கோணல் மரம்

 ராமநாதபுரத்தில் நடைபெற்ற தென் மண்டல வாக்குச்சாவடி முகவர் பயிற்சிப் பாசறைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசைக் கடுமையாகச் சாடினார். 

தொடர்ந்து பேசிய முதலமைச்சர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை முன்வைத்து பா.ஜ.கவை கடுமையாக விமர்சித்தார்.

"இப்போதுதான் சகோதரி கனிமொழி சொன்னதால், சிலப்பதிகாரம் என்ற புத்தகத்தின் முன்னுரையைப் படிக்க ஆரம்பித்திருக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். அதை அவர் முழுமையாகப் படிக்க வேண்டும். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, ஓய்வு கிடைக்கும். அப்போது முழுமையாகப் படிக்க நேரம் கிடைக்கலாம்.

ஆனால், அதற்கு முன்பு நிதியமைச்சரின் கணவரான டாக்டர் பரகலா பிரபாகர் எழுதிய ‘The Crooked Timber of New India‘ என்ற புத்தகத்தை ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர்கள் அனைவரும் படிக்க வேண்டும். மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் அது நாட்டுக்குப் பேரழிவாக இருக்கும் என்று சொல்கிறார் நிதி அமைச்சரின் கணவர் பரகலா பிரபாகர்," என்று குறிப்பிட்டார்.

நிதியமைச்சர் நிர்மலாவின்கணவர்பரகலா பிரபாகர் அப்படி என்ன எழுதிவிட்டார்.அது என்ன புத்தகம்?

நரேந்திர மோதி - அமித் ஷா தலைமையின் கீழ் பா.ஜ.க. வந்த பிறகு அந்தக் கட்சி அடைந்திருக்கும் மாற்றம், அக்கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியா அடைந்திருக்கும் மாற்றம், இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பரவல், மக்கள் தொகையை வைத்து பா.ஜ.க. செய்யும் அரசியல், இந்தியாவில் உள்ள வேலையில்லா பிரச்னை, ஹிஜாப் விவகாரம், ஆக்ஸ்ஃபாம் அறிக்கை, ஸ்டான் ஸ்வாமியின் மரணம், விவசாய சட்டங்கள், லக்கிம்பூர் கேரி சம்பவம், கோவிட் பரவலை அரசு கையாண்ட விதம் எனப் பல்வேறு விஷயங்களை முன்வைத்து அரசைக் கடுமையாக விமர்சிக்கிறது இந்தப் புத்தகம்.

புத்கம் கூறியவற்றைப் பார்க்கும் முன்னர் "பரகலா பிரபாகர்" பற்றி:-

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸிலும் படித்த பிரபாகர், ஆந்திர முதலமைச்சரின் தகவல் தொடர்பு ஆலோசகராக இருந்தவர்.

பரகால பிரபாகர் பரவலாக மதிக்கப்படும் அரசியல் பொருளாதார நிபுணர். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸிலும் படித்த பிரபாகர், ஆந்திர முதலமைச்சரின் தகவல் தொடர்பு ஆலோசகராக இருந்தவர்.

இனி நூல் விமர்சனம்:

இந்தியாவை இதற்கு முன்பு ஆட்சி செய்த கட்சிகள் அரசியல் சாசனம் வலியுறுத்தும் கொள்கைகளைப் பரப்பாதது, அந்த அடிப்படைகளை யாராலும் அசைக்க முடியாது என்ற அலட்சியத்தில் இருந்தது, அவற்றைப் பாதுகாக்கப் பெரிதாக ஏதும் செய்ய வேண்டியதில்லை என்று நினைத்தது ஆகியவை இன்றைய இந்த நிலைக்குக் காரணம்.'

பா.ஜ.க. அடுத்த தேர்தலில் தோல்வியுற்றால், எல்லாம் பழைய நிலைக்குத் திரும்பிவிடும் என்று எதிர்பார்க்க முடியாது என்றும் இந்தியா ஒரே ஒரு மதத்தைச் சேர்ந்தவர்களுக்கான நாடு என்றும் மற்ற மதத்தைச் சேர்ந்தவர்கள் எல்லாம் இரண்டாம் தர குடிமக்களாகவே இருக்க வேண்டும் என்ற கருத்து மக்களின் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது .

உடனடிப் பலன்களையோ, உடனடியான தேர்தல் வெற்றிகளையோ எதிர்பார்க்காத, இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சங்களை நம்பும் ஓர் அரசியல் கட்சி மட்டுமே இந்த நிலையை மாற்ற முடியும் என்று கூறும் பிரபாகர், ஆனால் அப்படியான சூழலே இல்லை என்பதுதான் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது என்றும் குறிப்பிடுகிறார்.

கடந்த பத்தாண்டுகளில் பல்வேறு பிரிவுகளில் இந்தியா பின்னடைவைச் சந்தித்ததாக குற்றம் சாட்டுகிறது இந்தப் புத்தகம். 

1990களில் புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை குறைந்துவந்த நிலையில், அந்த நிலைமை தற்போது மாறி வருவதாகக் குறிப்பிடுகிறார் அவர்.

கடந்த 2021ஆம் ஆண்டில் மட்டும் புதிதாக 7.5 கோடி போ் ஏழைகளாகியிருப்பதாக பிரபாகர் கூறுகிறார். யுஎன்டிபியின் உலக மனித வளர்ச்சி தரவரிசைப் பட்டியலில் இந்தியா 132வது இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பதையும் உலகப் பட்டினிக் குறியீட்டில் 107வது இடத்தில் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

கடந்த 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு, வேலைவாய்ப்பு குறித்த புள்ளிவிவரம் எதையும் மத்திய அரசு வெளியிடவில்லை என்பதைச் சுட்டிக்காட்டும் பிரபாகர், அதற்கு ஒரு காரணத்தைச் சொல்கிறார். 

அதாவது 2015-16ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பின்மை புள்ளிவிவரத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை 5%ஆக உயர்ந்திருந்ததே இதற்குக் காரணம் என்கிறார் அவர்.

ஒருங்கிணைக்கப்பட்ட பொருளாதார சிந்தனையோ, திறம்மிக்க பொருளாதார ஆலோசகர்களோ இல்லாத நிலையில், அரசு மோசமான பொருளாதார ஆலோசகர்களிடம் வீழ்ந்துவிடுகிறார்கள் என்றும், அந்த ஆலோசகர்கள் பண மதிப்பிழப்பு நடவடிக்கை போன்ற பேரழிவை ஏற்படுத்தும் ஆலோசனைகளை அளிக்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டுகிறார் பிரபாகர்.

கட்டற்ற அதிகாரத்தைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மத்திய அரசு, எதிர்க்கட்சித் தலைவர்கள், அவர்களைச் சார்ந்தவர்களின் இடங்களில் வரித்துறை அதிகாரிகள் மூலம் ரெய்டு நடவடிக்கைகளை மேற்கொள்வது, அமலாக்கத் துறையினர் அவர்களைப் பிடித்துவைத்து பல மணிநேரம் கேள்வி எழுப்புவது, விசாரணை இன்றி சிறையில் அடைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டுகிறார். 

அரசின் சொல்படி கேட்காத ஊடக நிறுவனங்களுக்கு வரி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்புவதோடு, நிதி முறைகேடுகளுக்காக விசாரணையும் செய்கிறார்கள் என்றும் கூறுகிறார் பிரபாகர்.

2014இல் இருந்து 2020 வரை பிரதமர் பேசிய ஏழு சுதந்திர தின உரைகளை முன்வைத்து, அதில் ஆரம்பத்தில் பேசப்பட்ட விஷயங்கள் எப்படி படிப்படியாக மாறின என்பதை விளக்குகிறார் பிரபாகர்.

நரேந்திர மோதி பிரதமராக வந்த பிறகு சுதந்திர தினங்களின்போது ஆற்றிய உரைகள் பற்றி ஒரு கட்டுரை புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறது.

மோதி உரையில் காணாமல் போன டீம் இந்தியா

கடந்த 2014ல் பேசும்போது அடிக்கடி Team India என்று குறிப்பிட்ட பிரதமர், 2016க்குப் பிறகு Team India குறித்துப் பேசுவதே இல்லை என்பது புத்தகத்தில் சுட்டிக்காட்டப்படுகிறது.

 அதேபோல, 2014ஆம் ஆண்டின் சுதந்திர தின உரையில், "இந்தியா சுதந்திரமடைந்து கடந்த 70 ஆண்டுகளில் பல மகத்தான விஷயங்கள் நடந்திருக்கின்றன" என்று குறிப்பிட்ட பிரதமர், தற்போது "கடந்த எழுபதாண்டுகளில் எதுவுமே நடக்கவில்லை" என்று கூறுவதை எப்படிப் புரிந்துகொள்வது என்கிறார் பிரபாகர்.

புத்தகத்தின் இறுதியில், கோவிட் - 19 தொற்றை இந்தியா கையாண்ட விதம் குறித்து ஒரு விரிவான, விமர்சனத்தை முன்வைக்கிறார் பிரபாகர். 

2014இல் இருந்து தற்போது வரையிலான பா.ஜ.க. அரசின் ஒவ்வொரு மோசமான அம்சத்தையும் குறிப்பிட்டு, புள்ளி விவரங்களோடு வாதிடுகிறது இந்தப் புத்தகம்.

புத்தகத்தின் இறுதியில், கோவிட் - 19 தொற்றை இந்தியா கையாண்ட விதம் குறித்து கடுமையாக குற்றம் சுமற்றுகிறது.

"அறிவொளிக் கால ஜெர்மன் தத்துவ மேதையான இம்மானுவேல் கன்ட்டின் புகழ்பெற்ற மேற்கோளில் இருந்து இந்தப் புத்தகத்தின் தலைப்பு எடுக்கப்பட்டிருக்கிறது.

'கோணலான மரத்திலிருந்து நேரான எதுவும் உருவானதில்லை' என்பதுதான் அந்த மேற்கோள். 

புதிய இந்தியாவின் கோணல் மரங்களில் இருந்து நேரான எதுவும் உருவாகப் போவதில்லை என்பதுதான் இந்தப் புத்தகம் சொல்லும் செய்தி. 

 திமுக.தொண்டர்களிடையே முதலமைச்சர் பேசியதைப் பார்க்கும்போது, இந்த நூல் எதிர்க்கட்சிகளுக்கு நல்ல ஆயுதம் என்ற ஊக்கம் இந்நூல் மூலம் கிடைத்துள்ளது என  தெரிகிறது.

-------------------------------------------

முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர். காவல் கட்டுப்பாட்டு மையத்திற்கு போன் செய்த கன்னியாகுமரியைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை சோழவரம் அருகே பழுதாகி நின்ற லாரி மீது, இரும்பு கம்பி ஏற்றி வந்த லாரி மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஓகேனக்கலில் தொடர்ந்து 4-வது நாளாக பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது. காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் பரிசல் இயக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மசாஜ் சென்டர் உரிமையாளரிடம் ரூ. 25 லட்சம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக பத்திரிகையாளர் வாராகி கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆம் ஆத்மி எம்எல்ஏ நரேஷ் பல்யானுக்கு எதிராக "ஆபரேஷன் பாப்" என்ற தலைப்பில் டைம்ஸ் நவ் நவ்பாரத் சேனலுக்கு செய்திகளை ஒளிபரப்ப டெல்லி நீதிமன்றம் தடை விதித்துள்ளது. துவாரகா நீதிமன்றத்தின் நீதிபதி அஜய் குமார் மாலிக் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

டிஎன்பிஎஸ்சி சிவில் நீதிபதி பதவிக்கான முதல்நிலை தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் காலியாக உள்ள 245 சிவில் நீதிபதி பணியிடங்களை நிரப்ப தேர்வு நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் 32 தேர்வு மையங்களில் 12,037 தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

------------------------------------------







இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?