. இதற்கு ஏற்றது போல ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துவதும் அதிகமாகி வருகின்றன. இவை அனைத்தையும் பார்க்கும் போது நஷ்டம் அதிகமானாலும் இப்போது பெரும்பாலான சந்தையை கைப் பற்றினால் வரும் காலத்தில் நல்ல லாபம் வரும் என்பது கணிப்பு. இதனாலேயே நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு தள்ளுபடி அறிவிக் கிறார்கள். வென்ச்சர் கேபிடல் நிறுவனங்களும் முதலீடுகளைக் கொட்டுகிறார்கள்.
தகவல்களின் அடிப்படையில் பார்க்கும் போது முதல் 10 இடங்களில் உள்ள இ-காமர்ஸ் நிறுவனங்களும் ஒரு நாளைக்கு 90 லட்சம் டாலர் அளவுக்கு நஷ்டத்தை சந்திக்கின்றன. தற்போதைய நிலையில் இந்த நஷ்டம் என்றால், அதிக மக்கள் பயன்படுத்தும் போது இன்னும் அதிக நஷ்டம் வருமே. அப்படியானால் இன்னும் சில வருடங்களுக்கு இந்த நிறுவனங்கள் சந்தையில் தாக்கு பிடிக்கவே பல மில்லியன் டாலர்கள் தேவைப்படும்.
ஏற்கெனவே பல மில்லியன் டாலர்கள் முதலீடு செய்த பிறகு, இனியும் முதலீடு செய்ய வென்ச்சர் கேபிடல் நிறுவனங்கள் முன்வருமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும். இ-காமர்ஸ் நிறுவனங்கள் நீண்ட காலத்துக்கு தள்ளுபடி கொடுக்க முடியாது என்பதுதான் யதார்த்தமான நிலையாக இருக்கிறது.
இது ஒருபுறம் இருக்க இ-காமர்ஸ் நிறுவனங்களின் மதிப்பீடு தொடர்ந்து உயர்வதாகவும் சந்தையில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. உதார ணத்துக்கு பிளிப்கார்ட் நிறுவனத்தின் மதிப்பு 1,600 கோடி டாலர் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. பல பெரிய நிறுவனங்களின் மதிப்பை விடவும் இந்தத் தொகை பெரியதாக இருக்கிறது.
இந்த நிறுவனங்களின் மதிப்பு அதிகமாக இருந்தாலும் எப்போது பணமாக மாறும் என்ற விஷயத்தில் அனலிஸ்ட்களுக்கு சந்தேகம் இருக்கிறது. இ காமர்ஸ் நிறுவனங்களில் முதலீடு செய்த வென்ச்சர் கேபிடல் நிறுவனங்களுக்கு மூன்று வகைகளில் பணம் கிடைக்கலாம்.
முதலாது ஐபிஓ (பொதுப்பங்கு) வெளியிடலாம். இப்போதைக்கு இந்தி யாவில் அதற்கான சாத்தியம் குறைவு என்ற அவர்கள் கருதுகிறார்கள். இங்கு இவ்வளவு தொகை திரட்ட முடியாது என்பது கணிப்பு. அலிபாபா போல அமெரிக்க பங்குச்சந்தையில் பட்டியலிடலாம். ஆனால் அனைத்து நிறுவனங்களுக்கும் இது சாத்தியம் கிடையாது.
வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களை வாங்குவது. இதற்கும் வாய்ப்பு குறைவே என்ற பேச்சு இருக்கிறது.
அமேசான் போன்ற ஒரு நிறுவனம் இந்தியாவில் ஒரு நிறுவனத்தை வாங்கு வதை விட சொந்த நிறுவனத்திலே அவர்கள் முதலீடு செய்கிறார்கள். மூன்றாவது இந்திய இகாமர்ஸ் நிறுவனங்களுக்குள் இணைப்பு. இதற்கான வாய்ப்பு அதிகம் என்பதுதான் அவர்களின் கருத்தாக இருக்கிறது.
பொதுவாக நிறுவனங்களில் விற்பனை இவ்வளவு என்ற அளவீடுதான் இருக்கும். ஆனால் இங்கு ஜிஎம்வி (gross merchandise value) என்ற அளவில் மதிப்பீடு செய்கிறார்கள். ஒரு பொருளின் மதிப்பு 130 ரூபாய்.
இதில் 30 ரூபாய் தள்ளுபடி கொடுத்தால் 100 ரூபாய்க்கு பொருள் விற்கப்படுகிறது. ஆனால் ஜிஎம்வி 130 ரூபாய் என்பது கணக்கீடு செய்கிறார்கள். 30 ரூபாய் என்பது மார்க்கெட்டிங் கட்டணமாக பதிவு செய்கிறார்கள். இந்த கணக்கீட்டு முறையிலும் பல அனலிஸ்ட்களுக்கு சந்தேகம் இருக்கிறது. சீனா இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபாவின் ஜிஎம்வி 29,600 கோடி டாலர்கள். ஆனால் விற்பனை அளவு 800 கோடி டாலர் மட்டுமே.
சில வருடங்களுக்கு முன்பு சீனா இருந்த நிலையில் இப்போது இந்தியா இருக்கிறது. இப்போது அங்கு 50 சதவீதம் ஆன்லைனில் பொருட்கள் வாங்குகிறார்கள். இந்தி யாவில் அவ்வளவு நபர்கள் இன்னும் வாங்கவில்லை. தவிர ஸ்மார்ட் போன்களின் தாக்கமும் அதிகமாக இருக்கும் என்பதால் மொபைல் மூலம் பொருட்கள் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்ற வாதத்தை ஏற்பதாக இருந்தாலும் வேறு காரணமும் சொல்லப்படுகிறது.
சீனாவில் பயன்படுத்தப்படும் மொபைலில் ஆங்கிலம் கிடையாது. ஆனால் இங்கு ஆங்கிலம்தான் பயன்படுத்துகிறோம் என்பதால் ஒரு கட்டத்துக்கு மேல் மொபைல் மூலமான விற்பனை உயராது என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.
டாட் காம் பபுள் போல உடனடியாக இந்த நிறுவனங்கள் காணாமல் போகாது. ஆனால் இ காமர்ஸ் சந்தையில் பெரிய மாற்றம் நிகழ்வது நிச்சயம்.
இன்று,
நவம்பர்-24.
காங்கோ தேசிய தினம்- ஏபல் டாஸ்மான், வான் டீமனின் நிலம்(தற்போதைய தாஸ்மானியா) என்ற தீவை கண்டுபித்தார்(1642)
- சார்லஸ் டார்வின், ஆரிஜின் ஆஃப் ஸ்பீசிஸ் என்ற நூலை வெளியிட்டார்(1859)
=====================================================================================