திரையரங்க வேதாளம்?


ஜாஸ் நிறுவனம், 11 தியேட்டர்களை விலைக்கு வாங்கவில்லை என்றும், “தமிழக அரசிடமிருந்து பார்ம் “என்” லைசென்ஸ் பெற்று, தியேட்டர்கள் நடத்துவதற்காக ஜாஸ் சினிமாஸ் கம்பெனிக்கு வாடகைக்கு விட்டுள்ளது” என்றும் “கிளாசிக் மால் நிறுவனம்” 11 திரையரங்குகள் கை மாறியதைப் பற்றி தெளிவில்லாத ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
கிளாசிக் மால் நிறுவனத்தின் அறிக்கையிலிருந்து நமக்கு எழுந்துள்ள சில சந்தேகங்கள் வருமாறு :-
இந்த அறிக்கையிலே கூறப்படும் 11 தியேட்டர்களையும் விலைக்கோ அல்லது வாடகைக்கோ பெற்ற ஜாஸ் நிறுவனத்தின் உரிமையாளர்கள் யார்?
பதினோரு தியேட்டர்களையும் வாங்கியவர்கள் மீது தான் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. அதற்கு தியேட்டர்களை வாங்கியவர்கள் தான் பதில் கூற வேண்டும். அல்லது அவர்களைப் பக்கத்திலேயே, தான் வாழ்ந்து வரும் வீட்டிலேயே நீண்ட காலமாக வைத்துக் கொண்டிருக்கும் முதல் அமைச்சர் ஜெயலலிதா பதில் கூற வேண்டும். அவர்கள் பதில் எதுவும் இதுவரை கூறாமல் இருப்பதிலிருந்தே, சந்தேகம் உறுதியாகிறதா? அல்லவா? பொதுமக்கள் பார்வை யிலிருந்து எதையோ மறைப்பதற்கான முயற்சி நடப்பதாகத் தானே எவரும் எண்ணுவர்!
தற்போது பதில் அளித்துள்ள கிளாசிக் மால் நிறுவனம், “தமிழக அரசிடம் இருந்து “பார்ம் என் லைசென்ஸ்” பெற்று, தியேட்டர்களை நடத்துவதற்காக வாடகைக்குக் கொடுத்திருப்பதாகக்” கூறியிருக்கிறார்களே, தமிழக அரசிடம் இருந்து பார்ம் என் லைசென்ஸ் அவர்களுக்கு நேரடியாகக் கிடைக்கவில்லையா?
அதன் காரணமாகத் தான் ஜாஸ் நிறுவனத்திடம் தியேட்டர்களைக் கொடுக்க வேண்டிய நெருக்கடி அவர்களுக்கு ஏற்பட்டதா? ஜாஸ் நிறுவனத் திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குத்தகைத் தொகை எவ்வளவு?
தமிழக அரசிடமிருந்து “ பார்ம் என் லைசென்ஸ்” கேட்டு எப்போது விண்ணப்பிக்கப்பட்டது? அந்த உரிமத்தை வழங்காமல் அரசு பல நாட்கள் இழுத்தடித்தது என்பது உண்மையா? இல்லையா? தியேட்டர்களுக்கான அனுமதி தமிழக அரசிடமிருந்து எப்போது கிடைத்தது?
“ஜாஸ்” நிறுவனத்தின் உயர் பொறுப்பிலே இருப்பவர் சாட்சாத் இளவரசியின் மகன் விவேக். அவர் நிர்வாகத்திலே உள்ள நிறுவனம், தியேட்டரை வாடகைக்கு எடுத்து நடத்துகிறது என்றால் அதற்கான முதலீடு எங்கிருந்து, யார் மூலம் கிடைத்தது?
முதன் முதலில் இந்தச் செய்தியை வெளியிட்ட “இந்து” , “பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியிலே உள்ள திரையரங்குகளை சத்யம் சினிமாஸ் நிறுவனம் வாங்கியிருப்பதாகத் தானே செய்தி வெளியிட்டது. அந்த சத்யம் சினிமாஸ் நிறுவனத்திற்கும், பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டிக்கும் என்ன தொடர்பு? சத்யம் சினிமாஸ் நிறுவனத்திடமிருந்து, திரையரங்கம் நடத்தும் உரிமையை ஜாஸ் நிறுவனம் பெற்றதா? அல்லது பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி நிறுவனத்திடமிருந்து அவர்கள் அறிக்கையிலே சுட்டிக்காட்டியிருப்பது போல நேரடியாகப் பெற்றதா?
லுhக்ஸ் எனப்படும் 11 திரையரங்குகளுக்கு 2014 மார்ச் மாதத்தில் அனுமதி வழங்கப்பட்டதாகச் சொல்லப்படுவது உண்மை என்றால்; 2014 மார்ச் மாதம் முதல் 2015 ஜனவரி மாதம் வரை அந்த 11 திரையரங்குகளை நடத்திக் கொண்டிருந்தது யார்? சத்யம் சினிமாஸ் நிறுவனம் தானே? அதை ஏன் மறைக்கிறீர்கள்?
2013 செப்டம்பர் மாதத்தில் சத்யம் சினிமாஸ் நிறுவனத்தின் உரிமையாளர்கள் மீது நில அபகரிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டதாக பத்திரிகைகளில் செய்தி வெளிவந்ததே; அந்த வழக்கின் அடிப்படையில் தான் தற்போது, சத்யம் சினிமாஸ் நிறுவனம் மிரட்டப்பட்டு, இந்த
11 திரையரங்குகள் ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப் பட்டுள்ளனவா?
சசிகலா குழுவினரின் ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில், இந்தியா முழுவதும் 136 திரையரங்குகள் இருப்பதாகச் சொல்லப்படுவது உண்மையா? அதற்கான பணம் எங்கிருந்து, யாரால், கிடைத்தது?
“பி.வி.ஆர். சினிமா நிறுவனம், சத்யம் சினிமா நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திரையரங்குகளை 600 கோடி ரூபாயிலிருந்து 1000 கோடி ரூபாய் வரை கொடுத்து வாங்க முயற்சித்தாக “இந்து” ஆங்கில நாளிதழ் முதன் முதலாகச் செய்தி வெளியிட்டிருந்ததே, அந்த பி.வி.ஆர். நிறுவனத்திற்குச் சொந்தமான திரையரங்குகளுக்கு அரசிடம் அனுமதி கேட்டு விண்ணப்பம் போடப்பட்டது எப்போது? அதற்கு அனுமதி வழங்கப்பட்டாகி விட்டதா? எப்போது? வழங்கப்படவில்லை என்றால், அவர்கள் அவற்றை விற்பதற்கு முன் வராதது தானா?
"ஜாஸ்” சினிமா நிறுவனம், கோவை - பீளமேடு பாங்க் ஆப் இந்தியா வங்கி யிலிருந்து, 2015 ஜனவரியில், 42 கோடியே 50 இலட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ள நிலையில், “லூக்ஸ்” திரையரங்குகளில் உள்ள புரஜக்டர், ஃபர்னிச்சர், ஏர் கண்டிஷனர்கள், ஆகியவற்றை கடனுக்கு அடமானமாகக் காட்டியிருக்கிறார்கள். தியேட்டர்களை விலைக்கு வாங்காமல், ஐந்தாண்டுகளுக்குக் குத்தகைக்கு மட்டுமே எடுத்ததாகக் கூறப்படும் ஒரு நிறுவனம், திரையரங்குகளில் உள்ள தளவாடங்களைக் காட்டி, நாட்டுடைமை யாக்கப்பட்ட வங்கியில் கடன் பெற முடியுமா?
“கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும்” என்பார்கள்; இவர்களின் புளுகு மூட்டையை எத்தனை நாட்களுக்குப் பொத்தி வைத்துப் பாதுகாக்க முடியும் என்பது போகப் போகத் தான் தெரியும்!
இங்கே குறிப்பிட்டுள்ள கேள்விகள் அனைத்திற்கும் முறையான முழுமையான பதில் விளக்கங்கள் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து கிடைக்கும் வரை, பொதுமக்கள் மனதில் எழுந்துள்ள ஆழமான அய்யப்பாடுகள் அகலாது! மேலும் மத்திய அரசு தன்னுடைய உளவுத் துறை மூலம் இந்தத் தியேட்டர்கள் தொடர்பான ஆவணங்களைச் சேகரித்து வைத்திருப்பதாகப் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.
அது உண்மையானால், மத்திய அரசு அந்த ஆவணங்களை அரசியல் ரீதியாகப் பயன்படுத்துவதற்கு உரிய நேரம் வரும் வரை காத்திருக்காமல், உடனடியாக வெளியிட்டு விபரங்களைத் தெரிவிப்பதோடு; மத்திய புலனாய்வுத் துறை, அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, ஆகியவற்றின் மூலம் விசாரணை செய்து வழக்கு தொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டால் தான், “நீதியை எப்போதும் நிலைநாட்டு வோம்” என்று பா.ஜ.க. அரசு உரிமை கொண்டாடுவதற்கு ஓரளவேனும் பொருள் இருக்க முடியும். இல்லாவிட்டால் “நடப்பதெல்லாம் வெளிப் பகட்டு; சொல்லப் போனால் வெட்கக் கேடு!” என்று தான் நாட்டு மக்கள் நினைப்பார்கள்!
ஜெயலலிதாவுடன் இருப்பவர்கள் இந்தத் திரையரங்குகளை வாங்கினார்களா? இல்லையா? வாங்கியிருந்தால் எத்தனை கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டன? அந்தப் பணம் எங்கிருந்து, எதன் மூலம் கிடைத்தது? அந்தத் திரையரங்குகள் மிரட்டி வாங்கப் பட்டன என்ற குற்றச்சாட்டு உண்மையா? அந்தத் திரையரங்கங்களுக்கு அரசு சார்பில் வழங்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் திட்டமிட்டுத் தாமதப்படுத்தப்பட்டனவா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் உரியவர்களிடமிருந்து பதில் வர வேண்டாமா?
31-10-2015 அன்று நான் விடுத்த அறிக்கையில், “தமிழ்நாட்டில் திரையரங்குகள் நடத்துவதில் முன்னணியிலே உள்ள நிறுவனங்களில் ஒன்றான எஸ்.பி.ஐ. சினிமா நிறுவனம், வேளச்சேரியில் உள்ள “பீனிக்ஸ்” மார்க்கெட் சிட்டியில் உள்ள தங்களுடைய பதினோறு திரையரங்குகளையும் ஜாஸ் சினிமா நிறுவனத்திற்கு விற்று விட்டார்கள்” என்று “தி இந்து” ஆங்கில நாளிதழ் “ஜாஸ் சினிமா நிறுவனம் லக்ஸ் மல்டிபிளக்ஸ் நிறுவனத்தை வாங்கியுள்ளது” என்ற தலைப்பில், வெளியிட்ட செய்தியினை அப்படியே மொழியாக்கம் செய்து வெளியிட்டிருந்தேன். இந்தச் செய்திக்கு ஆதாரமாக, “இந்து” நாளிதழ், “மத்திய அரசின் தனியார் நிறுவனங்கள் தொடர்பான அமைச்சகத்தின் வலைத்தளத்திலிருந்து கிடைத்த தகவல்படி” என்றும் “இந்து” குறிப்பிட்டதோடு, அந்த வலைத்தளத்திலிருந்து எடுத்த ஆதாரங்களையும் அப்படியே வெளியிட்டிருந்தது. அவையனைத்தை யும் விரிவாகக் குறிப்பிட்டுத் தான் நான் அறிக்கை விடுத்திருந்தேன்.
இதற்கு தியேட்டர்களை இப்போது நடத்துபவர்களிடமிருந்தோ, தமிழக அரசிடமிருந்தோ இதுவரை எந்தவிதமான பதிலும் இல்லை. அதாவது சசிகலா - இளவரசி தரப்பினரிடமிருந்தோ, முதலமைச்சர் ஜெயலலிதாவிடமிருந்தோ இதுவரை விளக்கம் ஏன் வரவில்லை?
நான் அறிக்கை விடுத்ததைப் போலவே, தமிழகத்திலே உள்ள மற்ற எதிர்க் கட்சிகளின் தலைவர்களும், இந்தத் திரையரங்குகள் விவகாரம் பற்றி விடுத்த அறிக்கைகளையும் எடுத்துக்காட்டி, 3-11-2015 அன்று நான் விடுத்த அறிக்கை யில் “இப்படிப்பட்ட கடுமையான குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரங்களுடன் வந்திருக்கிற போது, அரசுப் பொறுப்பிலே இருப்பவர்கள் இது வரை இதற்கு எந்தவிதமான பதிலும் சொல்லாமல் அமைதி காத்து வரும் நிலையில், குற்றச்சாட்டுகள் உண்மை தான் என்று அனைவரும் யூகித்திடத் திடமான இடம் ஏற்பட்டு விட்டது அல்லவா? எனவே மக்கள் மனதிலே எழுந்துள்ள பொருள் பொதிந்த வினாக்களுக்கு விளக்கமான பதிலை அரசுத் தரப்பில் உடனடியாகத் தர வேண்டும். இந்தச் சொத்துக்களை வாங்கியதாகக்குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், ஏற்கனவே லஞ்ச ஊழல் குற்றத்திற்காக வழக்கைச் சந்தித்துக் கொண்டிருப்பவர்கள் அல்லவா? ஏற்கனவே பல சொத்துக்களை அவர்கள் வாங்கியதாக பெங்களூர் சிறப்பு நீதி மன்றத்தினால் கடுமையாகத் தண்டிக்கப்பட்டவர்கள் அல்லவா? இப்போதாவது அவர்கள் உரிய விளக்கத்தோடு மக்களைச் சந்திக்க வேண்டாமா? சொத்துக் குவிப்பு வழக்கு உச்ச நீதி மன்றத்தில் நிலுவையில் இருக்கின்ற நிலையில், இந்தப் புதிய சொத்துக் குவிப்புக்கு என்ன பதில் என்று நாடே எதிர்பார்க்கிறது” என்று கேட்டிருந்தேன்.
இதற்கும் எந்தவிதமான பதிலும் இல்லை.
                                                                                                                                           -கலைஞர் 
=============================================================================================

கூந்தல் உதிர்வு

மாதம் தவறாத பார்லர் விசிட்டோ, காஸ்ட்லியான கூந்தல் அழகுப் பொருள் உபயோகமோ மட்டுமே உங்கள் கூந்தலின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்து விடாது. 
கூந்தலின் அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் உணவே மருந்து! ஊட்டச்சத்துகளில் ஒன்று குறைந்தாலும்  அது கூந்தலில் வேறு வேறு பிரச்னைகளாக பிரதிபலிக்கும்.

கூந்தல் உதிர்வுக்குக் காரணமாகும் ஊட்டச்சத்துக் குறைபாடு

கூந்தலை பாதிக்கிற ஊட்டச்சத்துக் குறைபாடுகளில் முதல் இடம் புரதத்துக்கு. ஃபாலிக்கிள்எனப்படுகிற கூந்தல் நுண்ணறைகளுக்கு ஏராளமான புரதம் தேவை. அதில் குறை ஏற்படும்போது உடனடியாக கூந்தலின் வேர்ப்பகுதி பாதிக்கப்படும்.Protein - Calorie Malnutrition (PCM)  எனப்படுகிறஇந்தப் புரதக் குறைபாட்டை அதன் தீவிரத்தைப் பொறுத்து4 நிலைகளாகப் பிரிக்கலாம்.

முதல் நிலையில் கூந்தலானது வறண்டு, உயிரே இல்லாமல் காட்சியளிக்கும். சுலபமாக உடைந்து உதிரும். டெலோஜன் எனப்படுகிற கூந்தல் உதிர்வதற்கு முன்பான ஓய்வு நிலைக்கு நிறைய வேர்க்கால்கள் தள்ளப்படும். அடுத்த நிலையானது, தீவிர வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், இரைப்பை அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கும் அதிகம்
ஏற்படும். இந்த இரண்டு நிலைகளிலுமே கூந்தலானதுசெம்பட்டையாக மாறுவதுடன், ஆங்காங்கே உதிர்ந்து சிதறிய நிலையில் காணப்படும்.
Marasmus  என்பதும் புரதக் கலோரி குறைபாட்டு பிரச்னையே. இது பெரும்பாலும் குழந்தையின் முதல் வயதில் ஏற்படும். கூந்தலானது வறண்டும் மிக மெலிதாகவும் இருக்கும். கூந்தலின் வளர்ச்சி நிலையான அனாஜனில் ஒரு முடி நுண்ணறைகூட
இருக்காது. மொத்தமும் டெலோஜன் என்கிற ஓய்வு நிலையிலேயே இருக்கும்.  Marasmus பிரச்னை தொடருமானால், மொத்த முடியும் கொட்டி விடும். குழந்தையின் வளர்ச்சியும் பெரிதும் பாதிக்கப்படும்.

Kwashiorkor என்பது இன்னொரு நிலை. இது குழந்தையின் 2வது வயதில் தாக்கும். குறைந்த அளவு புரதமும் அதிக கார்போஹைட்ரேட்டும் உள்ள உணவு குழந்தைக்குக் கொடுக்கப்படும்போது இந்தப் பிரச்னை ஏற்படும். Marasmus மற்றும் Kwashiorkor என இரண்டு நிலைகளிலுமே கூந்தல் தொட்டாலே உடையும். உதிரும். தலையில் ஒரு பகுதியிலோ அல்லது முழுவதிலுமோ வழுக்கை ஏற்படும். கருப்பாக இருந்த கூந்தல் சிவப்பாக மாறும்.

கூந்தல் ஆரோக்கியத்துடன் மிக நெருங்கிய தொடர்புள்ளது இரும்புச்சத்து.  பெண்களுக்கு இரும்புச்சத்துக் குறைபாடு ஏற்படுவது மிக சகஜமானது. மாதவிலக்கின் போது ஏற்படும் ரத்த இழப்பில் இரும்புச்சத்து பெரியளவில் குறையும். இரும்புச்சத்து குறைபாட்டின் முதல் அறிகுறி முடியின் ஆரோக்கியத்தில் தெரியும்.

உடலுக்குத் தேவையான கொழுப்பு அமிலங்களில் குறைபாடு அதிகமாகும் போது, சிலருக்கு புருவங்கள் மற்றும் மண்டைப்பகுதியில் சிவப்புத் திட்டுகள் காணப் படும். பெரும்பாலான முடிகள் உதிர்ந்து விடும். இருக்கும் கொஞ்ச முடியும் வறண்டு, நிறம் மாறி உடையத் தயாராக இருக்கும்.

தீவிரமான முடி உதிர்வு, வழுக்கை போன்ற பிரச்னைகளுக்கு துத்தநாகக் குறைபாடு காரணமாகும் என்பதே பலருக்கும் தெரியாது. அத்தியாவசிய கொழுப்பு அமிலக் குறைபாடும் சரி, துத்தநாகக் குறைபாடும் சரி,  செல்களின் வளர்சிதை மாற்றத்துடன் சம்பந்தப்பட்டவை என்பதால் அவற்றின் விளைவானது கூந்தல் ஆரோக்கியத்தில் பிரதிபலிக்கும்.மேலே சொன்ன அத்தனை பிரச்னைகளுக்கும் முறையான மருத்துவப் பரிசோதனையும் சிகிச்சைகளும் தேவை. 
சுய மருத்துவமோ, வெளிப்பூச்சுகளோ பலன் தராது. ட்ரைகாலஜிஸ்ட் உதவியுடன் ஊட்டச்சத்துக் குறைபாட்டை சரி செய்கிற உணவுகளை பற்றித் தெரிந்து கொண்டு பின்பற்றலாம். தேவைப்பட்டால் மருந்துகள் மற்றும் சப்ளிமென்ட்டுகளையும் அவர் பரிந்துரைப்பார்.

உடல் எடை அதிகரித்துவிடக் கூடாது என்கிற பயத்தில் வேண்டுமென்றே பட்டினி இருப்பது, சாப்பிட்டதும் வாந்தி எடுப்பது, அளவுக்கதிக உடற்பயிற்சி செய்வது, பேதி மருந்து மற்றும் உடல் இளைப்பதற்கான மாத்திரைகளை எடுத்துக் கொள்வது என சிலர் முயற்சி செய்வதையே அனோரெக்சியா நெர்வோஸா என்கிறோம். இது பெரும்பாலும் டீன் ஏஜ் பெண்களையே பாதிக்கிறது. 
இதன் விளைவால் முடி உதிர்வு அதீதமாக இருக்கும். கூந்தல் ஆரோக்கியத்தைத் தக்க வைக்கும் அளவுக்கு உணவின் மூலம் உடலுக்குத் தேவையான ஊட்டங்கள் போகாததே காரணம். 
இது தற்காலிகமானபிரச்னைதான். ஊட்டச்சத்துக் குறைபாடு சரிசெய்யப்பட்டாலே கூந்தல் ஆரோக்கியத்தை மீட்கலாம். 
=======================================================================================
இன்று,
நவம்பர்-13.

  • உலக வலைப் பின்னல்(WWW) ஆரம்பிக்கப்பட்டது(1990)
  • கார்டன் கூல்ட் என்பவரால் லேசர் கண்டுபிடிக்கப்பட்டது(1957)
  • கிரீஸ் நாட்டின் புதிய அரசியலமைப்பு பெறப்பட்டது(1864)


=======================================================================================


இந்தியா போகும் போது இதே மாதிரி தொப்பியை வாங்கி மாட்டிக்கணும்.பீகார் தேர்தலை பற்றி கேட்டா இவங்கள மாதிரி பேசாம நின்னுறனும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?