பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரை பயணம் மேற்கொள்கிறார். அங்கு மறைந்த பிரபல பின்னணி பாடகர் கலைமாமணி டி.எம். சௌந்தரராஜனின் முழு திருவுருவச் சிலையை திறந்து வைக்க உள்ளார்.
மதுராந்தகம் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதி வேகத்தில் சென்ற கார், நிலைத்தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது . இந்த காரில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.
தஜகிஸ்தானில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகி உள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் பிரபு வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆடி அமாவாசையையொட்டி கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹவுரா திருச்சி ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒடிசாவில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. திருச்சி ஹவுரா இடையே ஆகஸ்ட் 18,22,25 ம் தேதிகளில் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஹவுரா திருச்சி இடையே 24,27 ம்தேதிகளில் ரயில் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கல்வி நிலையங்களின் பெயர்களில் உள்ள சாதி பெயர்களை நீக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யபட்டுள்ளது.
இமாச்சலப்பிரதேசத்தில் மீண்டும் ஏற்பட்ட நிலச்சரிவால் வீடுகள் இடிந்து சேதமடைந்தன. கடந்த 3 நாட்களில் கனமழை மற்றும் நிலச்சரிவால் பலியானோர் எண்ணிக்கை 60 ஐ தாண்டியுள்ளது.
அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் உள்ள மாவி தீவில் காட்டுத் தீ ஏற்பட்ட பகுதிகளில் 1,300-க்கும் மேற்பட்டவா்கள் தொடா்ந்து மாயமாகியுள்ளனா்.
2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் மோசடி வழக்கில் அமெரிக்க முன்னாள் குடியரசுத் தலைவர் டெனால்ட் டிரம்ப் உள்பட 19 பேருக்கு கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
பொய்.
நாங்குநேரி பள்ளி மாணவர் தாக்கப்பட்ட சம்பவத்தில் தி.மு.க-வை சேர்ந்தவர்கள் தான் காரணம் என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
கைதான மாணவரின் தந்தை பா.ஜ.க உறுப்பினர் மட்டுமல்ல வட்டச் செயலாளர் என அண்ணாமலைக்கு தி.மு.க மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் பதிலலித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் பட்டியல் இன மாணவர் மற்றும் அவரது சகோதரி, சக மாணவர்களால் வெட்டப்பட்ட விவகாரத்தில், கைதான மாணவரின் தந்தை பா.ஜ.க உறுப்பினர் என்று அண்ணாமலைக்கு நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் ஆவுடையப்பன் பதில் கொடுத்துள்ளார்.
நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் ஆவுடையப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “நாங்குநேரி பள்ளி மாணவர்கள் மோதல் சம்பவத்துக்கு தி.மு.க-வை சேர்ந்தவர்கள் தான் காரணம் என பொய்யான குற்றச்சாட்டை பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
காவல்துறையால் கைது செய்யப்பட்ட மாணவரின் தந்தை பாஜக உறுப்பினர் ஆவார். அவர், நாங்குநேரி வார்டு தலைவராக இருந்துள்ளார்.
பா.ஜ.க முன்னணி தலைவரிடம் நெருங்கி பழகியுள்ளார். இது அப்பகுதி மக்கள் அனைவருக்கும் தெரியும். இதையெல்லாம் மறைத்துவிட்டு திமுகவுக்கும், திமுக நிர்வாகிகளின் பெயருக்கும் களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் பொய்யான தகவலை அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
இது மிகவும் கண்டிக்கத்தக்கது. கைதான மாணவரின் தந்தை முன்னாள் அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணனுடன் இணைந்து தேர்தல் பிரச்சாரம் செய்த புகைப்படம், பாஜக உறுப்பினர் அட்டை புகைப்படம் ஆகியவை உள்ளது. இதையெல்லாம் அண்ணாமலை மறைத்து தி.மு.க மீது அவதூறு பரப்புவது அருவருக்கத்தக்க செயலாகும்.அண்ணாமலை மொய்யைத் தவிர வேறு பேசுவதில்லை என்பது ததிழ்நாடு அறிந்த உண்மை.”
இவ்வாறு ஆவுடையப்பன் தெரிவித்துள்ளார்.
----------------------------------------