கட்டுமானம் ஆரம்பம்?

 சந்திராயன் -3 விண்கலத்தில் உள்ள லேண்டர் கேமரா மூலம் எடுக்கபப்ட்ட நிலவின் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.



மதுரையில்  பாடகர் டிஎம்.சௌந்தராஜனின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழக -கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி நீர் வரத்து விநாடிக்கு 8 ஆயிரம் கன அடியில் இருந்து 10 ஆயிரம் கன அடியாக உயர்வு

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரி அனைத்து எம்.எல்.ஏக்களையும் அழைத்து சென்று பிரதமரிடம் கோரிக்கை வைக்க உள்ளேன் - புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி .

திருநெல்வேலி, கடலில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.  முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூபாய் 2 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்..

நீட் தேர்வை ரத்து செய்யாத ஒன்றிய அரசையும், நீட் ஆதரவாக தனது பதவிக்குரிய கண்ணியத்தை மறந்து மூன்றாந்தர அரசியல் செய்யும் ஆளுநர் ஆர்.யன்.ரவியையும் கண்டித்து திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 20ம் தேதி அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிப்பு.

சென்னை திநகரில் ஓசி பிரியாணி கேட்டு தகராறில் ஈடுபட்ட இரண்டு காவலர்கள் பணியிடமாற்றம் .

----------------------------------------


கட்டுமானம் ஆரம்பம்?

நாட்டின் பல்வேறு இடங்களில் புதிய அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனங்கள் அதாவது 'எய்ம்ஸ் மருத்துவமனைகள்' திறக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடுகடந்த வாரம் கூறியிருந்தார்.

பீகார் எய்ம்ஸ்
இதுதொடர்பாக பிரதமர் மோதி பேசியபோது, "அசாமின் கௌஹாத்தி முதல் மேற்கு வங்க மாநிலம் கல்யாணி வரையிலும், ஜார்கண்டில் உள்ள தியோகர் முதல் பிகாரில் உள்ள தர்பங்கா வரையிலும் சிறந்த சுகாதார வசதிகளுடன், மக்கள் சிகிச்சை பெறும் வகையில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளன. எனவே, நோயாளிகள் மருத்துவ சிகிச்சைக்காக நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் செல்ல வேண்டியதில்லை" என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், பிகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானமே துவங்காமல் மதுரை எய்ம்ஸ் போன்றே உள்ளதாக்க் கூறி  அரசியல் சூடுபிடித்துள்ளது.

தர்பங்காவில் எய்ம்ஸ் அமைப்பதற்கான ஒப்புதல் செப்டம்பர் 19, 2020 அன்று, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தின் கீழ் பிகார் இருந்தபோது பெறப்பட்டது. அப்போது பாஜக தலைவர் மங்கள் பாண்டே மாநில சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தார்.

கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி பிஹார் அரசாங்கம் முதல் முறையாக நிலத்தை வழங்கியதாகவும் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.

பிகார் அரசு 151 ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்குவதற்கான முன்மொழிவை அனுப்பியது மட்டுமல்லாமல், தனது சொந்த செலவில் நிலத்தை மேடாக்கும் பணியையும் தொடங்கி ஒப்படைத்தது.

நாட்டில் கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனைகளில் இதுவே சிறந்த இடம் என்று இங்கு வந்த ஒன்றிய  குழு முதலில் கூறியது.

 நெடுஞ்சாலை மற்றும் விமான நிலையத்திற்கு அருகில் இந்தப் பகுதி அமைந்திருப்பதுதான்  குழு அவ்வாறு கூறியதற்கு முக்கிய காரணம்.

மேலும் இந்த நிலம் திறந்த மற்றும் பசுமையான பகுதியில் உள்ளது. 

அங்கு கட்டுமானப் பணிகளைச் சிறப்பாகவும் வேகமாகவும் செய்ய முடியும். 

அத்துடன் இந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் போன்ற பிரச்னைகள் இல்லை.

இருந்தும் 

இங்கு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டால் அதன் பெருமை பிகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு வந்துவிடும் என ஒன்றிய அரசு எண்ணுவதுதான் கட்டப்படாமைக்கு காரணம்.மதுரை எய்ம்ஸ் நிலைதான.

இதனிடையே, பிகார் அரசு மருத்துவக் கல்லூரிகளை அனைத்து இடங்களிலும் கட்டி வருவதாக முதலமைச்சர் நிதிஷ்குமார் கூறியுள்ளார். ‘பாட்னா மற்றும் தர்பங்காவிலேயே எய்ம்ஸ் கட்டப்பட வேண்டும்; இது எங்கள் விருப்பம்’ என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அரசுகளுக்கு இடையேயான பூசல் காரணமாக இங்கு பணிகள் முடங்கியுள்ளன. 

தர்பங்காவின் அண்டை மாவட்டங்களான மதுபனி, சமஸ்திபூர், முசாபர்பூர், சீதாமர்ஹி, ஷிவர் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த நோயாளிகள்கூட இங்கு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டால், அதன் மூலம் பலன் அடைவார்கள்.

ஆனால் பா.ஜ.க வின் ஒன்றிய அரசு எய்ம்ஸ் கட்டுவதை மக்கள் நலன் எண்ணாமல் அரசியல் செய்வதுதான் வேதனை.

தற்போது மதுரை எய்ம்ஸ் 2026ல் முடிக்கப்படும் என்று கூறப்பட்டு வந்தநிலையில் நேற்று அதன் கட்டுமாண ஒப்பந்தம் தொடர்பாக அறிவிக்கை வெளியாபி ஒப்பந்தபுள்ளிகள் கோரப்பட்டுள்ளது.33 மீதங்களில் கட்டிடப் பணிகளை முடிக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது.

போகிறப்போக்கைப்பார்த்தால் 2026ல் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை செயல் படும்?.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?