மீண்டுவந்த !

 திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயிலில் உள்ள கிழக்கு வாசல் நுழைவு கோபுரத்தின் முதல்நிலை சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. நள்ளிரவு நேரத்தில் விபத்து நடந்ததால், எந்த சேதமும் ஏற்படவில்லை .

பனிமய மாதா ஆலய தங்கத்..தேரோட்டம் இன்று நடக்கிறது.அதனையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை என ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்ட்ராவில் கிணற்றின் உள்ளே சுவர் கட்டும் பணியின்போது, ஓரமாக குவிக்கப்பட்டு இருந்த மண் சரிந்து கான்கிரீட் சுவரும் இடிந்து விழுந்ததில் 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 100 அடி ஆழத்தில் சிக்கியிருந்த 4 பேரின் உடலையும், 4 நாட்களாக போராடி மீட்புப்படையினர் மீட்டனர். கிணறு தோண்டும் ஒப்பந்ததாரர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்..

  குடியரசுத்தலைவர் முதல்முறை சென்னை வருகிறார்.  சென்னை பல்கலைக்கழக 165வது பட்டமளிப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். 

ஆவணம் பதிவு செய்ததிதன் மூலம் அரசுக்கு ரூ.100 கோடி வருவாய் 03.08.2023 அன்று ஈட்டப்பட்டுள்ளது, என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் குட்காம் மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த 3 இந்திய ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்டு  மரணம் அடைந்தனர்.

ஒன்றியஉள்துறை செயலர் அஜய் குமார் பல்லாவின் பதவிக்காலம் மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அஜய் குமார் பல்லாவின் பதவிக்காலம் நீட்டிக்கப்படுவது இது 4வது முறை.


மீண்டுவந்த ராகுல்காந்தி!

ராகுல்காந்திக்கு குஜராத்

 நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய ராகுல் காந்தி, 'மோதி' என்ற பெயர் குறித்து குறிப்பிட்ட கருத்துகள் சர்ச்சையை எழுப்பின. இதுதொடர்பான வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அந்த தீர்ப்பு எதிரொலியாக ராகுல்காந்தியின் எம்.பி. பதவியும் பறிக்கப்பட்டது.

உச்சநீதிமன்றம் இன்று தனது உத்தரவில், "அவதூறு வழக்கில் அதிகபட்ச தண்டனையாக 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க போதுமான காரணங்களையும், முகாந்திரங்களையும் கீழமை நீதிமன்றம் கூறவில்லை" என்று தெரிவித்துள்ளது.

2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது கர்நாடகாவில் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, 'மோதி' என்ற பெயரைக் குறிப்பிட்டு விமர்சனங்களை முன்வைத்தார். 

" நாட்டின் மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடித்து வெளிநாடு சென்ற   அனைத்துதிருடர்கள் பெயரும் மோதி என்ற  கொண்டிருப்பது ஏன்? 

நிரவ் மோதி, லலித் மோதி, நரேந்திர மோதி" என்று ராகுல்காந்தி பேசியிருந்தார்.

அதைக் கண்டித்து குஜராத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. பர்னீஷ் மோதி, அவருக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

புர்னீஷ் மோதி தனது புகாரில், ராகுல்காந்தியின் கருத்து மோதி என்ற பின்னொட்டு கொண்ட ஒட்டுமொத்த சமூகத்தையுமே அவமரியாதை செய்வதாக அமைந்திருப்பதாக கூறியிருந்தார். 

ஆனால் ராகுல்காந்தியோ, 'ஊழலை கோடிட்டுக் காட்டவே அவ்வாறு பேசினேனே தவிர, எந்தவொரு குறிப்பிட்ட சமூகத்தையும் குறிப்பிட்டு அல்ல' என்று விளக்கம் அளித்தார்.

இதனை விசாரித்த நீதிமன்றம்யாருமே எதிர்பீராத அதிரடி அதிகபட்சமான தீர்ப்பை கொடுத்தது.

இரண்டாண்டுகள் சிறைத் தண்டனை கொடுத்தது.

 எதிர்த்து மேல்முறையீடு செய்ய வசதியாக ராகுல்காந்திக்கு கீழமை நீதிமன்றம் பிணை வழங்கியது. 

ஆனால், கடந்த ஜூலை மாதம் குஜராத் உயர் நீதிமன்றம் ராகுல்காந்தியின் மேல் முறையீட்டை ஆராயமலே நிராகரித்து விட்டது.

இதை எதிர்த்து ராபுல்காந்தி உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார்.

உச்சநீதிமன்றம் குஜராத் நீதிமன்றங்கள் தேவையே இல்லாமல் ஒரு அவதூறு வழக்கிற்கு அதிகமான தண்டனை வழங்கியுள்ளது.அதற்கான காரணங்களை கூறாமல் மக்கள் பிரதிநிதி எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என 250 பக்கங்களுக்கு தேவையில்லாமல் அறிவுரை கூறியுள்ளார்கள்.நீதிமன்றத்தின் பணி அதுவல்ல.என்று குறிப்பிட்டது.

உச்சநீதிமன்றத்தின் இன்றைய உத்தரவு எதிரொலியாக, ராகுல்காந்தி மீண்டும் நாடாளுமன்றம் செல்லவும், அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவும் வழி பிறந்துள்ளதாகவே கருதப்படுகிறது.

உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவை (தகுதியின்மைக்கு தடை) பிறப்பித்ததுமே, தகுதி நீக்கம் தானாகவே நீங்கிவிடும். தகுதி நீக்கம் அகன்றதும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மீண்டும் கிடைத்துவிடும்.

உச்சநீதிமன்ற உத்தரவு எதிரொலியாக, ராகுல்காந்தியின் தகுதி நீக்கம் ரத்தாகி அவர் மீண்டும் உறுப்பினராக செயல்படலாம் எனபதற்கான அறிவிப்பை மக்களவை செயலகம் வெளியிட வேண்டும்.

 இதை உடனடியாக செய்ய வேண்டும். கீழமை நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்ததும், அவரை தகுதி நீக்கம் செய்யும் போது தேர்தல் ஆணையம் காட்டிய அதே அவசரத்தை அவரது உறுப்பினர் பதவியை மீண்டும் கொடுப்பதிலும் மக்களவை செயலகம் காட்ட வேண்டும்.

திங்கட்கிழமை முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அவர் கலந்துகொள்ளலாம். கீழமை நீதிமன்ற தீர்ப்பு தொடர்பான விவகாரம் தீர்க்கப்படாவிட்டாலும், அடுத்த மக்களவைத் தேர்தலில் ராகுல்காந்தி போட்டியிட தகுதியுடையவராகவே இருப்பார்.

உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள தமிழ் நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின், தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்பாக தெரிவித்துள்ளார். 

இந்த முடிவு நமது நீதித்துறையின் வலிமை மற்றும் ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் ஆகியவை மீதான நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது," என குறிப்பிட்டுள்ளார்.

-----------------------------------------



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?