சா தீய நச்சு.

 நாங்குநேரி மாணவன் கொலை முயற்சி சம்பவத்தை அடுத்து, பள்ளிகளில் சாதிய வன்முறைகளை களைய ஜெய்பீம் நாயகன் நீதியரசர் சந்துருவின் தலைமையில் ஒரு நபர் குழுவினை ஸ்டாலின் அமைத்துள்ளார். 

பள்ளி மாணவர்களிடையே சாதிய வன்முறைகளை தடுக்க ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துருவை ஏன் ஸ்டாலின் தேர்வு செய்தார்.?

அதற்கு ஆழமான பின்னணி காரணமாக இருக்கிறது.

சூர்யா நடித்த ஜெய்பீம் பட வழக்குரைஞர் சூர்யா

 கதாபாத்திரத்தின் நிஜ நாயகன் தான் நீதியரசர் கே. சந்தரு.

 பொதுவாக மக்களுக்காக போராடுபவர்கள் வெளிச்சத்திற்கு வர விரும்ப மாட்டார்கள்..

 அப்படித்தான் அவரும் இருந்தார். திருச்சி மாவட்டத்தில் ரயில்வே குமாஸ்தாவின் மகனாக பிறந்து வழக்குரைஞராகி  பின்னர் உயர்நீதிமன்ற நீதிபதியானவர் சந்துரு.

 சென்னையில் படித்து வளர்ந்த அவருக்கு, என்சிசி போன்ற அமைப்புகளில் சேர்ந்த பின்னரே கிராமங்களை பற்றி தெரியவந்துள்ளது.

அப்போதே அவருக்குள் போராட்ட குணம் இருந்துள்ளது. ஸ்டூண்ட் சோசியலிஸ்ட் போரம் என்ற அமைப்பினை நிறுவி கல்லூரி மற்றும் வெளியில் பல பிரச்சாரங்களை மக்களுக்காக செய்து வந்துள்ளார். 

உதயகுமார் என்ற மாணவனின் உடல் தண்ணீர் தொட்டியில் மிதந்தது தொடர்பான விசாணையில் உண்மைக்கான ஆதாரத்தையும் , சாட்சியையும் ஒப்படைத்தார் சந்துரு. 

1979இல் வழக்குரைஞர் ஆகி இருக்கிறார். 

தன்னுடைய நீதிமன்ற பணியை உயர்நீதிமன்றத்தில் இருந்து தொடங்கினார். 

மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் அமைப்பில் இருந்த அவர், வழக்கறிஞர் பணி ஒரு பக்கம், தொழிற்சங்கங்களுக்கான பணி ஒருபக்கம் என செய்து வந்தார். 

1997ல் உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ஆன சந்துரு , 2006ம் ஆண்டு நீதிபதியானார்.. அதன்பின்னர் பல வழக்குகளில் முன்னுதாரணம் ஆன தீர்ப்புகளை வழங்கினார்.

கடந்த மார்ச் 8, 2013அன்று ஓய்வு பெற்ற நீதிபதி கே சந்துரு.. மக்கள் வரிபணத்தில் தனக்காக ஏற்பாடு செய்த பாராட்டு விழா வீண் செலவு என்று மறுத்தார். 

. கார் வரை வந்து வழியனுப்புகிறோம் என்று அனைவரும் காத்திருக்க, அவரோ நடந்தே வாயிலுக்கு செல்கிறார்.. பதறிய ஊழியர்கள் என்ன என்று ஓடிப்போய் கேட்க, நான் தான் ரிட்டயர்டு ஆகிட்டேன்ல.. இனி எதுக்கு அரசு கார்.. இருக்கவே இருக்கு மின்சார ரயில் என்று புறப்பட்டு வீடு திரும்பினார். 

உயர்நீதிமன்றத்தில் பணியாற்றிய போது நீதியரசர் சந்துரு தன்னை நீதிபதி என்றே அழையுங்கள். மை லார்ட் என்று அழைக்க வேண்டாம் என்றும் உத்தரவிட்டவர். 

கோயிலுக்குள் பெண் கடவுள் இருக்கும் போது, பெண் பூசாரி ஏன் இருக்ககூடாது என்று அவர் அளித்த தீர்ப்பு வரலாற்றுப் புரட்சி.

கோயில்களில் தாழ்த்தப்பட்டோருக்கு வழிபாட்டு உரிமை, 

மாட்டு இறைச்சி கடைகள் நடத்த தடையை நீக்கிய தீர்ப்பு, 

பஞ்சமி நிலங்களை ஆதிக்க சமூகத்திடம் இருந்து மீட்டு தாழ்த்தப்பட்டோருக்கு வழங்க ஆணை பிறப்பித்தது என இப்படி நீதிபதியாக பணியில் இருந்த காலத்தில் 96000 வழக்குகளுக்கு தீர்ப்பு அளித்துள்ளார்.

 இந்தியாவிலேயே இந்தளவு அதிக வழக்குகளுக்கு யாரும் தீர்ப்பு வழங்கி முடிதவர்கள் எந் நீதிபதியும் கிடையாது.

நீதிபதி சந்துருவின் சாதனைகளை பேசவேண்டுமானால் நிறைய தீர்ப்புகளும், குறிப்புகளும் உள்ளன. 

அனைத்து தீர்ப்புகளும் பாதிக்கப் பட்ட மக்கள் நலன் சார்ந்தே இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்

சந்துரு வழக்குரைஞராக  இருந்த போது போராடி ,வாதாடி வென்ற வழக்குகளின் ஒரு வரலாற்று ஆவணமாக வெளிவந்தது தான் ஜெய்பீம் திரைப்படம். 

இடது சாரி சிந்தனையாராளக களப்பணியில் வேகம் காட்டிய சந்துரு.

வழக்கிறஞராக நடத்திய போராட்டங்கள் 100க்கும் மேற்பட்டவை.. பாதிக்கப்பட்டவர்களின் ஒரே ஆயுதம் சட்டம் என்பதற்கு சந்துரு களமாடிய வழக்குகளே உதாரணம்.. 

அதுதான் 2021ம் ஆண்டு வெளியான ஜெய்பீம் திரைப்படத்தின் வசனங்களில் எதிரொலித்து இருக்கும்.

இப்படியான ஒருவரா ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துருவைத்தான் பள்ளி கல்லூரிகள் நஞ்சு போல் பரவி வரும் சாதிய வன்முறைகளை தடுக்க முதல்வர் ஸ்டாலின் தேர்ந்தெடுத்துள்ளார்.

ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம் வடிவமைப்பிலும் சந்துருவின் பணி அதிகம்.

 பள்ளிகளில் சாதி, மத பெருமைகளை மாணவர்களின் மனதில் இருந்து முளையிலேயே கிள்ளி எறிய ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு குழு அளிக்கும் பரிந்துரை மிகவும் முக்கியம் ஆகும். 

தமிழகத்தின் இளம் சமுதாயம் எத்தனை சாதி வெறியர்கள் வந்தாலுலும், அவர்கள் பின்னாலும் போகாமல் இருக்க சரியான பரிந்துரையை சந்தரு அளிப்பார் , அதனை அரசும் கண்டிப்பாக அரசு செயல்படுத்தி சாதி இளம் உள்ளங்களில் தூவிய நச்சுக்களை அகற்ற வேண்டும். .

----------------------------------------

தமிழ்நாட்டில் இன்று முதல் 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியவிடுதலை தினத்தை முன்னிட்டு சென்னையில் 9000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.   டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்படுகிறது.

சென்னை வடக்கு கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் உள்பட 6 காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் விடுதலை தின விருது அறிவிக்கப்பட்டுள்ளது

சி.பி.எஸ்.இ மற்றும் NCERT பாடத்திட்டங்களில் இருந்து நீக்கப்பட்ட 2002 குஜராத் கலவரம், மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நேருவின் ஆட்சிக்கு கீழ் இந்திய போன்ற பாடங்களை கேரள அரசு தனது பாடத்திட்டத்தில் சேர்க்க முடிவு செய்துள்ளது

நெல்லை, வள்ளியூர் அருகே யூடியூப் பார்த்து பெட்ரோல் குண்டு தயாரித்து, அதை வெடிக்க வைத்து ரீல்ஸ் வீடியோவாக இணையத்தில் வெளியிட்ட விவகாரத்தில் சிறுவர்கள் கேரளாவில் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் ஏற்கனவே இசக்கியப்பன், சரவணன் மற்றும் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலி ஆவணங்கள் அளித்து பட்டியலினத்தவர் என சாதிச் சான்றிதழ் பெற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றும் ரமேஷ் மணி (43) என்பவர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?