மணிப்பூர் ஆகுமோ அரியானா

 அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் விஸ்வ இந்து பரிஷத்தின் ஊர்வலத்தில் கலவரம்ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல், பயங்கர வன்முறையாக மாறியது.இந்நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து அங்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

திருச்சி ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் காரணமான  இன்று 4 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது

நிகோபார் பகுதியில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. ரிக்டர் அளவில் 5 ஆக பதிவாகி உள்ளது.

மகாராஷ்டிராவில் கட்டுமான பணிகள் நடந்த இடத்தில் ராட்சத கிரேன் விழுந்த  விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. 

அரியானாவில் விஷ்வ இந்து பரிஷத் யாத்திரையின்போது ஏற்பட்ட வன்முறைக்கு முக்கிய காரணம், உளவுத்துறை தகவலும், போலீஸ் பாதுகாப்பு குறைவும், பசு பாதுகாவலர்கள் மீதான கோபம் என்ற அதிர்ச்சித் தகவல் தெரியவந்திருக்கிறது.

கூடுவாம்பூண்டியில் தம்பி முருகனை கத்தியால் குத்தி கொலை செய்த அண்ணன் விநாயகம் கைது செய்யப்பட்டுள்ளார். குலதெய்வ கோவிலில் தனது குழந்தைகளுக்கு காது குத்த சென்னையிலிருந்து குடும்பத்துடன் வந்த தம்பியை அண்ணன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


--------------------------------------

மணிப்பூர் ஆகுமோ  அரியானா 

அரியானாவில் விஷ்வ இந்து பரிஷத் நடத்திய யாத்திரையின்போது அம்மாநிலத்தில் ஏற்பட்ட மதக்கலவரமும் அப்போது அரங்கேற்றப்பட்ட குற்ற செயல்களும் நாட்டையே உலுக்கி இருக்கின்றன. 

அரியானாவின் நுஹ் பகுதியில் திங்கள்கிழமை ஏற்பட்ட வன்முறை குருகிராம் பகுதிக்கும் பரவியது. இதில் மசூதி ஒன்று தீக்கிரையாக்கப்பட்டு அதில் இருந்த இமாம் 80 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக கொல்லப்பட்டு இருக்கிறார்.

இவரோடு சேர்த்து மொத்தம் 5 பேர் அரியானா மதக்கலவரத்தில் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். 

இந்த நிலையில், உளவுத்துறை போதிய முன்னெச்சரிக்கைகளை வழங்காததும், பாதுகாப்புக்காக போதுமான அளவுக்கு போலீசார் குவிக்கப்பட்டாததுமே இந்த வன்முறைக்கு முக்கிய காரணம் எனத் தெரியவந்துள்ளது.

விஷ்வ இந்து பரிஷத் யாத்திரையின்போது ஏற்பட்ட வன்முறை ஏற்படும் என உளவுத்துறை தகவல் கொடுத்தும் காவல்துறை அலட்சியபடுத்தியதும் பாதுகாப்பு குறைவும், பசு பாதுகாவலர்கள் மீதான கோபம் மக்களுக்கு உண்டானதின் விளைவுதான் அதிர்ச்சித் தகவல் தெரியவந்திருக்கிறது.

நுஹ் மாவட்டத்தில் இருக்கும் உளவுத்துறை தகவல்களை திரட்டுவது சிஐடி இன்ஸ்பெக்டர் விஸ்வஜீத்தின் பொறுப்பு. 

இந்த வன்முறை குறித்து அவர் தெரிவிக்கையில், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் 130 கிமீ பிரஜ் மண்டல் யாத்திரை கடக்கும்போது பிரச்சனை ஏற்படும் என்று உளவுத்துறை எச்சரித்ததாக தெரிவித்தார்.

அப்பகுதி வசிக்கும் மக்களை  கடந்து செல்லும்போது மதவிரோத முழக்கங்களை எழுப்பிக்கொண்டு வாள்களை சுழற்றிக்கொண்டு செல்வார்கள் என்று எச்சரிக்கை செய்யப்பட்டது. அரசாங்கத்துக்கு  10 நாட்களுக்கு முன்பே இதுகுறித்து எச்சரிக்கை விடுத்திருந்தோம்." என்றார்.

பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த மோனு மானேசர், பசுக்களுக்காக மனிதர்களை அடித்துக் கொன்ற வழக்கில் சிறைக்கு சென்றவர். 

பல்வேறு கும்பல் படுகொலைகளை சேர்ந்து வீடியோ எடுத்து வெளியிட்டு வருபவர். தானும் இந்த யாத்திரையில் பங்கேற்க உள்ளதாக வீடியோ வெளியிட்டார். 

இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் விஷ்வ இந்து பரிஷத் அறிவுறுத்தலின் காரணமாக அவர் கலந்துகொள்ளவில்லை. ஆனால், அவர் கலந்து கொள்வதான செய்தி இந்த வன்முறை ஏற்படுவதற்கு ஒரு காரணமாக அமைந்துவிட்டது.

இந்த சூழலை தங்களால் கையாள முடியும் என மூத்த அதிகாரிகள் நினைத்தார்கள். இதை சாதாரணமாக நினைத்துக்கொண்டார்கள். 

ஊர் மக்களை சமாதானம் செய்துவிடலாம் என்று நம்பினார்கள். ஆனால், ஊர் மக்களும் ஒன்று கூடிவிட்டார்கள். 

17 முதல் 22 வயது வரையிலான இளைஞர்கள் யாத்திரை வரும் பாதையில் பைக்குகளில் சென்றார்கள்.

யாத்திரை செல்லும் வழியில் குவிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு படைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இருந்த அனைத்து படைகளும் பணியில் இருந்தன. இருந்ததை வைத்து யாத்திரை வரும் வழியெங்கும் படைகளை விரிவுபடுத்தி இருந்தோம். 

இதில் எந்த தனிப்பட்ட பிரச்சனையும் இல்லை. பிரச்சனைக்குரிய இடங்கள் 10ல் இருந்து 50ஆக,50ல் இருந்து 200 ஆக அதிகரித்தது.ஆனால் அந்த அளவு காவல் படையினர் இல்லை.

செக்டார் 57 இல் உள்ள அஞ்சுமான் ஜமா மசூதி செவ்வாய்கிழமை அதிகாலை தீ வைக்கப்பட்டது. நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும். இமாமும் மற்றொரு நபரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 

இமாம் கொல்லப்பட்டு உள்ளார். மற்றொருவர் படுகாயம் அடைந்து உள்ளனர். அதிகாலை 12.10 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

கொல்லப்பட்ட இமாம் 19 வயதானவர் அவரது பெயர் ஹாஃவி சாத் என்றும், பீகார் மாநிலம் சிதாமர்ஹி மாவட்டம் மனியாதிஹை சேர்ந்தவர் எனவும் கூறப்படுகிறது. 6 மாதங்களாக இந்த மசூதியில் இமாமாக வேலை செய்து வந்துள்ளார். அவரது கொலை அப்பிரிவினரின் கோபத்தை மேலும் தூண்டி விட்டது.

ஆனால் அரியானாவை ஆளும் பா.ஜ.க.அரசு இன்னும் சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.கலவரம் தொடர்கிறது.பரவுகிறது

இணைய இணைப்பை துண்டித்ததுடன் தனது செயலை முடித்ததாக நினைக்கிறது அரசு.

இப்போது அரியானா இன்னொரு மணிப்பூராகிவிடுகின்ற அபாயம் உள்ளது.வடகிழக்கில் பா.ஜ.க செயல் பட்டதுபோல் வடமாநிலங்களிலும் செயல் பட்டால் நிலமை இந்திய ஒன்றியத்திற்கே ஆபத்தாகிவிடும்.

ஆனால் 2024 தேர்தலில் வெல்ல இவை உதவும் என எண்ணலாம்.

இந்தியர்கள் குறிப்பாக இந்துக்கள் அனைவரும மதம் பிடித்தவர்கள் அல்ல.அமைதியை விரும்புவர்கள்.

வாளை எடுத்தவன் வாளாலே சாவான்.இது முதுமொழி.

---------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?