அரியாணா வன்முறை. ஆரம்பம்தான்.்

 தண்டவாளம் பராமரிப்பு பணி காரணமாக மயிலாடுதுறையில் இருந்து திருச்சி, விழுப்புரம் செல்லும் ரயில்கள் உட்பட 4 ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுகிறது. செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில், திருவாரூர் வழியாக மாற்றுப்பாதையில் செல்லும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் இன்று முதல் 500 நியாய விலைக் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார்.

ஹரியானா மாநிலத்தின் மேவாட் பகுதியில் நடந்த விஷ்வ ஹிந்து பரிஷத் பேரணியில் இரு பிரிவினரிடையே வெடித்த திடீர் மோதலால்.இரு ஊர்காவல் படையினர் கொலை. .  கல்வீச்சு தாக்குதலில் பலர் காயம் அடைந்தனர். வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது.

இரண்டு ரவுடிகளை காவல்துறை சுட்டது.

சென்னையை அடுத்த ஊரப்பாக்கம் பகுதியில் இன்று(01.08.23)அதிகாலையில் போலீசார் நடத்திய என்கவுன்ட்டரில் சோட்டா வினோத், ரமேஷ் ஆகிய இரண்டு ரவுடிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஊரப்பாக்கம் பகுதியில் காரணை புதுச்சேரி பிரதான சாலையில் காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையில் உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

 இன்று அதிகாலை 3.30 மணியளவில் அந்த வழியாக வந்த ஒருகாரை நிறுத்தி சோதனை செய்ய முயன்றபோது வேகமாக வந்த கார் நிறுத்தாமல் போலீசாரை இடிப்பது போல் வந்து ஜீப் மீது மோதி நின்றுள்ளது. 

அதில் இருந்து இறங்கிய நான்கு நபர்கள் ஆயுதங்களுடன் போலீசாரை நோக்கி தாக்க முற்பட்டுள்ளனர்.

 அதில் ஒருவர் அரிவாளால் காவல் உதவி ஆய்வாளரின் இடது கையில் வெட்டிவிட்டு தப்ப முயன்றனர்.

இதைப்பார்த்த காவல் ஆய்வாளர் ஒருநபரையும் உதவி ஆய்வாளர் ஒருநபரையும் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் காயமடைந்த இருவரும் மருத்துமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.

 மற்ற இரண்டு பேர் பயங்கர ஆயுதங்களுடன் தப்பியோடிவிட்டனர். குண்டடிபட்டவர்கள் பற்றி போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் ரவுடிகள் சோட்டா வினோத், ரமேஷ் என்பது தெரியவந்தது.

 ரவுடிகள் தாக்கியதில் காயமடைந்த உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் குரோம்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரவுடிகள் சோட்டா வினோத், ரமேஷ் ஆகியோர் மீது 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் நிலுவையில் உள்ளது.

 ரவுடி சோட்டா வினோத் மீது 10 கொலை உட்பட 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. ரவுடி ரமேஷ் மீது 5 கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. 

-------------------------------------------


அரியாணா வன்முறை.

ஹரியானா மாநில விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் மத ஊர்வலம் ஒன்று நடந்தது. குருகிராம் மாவட்டத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நூ மாவட்டத்திலும் நடந்தது.

ஆனால் இந்த மாவட்டத்தின் கேட்லா மோட் பகுதியில் ஊர்வலம் சென்ற போது மற்றொரு பிரிவை சேர்ந்த சில இளைஞர்கள் தடுத்து நிறுத்தினர். பின்னர் ஊர்வலம் சென்றவர்கள் மீது கல்வீசி தாக்குதல் நடந்ததாக தெரிகிறது.

இந்த வன்முறையில் இருந்து தப்பிப்பதற்காக ஏராளமானோர் அருகில் உள்ள கோயிலில் தஞ்சமடைந்தனர். இதையடுத்து போலீஸார் அவர்களை பத்திரமாக மீட்டனர். இந்த நிலையில் கலவரக்காரர்கள் போலீஸாரின் வாகனங்கள் உள்பட பல வாகனங்களுக்கு தீவைத்தனர்.

மேலும் தங்களிடம் இருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் ஊர்க்காவல் படை வீரர்கள் 2 பேர் மீது குண்டு பாய்ந்து அவர்கள் உயிரிழந்தனர். போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட 12 போலீஸார் காயமடைந்தனர். இதில் 2 பேரின் நிலை கவலைக்கிடமான வகையில் உள்ளது. கலவரம் கட்டுக்கடங்காமல் போனதை அடுத்து போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி வன்முறையாளர்களை கலைத்தனர்..

இந்த வன்முறையை தொடர்ந்து அந்த மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவி வருகிறது. எனவே மாவட்டம் முழுவதும் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று வரை இணையதள சேவைகளும் முடக்கப்பட்டன.

நூ மாவட்டத்தில் நடந்த வன்முறை அண்டை நகரமான குருகிராமின் சோனாவில் பரவியது. அங்கும வாகனங்களும் கடைகளும் தீவைத்து கொளுத்தப்பட்டன. நூ மாவட்டத்திற்கு போலீஸார் கூடுதலாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பா.ஜ.க வளர்த்து வரும் மதவேற்றுமை வெறிதான் இது போன்ற கலவரங்களின் அடித்தளம்.

2024 ல் மக்களவைத் தேர்தல் நடைபேற உள்ள நிலையில் இது போன்ற கலவரங்கள் இந்தியா முழுக்க எதிர் பார்க்கலாம்.வாக்குகளை பெற்று வெல்ல இந்துத்துவா வெறிக்கு அப்பாவி இறைஞர்கள் பலியாவார்கள்.

மணிப்பூர் விவகாரத்தில் ஒன்றிய பா.ஜ.க.அரசு,மோடி செயல்பாடுகளைப் பார்த்து வேற்றுமதத்தினர் பா.ஜ.க ஒன்றியஅரசு,காவல்துறை நமக்கு பாதுகாப்பு தராது என்று எண்ணுகின்றனர்.உண்மை அதுதான்.

அவர்கள் தங்களைப் பாதுகாக்க அதே வன்முறையைக் கையிலெடுத்தால்..நிலமை அபாயநிலைதான்.

பாஜக இந்த நிலை நன்கு தெரிந்தும் அவர்கள் இந்துத்துவ வெறியை,பயங்கரவாதத்தை மேலும் வளர்ப்பது என்பது இந்தியா கெட்டுகுட்டிச்சுவராகட்டும், நமக்குத் தேவை அதிகாரம் என்ற ஒரே பாசிச கொள்கைதான்.

சொல்லப் போனால் தாலீபான்களுக்கும்,பஈஜகவுக்கும் வேறுபாடில்லை.

இந்தியா ,ஆப்கானிஸ்தானாக மாறவிடாமல் தடுப்பது அதைதியை விரும்பும் நம் வாக்காளர்கள்,மக்கள் கையில்தான் உள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?