கலைஞர் நினைவு


கலைஞர்

 தமிழக அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5-ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று (ஆகஸ்ட் 7) 

ஐந்துமுறை தமிழ்நாட்டின் முதலமைச்சர், 50 ஆண்டுகள் திமுக தலைவர், இலக்கியவாதி, வசனகர்த்தா என பன்முக ஆளுமை மிக்கவராக திகழ்ந்தவர் கருணாநிதி. தமிழக அரசியலில் தடம் பதித்து தமிழ் மொழி, மாநில முன்னேற்றத்துக்குப் பெரும் பங்காற்றியவர். கலைஞர், 

தமிழினத் தலைவர், முத்தமிழ் அறிஞர் என்று அன்புடன் அழைக்கப்படுபடும் கருணாநிதியின் 5-ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று.

இந்த நாளில் அவர் கடந்து வந்த அரசியல் பாதை ,சாதனைகள் பற்றி சுருக்கமாக்க் காணலாம். :-

1953 ஜூலை 14, 15: "டால்மியா" புரம் என்ற பெயரைக் கல்லக்குடி என பெயர் மாற்றம் செய்ய வேண்டுமெனக் கோரியும், குலக் கல்வி திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் திமுக போராட்டம் நடத்தியது. தண்டவாளத்தில் படுத்து கருணாநிதி போராட்டம் நடத்தினார்.


  • 1957: குளித்தலை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு முதல்முறையாக எம்எல்ஏ ஆனார்.
  • 1961: திமுகவின் பொருளாளராக நியமிக்கப்பட்டார்.

  • 1962: தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக பதவியேற்றார் கலைஞர் கருணாநிதி.

  • 1969 பிப்ரவரி 10: அண்ணாவின் மறைவுக்குப் பின் , தி.மு.க.வின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக முதலமைச்சராக முதன்முறையாகப் பதவியேற்றார்.

  • 1971: இரண்டாவது முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சரானார் கருணாநிதி.

  • 1989: தமிழ்நாட்டின் முதலமைச்சராக 3-வது முறையாக பொறுப்பேற்றார்.


  • 1996: தமிழ்நாட்டின் முதலமைச்சராக நான்காவது முறையாக பதவியேற்றார்.

  • 1996-2001 ஆண்டு காலத்தில் அவர் முதலமைச்சராக இருந்தபோது சமத்துவத்தை முன்னிறுத்தவும் சாதி, மத பேதங்களைக் களையவும் தமிழ்நாட்டில் சமத்துவபுரங்களை உருவாக்கினார்.
  • .
  • 2006: தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஐந்தாவது முறையாக பொறுப்பேற்றார் கருணாநிதி.

  • 2008: தை முதல் நாளை தமிழ் புத்தாண்டு நாள் என சட்டம் நிறைவேற்றம்.

  • பிப்.11, 2009: கருணாநிதிக்கு முதுகுத் தண்டு அறுவை சிகிச்சை நடைபெற்றது்

  • மே 19, 2016: திருவாரூர் தொகுதியில் 68 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று 13 முறையாக வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார்.

  • டிச.1, 2016: உடல் நலக் குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிப்பட்டார்.

  • டிச.23, 2016: உடல் நலம் தேறி இல்லம் திரும்பினார்.

  • டிச.16, 2017: ஓராண்டுக்கு பிறகு திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் சென்றார்.

  • ஜூலை 27, 2018: நள்ளிரவுக்கு பிறகு உடல்நலக்குறைவு காரணமாக காவேரி மருத்துவமனைக்கு கருணாநிதி அழைத்துச் செல்லப்பட்டார்.

  • ஆகஸ்ட் 7, 2018: காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மு.கருணாநிதி மாலை 6.10 மணியளவில் காலமானார்.

  • ஆகஸ்ட் 8, 2018: 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் திமுகவின் தலைவர் கலைஞரின் உடல் மெரினா கடற்கரையில் அண்ணா சமாதிக்கு அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?