நீட் தந்தை மகன் தற்கொலைகள்.

  நாளை இந்திய விடுதலை தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தீவிர சோதனைக்கு பிறகே பயணிகள் மற்றும் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, பள்ளி மாணவ - மாணவிகளுக்கு இன்று இனிப்பு பொங்கல் வழங்கப்படுகிறது. கலைஞர் பிறந்தநாள் ஜுன் 3ல் பொங்கல் வழங்க அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. அன்று கோடை விடுமுறை என்பதால் இன்று பொங்கல் வழங்கப்படுகிறது.

சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் விடிய விடிய மழை பெய்த நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சென்னை, கிண்டி கத்திப்பாரா பாலத்தின் அடியில் சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பெய்த கனமழையால் சார்ஜா, துபாய் விமானங்கள் தரை இறங்க முடியாமல் திருப்பி விடப்பட்டன. மழை ஓய்ந்த பிறகு 2 விமானங்களும் சென்னை திரும்பின. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 10 விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. துபாய், மும்பை, பாரீஸ் உள்ளிட்ட இடங்களுக்கு புறப்பட்ட விமானங்களும் தாமதமாக புறப்பட்டன.

சென்னை குரோம்பேட்டையில் 2 முறை நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்ததால் மாணவர் தற்கொலை செய்து கொண்டார். மகன் தற்கொலை செய்து கொண்ட சோகம் தாங்காமல் தந்தையும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும்சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.ஆர்.யன்.ரவி இச்செய்திகளை கவனத்தில் கொள்ளட்டும்.

நீட் :

தற்கொலை செய்து உயிரிழந்த தந்தை மகன் 

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதில் சிரமத்தை சந்திக்கின்றனர்.அவர்கள்+2 வரை படித்த கல்விக்கு தொடர்பில்லாமல் சி.பி.எஸ்.சி பாடத்திட்டப்படி தேர்வு இருப்பதால்  அவர்கள் பயிற்சி மய்யங்களில் பயிற்சி பெறவேண்டிய சூழல் உருவாகிறது.இதற்கான கட்டணங்களோ பல லட்சங்கள்.இதனால் நீட் தேர்வு வேண்டாம் என அவர்கள் கூறி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு உள்ளது. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கூறி வருகின்றனர்.

மேலும் தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்ககோரி சட்டசபையில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசேதாவை கிடப்பில் போட்ட ஆளுநர் ஆர்என் ரவி பலத்த அழுத்தங்களை அரசும்,பிற கட்சியினரும் கொடுத்ததால் நீண்ட நாட்களுக்கு பிறகு ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு அனுப்பி வைத்தார். 

இன்னும் அதில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று குரோம்பேட்டையை சேர்ந்த 19 வயது மாணவர் நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்துள்ளார்.

சென்னை குரோம்பேட்டை அடுத்த குறுஞ்சி நகரை சேர்ந்தவர் செல்வசேகர். இவரின் மனைவி பிரிந்து சென்றார்.

 இவது மகன் ஜெகதீஸ்வரன்(19). இவர் பல்லாவரத்தில் உள்ள பிரபல சி.பி.எஸ்.சி பள்ளியில் மருத்துவ கனவுடன் 12ஆம் வகுப்பு ஏ கிரேடு 85 சதவீகிதம் மதிஅதிர்ச்சியடைந்தார்.

இந்த நிலையில் ஜெகதீஸ்வரன் நீட் தேர்வில் தேர்வாக வேண்டும் என்பதால் சிமிஎஸ்சியில் படித்திருந்தும் ,அதிக மதிப்பெண்கள் எடுத்திருந்தும்,பல லட்சங்களை செலவிட்டு தனியார் நீட் பயிற்சி மையத்தில் படித்தும் இரண்டு முறை தோல்வியடைந்தார். 

கடைசி வாய்ப்பாக மீண்டும் மூன்றாம் முறை நீட் பயிற்சி மையத்திற்கு விண்ணப்பம் செய்திருந்த நிலையில் நேற்று தந்தை வேலை சம்மந்தமாக வெளியே சென்றபோது ஜெகதீஸ்வரன் மட்டும் தனியாக இருந்துள்ளார். 

மாலை வீடிதிரும்பியதும் செல்வம் வீடு திறக்காமல் உள்ளதால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சுவற்றில் உடற்பயிற்சி செய்ய பொருத்தப்பட்ட கம்பத்தில் துணியால் ஜெகதீஸ்வரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

சிட்லப்பாக்கம் காவல் நிலையத்தில் இரண்டுமுறை நீட் தேர்வு எழுதிய நிலையில் தற்கொலை என புகார் அளித்தார்.

 பிரேதத்தை கைப்பற்றிய சிட்லப்பாக்கம் போலீசார் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்த பின்னர், உடலை உறவினர்களிடம் ஒப்படைத்த நிலையில் ஜெகதீஸ்வரன் செல்போனை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜெகதீஸ்வரனின் தந்தை செல்வசேகர் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகனின் பிரிவை தாங்க முடியாமல் தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


முன்னதாக, நேற்று முன்தினம் சென்னை ஆளுநர் மாளிகையில் நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சேலத்தைச் சேர்ந்த ஒரு மாணவனின் பெற்றோர், நீட் தேர்வுக்கு எப்போது தடை வரும் என கேட்டனர். 

இதனால் கோபமான  ஆர்யன்.ரவி  நீட் தேர்வுக்கு விலக்கு கேட்பது .நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு நான் ஒருபோதும் ஒப்புதல் தெரிவித்து கையெழுத்திட மாட்டேன். மேலும் கல்வி பொதுப்பட்டியலில் இருப்பதால் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவைவேறு வழியின்றி குடியரசுத்தலைவரின் பரிந்துரைக்கு அனுப்பியுள்ளேன்'என்று கூறியதுன் நீட் விலக்கு கேட்டவரின் மைக்கை தனது பணியாளர்கள் மூலம் பறிக்க வைத்தார்.

மேலும் அக்கூட்டத்தில் தொடர்பில்லாமல் ரவியால் அழைக்கப்பட்டு கலந்து கொண்ட தனியார் பயிற்சி மய்யம் நடத்துபவர்கள் அந்த பெற்றோரை மிரட்டி அனுப்பிவைத்துள்ளார்கள்.

------------------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?